Showing posts with label ரங்கராஜ் பாண்டே. Show all posts
Showing posts with label ரங்கராஜ் பாண்டே. Show all posts

#தமிழகஅரசியல் தேர்தல்களம் எப்படி இருக்கிறதாம்?

இந்திரா சௌந்தரராஜன்! திகம் விரும்பி வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர். அதில் சந்தேகமே இல்லை! ஒரு தேர்ந்த அரசியல் விமரிசகராகவும், வருகிற தேர்தல்களத்தைப் பற்றிய கணிப்பைச் செய்கிறவராகவும் இந்த 21 நிமிட வீடியோவில் காட்சி அளிக்கிறார்.


பெரிய தலைகள் எதுவும் இல்லை. ஆதரவு அலை என்று இல்லாத தேர்தல் இது. அதனால் வெற்றி இன்னாருக்கு என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை என்று சொன்னதாலோ என்னவோ, நான் பார்க்கிற தருணம் வரை வெறும் 430 பார்வைகள் மட்டுமே காண்பித்தது.

ரங்கராஜ் பாண்டே ஒருவழியாகத் தனது தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை இன்று நடத்தி முடித்துவிட்டார்! அதிமுக கூட்டணிக்கு 97 இடங்கள் திமுக கூட்டணிக்கு 111 இடங்கள் மீதம் 26 தொகுதிகளில் இழுபறி என்பதாக முடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே மாதிரி அனுபவம் மிகுந்த ஊடகக்காரர்கள் சொல்வதைக் கவனிப்பதோடு சரி! அதற்குமேல் முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு ஒத்துவராத, உடன்பாடில்லாத விஷயம். 

புதிதாக யாராவது சொல்லும்போது அது இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது என்பதாலேயே இந்திரா சௌந்தர ராஜன் சொன்னதையும் காதில் வாங்கி கொண்டேன்! அவ்வளவுதான்!

கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும் என்ற தலைப்பில் இன்றைய தினமணி நாளிதழில் வ மு முரளி என்பவர் ஒரு விரிவான, விவரமான செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார். நண்பர்களுக்கு அதைப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.        

மம்தா பானெர்ஜி நாடகம்! தேமுதிகவின் தற்கொலை முயற்சி! நாம் தமிழர் கட்சி சீமான்!

தோற்று விடுவோமோ என்கிற பயம் வரும் போதெல்லாம் அரசியல்வாதிகள், தங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகம் நடத்துவது, நம்மூர் அரசியலின் வாடிக்கையாகிப்போன வேடிக்கை. லேட்டஸ்ட்டாக அந்த நாடகத்தை நடத்தி அனுதாபம் தேட முயற்சித்திருப்பவர் வங்கத்தின் பெண்புலி என்று சொல்லிக்கொள்கிற மம்தா பானெர்ஜி. நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் 18 கோவில்கள் மற்றும் ஒரு மசூதிக்கு விசிட் அடித்திருக்கிறார். முதல்முறையாக தன்னுடைய பிராமண அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டது பலவீனத்தின் முதல் அடையாளம். அதேமூச்சில், ஒரு தாக்குதல் நாடகமும் நடத்திக் கொண்டது மிக வினோதம்.


வீடியோ 21 நிமிடம். "தாக்குதல் நடந்ததாக கூறி மக்களிடம் அனுதாபம் தேட முதல்வர் மம்தா பானர்ஜி முயலுகிறார். தாக்குதல் முயற்சி, சதி திட்டம், கொலை முயற்சி இது எல்லாமே தோல்வியின் வெளிப்பாட்டை காட்டுகிறது. அந்நேரத்தில் போலீஸே இல்லை என மம்தா பானர்ஜி கூறுவதை கேட்டால் சிரிக்கதான் தோன்றுகிறது. தேர்தல் வெற்றி பெற முடியாத நிலையில் அதனை மறைக்கவே இதுபோன்ற நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்".என்று கிண்டலாகச் சொல்கிறார்  சோனியா காங்கிரசின் அதிர் ரஞ்சன் சவுத்ரி. 


"Not even one Police official was present. 4-5 people intentionally manhandled me in presence of public. No local police present during program not even SP. It was definitely a conspiracy. There were no police officials for 4-5 hrs in such huge public gathering" says WB CM இது ANI twit. மம்தா சொல்வது நம்புகிற மாதிரியா இருக்கிறது?

இதுவும்கூட பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த உத்திதானோ? இங்கே தமிழகத்திலும் இப்படி ஒரு மலினமான ஸ்டன்ட் அரங்கேறுமோ?  


கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கும் கூட களம் எப்படி யதார்த்தம் எப்படி என்பது புரிந்திருப்பது மிக மிக ஆச்சரியம்! 

ஆனால் ரங்கராஜ் பாண்டேவுக்குத் தன்னை அரசியலில்  முதிர்ச்சியான சாணக்யனாகக்  காட்டிக்கொள்வதில் அங்கங்கே கொஞ்சம் சறுக்கல் ஏற்படுகிறதோ? 

ரங்கராஜ் பாண்டே தேமுதிகவின் தற்கொலை முயற்சி பற்றி விளக்கும் 45 நிமிட வீடியோ. மனைவி, மச்சான், மக்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது எத்தனை சத்தியமான வாக்கு! ஆனால், பாண்டே கொஞ்சம் சொன்னதையே திருப்பிச் சொல்லி அறுக்கிறார் என்று முகநூலில் ஒரு கமென்ட் பார்த்தேன். அரசியல் என்றாலே ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப பேசுவது, செய்வது தானே!   


