சிவகங்கை தொகுதியை மகனுக்கோ அல்லது தான் சொல்கிற தன் ஆதரவாளருக்கோதான் தரவேண்டும் என்று ப.சிதம்பரம் பிடிவாதமாக இருப்பதில் தொகுதி CONகிரஸ்காரர்களே கலகக்கொடி உயர்த்துகிறார்கள் என்கிறது விகடன் தளம். உளவுத்துறை ரிப்போர்ட் படி கார்த்திக் சிதம்பரத்திற்கு தொகுதிக்குள் நல்ல பெயர் இல்லையென்றும் அதையும் மீறி அவரை வேட்பாளராக அறிவித்தால் CONகிரஸ் கட்சி தொண்டர்களே வாக்குகளை மாற்றிப்போடுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். சிதம்பரத்தைக்கூட மக்கள் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளுவார்கள். ஆனால் கார்த்திக் சிதம்பரத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதுதான் தொகுதியில் இருக்கும் சூழ்நிலை என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கடிதம் அனுப்பி இருக்கிறார்களாம் என்கிறது விகடன். CONகிரஸ் கட்சியில் கலகக்கொடி என்பது வெறுமனே கடிதம் எழுதுவதுதானே!
சிவகங்கையில் பசியா? காசியா? இல்லே நாச்சியா என்றால் முகநூலில் இப்படி லந்துக்கு பதிலாக இன்னொரு லந்து : யார் அதிகம் ஜாமீன், வாய்தா வாங்கியிருக்காங்களோ அவங்கதான்!
சிவகங்கையில் பசியா? காசியா? இல்லே நாச்சியா என்றால் முகநூலில் இப்படி லந்துக்கு பதிலாக இன்னொரு லந்து : யார் அதிகம் ஜாமீன், வாய்தா வாங்கியிருக்காங்களோ அவங்கதான்!
இங்கே நடக்கும் தேர்தல் அலப்பறைகளில் தேர்தல் நாடாளுவதற்காகவா அல்லது வேறு அற்பமான காரணங்களுக்காகவா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமே இல்லை! இந்த மீம் உருவாக்கிய
நண்பருக்கும் இருந்திருக்கிறது போல!
இங்கே அரசியலில் சேவை செய்வது என்பது என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கும் பதிலாக!
மதுரையை தொடர்ந்து தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் வீடுகள் தோறும் பெருகி வரும் வைரல் போஸ்டர்கள்! மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வீட்டுக் கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த இந்த வாசகங்கள் வெகுவேகமாக தென்கோடி வரை!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி மக்கள் , மாணவர்கள் யாருக்கு வாக்கு செலுத்துவது சரி?
சென்ற 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நீங்கள் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களை வெற்றிபெறச் செய்தீர்கள். வாக்களித்த மக்களுக்கு அவர் தன் மட்டத்தில் செய்தது என்ன?
ஒரு மத்திய அமைச்சராக , MPயாக அவருக்கு இருக்கிற கடமை ஜாதி மதம் மொழி இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வு மேம்பட அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது - அதில் லஞ்சம் அதிகார திமிர் என்று எதுவும் காட்டாது எளிய மக்களுக்குச் சென்று சேர்ப்பதில் நேர்மை காட்டவேண்டும். அதே நேரம் தொகுதி மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் "குறை கூறுவது எளிது அதை விட்டு விட்டு இந்த 1800நாட்களில் நாம் தேர்வு செய்த MP நம் தொகுதிக்கு என்ன உழைத்தார் என்பது தான் நாம் மனசாட்சி கொண்டு எடை போட வேண்டிய விசயம். 1800 நாட்கள் தான் 5 வருடம் என்பது, எனவே நாட்களில் வைத்து ஒப்பிடுங்கள் விசயம் புரியும். ஒரு வீட்டைக் கட்டி முடித்துக் கொண்டு வரவே நமக்கு அதில் இருக்கும் வேலை பழு புரிய வேண்டும். அந்த விதம் ஒரு MPயாக பொன் ராதாகிருஷ்ணன் செயல்பாடு எப்படி இருந்தது இந்த 1800 நாட்களில் அவர் செய்தது என்ன என்ன?
முதலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் எவ்வளவு கன்யாகுமரி மக்களுக்குக் கிடைக்கச் செய்தார்? என்ற கேள்விக்கு என் பதில்
01)பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) , அரசுத் துறையில் இருக்கும் லஞ்சத்தைக் குறைக்கவும் மானியங்கள் மக்களை நேரடியாகக் கொண்டி சேர்க்கவும் இந்த வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு திட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் சென்று நிற்கும் நிலையைக் குறைக்கத் திட்டம்.
இந்த திட்டத்தால் கன்யாகுமரியில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை : சுமார் 3.59 லட்சம். இவற்றில் பெரும்பாலானோருக்கு Rupay வழங்கப்பட்டுள்ளது இதில் இன்று அனைத்துவிதமான மானியங்களும் ஏழைகளுக்குச் சென்று சேர்க்கப்படுகிறது நேரடியாக.
02)Pradhan Mantri Jan Suraksha Yojna (PMJSY) காப்பீட்டுத் திட்டம்:
இதன் மூலம் மத்திய அரசு நடுத்தர ஏழை மக்கள் வாழ்வில் எதிர்பாராதவிதமாக வரும் மருத்துவச் செலவுகள் விபத்துகளிலிருந்து பாதுகாப்ப விரும்பியது. அதுவே அந்த குடும்பத்தை பெரும் வீழ்ச்சிக்கு வழி வகை செய்யும் என்பதால் அதிலிருந்து பாதுகாக்க விரும்பிய இந்த அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தில்
Pradhan Mantri Jeevan Jyoti Yojana - வருடம் 330ரூபாய் கட்டுவதன் மூலம் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் திட்டம் கொண்டுவந்தார்கள் இதில் கன்யாகுமரி தொகுதியில் சுமார் 56,000 மக்களுக்கு இதைக் கிடைக்கச் செய்தால் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்.
Pradhan Mantri Suraksha Bima Yojna - அதே போல் விபத்து காப்பிட்டாக மாதம் 12 ரூபாயில் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு கிடைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது அதில் கன்யாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.64லட்சம் மக்களுக்கு இந்த திட்டத்தைக் கொண்டு சேர்த்தார் ராதாகிருஷ்ணன் அவர்கள்.
Atal Pension Yojna - அரசு வேலையும் இல்லை பெரிய சேமிப்பும் இல்லை ஆனால் எதிர்காலம் வயதான காலத்தில் எந்த நிதி உதவும் என்ற எதிர்கால சேமிப்பில் சிக்கல் இருந்த பல நடுத்தர ஏழைக் குடும்பங்கள் பயன்பெற மத்திய அரசு இந்த ஓய்வூதிய திட்டம் கொண்டுவந்தது - கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 28,000 குடும்பத்திற்கு இந்த திட்டம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
03)Pradhan Mantri Mudra Yojana (முத்ரா வங்கி கடன்) :
நடுத்தர தொழில் ஆர்வம் உள்ள மக்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தவும் , அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும் அடுத்த முயற்சிக்கு உதவும் வகையிலும் இந்த லோன் கொண்டுவரப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.41 லட்சம் பேருக்கு இந்த வங்கிக் கடன் சென்று சேர வழிவகை செய்தார் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள். இதன் மூலம் வழங்கப்பட்ட தொகையின் மதிப்பு ஏறக்குறைய 1,400கோடி.
04)Agriculture & Farmer Welfare initiatives: {விவசாயம் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்}
மண் பரிசோதனை மிக அவசியமான ஒன்றாகும் - அதில் மொத்தம் 35,061 மாதிரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் எடுக்கப்பட்டன - பரிசோதனை செய்யப்பட்டவை 27,296 - மொத்தம் கன்னியாகுமரி தொகுதி முழுவதும் Soil Health Card மட்டும் 24,500 வழங்கப்பட்டது.
இதைத் தவிர Micro Irrigation status , organic farming , Ground Water Potential, Seeds and Planting Material என்று பார்க்கும் போது சுமார் 8 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைந்தவர் ஆவர். அதற்கான முயற்சி மேற்கொண்டவர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்.
