சிதம்பரத்தில் தனிச்சின்னம், ஆனால் விழுப்புரத்தில் சூரியன் என்று போட்டியிடுகிற இருதொகுதிகளில் இரு வேறு சின்னம் என்பது என்ன மாதிரியான நிலைபாடு?மீசையில் ஏதோ ஒட்டவில்லை என்று சொல்வார்களே, அதுமாதிரியா?
இந்த வீடியோவில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிற இன்னொரு செய்தி, விசிக தமிழ்நாடு தவிர, ஆந்திரா , கேரளா இரு மாநிலங்களிலும் தனிச்சின்னத்தில், இந்த நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிடுகிறார்களாம்!
ஜோதிமணி! அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, காங்கிரஸ், திமுக இரு கட்சியினராலும் வாய்ப்பை இழக்கும்படி செய்யப் பட்டவர்! ராகுல் காண்டி கடைக்கண் அருளால் இன்று நாடாளுமன்ற வேட்பாளராகவும்! அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நேரத்திலேயே அம்மணி சவுண்டு கிளப்ப ஆரம்பித்துவிட்டார் என்கிறது செய்தி! தேறுவது கொஞ்சமல்ல நிறையவே கடினம்தான்!
சென்னையில் நேற்று வெற்றிகரமாக நடந்தேறியது, துருவங்கள்2. அரங்கை அதிரவைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்காக இன்னமும் கடுமையாய் உழைப்பேன் என்று சொல்கிறார் ரங்கராஜ் பாண்டே ! ஆனால் அறிவிக்கப்பட்டபடி H ராஜா இல்லையாமே? பதிலாக MaFoi பாண்டியராஜன் கலந்து கொண்டாராம்!
தொடர்ந்து மொபைல் ஆப், யூட்யூப், முகநூல் லைவ், இன்ஸ்டாக்ராம் ஊடகங்களில் இன்று முதல்!
ரங்கராஜ் பாண்டே மீண்டும் நேரலையில்! தொழில்நுட்ப வசதி முன்னேற்றத்தில் இன்று மாலைமுதல் மீண்டும் நேரலையில் நேயர்களைச் சந்திக்கவிருக்கிறார். நேரலையில் இணைந்திருக்க .....
என்று சுட்டிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
காலிங் பெல் அடிப்பது சிலநேரம் நல்லதுக்கில்லை. கதவைத்திறந்தபோது வாயெல்லாம் பல்லாக நுழைந்தார் ச.வ.ச காரியதரிசி.
என்ன? என்று கேட்குமுன் ஒரு செய்தித்தாளை கற்றையை நீட்டினார் “ என் எழுத்து வந்திருக்கு.ஒண்ணு தமிழு, இன்னோண்டு இங்க்லீஷ் - கேரளாலேர்ந்து” ல்
”என்னவே இது?
“எங்க தலைவரு மதுர பக்கம் போனப்ப, மொழி பெயர்ப்பு நாந்தாஞ் செஞ்சேன். படிச்சுப் பாரும்”
“ மீட்டிங்கெல்லாம் எப்படிப் போச்சி?”