என்னய்யா இது.. பாவம் ஏதோ ஒளறிகிட்டு அலையுதுன்னு பார்த்தா.. Narayanan Swaminathan ஜி.. பொசுக்குன்னு முழுசா மரை கழண்ட கேஸு.. அடுத்த படிய ஹாஸ்பிடலில் அடமிட்தான் பண்ணனும்... இல்லைன்னா துணியை கிழிச்சுண்டு அலையும்னு சொல்லிட்டாரு..? என்று முகநூலில் அதிசயிக்கிறார் திருமதி எஸ்.பிரேமா.  .

_________________

ஒரு மருத்துவ நண்பர் சொன்னார் சீமானுக்கு இருப்பது mythomania என்ற வியாதி.. 

பொதுவாக எல்லா மனிதர்களும் எப்போதாவது தேவை ஏற்படும் போது ஒன்றிரண்டு பொய்கள் சொல்வது சாதாரணமானது தான். ஆனால் தேவையே இல்லாமல் தான் பேசும் எல்லா விஷயங்களிலும் பொய் கலந்து பேசுவது என்பது ஒரு மனோவியாதி. இவர்களை pathological liar என்பார்கள்.இவர்களால் பொய் கலக்காமல் பேசவே முடியாது. Klepto mania என்று திருடும் வியாதி உண்டு.. பணக்கரர்களாக இருப்பார்கள்.. ஆனால் சின்ன சாக்லேட்டை திருடுவார்கள்.. அதை காசு கொடுத்து வாங்க முடியும். ஆனால் அந்த திருட்டுத்தனம் தரும் த்ரில் அதனால் சுரக்கும் ஹார்மோன்களுக்கு அடிமையாக இருப்பார்கள். 

அதே போலத்தான் ரசிகர்கள் அடிக்கும் விசிலுக்கும் கைதட்டலுக்கும் அது கொடுக்கும் போதைக்கும் அடிமையாக ஆகிவிட்டார் சீமான்.. அதனால் ஓரிருவர் இருக்கும் பேட்டியில் கூட பொய் பேசாமல் அவரால் இருக்க முடிவதில்லை.. ஒரே பொய்யை சொன்னால் அதே ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை எனும் போது புதிது புதிதாக பொய்களை இட்டு கட்டுகிறார்.. இது முற்றிப்போனால் மனநல மருத்துவமனையில் சேர்ப்பது தான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார்.

Google செய்து  கிடைத்த தரவுகளை பார்த்தால் பத்து பொருத்தமும் அப்படி பொருந்துகிறது..!

மீண்டும் சந்திப்போம்.  

இரண்டு கார்டூன்! பின்னே கொஞ்சம் பின்னூட்டங்கள்!

முந்தைய பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டமே நான் தான் சரியாக விஷயத்தைச் சொல்லவில்லையோ என்ற சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது. அதனால் தன்னிலை விளக்கம் அங்கே கொடுத்ததை இங்கேயும் சொல்ல நினைக்கிறேன். அதற்குமுன்னால் மத்தியப்பிரதேச அரசியல் காமெடிகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்! நேற்றைக்கு கொரோனா வைரஸ் தொற்று பீதியை வைத்து சட்டசபையை வருகிற 26 ஆம் தேதிவரை ஒத்தி வைத்தார் காங்கிரஸ் சபாநாயகர். பிஜேபி தரப்பில் உச்சநீதிமன்றத்துக்கு விஷயத்தைக் கொண்டுபோனதில், வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு  எடுத்துக் கொல்லப்பட்டது. முதல்முறையாக காங்கிரஸ் தரப்பிலோ மத்தியப்பிரதேச அரசுத்தரப்பிலோ எவரும் ஆஜராகாமல் இருக்கிற உத்தி கடைப்பிடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ம.பி. முதலமைச்சர், சபாநாயகர் இருதரப்புக்கும்  24 மணிநேரத்துக்குள் பதிலளிக்கும் படி உத்தரவிட்டு பிஜேபி தரப்பு மனுக்களின் மீதான விசாரணை நாளைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தியபிரதேச ஆளுநர் மறுபடியும் இன்று 17 ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாத தவறினால், அரசு மெஜாரிடியை இழந்துவிட்டதாகக் க்ருத வேண்டியிருக்கும் என்று சொன்னதில் உஷாரான காங்கிரஸ் கட்சி இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் ஆளுநரின் கடிதத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்கிறது.கர்நாடகா மாதிரியே விவகாரத்தை இழுத்தடிக்கவும் முடியாமல் காங்கிரஸ் இப்போது உச்சநீதிமன்றத்தில் மறுபடியும் கொட்டு வாங்கித் தலைகுனியப் போகிறது.

    
ராகுல் காண்டிக்கு 15 வருடமாக மக்களவை உறுப்பினராக இருந்தும் சபை நடவடிக்கைகளும் புரியவில்லை அரசியலும் செய்யத்தெரியவில்லை. துணைக்கேள்வி எப்போதெல்லாம் அனுமதிக்கப்படும்? பப்புவுக்கு திடீரென்று தமிழ்நாட்டின் மீது கரிசனம் பொங்குவானேன்? வயநாடு தொகுதி மக்களுக்குப் புரிகிற மாதிரி சொல்வாராமா?

இன்றைய துக்ளக் அட்டைப்பட நையாண்டி  

பின்னே முந்தைய பதிவுக்கான தன்னிலை விளக்கம். அதற்குத்தோதாக இன்று ஹிந்து நாளிதழில் சுரேந்திரா வரைந்திருக்கிற கார்டூன்!


  1. நீங்கள் சொல்வதே உண்மை. ரங்கராஜ் பாண்டே,
    மிக நல்ல பேச்சாளர்.

    இருவரும் சேர்ந்து நல்ல ஆரம்பத்தைக் கொண்டு வந்தால்
    நன்மையே.
    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      கோளாறுகளுக்கு விடிவுகாலம் ரஜனிகாந்த் என்ற நடிகரிடம் இருந்து கிடைக்கும் என்பதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை அம்மா! தவிர அவரது குடும்பம் மனைவி, மகள்கள் மாப்பிள்ளைகளை மீறி கைசுத்தமாகச் செயல்படமுடியாது என்பதுதான் என்னுடைய மதிப்பீடாக இருக்கிறது. என்னுடைய இந்தக் கருத்து தெளிவாகவே இங்கேயும் இதற்கு முந்தைய பகிர்வுகளிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே நினைத்துக் கொண்டிருந்தேனே!

