Showing posts with label சீனப் பெருமிதம். Show all posts
Showing posts with label சீனப் பெருமிதம். Show all posts

சண்டேன்னா மூணு!நவராத்திரி! சீனா, பெருமிதமா, பூச்சாண்டியா?




 
நவராத்ரி பண்டிகையின் மூன்றாவது நாள் இன்று! முதல் மூன்று நாட்கள் துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் பத்தாவது நாள் அகந்தை, ஆணவ இருளை வெல்லும் விஜயதசமியாகவும் அன்னையை வணங்கிக் கொண்டாடப்படும் நவராத்ரித் திருநாள் வாழ்த்துக்களாக முதலில்!


ஊழலும், திறமையின்மையும், குழப்பமும் மலிந்து கிடக்கும் இந்த நேரத்தில் இந்த தேசம் தன்னுடைய இழந்த பெருமையை மீட்டெடுக்கவேண்டும், இருளில் இருந்து சோர்வுற்று சோம்பிக் கிடப்பதில் இருந்து வலிமையான பாரதமாக, விஜயபாரதமாக உருவாகவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டிய தருணம் இது! இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ துர்கையை வழிபடச் சொல்லும் இந்தப் பிரார்த்தனை, இரண்டாவதாக.





 
HYMN TO DURGA
by Sri Aurobindo



Mother Durga!

Rider on the lion, giver of all strength, Mother, beloved of Shiva! We, born from thy parts of Power, we the youth of India, are seated here in thy temple. Listen, O Mother, descend upon earth, make thyself manifest in this land of India.


Mother Durga! 

From age to age, in life after life, we come down into the human body, do thy work and return to the Home of Delight. Now too we are born, dedicated to thy work. Listen, O Mother, descend upon earth, come to our help. 

Mother Durga! 

Rider on the lion, trident in hand, thy body of beauty armour-clad, Mother, giver of victory. India awaits thee, eager to see the gracious form of thine. Listen, O Mother, descend upon earth, make thyself manifest in this land of India.

முழுவதுமாகப் படிக்க இங்கே


******************

ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களோடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்னும் மூன்று நாட்களில் முடிந்து விடும். முடிந்தபின்னாலும், அதன் ஊழல் முடைநாற்றம் காங்கிரஸ் கட்சியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கப்போகிறது என்பதென்னவோ சர்வ நிச்சயம்!



சீனா அறுபது, சீனப்பெருமிதம் என்ற தலைப்பில் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை என்ன, கற்றுக் கொள்ளத் தவறியவை என்ன என்பதை சென்ற வருடம் அக்டோபர் முதல் சில பதிவுகளில் இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம். சென்ற வருடம் அக்டோபர் முதல் தேதியன்று சீனா தன்னுடைய அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை, தன்னுடைய ராணுவ வலிமையைப் பறை சாற்றுவது போலவும், பொருளாதார வலிமையை, சந்தை வாய்ப்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலவும் திட்டமிட்டு, நடத்திய கொண்டாட்டங்களைப் பற்றி பேசும் போது முப்பதே ஆண்டுகளில் டெங் சியாவோ பிங் சீனாவை ஒரு திட்டமிட்ட வளர்ச்சிப்பாதைக்கு நடத்திச் சென்றதைத் தொட்டும் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். தேவையில்லாத சுமையாக கம்யூனிசம் அல்லது சிவப்பு நாடாக்களை உதறி எறிந்தும், தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அம்சங்களையும் அறவே தவிர்த்து விட்டும் சீனா உலகத்தின் வலிமையான பொருளாதார சக்தியாக அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அதுவரை இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது பொருளாதார சக்தியாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே முன்னேறி விட்டது.