அதேன் கேக்கீய? மதுரக் காரனுவோ நம்மூர்க்காரனுவள விட நல்லவங்க கேட்டியளா? சொல்லிட்டு, ஓட நேரம் கொடுத்துட்டுத்தான் அடிக்காய்ங்க”
“விசயத்துக்கு வாரும்”
அவர் குரல் செருமிக்கொண்டு தொடங்கினார் “ செம்பட்டிகிராமத்துல ஒரு மீட்டிங் முடிச்சிட்டு, போறவழியில, நம்ம பாசக்காரப்பயலுவோ, வண்டி நிறுத்தி, தலைவர் எங்கூர்லயும் ரெண்டு வார்த்த பேசிட்டுப் போணுன்னாவோ. ச...ரி...ன்னு போனா, ஒரு மகளிர் பள்ளிக்கூடத்து திடல்ல மீட்டிங்கி. பொம்பளேள்தான் நிறையபேரு. தலைவரு அவங்களப் பாத்துத் தொடங்கினாரு”
‘I know you would give a warm welcome to me"
”என்னைப் பாக்க நீங்க கொதிச்சிக்கிட்டிருப்பீயன்னு தெரியும்”
“In this place, my father got grand reception long ago"
"ரொம்ப முன்னாடி,எங்க பாட்டனாருக்கு திருமணவரவேற்பு இங்கிட்டுத்தான் நடந்திச்சி”
"ரொம்ப முன்னாடி,எங்க பாட்டனாருக்கு திருமணவரவேற்பு இங்கிட்டுத்தான் நடந்திச்சி”
“My great grand father wanted women development here"
"எங்க பாட்டனாருக்கு இந்த ஊர்ல வளர்ந்த பொம்பளேள்மேல ஒரு விருப்பம்”
"எங்க பாட்டனாருக்கு இந்த ஊர்ல வளர்ந்த பொம்பளேள்மேல ஒரு விருப்பம்”
“அய்யோ” என்றேன் என்னை அறியாமல்.
அவர் தொடர்ந்தார் “ So I too have an eye on women development here"
அவர் தொடர்ந்தார் “ So I too have an eye on women development here"
”அதுனால, எனக்கும் இங்க சமஞ்ச பொம்பளேள் மேல ஒரு கண்ணு”
நான் எழுந்துவிட்டேன்.
“உக்காருங்க” என்றார் “இன்னும் இருக்கு. இத்தனையில ஆம்பளேள்ள சிலர் எழுந்து ஓடறானுவோ. எங்கடா?ன்னு கேட்டா, வீட்டுலேர்ந்து அருவா எடுத்துட்டு வர்றேன்னு கொலவெறியில போறானுவோ”ன்னாவ”
தலைவர் உடனே விச்யத்தைப் புரிஞ்சிகிட்டு “ I shall ask my secretary to brief you one by one. Be calm" ன்னாரு.
நான் அத மொழி பெயர்க்கறதுக்குள்ள, நம்ம பொள்ளாச்சி நண்பர் மைக்கைப் புடுங்கி “ என்ர காரியதரிசி, உங்க எல்லாருக்கும் உள்ளாடை கொடுப்பாருங்... அமைதியா இருங்..”ன்னாரு.
“ஏம்வே இப்படிச் சொன்னீரு?’ன்னு கேக்கேன். அதுக்கு அவரு “ briefனா ஜட்டி தானுங். அட நம்ம திருப்பூர் சமாச்சாரமுங்!. என்ன சைஸ்னு மட்டும் கேட்டு வைங்க்ணா”ங்காரு.
பொம்பளேள்ளாம் அடிக்க வந்துட்டாளுவன்னு அவசரமா சுமோல ஏறி வந்துட்டம்."
“நல்ல வேளை பொளைச்சீங்கவே” என்றேன்.
அடுத்த கிராமத்துல நுழையறப்பவே தடுத்து தொண்டர் சொல்லிட்டாரு “ அந்தூர்க்காரனுவோ போன் போட்டு சொல்லிட்டானுவ. இங்க ரிஸ்க் வேணாம். வேணா, மாட்டுக் கொட்டாயில பேச்சு வச்சுக்கலாமா?”ன்னாரு
மாட்டுகாரன் “ வேணாங்க. மாடெல்லாம் மிரண்டுரும். குதறிப்போடும் பாத்துகிடுங்க. வேணா கோழிப்பண்ணையில பேசுங்க. அதுங்க, கம்பி வலைக்குள்ளாற இருக்கும்லா? நமக்கும் ஸேஃப்டி”ன்னாரு. சரின்னு அங்கிட்டுப் போனம்.
இவரு பக் பக்குன்னு பேசறது கோழி மொழியில கெட்ட வார்த்தை போலிருக்கு. அதெல்லாம் மிரண்டு, நெஞ்சை விரிச்சு, சிறகை பலமா அடிச்சு கொக் கொக் நு கம்பிவலையைக் கொத்துதுங்க. நம்மூர் பத்திரிகைக்கு He gets standing ovation from hens நு எழுதச் சொன்னாரு ஒரு தலைவரு.