      இன்னும் தெளிவாக உடைத்துச் சொல்லியிருக்க வேண்டுமோ?
      Delete
  2. ரஜினியும் இல்லை.  தமிழகத்தை உய்ய வருவார்தான் யார்?
    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்!

      உய்விப்பதற்காக யாரோ வந்துதானாக வேண்டுமா? அது ரஜனிகாந்தாகத்தான் இருந்தாக வேண்டுமா? நம் ஒவ்வொருவருக்கும் சூடு சுரணை இல்லாமலேயே போய்விட்டதா?

      முதல் வீடியோவில் ரங்கராஜ் பாண்டே கேள்விகளுக்குப் பதில் சொல்கிற பகுதியைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்! நமக்கு நாமே என நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது கொஞ்சம் இருக்கிறது. அதைச் செய்யாமல் வெளியிலிருந்து ரட்சகர்களைத் தேடுவது, இன்னும் புதிய சிக்கல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
      Delete
  3. //ஆனால் வாக்காளர்கள் என்ன முடிவு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்கிற வாய்ப்பு, வசதி ரங்கராஜ் பாண்டே மாதிரியான திறமைசாலிகளுக்கும் கூட இருக்கிற மாதிரித் தெரியவில்லையே!// அக்ஷர லக்ஷம் பெரும் வார்த்தைகள்.       
    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      இப்போது மேலே இரண்டாவது 17 நிமிட வீடியோவில் முதல் மூன்று நிமிடங்கள் வரை கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். மறுபடியும் கேளுங்கள். மூன்றாவதாக அடுத்தமாதமே ரஜனிகாந்த் கட்சி ஆரம்பித்துக் களத்தில் இறங்குவதாகாவே வைத்துக் கொள்ளுங்கள்! கறுப்பு ஆடா அல்லது குதிரையா? ரேசில் எந்த அளவுக்குத் தெம்போடு ஓடும், எத்தனை சதவீத வாக்குகளை இரு அணிகளிலிருந்தும் பிரிக்கும் என்பதை யாராலுமே ஊகிக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம். இரு வலுவான அணிகளில் ஏதோ ஒன்றைப் பலவீனப்படுத்தும் என்பது வேண்டுமானால் உண்மையாகலாம். ஆனால் இரு அணிகளையும் மீறித் தனித்து ஜெயிக்கும் என்பதற்கான அடையாளமே இப்போது இல்லை.

      அதிருப்தி வாக்குகளை நம்பிமட்டுமே எந்த ஒருகட்சியும் இதுவரை ஜெயித்ததில்லை. அதற்கென்று சொந்த வாக்குவங்கி இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதிருப்தி வாக்குகள், இதுவரை வாக்களிக்க வராதவர்கள் கூட வலிய வந்து வாக்களிப்பது எல்லாம் சேர்ந்தால் தான் ரஜனிகாந்த் பேசுகிறாரே #சுனாமி அது காரிய சாத்தியமாகும்! இப்போது கேள்வி ரஜனிகாந்தால் அதை சாத்தியப்படுத்த முடியுமா? முடியாது என்பதுதான் என்னுடைய பதில்.
 மீண்டும் சந்திப்போம். 

ரங்கராஜ் பாண்டே! ரஜனிகாந்த்! சாணக்யா முதலாம் ஆண்டு விழா!

மத்தியப் பிரதேச சட்டசபை நிகழ்வுகளை நேற்று கவனித்துக் கொண்டிருந்ததில், சபாநாயகர் பிரஜாபதி மிக சாமர்த்தியமாக கொரோனா வைரஸ் தொற்று பீதியைக் காரணம் காட்டி சபையை வருகிற 26 ஆம் தேதி வரை ஒத்திவைத்து விட்டார். போங்கடா நீங்களும் உங்கள் போங்காட்டமும் என்று சலித்துப் போனதில் சாண்டில்யனுடைய கதைகள் இரண்டு, மங்கலதேவி என்ற 4 சிறுகதைகளின் தொகுப்பு 84பக்கங்கள், அடுத்து மூங்கில்கோட்டை  256 பக்கங்கள் என்று ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு, மறுபடி செய்திகளைப் பார்க்கையில் பிஜேபியின் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட சிலர் மத்தியப்பிரதேச விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டுபோனது  தெரிந்தது. மறுபடியும் இன்னொரு புத்தகம், இந்த முறை மாறுதலாக, தி. ஜானகிராமனின் செம்பருத்தி  490+ பக்கங்கள்! மூன்று புத்தகங்களுமே முன்னரே பலமுறை வாசித்ததுதான்!
ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசிக்க எடுத்துக் கொண்டதில் புத்தகங்கள் உள்ளே இழுத்துக் கொண்டதான ஒரு அனுபவம்! வழக்கமாக இந்தப் பக்கங்களில் மண்டேன்னா ஒண்ணு! என்று எழுதக் கூட மறந்து போகிற அளவுக்கு!

வீடியோ 45 நிமிடம் 

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளம் ஓராண்டைக் கடந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு விழாவாக நேற்றைக்கு சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் அரங்கில் நடக்கிறது என்பது தெரியும். நேரலை கிடையாது என்ற அறிவிப்பையும் பார்த்ததில் பிறகு தேடிப்பிடித்து விடலாம் என்று கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டேன். ஆனால் CineNXT என்ற தளம் நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்ததைத் தாமதமாகத்தான் தெரிந்துகொண்டு பார்க்க ஆரம்பித்தேன். இந்தத் தளம் கூட சாணக்யாவின் இன்னொரு பிரிவுதான்! 

