ராவுல் பாபா இப்போதெல்லாம் போகிற இடங்களில் எல்லாம் காவல்காரன்/வாட்ச்மேன் ஒரு திருடன் என்ற அர்த்தம் தரும் சவுக்கிதார் சோர் ஹை என்று கூவிக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறீர்களா? இந்தக் கூவல் பின்னால் இருப்பதென்ன? தலைப்பில் சொன்னதுதான்!
கொஞ்சம் இந்த வீடியோவில் என்ன சொல்கிறார்கள் என்று கவனமாகக் கேளுங்கள். ராவுல் பாபா, பிரியங்கா வாத்ரா, ராபர்ட் வாத்ரா மூவரும் நிலங்கள் வாங்கி விற்றது, லண்டனில் சொத்துவாங்கத் திருப்பி விடப் பட்டது எல்லாவற்றின் பின்னாலும், ஆயுத பேர ஊழலில் கிடைத்த பணம் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு நில ப்ரோக்கராக இருந்த CC பிள்ளை அழைக்கப்பட்டிருக்கிறார். Bofors முதல் அகஸ்ட்டா வெஸ்ட்லான்ட் வரை ஒவ்வொரு ஆயுதக் கொள்முதலிலும் கொள்ளை அடித்த சோனியா G அண்ட் வாரிசுகள் தங்களுடைய திருட்டுத்தனத்தை மறைக்க மோடி திருடி விட்டார் உங்களிடமிருந்து திருடி அனில் அம்பானி பாக்கெட்டில் போட்டுவிட்டார் ரஃபேல் ரஃபேல் என்று கிளிப்பிள்ளை மாதிரிக் கூவிக்கொண்டே போவதில் அரசியல் கூமுட்டைத்தனம் இல்லை! பக்கா கிரிமினல்தனம் மட்டுமே வெளிப்படுகிறது.
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒரு பிரெஸ் மீட்டில் ஆதாரங்களோடு விளக்குகிறார். பொறுமையாகப் பாருங்கள்! அல்லது .......
இப்படி பரஸ்பரம் சொறிந்துகொள்கிறவர்கள் பேச்சு தான் பிடித்திருக்கிறது என்கிறவர்கள் இங்கேயே அபீட் ஆகிக்கொள்வது மிகவும் நல்லது.
இந்த வீடியோ வலையேற்றப்பட்டது ஜூன் 2013 இல்! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி 2001 இல் ராவுல் பாபா அமெரிக்காவில் பாஸ்டன் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட கதையைக் கொஞ்சம் சொல்கிறார். ஒரு லட்சத்து அறுபதாயிரம் டாலர்கள் ரொக்கமும் வேறு சில சங்கதிகளும் வைத்திருந்ததாகக் கைது. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 44 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டி வந்திருக்கும்! வாஜ்பாய் தலையிட்டுக் காப்பாறினார் என்கிறார். சோனியா G மற்றும் வாரிசுகள் பற்றி மிக authenticated information வைத்திருப்பவர் டாக்டர் சுவாமி. ஐமுகூட்டணி பத்தாண்டு கால ஊழல்களை அவர்மாதிரிக் களத்தில் இறங்கி அம்பலப்படுத்தியவர் வேறு எவருமில்லை.
இசுடாலின் பாட்டுக்கு இன்னும் சிலவாரங்களில் ராகுல் தான் பிரதமர் என்று அறிவித்துவிட்டார். 2004 இல் சோனியா G அவசர அவசரமாக நாடாளுமன்றத் காங்கிரஸ் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகைக்கு ஓடிப்போன வேகத்திலேயே திரும்பிவந்து ஒரு டம்மிப்பீசைப் பிரதமராக்கி விட்டு, தியாகசிகரமாகக் காட்டிக் கொண்ட கதை மீண்டும் திரும்பவேண்டுமோ?
முதலில் அயித்தைக்கு மீசை முளைக்கட்டும்!!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!