என்னதான் சீனா நெருப்பைக் கக்கும் டிராகனாகப் பூச்சாண்டி காட்டினாலும், மற்றைய முன்னேறிய பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு  பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒரு அசுர வேகத்தோடு சீனா முன்னேறிக் கொண்டிருந்தாலும், இது நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் இல்லை என்றே  சீன விவகாரங்களைக் கூர்ந்து கவனித்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சீனா, இந்த மாதிரிக் கருத்துக் கணிப்புக்களை சட்டை செய்வதில்லை என்றாலும், ஆசியப் பகுதியில் தன்னுடைய ஆளுமையை மிக வலுவாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. இந்தப்பகுதியில் தன்னுடைய அரசியல், ராணுவ, பொருளாதார வலிமைக்குக் கட்டுப்பட்டதாகவே இதரநாடுகள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக் காய்களை நகர்த்திவருகிறது.


சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்து விடுபட வேண்டும், ஜனங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கவேண்டும் என்று ஜன நாயக உரிமைகளுக்காகப் போராடி வரும் லியு சியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை, சீனா எள்ளி நகையாடி ருக்கிறது. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டதன் மூலம் இந்தப் பரிசு அதன் மதிப்பை இழந்து விட்டதாகவும் அறிவித்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற லியு சியாபோ சிறையில் இருக்கிறார், மியான்மரின் ஆங் சுயிக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் ஆசியாவைச் சேர்ந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

சீன அரசோ, நோபல் பரிசுக் குழுவின் இந்த முயற்சி, சீனாவை எரிச்சலூட்டுவதற்கான ஒன்று என்று, அலட்சியப்படுத்தி, அதே நேரம், இந்த செய்தி பரவாமல் தணிக்கையைக் கடுமையாக்கி வைத்திருக்கிறது.

இங்கே கொஞ்சம் இது தொடர்பான செய்தி , அதிலேயே வீடியோ இரண்டையும் பார்க்கலாம்.
 
இங்கே இந்தியாவில், நம்முடைய அரசியல்வாதிகள் என்னடா
ன்றால் ஊழல் செய்வதற்காகவே விளையாட்டுப் போட்டிகள் உட்பட புதுப் புது உத்திகளைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஜனங்களும் எங்கேயோ மழை பெய்கிறது என்று மானாட மயிலாட, அல்லது விஜய் டீவீயில் நீயா நானாவை இலவசத் தொலைகாட்சியில் காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

அசமந்தத்தனத்தில் இருந்தும் திறமையில்லாத காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் இந்த தேசத்தைக் காப்பாற்றுவாய்!
 

தேடியுனைச் சரணடைந்தேன்! தேசமுத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய்!

என்று பிரார்த்தனை செய்வது தவிர வேறு வழி?!




 

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் கதை !




இந்த மாதம் பதின்மூன்றாம் தேதி, தில்லியில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் தன்னுடைய புத்தக வெளியீடு விழாவில் இந்திய சீன எல்லைப் பிரச்சினையைப் பற்றிப் பேசியது இங்கே எந்த செய்தித் தாளிலும் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை. ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றிப் பேசியது எப்படிபிஜெபிகாரர்களுக்குக் கடுப்பாகவும் காங்கிரஸ்காரர்கள் காதுக்குக் குளிர்ச்சியாகவும் இருந்ததோ, அதே அளவுக்கு இந்தச் செய்தியைப்படித்திருந்தார்களானால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்திருக்கும்!

அதெல்லாம் சூடு சொரணை இருக்கிறவர்களுக்கு! காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும், அதற்காக எவரோடும் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கும் நிலைமையில் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படநேரம் தான் ஏது!


கூட்டணியில் இருக்கும் கட்சிகளைக் குஷியான மூடில் வைத்திருப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இந்தியா டுடே பத்திரிகையில் அக்டோபர் இருபத்துமூன்றாம் தேதி இதழில் அதன் ஆசிரியர், கடந்த பதினோரு வருடங்களாக, கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்வதில் சோனியா காந்தி மிகுந்த தேர்ச்சி பெற்றுவிட்டார் என்று பெருமையாகச் சொல்கிறார். இந்த மாதிரி பெருமைகளுக்கே நேரம் சரியாகப்போய் விடும்போது, தேசத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கப் போகிறது!!