ரங்கராஜ் பாண்டே, நல்ல திறமையான ஊடகக்காரர் தான் என்பதை இந்தப்பக்கங்களிலேயே பலமுறை பார்த்திருக்கிறோம்! சமீப நாட்களில் ரஜனி வாய்சுக்கு பொழிப்புரை தருகிற அளவுக்கு உயர்ந்து விட்டார். ரஜினிகாந்தும் இவரைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டாரோ? நேற்றைய சாணக்யா தள  முதலாம் ஆண்டுவிழாவில் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்ட பில்டப் அப்படித்தான் நினைக்க வைத்தது. 

  வீடியோ 17 நிமிடம் 

இந்த 17 நிமிட வீடியோவில் ரங்கராஜ் பாண்டே தமிழக அரசியல் களத்தில் அதிமுக - திமுக இருகட்சிகளும் தங்களுடைய வலிமையைக் கூட்டிக் கொண்டு முண்டா தட்டிக் கொண்டிருக்கிற விதத்தைச் சொல்லிவிட்டு கடைசியாக ரஜனிகாந்த் பேசியதற்குப் பொழிப்புரை அதுவும் அவரை அரங்கில் வைத்துக்கொண்டே, என்பது தமிழருவி மணியன்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததை ரங்கராஜ் பாண்டே சாதித்துவிட்டதைத் தான் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.

தேசியம், எளிமை,நேர்மை என்ற மூன்று புள்ளிகளில் தமிழக அரசியலில் இல.கணேசன், குமரி அனந்தன். நல்லகண்ணு ஆகிய மூவருக்கு விருது ஒருலட்ச ரூபாயுடன் என்று அறிவித்ததில், நல்லகண்ணு ஒருவர் மட்டும் வரவில்லை. வராவிட்டாலும் கூட அறிவிக்கப் பட்ட விருது நல்லகண்ணுவுக்குத் தான் அதில் எந்த மாற்றமுமில்லை என்று ரங்கராஜ் பாண்டே அறிவித்ததிலும், மற்ற இருவரும் நேரில் வந்திருந்து ரஜனிகாந்த் கையால் விருதை பெற்றுக் கொண்டதும்  கூட மிகநேர்த்தியாகத்   திட்டமிடப்பட்ட  நிகழ்ச்சி இது என்று தான் இப்போதைக்குச் சொல்ல முடிகிறது. 

ஆக, ரஜினிகாந்துக்கு மிகவும் அனுசரணையான ஒரு அரசியல்தளம் வெகு திறமையாகக் கட்டமைக்கப் படுவதையும், சேர்த்தே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வாக்காளர்கள் என்ன முடிவு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்கிற வாய்ப்பு, வசதி ரங்கராஜ் பாண்டே மாதிரியான திறமைசாலிகளுக்கும் கூட இருக்கிற மாதிரித் தெரியவில்லையே!     

மீண்டும் சந்திப்போம்.          

பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்! திமுக எதற்காகப் போடுகிறது?

பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்! திமுக எதற்காகப் போடுகிறது?  The Great Hawk திரை!ப்படத்தை எனக்கு சிபாரிசு செய்த நண்பர் பந்துவுக்கு இந்தப்பதிவு கொஞ்சம் உதவியாக இருக்கும்!தலைப்புக்கும் இந்த முதல்வரிக்கும் என்ன சம்பந்தம் என்று திகைப்பவர்கள், அந்தவரியில் இருக்கும் சுட்டியில் தொடர்பு என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ரங்கராஜ் பாண்டே இந்த 24 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்!

   
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அபாரமான வெற்றி பெற்ற ஒரு கட்சி, சின்னச்சின்ன உதிரிகளைக் கூட விடாமல், சேர்த்துக்கொண்டு ஒரு பலமான பெரிய கூட்டணி அமைத்திருக்கிற ஒரு கட்சி, நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கூட, அதிமுகவை விட அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி, இப்படித் திமுகவின் பலத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது உண்மைதானா?  அமைப்பு ரீதியான பலம், கூட்டணி ரீதியான பலம் என்று இருக்கும் ஒரு கட்சி திடீரென்று பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் உத்திகளுக்காக ஒரு ஒப்பந்தத்தைப் போடுவானேன்? இந்தக் கேள்விதான் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்படுத்தி இருக்கும் அதிர்வலைகளைத் தாண்டியும்  பரபரப்பான செய்தியாக! அப்படியென்னதிமுகவினருக்குத் தெரியாத தேர்தல்நேர அகட விகடங்களை,  பிரசாந்த் கிஷோர் வந்து சொல்லிக் கொடுத்து விடப்போகிறார்? ரங்கராஜ் பாண்டே இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு விடை சொல்கிறார். அதையும் தாண்டி வேறு பின்னணி எதுவும் இருக்கிறதா? கொஞ்சம் பார்த்துவிடலாமா?

  இது IPac அடித்துக் கொள்கிற சுயதம்பட்டம்  

இசுடாலினுக்கு பிரசாந்த் கிஷோருடைய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சிபாரிசு செய்ததே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் என்பதாக ஒரு செய்தி நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே இங்கு உலாவிக்கொண்டுதான் இருந்தது. நடுவில் பிரசாந்த் கிஷோருடன், அதிமுக, கமல் காசர், ரஜனிகாந்த் இவர்களுமே கூடப் பேசிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்ததில் ஒரே ஒரு விஷயம் நன்றாகப் புலப்பட்டது. ஆந்திராவில் கால் பதித்த பிரசாந்த் கிஷோர் தன்னுடைய கடையை அடுத்து தமிழ்நாட்டிலும் போட முடிவெடுத்து விட்டார் என்பதுதான் அது. கடைசியாக திமுகவுடன் பேரம் படிந்து இசுடாலின் அதைப்  பகிரங்கமாகவும் அறிவித்து விட்டார்! பிரசாந்த் கிஷோர் எப்படிச் செயல்படுகிறார் என்பதை காங்கிரஸ் ஆதரவு ஊடகம் காரவன் செய்திக்கட்டுரை ஒன்றில் பார்க்கலாம்!

