தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது என்கிறது ஆசியாநெட் நியூஸ் தமிழ்.
அங்கும் இங்கும் பேரம்பேசுவதிலேயே காலம் கடத்திக் கொண்டே இருக்கும் தேதிமுகவை துரைமுருகன் நன்றாக வைத்துச் செய்துவிட்டாரோ? ரெண்டு முருகனாக, கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்!
மகனுக்கு சீட் வாங்கி விட்ட சந்தோஷம் வேறு!
அங்கும் இங்கும் பேரம்பேசுவதிலேயே காலம் கடத்திக் கொண்டே இருக்கும் தேதிமுகவை துரைமுருகன் நன்றாக வைத்துச் செய்துவிட்டாரோ? ரெண்டு முருகனாக, கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்!
மகனுக்கு சீட் வாங்கி விட்ட சந்தோஷம் வேறு!
அரசியலில் கிடைத்த வாய்ப்பைத் தொடர்ந்து கோட்டை விடுகிற கட்சியாக, தேர்தலுக்கு முன்னாலேயே தோல்வியைத் தழுவுகிற கட்சியாக விஜய்காந்தின் தேதிமுக ஆகி இருப்பது இன்றைய அரசியல் களத்தின் பரிதாபம்! இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட பீயுஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்!
இதெல்லாம் அதிமுகவைக் காப்பாற்றப்போவதில்லை என்று தலையங்கம் எழுதி இங்கே டிவியிலும் வாசித்தாலும் பயனில்லை என்று உள்ளூர உதறல் எடுத்திருப்பதால் தானே தடைகோரி உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்? அய்யம்பேட்டை வேலை என்பது இதுதானே!
3:34 PM - 6 Mar 2019 இப்படி திமுக தொகுதிப் பங்கீட்டை நக்கல் அடித்திருப்பது மு க அழகிரியின் மகன் துரை தயாநிதி தான்!
இன்னும் என்னென்ன வருமோ?
தேமுதிக தனியாகக் களம் காணப் போகிறதாமே...
ReplyDeleteஓவரா அலட்டினால் தனியாத்தான் நிக்கோணும்! நிப்பாகளா?சந்தேகம் தான்!
Deleteபொதுவா இந்த மாதிரி பச்சோந்தியா பேரம் பேசும் வலிமை, விஜயகாந்த் இல்லாமல் தேதிமுகவுக்குக் கிடையாது. அவங்க போன எலெக்ஷன்ல காங்கிரஸ்/திமுக மீது இருந்த மக்கள் எதிர்ப்பு வாக்குகளை மோடி அறுவடை செஞ்சதை வச்சு (18%), அந்த வாக்குகள் தங்களாலதான் என்று நினைக்கிறாங்க.
ReplyDeleteஇப்போ 4 சீட் அல்லது தினகரனோட களம் காணணும். இப்போ கூட சதீஷ், பாஜகவோட பேசறோம்னுதான் சொல்லிக்கிட்டிருக்காரு. இனி 4 சீட் வாங்கிக்கொண்டு சேர்ந்தாலும் அது அதிமுகவுக்கு சரியா வராது.
2016 இல் இப்படித்தான் நினைத்து மக்கள் நலக்கூட்டணி என்று கவிழ்ந்தார்கள்! விஜய்காந்த் கவிழ்ந்தது ஒருபக்கம் இருக்கட்டும்! இவரைவிட மோசமான பச்சோந்திகளாக வைகோ, திருமா, இடதுசாரிகள், பாமக என்று உதிரிகள் நிறைய இருக்கிறார்களே! அவர்களை என்ன செய்யப்போகிறோம்?
Delete