நட்வர்சிங் ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் என்ன எழுதியிருக்கிறார் என்பதையோ, அந்தப் புத்தக விமரிசனத்தையோ நான் இன்னமும் படிக்கவில்லை. புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருப்பதைப் படித்தேன். இந்த மாதம் நான் தொட்டுப் பேச விரும்பிய விஷயங்களோடு தொடர்பு இருந்ததால், அந்தச் செய்தியையும், அது தொடர்பான கருத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இது கொஞ்சம் நீளமான பதிவுதான். சரித்திரத்தின் பக்கங்களை, நாலு வரியிலோ, அல்லது நாற்பது வரிகளிலோ அடக்கி விடமுடியாது. அடுத்து சொல்லப்படும் விஷயங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவைதான், கூறு கட்டிச் சொல்ல முடியாது.




Former External Affairs Minister K Natwar Singh on Tuesday regretted that India has not yet comprehensively analysed the reasons behind the 1962 war with China, saying such an exercise was "really necessary."


Speaking at a discussion on his recent book 'My China Years -- 1956-88, he touched upon various phases of Sino-India relationship in the last 60 years and felt things would have been different had Rajiv Gandhi won the 1989 elections.


"Why 1962 happened. No serious analysis of it took place on our side," Singh said indirectly criticising Government's secretive policy in revealing details of the war.


About the war with China, he said "Mao-tse Tung decided to teach India a lesson after they felt that we were encroaching on their land."


India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister said, without elaborating on his observation.


On the border dispute, he said Tawang did not figure in the map of India in 1953.


ஜஸ்வந்த் சிங் விவகாரம் வெடித்தபோது கெக்கலி கொட்டிய காங்கிரஸ் கட்சியும், ஊடகங்களும் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி மாதிரி சூடு சொரணை இல்லாத கட்சி இந்தியாவில்வேறெதுவும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு அதனுடைய யோக்கியதை இருக்கிறது.


காந்தியுடைய போதாத காலமோ, காங்கிரஸ் கட்சியுடைய போதாத காலமோ, இந்த தேசத்துடைய போதாத காலமோ தெரியவில்லை, நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு பெற்றது மட்டுமில்லை, காந்தியின் அன்புக்குப் பாத்திரமான அரசியல் வாரிசாகவும் ஆகிப்போன விபத்துமானது.


நாடு விடுதலை அடைந்த தருணம், சுதந்திர இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தீர்மானித்தது நேருவும், அவருடைய ஆல்டர் ஈகோ என்று கூட சொல்லலாம், வி கே கிருஷ்ண மேனனும் தான்! ஆங்கிலேய அரசின் அடிச்சுவட்டை ஒட்டிப் பணி செய்யமட்டுமே தெரிந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்கு, போக வேண்டிய திசை எது என்பதை இந்த இரண்டு அதி மேதாவிக‌ள் தான் தீர்மானித்துக் கொடுத்தார்கள்.

நேருவுக்கு உலக சரித்திரம் அத்துப்படி! சிறையில் இருந்த நாட்களில் மகளுக்கு உலக சரித்திரத்தைக் கடிதங்க‌ளிலேயே எழுதி சொல்லிக் கொடுத்தவர்! அந்த ஒரு தகுதி போதாதா?புத்தகங்களில் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்து, தன்னுடைய மகளுக்கும் கடிதங்களில் சொல்லிக் கொடுக்க முனைந்த ஒரு நல்ல எண்ணம் படைத்த மனிதர் என்றுவேண்டுமானால் சொல்லலாம்!


கூடவே தயிர் வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே தோழர் கே வரதராஜன் சொல்லும் தத்துவத்தையும்சேர்த்துப் பாருங்கள்!


"ந‌ல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீது ஏறியே நரகத்துக்கும் கூடப் போகலாம்!"


நேரு, ஆங்கிலேயர்களுடைய நாகரீகத்தில் அவர்களை விட அதி விசுவாசமான ரசிகர்! நல்ல எண்ணம் இருந்தது, மறுக்க முடியாது! ஆனால், வெறும் கற்பனையில் மட்டுமெ சரித்திரத்தை எழுதிவிட முடியுமா என்ன?!


