மனைவி சொல்லே மந்திரம்! அரசியலுக்காகுமா? மகளிர் தினத்தன்று இந்தப்பகிர்வை நினைவு படுத்துவது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. தேதிமுக பொருளாளர் பிரேமலதா பேசுவதைக் கேட்கையில் அரசியலுக்கு இதெல்லாம் ஆகாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களுடைய அரசியல் நிலைபாட்டைத் தெளிவாகத்தான் சொல்கிறார். ஆனால் ஊடகங்களை எதிர்கொள்வதில் இங்கே ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஏதோ பிரச்சினை இருப்பதும், ஊடகங்கள் இங்கே கேள்வி கேட்கிற விதமே செய்தி சேகரிப்பதற்காக மட்டுமே என்றில்லாமல் சேனல் அரசியல் சண்டையை நடத்துவதற்காகவா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த வீடியோவுக்கு சேனல் கொடுத்திருக்கிற தலைப்புக்கும் நடப்புக்கும் சம்பந்தம் ஏதாவது இருக்கிறதா? பிரேமலதா சிலரை ஒருமையில் விளிக்கிறார் என்பதில் சம்பந்தப்பட்ட ஊடகக்காரர் எவரும் ஆட்சேபணை தெரிவித்தமாதிரி எங்குமில்லை. ஆனால், சிலர் கேள்விகேட்ட விதமே, ஒரு சண்டையை ஆரம்பிப்பதற்காகத்தானோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறதா, இல்லையா?
(வாட்ஸப்பில் வந்தது)
எவ்ளோ சீட்டு எதிர்பாக்கற..?
ஏழு..
உன்னையெல்லாம் எதிர்க்கட்சி தலைவரா நாங்க வர வச்சோம் பாரு... அதுக்கு ரெண்டு கழிச்சிக்கோ..
அஞ்சி...
எங்களை பாத்து சட்டையையில நாக்கு துருத்திட்டு பேசினியே, அதுக்கு ரெண்டு கொறச்சிக்கோ...
மூணு...
அப்பறம்.. "இந்தம்மா தான் எனக்கு சரக்கு ஊத்திக் கொடுத்தாங்களா" ன்னு எகத்தாளம் பண்ணேல்லே... அதுல ரெண்டு கழிச்சிக்கோ...
ஒண்ணு...
தம்மாத்துண்டு பையனை வச்சி பொதுக்கூட்டத்துல "அதிமுக கூட்டணிக்கு எங்க கால்ல விழுது" ன்னு சொல்ல வச்சேல்லே.. அதுக்கு ரெண்டு சீட்டு...
இப்ப இன்னா பண்றே, நேரா துரைமுருகன் வீட்டுக்கு போய் மீதி ஒரு சீட்டை வாங்கியாந்து நாளைக்குள்ள செட்டில் பண்ணு..
வாங்க! கமல் காசர் காமெடியைக் கொஞ்சம் பார்த்து விடலாம்! கமல் காசருடன் புதிதாகச் சேர்ந்து கொண்ட நபர்களைத் தேடுவதை விட, சேர்ந்து சிலகாலத்திலேயே கழன்று கொண்டவர்களைக் கவனிப்பது இப்போது எனக்குப் புது விளையாட்டாக ஆகிக் கொண்டிருக்கிறதோ? ஒரு பெயர் உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்! பாரதி கிருஷ்ணகுமார்!
இதுவரை 10000 ரூபாய் கட்டி 732 விண்ணப்பங்கள் வந்திருக்கிறதாம்! போகிற ஜோரைப்பார்த்தால் மருத நாயகம் படத்தை எடுப்பதற்குத் தேவையான மூலதனம் விரைவில் சேர்ந்துவிடும்போல என்றொரு நையாண்டி முகநூலில் உலவிக்கொண்டிருக்கிறது!
ஆக அரசியல்களம் அதற்கே உண்டான அபசுரங்களோடு களைகட்ட ஆரம்பித்துவிட்டது!
பிரேமலதா நன்றாகத்தான் பேட்டி கொடுத்தார். வம்புச் சண்டைக்காக நிருபர் கேள்வி கேட்டபோது நிலை தடுமாறி கோபம் கொண்டார். இந்த நிருபர்கள் ஸ்டாலினிடம், திருமா, ராமதாசிடம் உங்க கட்சி கொள்கை என்னன்னு நாக்குமேல பல்லு போட்டு கேட்கட்டுமே.. இது ஊடக அரசியல்.
ReplyDeleteதா கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டபோது கருணாநிதி கேள்விகேட்ட நிருபரையே நீதான் கொன்னிருப்பே என்று சொன்ன வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நினைவுக்கு வருகிறதே!
Deleteஹரன் பிரசன்னா கருத்துதான் எனக்கும்.
ReplyDeleteஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேமுதிகவை கழற்றி விடுவதுதான் நல்லது. ஏன் அதிமுக இன்னமும் இதன் பின்னால் அலைகிறது என்று தெரியவில்லை. அந்த வகையில் சீசீ இந்தப் பழம் புளிக்கும் வகையில் இருந்தாலும் திமுகவும் துமுவும் ஓகே!
பிரேமலதா விடியோவை ரசித்தேன்! ஆமாம், கேப்டன் ஏன் வரவில்லை, பேசவில்லை?
நல்லா இருந்தபோதே பிரெஸ் மீட்டில் அடிக்கக் கை ஓங்கியவர் அவர். இப்போ கோபம் வந்தா ஹார்ட் தாங்குமா? அதனால் வரலை போலிருக்கு.
Deleteதேதிமுகவுக்கு நெகடிவ் வாக்கு இல்லை. 1%னாலும் அது எதிர்கட்சிக்கு போய் சிதறக்கூடாதே
ஸ்ரீராம்! பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்திவருகிற விஷயம் பாமக, விசிக, மதிமுக, இடதுசாரிகள் என்று உதிரிகள் அனைத்தையுமே கழித்துக்கட்டவேண்டுமென்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்! இவைகளுக்கு அடுத்து தேதிமுகவும்!
Deleteகமலகாசன், அவர் மகளோ அல்லது மைத்துனரோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொன்னவுடன், யார் அந்த புது மைத்துனர், கௌதமிக்கு அப்புறம் யாருடன் அவர் இருக்கார் என்று தலையைப் பிச்சுக்கிட்டதுதான் மிச்சம்.
ReplyDeleteநான் ஒன்று கேட்கிறேன்... தான் நடிக்கும் சினிமாவில், "ஆடை வடிவமைப்பு" என்று ஒரு போஸ்டுக்கு தன் அப்போதைய மனைவிக்கு (படம் எடுக்கும் காலத்தில் யார் தன் மனைவியோ அவருக்கு) வேலை கொடுத்து, தயாரிப்பாளர் பணத்தை வாங்கிக் கொடுத்தது மட்டும் நேர்மையான செயலா? வாணி கணபதி, சரிகா, கௌதமி... இடைல யாரையேனும் விட்டுட்டேனா?
மனைவிக்கு வேலைவாங்கிக் கொடுத்ததெல்லாம் ஒரு விஷயமா? சினிமாவையும் அரசியலையும் சேர்த்துப்பார்க்கக் கூடாது! :))))
Delete