அந்தப் பயலுவ “ கோழியெல்லாம், காந்திக்கு எழுந்து நின்று முட்டையிட்டன”னு எழுதியிருக்கானுவோ. ovation நா முட்டை போடறதா சாமி?”
”அது ovulationவே. என்ன டைப் அடிச்சீருனு பாரும். “
அவர் மொபைலைப் பார்த்து “ ஆட்டோ கரெக்ஷன்ல ovulationனுல்லா போயிருக்கு?” என்றார்.
“கூட வந்த பத்திரிகையாளர் எல்லாரும் சிட்டாப் பறந்துட்டானுவோ. சரி, நாம கொச்சிக்கு கொடுத்த ந்யூஸ் எப்படி வந்திருக்குன்னு பாப்பம்னு தோழமை கட்சி ந்யூஸ்பேப்பர் , நெட்ல படிச்சேன். அதான் இந்த இங்க்லீஷ் பதிப்பு” என்றார்.
அதனைப் பிரித்தேன் “ National party's 50 year old young leader discussed poll plans with Red Dog Singaram"
“என்னய்யா சிவப்பு நாய் சிங்காரம்னுகிட்டு? புரியலையே?”
“செம்பட்டி கிராமத்துல நம்ம சைபால் சிங்காரம் தலைவரப் பார்த்தாருன்னு செய்தி. பட்டின்னா மலையாளத்துல நாயில்லா? அதான் நானே “ தலைவர், சொமந்த நாயி சிங்காரத்துன்னோடு சம்சாரிச்சு” ன்னு கொடுத்துட்டேன். அதான் இங்க்லீஷ்ல!”
சுத்தம்.
வழக்கம்போல்
எரிதான் சுடினும் இறவா நமக்கு
சிரித்தே வருமே இறப்பு
சிரித்தே வருமே இறப்பு
ஆந்திராவில் 6 நாடாளுமன்றத் தொகுதி, கேரளாவில் மூன்று தொகுதிகள், தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் - ஆமாம்.... விசிக கட்சி எந்த மாநிலத்தில் ஆரம்பித்தார்கள்? ஆந்திராவில், கேரளாவில் கூட்டணியில்லாமல் தைரியமாகப் போட்டியிடும் விசிக, தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுகிறதோ?
ReplyDeleteஅங்கே வெளிமாநிலங்களில் வெறும் டோக்கன் தான்! திருமா அறிவிப்புக்குமுன்னால் இவர்கள் அங்கே கடைபோட்டது யாருக்காவது தெரியுமா? மெயின் வியாபாரம் தமிழ்நாட்டில் சில பாக்கெட்டுகளில் மட்டுமே இருக்கிறது. தனிக்கடை போட்டால் போட்டவுடனேயே காணாமல் போய்விடுவார்கள்! அதனால் கூட்டணி! அதுவும் எப்படி முதுகு வளைந்து என்பதை திருமாவே வீடியோவில் சொல்கிறார்!
Deleteமக்கள், தனிச்சின்னத்தில் வாக்களிக்கப் பழகிவிட்டார்கள். ஆனாலும் பிரபலமான சின்னத்தை நாங்கள் ஒரு தொகுதியில் பயன்படுத்திக்கொள்கிறோம் - இதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. திருமா அவர்களுக்கு பிரபலச் சின்னம் தேவையில்லை, எந்தச் சின்னம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள், ஆனால் அவருடைய கட்சியில் மற்றவர்கள் போட்டியிட்டால், அவர்களுக்கு பிரபல சின்னம்தான் தேவை, இல்லாவிட்டால் வெற்றிபெற இயலாது என்று அர்த்தமா? இல்லை, வெற்றி பெற்றபிறகு இதற்கு முந்தி நடந்ததுபோல் மற்றவர்கள் கட்சி மாறிடக்கூடாது என்பதற்கான முன்னேற்பாடா?