அன்று இருந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்கோ சுயசிந்தனை இருந்ததே இல்லை! எப்போதுமே "ஹிஸ் மாஸ்டர்'ஸ்வாய்ஸ்" மட்டும் தான்! ஆங்கிலேயர்களுடைய அரசியல் ஆதாயத்திற்குத் தகுந்தபடி மட்டுமே கொள்கை முடிவுகளை எடுக்கத் தெரிந்தவர்கள். சுய சிந்தனை இருந்த கொஞ்சப்பேருமே நேருவின் கவர்ச்சிக்கு முன்னால் செயலற்றுப் போனார்கள். இந்தியாவின் இரும்பு மனிதன் என்று வர்ணிக்கப் பட்ட வல்லபாய் படேல் கூட நேருவின் கவர்ச்சிக்கு வழி விட்டு ஒதுங்கிப்போக வேண்டிய நிலை இருந்தது.


இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், பிச்சைக்காரர்கள், எக்கச்சக்கமான குழந்தைகள், நாகரீகமில்லாதவர்கள், மகாராஜாக்கள் இவ்வளவுதான் வெளியுலகுக்குத் தெரிந்தது. டைம் பத்திரிகை கிருஷ்ண மேனன் படத்தை எவ்வளவு நக்கலுடன் வெளியிட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! 

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு யார் சொல்லித் தர முடியும்?


சுற்றியிருந்த சூழ்நிலையைச் சரியாகக் கணிக்கத் தெரியாத இரண்டு மேதாவிகள்(நேரு, மேனன் ) கையில், ஒரு தேசத்தின் உயிர் மூச்சு ஒப்படைக்கப்பட்ட அந்த‌ சோகமான தருண‌ங்களைக் கொஞ்சம் திகிலோடுதான் திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கிறது.


உலக சரித்திரம் தெரிந்தவருக்கு உள்ளூர் சரித்திரம் சரியாகத் தெரிந்ததோ, தெரியவில்லையோ அதுவே சரியாகத் தெரியவில்லை. சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரம் பற்றி அயல்நாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடந்த நேருவுக்குத் தெரியுமோ தெரியாதோ?


அரசனுடைய முக்கியமான கடமைகளில் தன்னுடைய எல்லைகளைப் பாது காப்பதும், எல்லைப்பகுதி மக்களைச் சரியாகக் கவனித்துக் கொள்வதும் அடங்கும்! சமாதானத்தை விரும்புகிறவனுக்கு சண்டை போடவும் தெரிந்திருக்க வேண்டும், சரியான தருணத்தில் சண்டையில் இருந்து விலகவும், நேசக்கரம் நீட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.


பாகிஸ்தான் பிரிவினை ரத்தக் களரியோடு தொடங்கியதில், இன்னமும் ஒரு சுமுகமான உற‌வுக்கான சாத்தியப்பாடு இருக்கிற‌தா என்பதே தெரியாமல் இருக்கிறது. 1948 இல் வடகிழக்கு மாகாண‌த்தில் இருந்து ஆயுதம் தாங்கிய குழுவினர் உதவியோடு, சேட்டைகள் ஆரம்பித்தது.


காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்து வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அடாவடித்தனம் பண்ணிக் கொண்டிருந்த வேளையில், ராணுவத்திற்கு உறுதியான உத்தரவுகளைத் தர நேருவின் அரசு தயங்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த பகுதிகளை மீட்கும் நேரத்தில், ராணுவத்தின் கையைக் கட்டிப் போட்டு வைத்து, ஐக்கிய நாடுகள்சபைக்கு பிரச்சினையை எடுத்துக் கொண்டு போனது முதல் நேருவின் ராஜதந்திரம் தொடர்ந்து சறுக்கிக் கொண்டே போனது.தன்னை உலக சமாதானப் புறாவாகக் காட்டிக் கொள்கிற முனைப்பில் இருந்தவருக்குத் தன்னுடைய கோழைத்தனம் கடைசி வரை புரியவே இல்லை.


