ரங்கராஜ் பாண்டே சாணக்யா என்ற ஊடகத்தை ஆரம்பித்து முன்னைவிடப் பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருக்கிறார். கொடநாடு கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட மனோஜ், சயான் இருவரிடமும் ஒரு பத்திரிகையாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரைச் சம்பந்தப்படுத்திப் பேசினால் தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்ற ரீதியில் பேசுகிற வீடியோ ஒன்றை இன்றைக்கு சாணக்யா எக்ஸ்க்ளூசிவ் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்.
அரசியல்வாதிகள் ...அவரவர் மனைவியோடு /கணவனோடு கொடுக்கும் பேட்டிகள் பொதுவாக ஈர்ப்பதில்லை.
ஆனால்..தமிழிசை & அவரது கணவர் சௌந்திர ராஜன் இருவரும் இணைந்து அளித்த பேட்டி ..நன்றாக இருந்தது.
போலியான பதில்கள், பொய்கள் , செயற்கையான ஆஹா..ஓஹோக்கள் இல்லாமல்.. decent couple என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.
பிரபலங்களின் துணைகளுக்கு எப்போதுமே... தனி அடையாளமற்று.. பிரபலத்தின் நிழலாக போய்விடும் ஒரு நிலை உண்டு. அது போல இல்லாமல்..டாக்டர். சௌந்திரராஜன் தன்னுடைய தனித்துவமான இருப்பை உணரவைத்தது அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய பிளஸ்.
குறிப்பாக அவருடைய... ''அரசியலில் சொந்தக் காலில் நிற்கும்'' கமென்ட் ..கவனிக்க தக்கது.soft..but well aimed punch!

மொத்தத்தில்.. தமிழக எதிர்கட்சிகளால் டாக்டர். தமிழிசையின் தோற்றம் குறித்தும், அரசியல் குறித்தும் அசிங்கமாகவும், தரக் குறைவாகவும் பரப்பப்பட்டு இருந்த பிம்பத்தை இந்த ஒரு பேட்டியின் மூலம் சரி செய்து..பெண்ணிற்கான மரியாதையை உறுதி செய்திருக்கிறது ..புதியதலைமுறை டிவி.
ஒரு அரசியல்வாதியாக ..தமிழிசை...தேர்தல் நேரத்தில்.. இந்த பேட்டியை .. நல்லதொரு PR exercise ஆக.. ''எந்த வித சொதப்பலும் இல்லாமல்'' செய்திருக்கிறார் !
இப்படி ஒரு பாராட்டோடு சொல்லப்பட்ட பேட்டியைப் பார்க்காமல் இருந்துவிட முடியுமா?
தமிழிசையை இன்னமும் குமரி அனந்தன் மகளாக மட்டுமே பார்க்கமுடிந்ததில், அவர்மீது பெரிதாக எந்த அபிப்பிராயமும் இல்லை, பிஜேபி மாநிலத் தலைவராக அவருடைய செயல்பாடுகளில் குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரியும் எதுவும் தெரிந்ததில்லை. இந்த ஒரு பேட்டி அந்த அபிப்பிராயத்தை மாற்றிவிடுமா? பார்ப்போம்!
இடையில் சிவகங்கை CONகிரஸ் வேட்பாளர் இழுபறி குறித்து ஒரு அப்டேட்.
“தன் மகன் கார்த்திக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்படாததால் கடும் கோபத்தில் இருக்கிறார் ப.சிதம்பரம். இதுகுறித்து சோனியாவிடமும், ராகுலிடமும் பேசியுள்ளார் சிதம்பரம். ‘எனக்கு ஷேம் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் என் மதிப்பு என்ன ஆவது? கட்சியில் எனக்குக் கொடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கை பணி முடிவடைந்ததும் நான் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்’ என்று சோனியாவிடம் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் ராகுல் காதுக்குப் போக அவரும் சிதம்பரத்திடம் சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால் சிதம்பரத்தின் கோபம் தணியவில்லை என்கிறது மின்னம்பலம் செய்தி
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைக் குறித்து இங்கே தொடர்ச்சியாக கேலியான ஒரு சித்திரமே உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த ஒரு மனிதர் அளவுக்கு அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியவர் எவருமில்லை என்பதை இவரை வெறுப்பவர்களுமே கூட கசப்புடன் ஒப்புக் கொள்வார்கள்.
நேற்றைய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கொஞ்சம் கூடத் தயங்காமல் பதில்களை அள்ளிவீசுகிறார். பார்த்த போது, அந்த நாட்களில் ஒரு குழுமத்தில் ஒருவர் சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது.
நங்கநல்லூரில் ஒரு கல்லெடுத்து வீசினால் பதிலுக்கு நாலு கையெறி குண்டு வீசுவார் என்று வாங்கிக் கட்டிக் கொண்ட ஒரு கவிஞர், இன்னொரு கவிஞரைப் பார்த்துச் சொன்னது அது!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!