ஒரு புதன்கிழமை! நினைத்தேன் எழுதுகிறேன்!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தேர்வு பற்றி டாக்டர் ஷாலினி சொன்ன கருத்து இணையப்போராளிகளால் கடுமையாக விமரிசனம் செய்யப்பட்டது தெரியும் இல்லையா? மருத்துவர் ஷாலினி இதைக்குறித்து இங்கே விளக்குவது ஏற்றுக்கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. 


தேர்தல் நெருங்க நெருங்க சேனல்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிற மாதிரி ஒருவித வெறியும் வந்துவிடும்.பிரதமர் மோடி இன்று முற்பகல் நாட்டுமக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லப் போவதாக அறிவித்ததில் ஏகக் களேபரம்! ஊகங்கள்! பிரதமர் A Sat என்று விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கிற ஏவுகணைப் பரிசோதனை மூன்றே நிமிடங்களில் வெற்றி கரமாக நடத்தப்பட்டதைப் பற்றி நாட்டுமக்களுடன் பெருமிதமாகப் பகிர்ந்து கொண்டதைக்கூட தராசு ஷ்யாமை வைத்துக் கொச்சைப் படுத்திய வைகுண்டராஜன் புதியதலைமுறை  சேனல்களை  என்னவென்று சொல்வது? அடடே! மதி இந்தக் கார்டூனில் சொல்கிற மாதிரியா?
    
கல்வித்தந்தை பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து பற்றி மூன்று வருடங்களுக்கு முன்னால் விகடன் வெளியிட்ட வீடியோ இது. மாணவர்களிடம் வசூலித்த 85 கோடி ரூபாயை கோர்ட்டில் டெபாசிட் செய்த பிறகே ஐயா வெளியே வந்து கல்வி வியாபாரத்தை அமோகமாக நடத்திக் கொண்டு இன்று திமுக கூட்டணி வேட்பாளர்!


ராதாரவி மேடையில் வாந்தியெடுத்ததற்குப் பல முனைகளிலிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன. அதில் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி ஒரு நையாண்டி!          
Sighhh Mr.Radha Ravi the struggle to stay relevant . You’re a sad man and we all feel sorry for you . May your soul or whatever is left of it find peace ✌️. We ll send you tickets for Nayanthara’s next superhit film .. have some popcorn and take a chill pill.

புத்தி கெட்டுப்போவதற்கு முன்னால் பழ.கருப்பையா கூட துக்ளக் ஆண்டு விழாமேடையில் சோ முன்பாகவே பேசிய விஷயம்தான் இது நான் கூட இந்தப்பக்கங்களில் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிற விஷயமும்கூட! தியாகிகள் இருந்த ஒரிஜினல் காந்தி இருந்த காங்கிரஸ் இல்லை இன்றைக்கிருப்பது. அப்பன் நேரு பிரதமர் மகள் இந்திரா கட்சித்தலைவர், பிரதமர் இல்ல oficial hostess  என்றிருந்த அந்தக் காங்கிரசுமில்லை. பிரதமரானவுடன் கட்சியை உடைத்து இண்டிகேட் சிண்டிகேட் என்று இரண்டாகப் பிரித்த காங்கிரசுமில்லை. மகன் ராஜீவ் பிரதமராகி, கட்சியை சாம் பிட்ரோடாக்களை வைத்து நவீனமாக்கமுயன்ற காங்கிரசுமில்லை இது.


ராஜீவ் உயிரோடிருக்கும்போதே சோனியா உருவாக்கின கிச்சன் கேபினெட், இத்தாலிய உறவுகள் bofors கமிஷன் என்று உருவான வடிவமே இன்றைக்கிருக்கிற சோனியா காங்கிரஸ். 2004 முதல் பத்தாண்டுகள் ஆண்டதில்  தியாகசிகரம் சோனியா என்னமோ அடுத்தநாளே உலகம் அழிந்துவிடப்போகிற மாதிரி, அவசர அவசரமாக,  வரிசையாக ஊழல் மாற்றி ஊழல் என்று கொள்ளையடித்த CONகிரஸ் தான் இன்றிருக்கிற  சோனியாG CONகிரஸ் என்பது புரிந்தால் இவர்களுக்கும் கூட்டுக்களவாணி திமுகவுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் உதிரிகளுக்கும் வாக்களிப்போமா?

சொல்லுங்கள்!
                

2 comments:

  1. இன்றைக்கு காந்தியோ இல்லை நேருவோ தமிழகத்தில் நின்றால் (தனியாக) டெபாசிட் வாங்குவார்களா என்பதே சந்தேகம். இது ஆ.ராசா, ஸ்டாலின், கனிமொழி, ஜெகத் காலம்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவர்களை அறிந்திருக்கிறோமா? மதிக்கிறோமா? நேர்மையான அரசியல், லஞ்சம் ஊழல் இல்லாத அரசு ஊழியர்கள் எல்லாம் வெறும் கற்பிதங்கள் தானென்று ஊழலையும் நேர்மையற்ற அரசியலையும் சகித்துக் கொண்டு இருக்கப்பழகிவிட்ட ஒரு சமூகத்தில் வேறென்ன நடக்கும்? புரட்சி புண்ணாக்கெல்லாம் நடக்காது! :((

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!