Excerpts from a book review: Johm W. Garver's Protracted Contest. Sino-Indian Rivalry in the Twentieth Century. University of Washington Press, 2001. ISBN- 0-295-98074-5. Price US $ 44.56. 447 pages


சீன தேசீயவாத வரலாறு, அதன் பிரதேசங்களாக காஷ்மீர், நேபாள், பூடான், சிக்கிம் ஆகிய அரசுகளையும், இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களையும், பர்மா, இந்தோசீனா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றையும் பேசுகிறது. இந்திய கலாச்சார தேசியவாதத்தின் படி, நேபாளம், திபெத், பர்மா, இந்தோசீனா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றை இந்தியாவின் கலாச்சார பேரரசின் பகுதிகளாகப் பார்க்கிறது
 
இந்த முரண்பட்ட வரலாறுகளை தீவிரப்படுத்துவது கருத்துருவப் பிரசினைகள். மாவோயிஸ சீனா, இந்திய தலைவர்களின் 'பிற்போக்கு வகுப்பு இயல்பையும் ' பிரிட்டிஷ் திட்டங்களை நேரு பாரம்பரியமாகப் பெற்ற 'எதேச்சதிகார மேலாதிக்க விரிவாக்கமாகவும் ' பார்த்து சந்தேகப்படுகிறது. இந்தியாவைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் இந்த போக்கு, டெங் காலத்திலோ, டெங்குக்குப் பின் வந்த தலைவர்கள் காலத்திலோ மாறியதாகத் தெரியவில்லை என்று கார்வர் கூறுகிறார். இந்தியாவின் மன்ரோ கொள்கை 'தென் ஆசியாவை தன்னுடைய பிரத்யேக பாதுகாப்பு பிரதேசமாகப் பார்ப்பதை ', பீஜிங் 'இந்தியாவின் சுற்றுநாடுகளோடு சீனா இறுக்கமான உறவு கொள்வதை தடுக்கும் பிராந்திய எதேச்சதிகாரமாக ' பார்க்கிறது. (பக்கம் 31)

திபெத் பிரச்னை
1951இல் திபெத் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக்கொண்டது டெல்லியில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. வரலாற்றில் முதல் தடவையாக, நிரந்தரமாக சீனாவின் ஏராளமான படைகள் இந்தியாவின் வடக்கு எல்லையில் குவிக்கப்பட இருப்பதையும், இதுவரை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 'இடைநிலப் பகுதியாக ' (buffer zone) இருந்துவந்த திபெத் விழுங்கப்பட்டதையும் கண்டு நடுக்கம் வந்தது. பல இந்தியர்கள் இந்தியாவின் பாதிப்புக்குள்ளான திபெத்திய லாமா கலாச்சாரம் அழிக்கப்படுவதையும், தொடர்ந்து திபெத்தின் தனிச்சிறப்பான கலாச்சாரம் பீஜிங்கால் அழிக்கப்படுவதையும் கண்டு முறையிட்டார்கள். (நேருவின் வார்த்தைகளில், 'திபெத், கலாச்சார ரீதியில், இந்தியாவின் ஒரு பிரிவு. ') ஆனால் சீனாவின் பார்வையில், திபெத்திய கலாச்சாரம் 'சீர்திருத்தப்பட்டு ' , தன்னுடைய 'நிலப்பிரபுத்துவ சுரண்டலிலிருந்து ' விடுதலை தரப்பட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி கனவு காண்பது போல, சீன மைய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு, சோசலிஸ சமூகமாக மாறவேண்டும்
 
