தேர்தல் அலப்பறைகள்! #2 அரசியல்களம் இன்று

தேர்தல் நேரம் நெருங்க நெருங்க சிலபல சங்கடமான விஷயங்களை வேட்பாளர்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்! என்னதான் காசாலே அடித்துச் சமாளித்து விடலாம் என்று கணக்குப் போட்டாலும்கூட  வாக்காளர்களுடைய உண்மையான மனநிலை என்னவென்றே கணிக்க முடியாததாக இருக்கும் சூழ்நிலையில் மக்கள் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்புக்களை, அதுவும் 20 நாட்களுக்கு முந்தி எடுத்ததை வைத்தே சில சேனல்கள் இங்கே பிழைப்பை நடத்திக் கொடிருப்பதைக் கவனிக்கிறீர்களா?

படமே பலகதைகள் சொல்லுமே! இதற்கெல்லாம் தனி விளக்கம் வேண்டுமா என்ன? ஆனால், மதுரை ஆரப்பாளையம்  பகுதியில் பல வீடுகளில் ஒட்டப்பட்ட ஒரு அறிவிப்பு கள யதார்த்தம் எப்படியிருக்கிறது என்பதற்கு ஒரு சாம்பிளாக இருக்குமோ?

எங்கள் வீட்டில் அனைவரும் ஐயப்பனைக் கும்பிடுகிறவர்கள் தயவுசெய்து கம்யூனிஸ்ட், திமுகவினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்கிறது அந்த அறிவிப்பு. காவல்கோட்டம் சு வெங்கடேசன் முதலெட்டு எடுத்து வைப்பதற்கு முன்னரே இப்படியா?
அடடே!மதி கோடுகளில் தமிழக காங்கிரஸ், பாஜக இரண்டையும் இப்படிக் கிழித்திருக்கிறார்! பாஜக தனது வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்துவிடுமாம்! ஆனால் காங்கிரஸ்? நாளை? நாளைமறுநாள்? டில்லி தாக்கீது தேர்தல் முடிவதற்குள் வந்துவிடுமாம்!

கான்கிரஸ் திரும்பவும் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையிலே இருக்கிறதா? கூட்டணி ஏதும் இல்லாமலே ஆட்சியை பிடித்துவிடுவோம் என நினைக்கீறார்களா?
கான்கிரஸ் இதுவரை பெரிய மாநிலங்களிலே தமிழ்நாடு தவிர எதிலும் கூட்டணி அமைக்கவில்லை. கர்னாடகா கூட்டணியோ தேவகவுடா தலைமையிலே ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்தலின் போது எப்படியிருக்கும் என தெரியவில்லை.
பீகார், வங்காளம், உபி, மபி, மகாராஷ்டிரா என எங்கும் கூட்டணியே அமைக்கவில்லை. கேரளா கேக்கவேணாம் கூட்டணி அமைக்க முடியாது.
மகாகட்பந்தன் மானங்கெட்டதாகி நிற்கிறது. மாயாவதி நேரடியாகவே கான்கிரஸ் கூட்டணி வேண்டாம் என சொல்லியிருக்கிறார்.
ஏன் இப்படி? இது என்ன தைகிரியமா? அல்லது வேறு ஏதேனும் திட்டமா? கலவரம் கீது செய்யும்களோ?
தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையிலும் ஏதும் கண்டுகொள்ளாமலே வாரிசுகள் இரண்டும் ஊர் சுற்றிக்கொண்டிருக்கின்றனவே என்ன விஷயம்?
என்ன நடந்தாலும் அடுத்த முறை ஆட்சிக்கே வராவிட்டாலும் பரவாயில்லை பப்பு தி கானுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்ற எண்ணமா?
பதிலுக்கு பிஜேபியோ தேர்தல் கூட்டணிகளை வைத்ததோடு சரி இன்னமும் பெரிய அளவிலே பிரச்சாரத்தை தொடங்கவில்லை என தெரிகிறது. மோடி ஆரம்பித்த நானும் காவலனே டிவிட்டர் பிரச்சாரத்தை எல்லாம் கணக்கிலே எடுக்கவேண்டாம்.
முன்பெல்லாம் தேர்தல் களை கட்டுமே இப்போது ஏன் ஒரே அமைதியாக இருக்கிறது?
இப்படித்தான் இருக்கும் என மக்களும் அதிகளவிலே வாக்குசாவடிக்கு வராமல் இருந்துவிடுவார்களோ?
நான் தான் ஏதும் படிக்காமல் இருக்கிறேனா?
தமிழ்நாட்டிலே முதல் முறையாக இரண்டு கட்சிகளும் குறிப்பிட்ட மத ஆட்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்கின்றன. இதுவும் புதுசு.
நிஜமாவே இந்து வாக்கு வங்கி உருவாகிவிட்டதா?
அல்லது அப்படி மாய பிம்பம் காண்பித்து இந்துக்களை வாக்களிக்க போகவேண்டும் என எண்ணாமல் இருக்க செய்கிறார்களா?
அதாவது வெளிப்படையாக ஆதரித்தால் இந்துக்களும் ஓரணியாக பிஜேபிக்கு ஆதரவாக திரளுவார்கள் எனவே வெளிப்படையாக ஆதரிக்கவேண்டாம் என திட்டம் தீட்டி செயல்படுகிறார்களா?
ஓரிரு வாரங்களிலே பார்ப்போம் நிலைமை எப்படி மாறுகிறது என.
இப்படிக் குழப்பம் ராஜசங்கருக்கு மட்டும் தானா?                      

3 comments:

  1. ஐயப்பனையோ, பாகிஸ்தான் தாக்குதலையோ தேர்தல் பிரச்சாரத்தில் சேர்க்கக் கூடாது என்று வேட்பாளர்களுக்குதான் கண்டிஷன் போட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். அதைக் காரணமாக வைத்து எதிர்க்கக் கூடாது என்று வாக்காளர்களுக்குப் போடமுடியுமா என்ன கண்டிஷனை!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயப்பன் விவகாரத்தை மட்டும் கையில் எடுத்த மாநில தேர்தல் ஆணையம் சர்ச்சுகளில் மசூதிகளில் அரசியல் பிரச்சாரம் செய்யக் கூடாதென்று சொல்ல முடிந்திருக்கிறதா ஸ்ரீராம்?

      சிறுபான்மைச் சமூகத்தை சவலைப்பிள்ளைகளாகவே வைத்திருக்கும் போலி மதச்ச்சார்பின்மையின் சிறுபான்மைக்காவலர் வேஷம் இந்தத் தேர்தலில் கலைகிறது!

      Delete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!