05)Ayushman Bharat : அனைத்து மக்களுக்குமான இலவச காப்பீட்டுத் திட்டம் மூலம் குடும்பத்தினர் மருத்துவ தேவைக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் கன்யாகுமரி மாவட்டத்தில் மட்டும் 4.46லட்சம் மக்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த திட்டம் மூலம்.
இந்த விதம் மத்திய அரசின் திட்டங்கள் சுமார் 42க்கும் மேற்பட்ட திட்டங்களை உடல் ஊனமுற்றோர் ஆரம்பித்து சிறுபான்மையினர் தொட்டு விவசாயிகள் வரை திட்டங்களை கொண்டு சேர்க்கும் வேலையில் தன் தொகுதி மக்களுக்கு தன் மட்டத்தில் நேர்மையாக செலவிட்டவர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள். இதை எவரும் மறுக்க முடியாது.
---------------------------------------------------------------------------
அதே நேரம் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தன் தொகுதி கட்டமைப்பு மேம்பட என்ன செய்தார்? இது ஆக அவசியமான ஒன்று. மொத்த கட்டமைப்பும் மேம்பட வேண்டும்.நலத்திட்டங்கள் மத்திய அரசு கொண்டுவருவது சரி , தன் தொகுதிக்கென்று கேட்டுச் செய்து கொடுத்த கூடுதல் திட்டங்கள் என்ன என்ன?
---------------------------------------------------------------------------
அதே நேரம் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தன் தொகுதி கட்டமைப்பு மேம்பட என்ன செய்தார்? இது ஆக அவசியமான ஒன்று. மொத்த கட்டமைப்பும் மேம்பட வேண்டும்.நலத்திட்டங்கள் மத்திய அரசு கொண்டுவருவது சரி , தன் தொகுதிக்கென்று கேட்டுச் செய்து கொடுத்த கூடுதல் திட்டங்கள் என்ன என்ன?
Central Road Fund (CRF) மத்திய சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 370கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் இவர் இந்த பகுதி மக்களுக்கு 125 சாலைகளை வழங்கியுள்ளார். பார்வதி புரம் , காவல் கிணறு , களியக்காவினை , பரசேரி , புதுக்கடை , சுசீந்திரம் , பார்வதி புரம் என்று தேசிய நெடுசாலைத் திட்டத்தின் கீழ் 178கோடி மதிப்பிலான திட்டங்களை அனுமதி பெற்று கொடுத்துள்ளார்.
இந்த தொகுதியில் மேம்பாலங்கள் அமைத்த வகையில் சுமார் 1200கோடி மதிப்பிலான திட்டங்கள் இந்த தொகுதிக்குச் சென்றுள்ளது. இதில் மார்த்தாண்டம் , பார்வதிபுரம் . சுசீந்திரம் போன்றவை முழுமையாக முடிக்கபட்டு , செட்டிகுளம் , துவாலாறு பணிகள் நடைபெறுகின்றன. தக்கலை , வடசேரி , கோட்டார் போன்ற இடங்களுக்கு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன.
தொழிலாளர் நலன் சார்ந்து மருத்து உதவிகளைச் செய்ய உருவாக்கப்பட்ட Employees' State Insurance மருத்துவமனைக்குத் தேவையான இடங்களை கையகப்படுத்து கொடுத்துள்ளார். இதன் மதிப்பு 110 கோடி - இதன் மூலம் சுமார் 4,00,000 தொழிலாளர் மருத்துவ நலன் உறுதிப்படுத்தப்பட்டு - அவர் தன் குடும்ப சுமையைத் தாங்கி பிடிக்க முடிகிறது.
வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் , கன்யாகுமரி - திருவனந்தபுரம் , மதுரை - தூத்துக்குடி இந்த மூன்று ரயில்வே பணிகளும் அனுமதி பெற்றுத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இது சுமார் 40 ஆண்டுக்கால மக்கள் எதிர்பார்த்த திட்டம். நாகர்கோவில் ரயில்வே சந்திப்பு உட்கட்டமைப்பு முழுவதும் மேம்படுத்தியவரும் இவரே. கன்யாகுமரி மாவட்டத்தின் முக்கிய வருவாயான சுற்றுலாத்துறை மேம்படுத்த 100கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைப் பெற்றுக் கொடுத்ததன் காரணமாக - கடற்கரை பகுதிகளில் சுற்றுலா கட்டமைப்பு மேம்படுத்தியுள்ளது சுற்றுலாத்துறை அமைச்சகம்.