திபெத்தின் கனிம வளமையும் (சீனாவின் கனிமங்களில் சுமார் 40 சதவீதம் திபெத்தில் இருக்கிறது) அதன் 'போருக்கு இணக்கமான இருப்பிடமும் ' (strategic ) திபெத்தை மீண்டும் 1951 நிலைக்கு திரும்பவிடக்கூடாது என்று சீனாவின் வைராக்கியத்தை உறுதி செய்தது. 1958இலிருந்து அந்தக் கோரிக்கையையே 'திபேத்திய சுயாட்சி ' என்ற பெயரில் பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசாங்கங்கள் முனைந்தன. 1962 சீனா-இந்தியா போர், மாவோசேதுங் அவர்களது வார்த்தையில், 'மக்மஹன் கோட்டைப்பற்றியதல்ல, திபெத் பிரச்னை பற்றியது ' என்று குறிப்பிட்டார். ஏனெனில், இந்தியாவும் அமெரிக்காவின் சிஐஏவும் இணைந்து திபேத்திய சுதந்திரப்போராட்டத்தை உருவாக்கி இருக்கின்றன என்று அவர் நம்பினார்

(சிஐஏவின் திபேத் ரகசியப்போர், (The CIA 's Secret War in Tibet) என்ற புத்தகம், உண்மையிலேயே இந்தியாவும் சிஐஏவும் இணைந்து பல ரகசிய வேலைகளை அப்போது செய்தன என்று உறுதிப்படுத்துகிறது.) 
 
சீனாவின் இனப் பிரச்னைகளை தீவிரப்படுத்துவதற்கும், சீனாவை இந்தியாவோடு இணக்கமாக இருக்கச்செய்வதற்கும், திபெத்திய பிரச்னையை இந்தியா பயன்படுத்திவந்தது. ஆனால், திபேத்திய பிரதேசத்தில் ஏராளமான ஹன் சீனர்களை குடியேற்றியதும், பீஜிங்குக்கும், திபெத் தலைநகர் லாசாவுக்கும் இடையே சிறந்த தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு இணைத்ததும் , 'திபெத் எதிர்காலத்தில் சுயாட்சியுடன் இருக்கும் என்பது ஒரு கனவாக மாறிவிட்டது. அது கனவென்றால், திபெத்தில் இருக்கும் இந்தியாவின் கலாச்சாரக் கூறுகள் இறுதியாக அழிக்கப்பட்டவைதான் என்பதும் பொருளாகிவிட்டது ' (பக்கம் 71)


நேருவுடைய அரசியல், ராஜ தந்திரம் எந்த அள‌வுக்கு இருந்தது என்பதை இந்திய சீன யுத்தம் முடிந்த அடுத்த வருடம் கசப்போடு சொன்ன இந்த வார்த்தைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். சீனப் போருக்குப் பிறகு அகிம்சை மட்டுமே ஒரு தேசத்தைக் காக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு மாறியதை 1963 அக்டோபரில் அளித்த பேட்டியில், "The efficacy of nonviolence is not entirely convincing" என்று சொல்லி வெளிப்படுத்தினார்.


வலிமை இருந்து, சண்டை வேண்டாம் என்று சமாதானம் பேச வந்தால் அதற்கு மரியாதை இருக்கும். வடிவேலு ரேஞ்சுக்கு ஊரெங்கும் அடி வாங்கி, அப்புறம் பேசுகிற சமாதானத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?


சமாதானப் புறா சாயம் வெளுத்து, மனம் நொந்துபோன கதை அது! ஒரு தனி மனிதனின் பலவீனத்தால், ஒரு தேசமும் கோழைகள் என்று முத்திரை குத்தப்பட்ட தருணம் அது!


1962 இல் நடந்த இந்திய சீன யுத்தம், ஆறாத காயத்தின் தழும்பாக இருந்தது என்று நாற்பது வருடம் கழித்து ஹிந்து பத்திரிகையில் வெளிவந்த செய்திக் கட்டுரை இது!  

கட்டுரையின் முன்னோட்டமே, அன்றைக்கு  எவ்வளவு அஜாக்கிரதையாகவும், முன் யோசனை இல்லாமலும் கையாளப்பட்ட தேசிய அவமானமாகவே இந்திய சீன எல்லைப் போர் ஆகிப்போனது, எப்படி இன்றைக்கும் ஆறாத வடுவை விட்டுச் சென்றிருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.  இன்னமும் படிப்பினையைக் கற்றுக்கொண்டோமா என்பது தான் தெளிவாகத் தெரியாத, பூடகமாகவே இருக்கிற அவலம்!