ReplyDeleteஇந்தக்கேள்விக்குப் போகும் முன்னால், தேர்தல் முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள், என்னென்ன தேவை என்பதை பற்றிய ஒரு விவாதம் பொதுவெளியில் நடந்தாகவேண்டும். வெள்ளையர்காலத்தில் நடந்த தேர்தல்களில் வேட்பாளர்களுக்குத் தனித்தனி வண்ணப்பெட்டிகள் தான் இருந்தன. ஏதேனும் ஒருவரியாவது வரி செலுத்துகிறவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.
Deleteஇப்போது ஊடக வெளிச்சத்தில் அநேகமாக எல்லாக் கட்சிகளுக்கும் நல்ல அறிமுகம் இருக்கையில், சின்னம், பிரசாரம், வீட்டுக்குவீடு போய் வாக்குசேகரிப்பு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் எல்லாமே அனாவசியம் தடை செய்யப்படவேண்டியவை என்பதோடு தேர்தல் செலவைக் கணிசமாகக் குறைக்கக் கூடியவை, ஏன் இன்னமும் தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே .வருகிறோம் என்று கொஞ்சம் யோசியுங்களேன்!
முற்றிலும் உண்மை! முன்பெல்லாம் எல்லோரிடமும் நிறைய நேரம் இருந்தது. என்ன பண்ணுவது என்று தான் தெரியவில்லை. பொதுக் கூட்டங்கள் எல்லாம் நல்ல பொழுது போக்கு. அதனால் தான் அடுக்கு மொழியில் பேசுபவர்களுக்கும் தோற்றக்கவர்ச்சி கொண்டவர்களுக்கும் கூட்டம் நிறைய சேர்ந்தது. அவர்களும் அதை நல்ல முறையில் அறுவடை செய்து கொழித்தார்கள்.
Deleteஇப்போது யாருக்கும் நேரம் இல்லை. இருந்தாலும், டிவி , மொபைல் போன், இன்டர்நெட் அவற்றை களவாண்டு விடுகிறது. அதற்க்கு மேல் கூட்டத்துக்கு யார் போவார்கள்? வெறும் பணம் கொடுத்து வரவைக்கப்பட்ட கூட்டம் மட்டுமே. இவ்வாறு வரவழைக்கப்படுபவர்கள் நலனுக்காக மட்டுமே இந்த கூட்டங்கள் நடக்கிறது. அந்த கூட்டத்தை தொலைக்காட்சியில் காட்ட அது ஒரு கண்டெண்டாக மாறுகிறது. பெரும்பாலும், பயங்கரமாக சொதப்பும்போது மட்டும்! (தங்கபாலு 'முழி' பெயர்ப்பு) இல்லையேல் பின்னாளில் இந்த 'தலைவர்கள்' கட்சி மாறும்போது மீம்ஸ் மூலம் (ராமதாஸ், அன்புமணி, வைகோ)
பெரிதாக இன்னும் இதை யாரும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. பிஜேபி இதை உணர்ந்து செய்தாலும் அவ்வப்போது செய்யப்படும் ஆர்வக்கோளாறு போட்டோஷாப் வேளைகளில் பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள்! காங்கிரஸ் கதர் உடை அணிந்து இங்கும் அங்கும் அலைந்து போட்டோக்கு போஸ் கொடுத்தால் போதும் தேர்தலில் வென்றுவிடலாம் என்று இருக்கிறாற்போல் இருக்கிறது!
பல பேர் இப்போது என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே தேர்தலை சந்திக்கிறார்கள் என நினைக்கிறேன்!
பாண்டே நிகழ்ச்சி நேரலையில் வருவதுபோல் தெரியவில்லை
ReplyDeletehttps://www.pscp.tv/w/1BdGYOyMArgxX
Deleteநேரலை முடிந்து.விட்டது மேலே உள்ள சுட்டியில் இப்போது கூட rewind செய்து பார்க்கலாம்!
Delete