Data Science! கிடைக்கிற தகவல்களை வைத்து ஒரு மனிதனுடைய உளவியலை அனுமானிக்க முடியும் என்பது தெரிந்தது தான்! Mindhunter என்று கிரிமினல்களை ஆராய்ந்து ஒரு proile உருவாக்குகிற அமெரிக்க FBI விஞ்ஞானியை மையமாக வைத்து 2 சீசன்கள் வெப் சீரீசாகப் பார்த்ததுமுண்டு!   ஆனால் கிடைக்கிற தகவல்களை வைத்துக் கொஞ்சம்  manipulate செய்து மனிதர்களை ஒரு குறிப்பிட்ட முடிவெடுக்கத் தூண்டவும் செய்யலாம் என்ற மாதிரியான data science கொஞ்சம் விபரீதமாகத்தான் தெரிகிறது. சுஜாதா இதையே தனது சொர்கத்தீவு நாவலில் வேறொரு விதமாகச் சொல்லி இருந்ததும் நினைவுக்கு வருகிறது.இந்திய ஜனங்களையோ இந்திய ஜனநாயகத்தையோ இந்த டேட்டா சயன்டிஸ்டுகளால் புரிந்து கொள்ள முடியுமா manipulate செய்ய முடியுமா என்பது என்னைப்பொறுத்தவரை இன்னமும் ஒரு கேள்விக் குறியாக மட்டுமே இருக்கிறது.இப்படி முந்தைய பதிவில் சொல்லியிருந்ததைக் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு ....பிரசாந்த் கிஷோர் Cambridge Analytica மாதிரித்தான் செயல்படுகிறாரா?


மதன் ரவிச்சந்திரன் வழக்கம்போல இந்த விஷயத்திலும் சுறுசுறுப்பாக ஒரு விவாதத்தை நடத்தியிருக்கிறார். இதில் 8ஷோர் கே சுவாமி ஒருவர் மட்டும்தான் பிரசாந்த் கிஷோருடைய வேலையென்ன என்பதைக் கொஞ்சம் புரிந்துகொண்டு பேசுகிறார். விவாதம் 58 நிமிடம்  எதுமாதிரியான கேள்விகளை முன்வைத்த்தால் தான் தெளிவான விவாதம் விடைகள் கிடைக்கும் என்பதில் கவனம் வேண்டியிருப்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதற்கு மேல் இந்த வீடியோவில் எதுவும் இல்லை.

இந்தப்பக்கங்களில் மம்தா பானெர்ஜி பற்றி எழுதிய பதிவிகளில் பிரசாந்த் கிஷோர் மம்தாவுக்காக என்ன உத்திகள் வகுத்துக் கொடுத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். சுருக்கமாக சில விஷயங்களைப் பார்த்துவிடலாம். முதலில்  Image makeover, அடுத்து IPAC கட்சிக்காரர்களோடு சேர்ந்து வேலை செய்வதில்லை. தன்னுடைய டீமுடன் களத்தில் இறங்கி கட்சிக்காரர்கள் வேலைசெய்வதைக் கண்காணித்து வேலைசெய்கிற கட்சித்தலைவர் ஒருவருக்கு  மட்டுமே ரிபோர்ட் செய்வது. ஜனங்கள் மத்தியில் என்ன மாதிரி விஷயங்கள் எடுபடும், என்ன சொன்னால் ஆதரவு பெருகும் என்பதைக் கண்டறிந்து சொல்வது இத்தியாதி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் இதுவிஷயமாக வந்திருக்கும் செய்திக்கட்டுரையில் தினமலர் R வெங்கடேஷ் கொஞ்சம் கூடுதல் காரணிகளாக, கொஞ்சம் யோசிக்க வேண்டிய தகவலைச் சொல்லி இருக்கிறார்.

Venkatesh further added that the aspirations of today’s voters differ from one place to another even within the state. “The urban and the rural voters have different aspirations, it’s not one-dimensional anymore. Earlier there used to be one leader and the public followed whatever he said, and the leader took the opinion of the public if something is not working. But today, with the advent rise of social media and wide-spread debate throughout the state and the emergence of new stakeholders, it has become multi-dimensional. So to save the existing vote bank, and to reach the new generation of voters, the parties think they need external support and hence they hire them,” he added.   

மீண்டும் சந்திப்போம்.       
   

ரங்கராஜ் பாண்டே! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி! சீனாதானா!

தமிழக ஊடகங்களுக்கு நிரந்தரத் தீனி போடுவது சினிமா மற்றும் சினிமாக்காரர்கள் மட்டும்தான்!  அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் அடுத்தபடிதான்! இதில் ரங்கராஜ் பாண்டே மட்டும் விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதே கொஞ்சம் தவறுதானோ?


தமிழக அரசியலே ஒரு நாலைந்து சினிமாநடிகர்களை நம்பியே இருக்கிற மாதிரி ஒரு பிம்பம் இங்கே தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருவதில் ரங்கராஜ் பாண்டே என்ன நினைக்கிறார்? வீடியோ 12 நிமிடம்.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போங்கள்! மனிதர் நடப்பு அரசியலைக் குறித்துச் செய்கிற சுருக்' விமரிசனங்களை அடித்துக் கொள்ள வேறெவரும் இங்கே இல்லை!  இன்றைக்கு ராகுல் காண்டியும் பிரியங்கா வாத்ராவும்  திஹார் சிறைக்கு பானாசீனாவை சந்திக்க வந்தார்களாம்! News 18 செய்திக்கு சுவாமியின் ஒருவரிக் கமெண்ட் இது: (திஹார்வாசம் எப்படியென்று) பரிச்சயப் படுத்திக் கொள்ளவாம்! 