"India was politically, militarily and diplomatically unprepared for the Indo-China war of 1962. SUJIT DUTTA looks at how the Indo-Chini bhai-bhai suddenly dissolved into aggression and distrust and the lessons to be learnt from that encounter."


இந்திய அயலுறவுக் கொள்கையில் இருக்கும் சில குழப்பமான விஷயங்கள் ஒருபுறமிருக்க, இந்தியாவின் செல்வாக்கு வளர்வது தங்களுடைய தேச நலன்களுக்கு உகந்தது அல்ல என்பதில் பர்மா(தற்போது மியான்மர்), பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் என்று சுற்றுப்புறத்தில் உள்ள அத்தனை நாடுகளும் கருதுவதற்கு ஏற்றமாதிரி சீனா சாமர்த்தியமாகக் காய் நகர்த்திவருவதை அன்றும் சரி இன்றும் சரி இந்திய அரசு உணர்ந்து செயல் படுகிற மாதிரித் தெரியவில்லை.


இப்போது அக்டோபர் இரண்டாம் தேதியன்று எழுதிய பதிவில் இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள்!


17 செப்டம்பர் 1965, சீனா மறுபடியும் மறைமுகமாகப் பாகிஸ்தானுக்கு அதரவு தெரிவிப்பது போல இந்தியாவை மிரட்டிப் பார்த்தது. சீன எல்லைக்குள் இந்தியா ஆயுதங்களைக் குவித்திருப்பதாகவும், உடனடியாக அகற்றாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை அரசுபூர்வமான கடிதமாகவே அனுப்பியது. அவர்களுக்கும் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட்டது.  

முதல் முறையாக இந்தியாவுக்கு முதுகெலும்புள்ள, தைரியமாக முடிவெடுக்கத் தெரிந்த காங்கிரஸ் பிரதமர் பதவியில் இருக்கிறார் என்பது தான் அது!


ஆம்! சீன மிரட்டலுக்குக் கொஞ்சமும் பயமில்லாமல் சாஸ்திரி முழங்கினார்.


"சீனா வேண்டுமென்றே பொய்யான தகவலைப் பரப்பி வருகிறது. சீனா இந்தியாவைத் தாக்குமானால், உறுதியுடன் எங்களது சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எதிர்த்துப்போராடுவோம். எங்களுடைய பிரதேச இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள, சீனாவின் பலம ஒரு தடையாக இருக்காது."


சீனப் பூச்சாண்டி காட்டி, பரபரப்பாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுடைய உள்நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! பூச்சாண்டிக்கு பயந்து தொடை நடுங்கிகளாக இருந்துவிடப் போகிறோமா அல்லது இந்த மண்ணின் மைந்தர்கள் எப்படிப்பட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக இருப்பவர்கள் என்ற நிலைக்கு நம்மைத் தயார் செய்துகொள்ளப்போகிறோமா?


இந்தியா சூபர் பவர் ஆகுமா என்ற கேள்விக்கு இங்கே ஒருவர் பாயிண்டுக்கு மேல் பாயிண்டாக அடுக்கி, சாத்தியமில்லை என்று உசுப்பேத்தி விடுகிற மாதிரி எழுதியிருக்கிறார்.


எல்லாக் கேள்விகளுக்கும் , விடை நம்மிடம் தான் இருக்கிறது!

டிஸ்கி: நேருவும் காங்கிரஸ் கட்சியும்  சறுக்கிய தருணங்களை மட்டுமே விவாதப்பொருளாக எடுத்துக் கொண்டிருப்பதால், நேருவிடம் வேறு நல்ல  விஷயங்களே இல்லை என்றோ  தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமும் குப்பை என்று வெறுப்பை உமிழும் சமீபகால விமரிசனப்போக்காகவோ, இதைப் படிக்க வருபவர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்.