இப்படியாக நான் அறிந்த வரை இந்த கடந்த 1800 நாட்களில் இந்த மனிதர் சரியாகவே தன் கடமையைச் செய்து வந்துள்ளார்.
இது நான் அறிந்த மதிப்பீடு..
--------------------------------------------------------------------------
எனவே மக்கள் சிந்திக்க வேண்டியது :
--------------------------------------------------------------------------
எனவே மக்கள் சிந்திக்க வேண்டியது :
அடுத்து எப்படியும் ஆட்சியை நரேந்திர மோடி அவர்கள் தான் பிரதமராக வருவார் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் வரும் நிலையில் - உங்கள் தொகுதியில் மீண்டும் ஒரு அமைச்சர் கிடைப்பது என்னைக்கேட்டால் உங்கள் அனைவருக்கும் நல்லது. இது தான் சாதுரியமான முடிவாக இருக்கும். வெளி நாடுகளில் வாழும் மக்கள் ஆரம்பித்து உள்ளூர் மக்கள் வரை பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறதா என்றும் சிந்திக்கவும். அந்த அளவிற்குப் பழக எளிமையானவராக , உழைக்கும் நபராக இருந்தார் என்றால் அவரை விட்டுவிடுவது உங்களுக்கு ஆரோக்கியமான விசயம் அல்ல.
இதை ஏன் கூறுகிறேன் என்றால் நான் சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில் நான் அறிந்த வரை பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல பாஜக வேப்பாளர்களுக்கு வாக்கு செலுத்தக் கூடாது என்று கிறிஸ்தவ மத போதகர்கள் அமைப்புகள் உறுதிமொழி கொண்டுள்ளதாகத் தகவல். இது எந்த வகையில் சரி????
காரணம் மதம் என்றால் மதவாத அரசியல் இது தானே! மதம் மொழி இனம் பார்க்காமல் அனைத்து மக்கள் வாழ்வு மேம்பட ஒரு மனிதர் உழைக்கிறார் ஆனால் அவர் தோல்வி அடையவேண்டும் காரணம் மதம் என்றால் அது எந்தவகையில் சரி? இது எந்த மதத்தின் பெரியவர்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள். உழைக்கும் மக்கள் அங்கிகரிக்கபட வேண்டும்.
காரணம் மதம் என்றால் மதவாத அரசியல் இது தானே! மதம் மொழி இனம் பார்க்காமல் அனைத்து மக்கள் வாழ்வு மேம்பட ஒரு மனிதர் உழைக்கிறார் ஆனால் அவர் தோல்வி அடையவேண்டும் காரணம் மதம் என்றால் அது எந்தவகையில் சரி? இது எந்த மதத்தின் பெரியவர்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள். உழைக்கும் மக்கள் அங்கிகரிக்கபட வேண்டும்.
இது இங்கே மட்டும் அல்ல தமிழ் நாடு முழுவதும் பிரச்சாரங்கள் காண்கிறேன் அதை நான் விரும்பவில்லை. சிலர் கிருஸ்தவ தலைவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்கு மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். ஒரு மனிதர் உழைப்பு அங்கீகாரம் செய்யவில்லை என்றால் நாம் என்ன மனிதர்கள்!
தொழில் அதிபர் வசந்தகுமார் அவர்களை விடப் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் என்னைக் கேட்டால் மிகச் சிறந்த தேர்வு.
என்கிறார் M மாரிதாஸ் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வாக்களிக்கும் போது என்னென்ன விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லாத் தொகுதிகளிலுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள உதவியாகவும்!
அரசியலில் மதம் மதம் பிடித்து ஆடுகிறது. வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteவலதுசாரி அசமந்தத்தனம் இடது அதிதீவீரவாதத்தைத் தூண்டுகிறது என்பது சென்ற நூற்றாண்டில் லெனின் அனுபவத்தில் கண்டுசொன்னது! சிம்பிளாக ஒரு கோளாறு இன்னொரு கோளாறைத் தூண்டி வளர்க்கிறது என்று சொல்லலாம் ஸ்ரீராம்!
Delete