சீனாதானா சிறையில் பொழுதைப் போக்க என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்தது! கம்பி எண்ணுவதோடு நாளையும் எண்ணிக் கொண்டு இருக்கிறார் என்பது இப்போதுதானே தெரிகிறது!

மீண்டும் சந்திப்போம். 


ரங்கராஜ் பாண்டே! மதன் ரவிச்சந்திரன்! உத்தவ் தாக்கரே!

ரங்கராஜ் பாண்டே வேந்தர் டிவியை விட்டும் விலகி விட்டதாக பதிவர் நண்பர் மாயவரத்தான் கி. ரமேஷ் குமாருடைய முகநூல் பகிர்வில் ஒற்றை வரி மட்டுமே இருந்தது. என்னவென்று முழுத்தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.




Raman Karthikeyan அடிச்சு, துரத்திட்டாணுங்க, அப்படி தானே!!!🤣🤣🤣 
உடனே பின்னூட்டமிட்டு  ஒருவர் இப்படி சந்தோஷப் பட்டுக் கொள்கிறார். முதலாளிகளுடைய விருப்பம், நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் ஊடகத்துறையில் இருப்பதோ, தனித்து ஓற்றை மனிதராக களத்தில் ஜெயித்துக் காட்டுவதும் மிகவும் கடினமான விஷயம்.  

  
இது மதன் ரவிச்சந்திரனுடைய ட்வீட்டர் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட். எதிராளிகளை இவரே இப்படிக் கையைப்பிடித்து வம்புக்கிழுப்பது எத்தனை நாளைக்கோ? நான் மட்டும் கவலைப்பட்டு என்ன செய்துவிட முடியும்?




படம் பார்த்தோமா வந்தோமா என்றிருக்க முடிந்ததா? சின்னப்பசங்களெல்லாம் டிவியில்  விவாதம் நடத்துகிற அளவுக்கு ஆகிப்போச்சேன்னு இப்போது முட்டிக் கொண்டு என்ன பிரயோசனம்? வீடியோ 47 நிமிடம். 


சதீஷ் ஆசார்யாவுக்கு அவ்வப்போது நகைச்சுவை கொஞ்சம் வரும் ரகத்திலான கார்டூன் இது! Tiger Zinda Hai? (புலி உயிருடன் இருக்கிறதா?)  #Maharashtra என்று சூப்பராக படத்துக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறார்! அதைவிட சோனியா, சரத் பவார் இருவரையும் கூண்டில் அடைத்துக் கூட்டிப்போகிற மாதிரிக் கற்பனை இருக்கிறதே! அபாரம்! நிலைமை உண்மையிலேயே அப்படித்தானா? ஆட்டுக்கு மாலை, பரிவட்டம் எல்லாம் கட்டி மஞ்சத்தண்ணி தெளிப்பது எதற்காக?    


உத்தவ் தாக்கரே தான் மகாராஷ்டிராவின் முதல்வர் என்று NCP, காங்கிரஸ் இரண்டும் பெருந்தன்மையாக  ஒப்புக் கொண்டிருப்பதே அடுத்து நடக்கப்போவதற்கு முன்னோட்டமாகவும் ஆகியிருக்கிறதோ? இன்னொரு குமாரசாமியாகிறாரா உத்தவ் தாக்கரே?

மீண்டும் சந்திப்போம். 

ரங்கராஜ் பாண்டே! நிர்மலா சீதாராமன்! படித்ததில் பிடித்தது!

மீண்டும் மீண்டும் ரங்கராஜ் பாண்டே என்றே சொல்லிக் கொண்டிருப்பானேன்? கொஞ்சம் விஷயத்தோடு, சுவாரசியம் குறையாமல் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துகிறார் என்பதற்கு மேல் வேறென்ன காரணத்தை சொல்லிவிட முடியும் சொல்லுங்கள்! ஆனாலும் சாணக்யா தளத்தில் எந்தவொரு நிகழ்வையும் முழுதாய்ப்பார்க்க முடிவதில்லை என்பது மிகப் பெரிய குறை. 


இங்கே முதலில் பாண்டே பேசுவதை மட்டும் எடிட் செய்து 18 நிமிட வீடியோவாகப் பகிர்ந்தார்கள். இப்போது அதை 48 நிமிடத்தொகுப்பாக! இதுவாவது அடிமுடியோடு இருக்கிறதா என்றால் அடியும் இல்லை முடியும் இல்லை!  முழுத் தொகுப்பையும் வெளியிடுவதில் அப்படி என்ன சிக்கல் என்பது எனக்குப் புரியவே இல்லை!  

"மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்.
முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி ஒப்புதல்.]]]
நினைச்சதை சாதிச்சாட்டானுங்க சங்கிப் பயலுக..
இதைத் தர மாட்டேன்னு சொன்னதுக்குத்தான் முந்தைய கவர்னரை ராத்திரியோட ராத்திரியா கிளம்பச் சொல்லி போன்ல வறுத்தெடுத்தானுங்க..
அவரும் போகும்போது இதைக் கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்ன்னு தெளிவா சொல்லிட்டுத்தான் போனாப்புல..
பொத்திக்கிட்டு போய்த் தொலை என்று சொல்லி தனக்குத் தோதான ஆளை வைச்சு இப்போ வாங்க வேண்டிய விதத்தில் வாங்கிட்டாங்க மோடி என்னும் கேடியின் ஆட்கள்..
இனி என்ன..? இந்தப் பணத்தை வைத்து பிச்சையெடுக்கும் அதானிகளும், அம்பானிகளும் பொழைக்கட்டுமேன்னு ஏதாவது செஞ்சு கொடுப்பாங்க..
நமக்கு வழக்கம்போல வழிச்சுத்தான் கொடுக்கப் போறானுங்க.. நாமளும் மானம், ரோஷம் பார்க்காமல் நக்கிக்கிக்கிட்டுப் போவோம்..!
என்ன காரணத்தோலோ சினிமா பற்றி மட்டுமே எழுதுகிற பதிவராக அறியப்படும்  உண்மைத்தமிழன் என்று பதிவர் வட்டத்தில் மிகவுமே அறியப்படும் சரவணனுடைய முகநூல் பகிர்வு இது.  .அரசியல் பதிவுகள் எழுதுவதில் மிகக்கூர்மையான் பார்வை இருந்தாலும்  அவ்வப்போது தமிழகத்தின் தனிப்பெரும் வியாதியான கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு இவருக்கும் தொற்றிக் கொண்டிருப்பதில். ராகுல் காண்டிக்குப் பொருளாதாரம், வங்கித்துறை இவைகளைப் பற்றிய அறிவுமட்டத்துக்கு அதிகம் நெருங்குகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. அரசியல் விமரிசனங்கள் எழுதும்போது இருக்கிற கூர்மையான பார்வை, வங்கித்துறை, பொருளாதாரம் பற்றிப் பேசுவதிலும் இருக்க முடியாதுதான்! ஆனாலும் சதா சினிமா பற்றிய பிழைப்புக்கான பேச்சிலிருந்து விடுபட, இதுமாதிரிப் பொங்குவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 


When you strip the RBI of its reserves you're leaving the Reserve Bank vulnerable to a series of disasters. The contingency fund is for emergency situations, not to cover up for the govt's economic failures. #AbkiBaarMandiSarkaar
129
512
1.2K

"தங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார பேரழியை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் முழித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து அவர்கள் பணத்தை திருடி உள்ளனர். இது பிரச்னைக்கு தீர்வாகாது. இது, மருந்தகத்தில் இருந்து, 'பேன்ட் எய்ட்' திருடி, துப்பாக்கி குண்டு பாய்ந்த காயத்துக்கு பயன்படுத்துவது போலாகும்" இப்படி  ராகுல் காண்டி போட்டிருந்த  2 ட்வீட்டுகள் இப்போது காணவில்லை.      ஆனால் ஒரு அரசியல் கட்சியாக, அதுவும் அறுபது வருஷம் நாட்டை ஆட்சிசெய்த கட்சியாகவும் இருக்கிற ஒரு கட்சி தன் மனம்போனபோக்கில் விமரிசனம் செய்வதை என்னவென்று எடுத்துக் கொள்வது? நேற்றைக்கு ஆனந்த் ஷர்மா காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 34 நிமிடங்கள் பேசியதைக் கேட்டபிறகு, காங்கிரசைப் பற்றிய எனது கருத்து  இன்னமும் உறுதியானது. 

 

ரிசர்வ் வங்கியின் பணத்தை அரசு திருடியுள்ளதாக, ராகுல் கூறியுள்ளார். இவ்வாறு பொய் சொல்வது, அக்கட்சியின் வழக்கமாகிவிட்டது. இது போன்ற பொய்யான கருத்தை தெரிவிப்பதற்கு முன், இந்த விவகாரத்தின் உண்மை நிலை குறித்து, தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் நிதி அமைச்சர்களிடம் அவர் கருத்து கேட்டிருக்கலாம். ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது வேதனை அளிக்கிறது. ரிசர்வ் வங்கி நியமித்த, அதன் முன்னாள் கவர்னரான, பிமல் ஜலான் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின்படியே, இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. 

பொருளாதார விவகாரத்தில் சிறந்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பது, அருவருக்க தக்கது. ரிசர்வ் வங்கி அளிக்கும் பணத்தை, எந்தெந்தப் பணிகளுக்காக பயன்படுத்துவது என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர். எனக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியான பதிலடி கொடுத்தருப்பதாகத் தான் தோன்றுகிறது.  

The Wire தளம் போல சிலபல  ஊடகங்களின்  காசுக்கு கூவுகிற தன்மையை நாசூக்காக இந்தப்பக்கங்களில் நான் பலமுறை சொன்னதுண்டு. நண்பர் ராஜசங்கர் முகநூலில் இந்த ஊடக வேசித்தனத்தைப் போட்டுடைத்திருக்கிற ஒரு பகிர்வு 
படித்ததில் பிடித்தது!  பகுதிக்காக இங்கே 

