மறுபடியும்! ரங்கராஜ் பாண்டே! தயாநிதி மாறன்! உதயநிதி!

கொடநாடு எஸ்டேட் கொலைவிவகாரத்தில் திமுக தரப்பு காட்டிய வேகமும் தடை உத்தரவையும் மீறி முதல்வரை சம்பந்தப்படுத்திக் கொண்டே பேசி வந்ததையும் கவனித்தால் இன்றைக்கு சாணக்யா தளத்தில் வெளியான வீடியோ எழுப்பும் கேள்விகள், அதிர்வுகளை திமுக தரப்பு அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.


கொடநாடு வீடியோ சொல்லும் உண்மைகள் என்று இந்த விவகாரத்தை ரங்கராஜ் பாண்டே விளக்கும் ஒரு வீடியோ  சாணக்யா தளத்தில் அடுத்தபடியாக  வெளியாகியிருக்கிறது. 19 நிமிட காட்சியாக  நாளை unedited வீடியோவை வெளியிட இருப்பதாக ரங்கராஜ் பாண்டே சொல்கிறார்.

செல்லாக்குட்டி தயாநிதி மாறனைப் பற்றி இங்கே எழுதி நீண்ட காலமாகிவிட்டது! இரண்டுநாட்களுக்கு முன்னாடியே பகிர்ந்திருக்க வேண்டிய வீடியோ இது! 


பின்னே? முன்னாடி மாதிரி தினகரனில் கருத்து கணிப்பை வெளியிட்டது மாதிரியா இப்போதும் செய்ய முடியும்?

தனதந்தி தனத்தந்தித் தானோ இந்த சதிகாரப் பாவிக்கு அதிகாரம் ஏனோ? எல்லாம் தாத்தா கருணாநிதி பாட்டுத்தான்! #குறவஞ்சி 

வாரிசுகளுக்குத் தேர்தலே ஒரு பொழுதுபோக்கு, விளையாட்டு! அவ்வளவுதான்!   

கடலூரில் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி 300 திமுகவினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்கள் வழங்கப்பட்டதாக புகார்
* பெட்ரோல் நிரப்ப வந்த 165 பேரின் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
#FlyingSquad | #UdhayanidhiStalin | #Petrol
Thanthi TV
டிவி சேனல்இப்படியெல்லாம் படாதபாடுபட்டுக் கூட்டத்தைக் கூட்டினால் உதயநிதி பேசியே கூட்டத்தைக் கலைத்து விடுவார் போல! தமிழ் தேசியம் பேசும்  கார்டூனிஸ்ட் G பாலா இப்படி சலித்துக் கொள்கிறார்!


G பாலா சலித்துக் கொள்வதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கத் தான் செய்கிறது! அவர் உதாரணம் காட்டும் சீமாறு, மயிலாப்பூரை ஸ்தம்பிக்க வைத்து ஒன்றரை மணிநேரம் பேசியதில் நம்மீது கருணை வைத்து கடைசி 30நிமிடங்களை மட்டும் இங்கே காணலாம் என செட் செய்து சுட்டி கொடுத்திருக்கிறார்!

மீண்டும் சந்திப்போம்!            

4 comments:

 1. //செல்லாக்குட்டி தயாநிதி// - அதுக்குள்ள ஆச்சர்யப்படாதீங்க. தயாநிதி மாறன், உதயநிதிக்கு சால்வை போத்தின வேகத்தைப் பார்த்தால், 'தளபதி, கலைஞரையும் விஞ்சியவர், கூடப் பழகும் எங்களுக்கு இது நன்றாகத் தெரியும்'னு விரைவில் சொல்லுவார். அவசர அவசரமா பழைய சன் டிவி யூடியூப் பேட்டிகள் போன்றவற்றை ரிமூவ் செய்யும் வேகத்திலேயே இதைக் கண்டுகொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய விஷயங்களை அப்படி ரிமூவ் செய்ய முடியாதென்பது மாறன் வாரிசுகளுடைய சோகம்!

   Delete
 2. வேலை இல்லை என்ற நிலையே இல்லாமல் போகச்செய்வோம் என்று சொல்லும் சீமானுக்கு திரையுலகில் வேலை இல்லையே, அவரின் தொடர் தோல்விப் படங்களால்

  ReplyDelete
  Replies
  1. இப்படியெல்லாம் மானத்தை வாங்குகிறார்கள் என்றுதான் அவசர அவசரமாக ஒருபடத்தை இயக்கப்போவதாக படம் காட்டினார் சீமான!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!