அமித்ஷாவின் மகன் ஜெ அமித்ஷா மீது நடத்தப்பட்டது தாக்குதல் மஞ்சள் பத்திரிக்கை தனமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெ அமீத்ஷா போட்ட மானநட்ட வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்திலே விபச்சார ஊடகமான தி வயர் செய்திருந்த மனு நீதிபதி அருண் மிஷ்ரா, எம் ஆர் ஷா, பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி அருண் மிஷ்ரா இதைசொன்னார்.
இதையடுத்து கபில் சிபல் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக சொல்லியுள்ளார்.
கூடவே இப்போதெல்லாம் பத்திரிக்கைகள் ஒரு தனி நபருக்கு பதில் சொல்லுமாறு கேள்விகளை அனுப்புவது உடனே அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைப்பது என்பது பரவலாகிவிட்டது.
பத்திரிக்கை சுதந்திரம் இருக்கவேண்டியது தான் ஆனால் இது மஞ்சள் பத்திரிக்கை தனமானது என அருண் மிஸ்ரா சொல்லியிருக்கிறார்.
இந்த வழக்கு ஜெ அமீத்ஷா மீது அந்த விபச்சார ஊடகங்கள் எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என குஜ்ராத் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே அந்த விபச்சாரம் செய்யும் ஊடகமான தி வயர் தொடுத்தது. குஜ்ராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையிலே விபச்சாரம் செய்த காசிருப்பதால் அமர்வுக்கு 30 லட்சம் கொடுத்து கபில் சிபிலை வாதாட அமர்த்தியிருந்தது.
இனி அந்த ஜெ அமீத்ஷா பற்றி எந்த செய்தியும் வெளியிட முடியாது. குஜ்ராத் விசாரணை நீதிமன்றத்திலே வழக்கு நடக்கும்.
அக்டோபர் 2017 இல் அந்த கேடுகெட்ட விபச்சார ஊடகம் ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தது.
அமீத்ஷாவின் மகன் என்பதினாலேயே ஜெ அமீத்ஷா மீது அபாண்டமான குற்றசாட்டுக்களை கூறீயிருந்தது.
அதற்கு எதிராக ஜெ தொடுத்த வழக்கிலே அவரைப்பற்றி ஏதும் வெளியிடக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. பின்னர் விலக்கப்பட்டது. குஜ்ராத் உயர்நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்த பின்னர் அது மீண்டு விதிக்கப்பட்டது.
அதற்கு எதிராக அந்த விபச்சார ஊடகம் மீண்டு மேல் முறையீடு செய்தது. அதிலே முதலிலே முன்னாள் தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கின் நடைமுறையை தடைசெய்துவிட்டு விசாரணையை ஆரம்பித்தது. இரண்டு வருடங்களாக ஓடியது இப்போது தான் திரும்பவும் விசாரணைக்கு வந்துள்ளது.
முதலிலே மிஸ்ரா அமர்வு இரண்டு தரப்பையும் சமாதானமாக போக சொன்னது. ஜெ அமீத்ஷாவின் வழக்கறிஞரோ அந்த விபச்சார ஊடகம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக சொனனர். அதற்கு அந்த அமர்விலே இருந்த சந்திரசூட் என்ன சொன்னார் என்றால் ஜெ அமீத்ஷா எழுதி தருவதை அந்த விபச்சார ஊடகம் வெளியிட்டால் போதும் என சொன்னார்.
ஜெ அமீத்ஷா தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு மிஸ்ரா ஓய்வு பெற்றார். அதன் பின்பு வெகுநாட்களாக இது விசாரணைக்கு வரவில்லை. இப்போது வந்துள்ளது.
இந்த இடத்திலே நீதிமன்றம் மிகப்பெரும் தவறை செய்துள்ளது.
கேள்விகள் அனுப்பி விசாரணை செய்ய இந்த மானங்கெட்ட விபச்சார ஊடகங்கள் என்ன நீதிமன்றமா?
இதுகளே லாபம் சம்பாதிக்க பத்திரிக்கை நடத்தும் தனியார் கார்ப்பரேட் கிரிமினல்கள். இதுகளுக்கு அடுத்தவரை கேள்வி கேட்க அதுக்கு பதில் சொல்லாவிடில் தவறாக வெளியிடுவேன் என சொல்ல என்ன உரிமை உள்ளது?
இதே போல் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கேட்கலாமா?
இப்படி செய்துவிட்டு பக்கோடா சிதம்பரம் வழக்கிலே பத்திரிக்கைகள் கேள்வி கேட்கின்றன ஆதாரம் வெளியிடுகின்றன என எப்படி இந்த சீரோ லாஸ் ஊழல் கப்பில் சிப்பில் சொல்கிறது?
அதைக்கூட நீதிமன்றம் கேட்காதா?
அதைவிட எப்படி இப்படி மாறியது? ஆட்சி மாறினால் தான் காட்சிகளும் கோலங்களும் மாறுமா?
நல்லவேளை மோடி ஜெயிச்சார் இல்லையென்றால் இதுகள் இப்படியே ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும்கள்.
பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரிலே இதுகள் விபச்சாரம் செய்வது, மிரட்டி பணம் பறிப்பது போன்றவை கிரிமினல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
இல்லையேல் எல்லோரும் இதே போல் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என செய்யலாம் என ஆகிவிடும்.
நம்நாட்டிலே எப்போதுமே பிரச்சினை பெரிதானால் தான் அதுக்கு தீர்வு ஏற்படும் என இருப்பதால் இப்படி ஏதேனும் பிரச்சினை பெரிதாகி அதனால் தீர்வு ஏற்பட்டால் தான் உண்டு போல்.
கடைசியாக அப்படி என்ன ஜெ அமீத்ஷா மீது குற்றசாட்டு என்றால் மிக அதிகமாக லாபம் சம்பாதித்தார் என. ஆனால் இதுகளுக்கு மொத்த வியாபாரத்திற்கும் லாபத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. நான் மாவு, சர்க்கரை எல்லாம் 100 ரூவாய்க்கு வாங்கி ஆளை வைத்து அவர்களுக்கு கூலி தயாரிப்பு செலவாக 90 ரூபாய் கொடுத்து போக்குவரத்து செலவு 5 என ஆகி ஒரு கிலோ பிஸ்கட் 200 ருபாய்க்கு விற்றால் லாபம் 5 ரூபாய் தான் ஆனால் மொத்தவியபாரம் 200. இந்த 200 ரூபாயையும் நான் சம்பாதித்தேன் என சொன்னால் எப்படி? அதைத்தான் அந்த மானங்கெட்ட ஊடகங்கள் செய்தன. முதலீட்டிற்கும், மொத்த வியாபாரத்திற்கும் லாபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசின.
எனவே தான் உச்சநீதிமன்றம் வரை போயும் ஏதும் செய்யமுடியவில்லை.
அதிசியத்திற்கு மேலாக அதிசியமாக உச்சநீதிமன்றத்திலே நடக்கிறது. இதே போல் மற்ற வழக்குகளையும் முடித்தால் தேவலை.

எழுத்துப்பிழைகளை original flow வுக்குத் தடையாக இருக்கக் கூடாதென்பதற்காக திருத்தம் செய்யாமல் அப்படியே!

மீண்டும் சந்திப்போம்.