இரண்டு கார்டூன்! பின்னே கொஞ்சம் பின்னூட்டங்கள்!

முந்தைய பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டமே நான் தான் சரியாக விஷயத்தைச் சொல்லவில்லையோ என்ற சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது. அதனால் தன்னிலை விளக்கம் அங்கே கொடுத்ததை இங்கேயும் சொல்ல நினைக்கிறேன். அதற்குமுன்னால் மத்தியப்பிரதேச அரசியல் காமெடிகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்! நேற்றைக்கு கொரோனா வைரஸ் தொற்று பீதியை வைத்து சட்டசபையை வருகிற 26 ஆம் தேதிவரை ஒத்தி வைத்தார் காங்கிரஸ் சபாநாயகர். பிஜேபி தரப்பில் உச்சநீதிமன்றத்துக்கு விஷயத்தைக் கொண்டுபோனதில், வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு  எடுத்துக் கொல்லப்பட்டது. முதல்முறையாக காங்கிரஸ் தரப்பிலோ மத்தியப்பிரதேச அரசுத்தரப்பிலோ எவரும் ஆஜராகாமல் இருக்கிற உத்தி கடைப்பிடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ம.பி. முதலமைச்சர், சபாநாயகர் இருதரப்புக்கும்  24 மணிநேரத்துக்குள் பதிலளிக்கும் படி உத்தரவிட்டு பிஜேபி தரப்பு மனுக்களின் மீதான விசாரணை நாளைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தியபிரதேச ஆளுநர் மறுபடியும் இன்று 17 ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாத தவறினால், அரசு மெஜாரிடியை இழந்துவிட்டதாகக் க்ருத வேண்டியிருக்கும் என்று சொன்னதில் உஷாரான காங்கிரஸ் கட்சி இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் ஆளுநரின் கடிதத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்கிறது.கர்நாடகா மாதிரியே விவகாரத்தை இழுத்தடிக்கவும் முடியாமல் காங்கிரஸ் இப்போது உச்சநீதிமன்றத்தில் மறுபடியும் கொட்டு வாங்கித் தலைகுனியப் போகிறது.

    
ராகுல் காண்டிக்கு 15 வருடமாக மக்களவை உறுப்பினராக இருந்தும் சபை நடவடிக்கைகளும் புரியவில்லை அரசியலும் செய்யத்தெரியவில்லை. துணைக்கேள்வி எப்போதெல்லாம் அனுமதிக்கப்படும்? பப்புவுக்கு திடீரென்று தமிழ்நாட்டின் மீது கரிசனம் பொங்குவானேன்? வயநாடு தொகுதி மக்களுக்குப் புரிகிற மாதிரி சொல்வாராமா?

இன்றைய துக்ளக் அட்டைப்பட நையாண்டி  

பின்னே முந்தைய பதிவுக்கான தன்னிலை விளக்கம். அதற்குத்தோதாக இன்று ஹிந்து நாளிதழில் சுரேந்திரா வரைந்திருக்கிற கார்டூன்!


 1. நீங்கள் சொல்வதே உண்மை. ரங்கராஜ் பாண்டே,
  மிக நல்ல பேச்சாளர்.

  இருவரும் சேர்ந்து நல்ல ஆரம்பத்தைக் கொண்டு வந்தால்
  நன்மையே.
  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா!

   கோளாறுகளுக்கு விடிவுகாலம் ரஜனிகாந்த் என்ற நடிகரிடம் இருந்து கிடைக்கும் என்பதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை அம்மா! தவிர அவரது குடும்பம் மனைவி, மகள்கள் மாப்பிள்ளைகளை மீறி கைசுத்தமாகச் செயல்படமுடியாது என்பதுதான் என்னுடைய மதிப்பீடாக இருக்கிறது. என்னுடைய இந்தக் கருத்து தெளிவாகவே இங்கேயும் இதற்கு முந்தைய பகிர்வுகளிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே நினைத்துக் கொண்டிருந்தேனே!

   இன்னும் தெளிவாக உடைத்துச் சொல்லியிருக்க வேண்டுமோ?
   Delete
 2. ரஜினியும் இல்லை.  தமிழகத்தை உய்ய வருவார்தான் யார்?
  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஸ்ரீராம்!

   உய்விப்பதற்காக யாரோ வந்துதானாக வேண்டுமா? அது ரஜனிகாந்தாகத்தான் இருந்தாக வேண்டுமா? நம் ஒவ்வொருவருக்கும் சூடு சுரணை இல்லாமலேயே போய்விட்டதா?

   முதல் வீடியோவில் ரங்கராஜ் பாண்டே கேள்விகளுக்குப் பதில் சொல்கிற பகுதியைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்! நமக்கு நாமே என நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது கொஞ்சம் இருக்கிறது. அதைச் செய்யாமல் வெளியிலிருந்து ரட்சகர்களைத் தேடுவது, இன்னும் புதிய சிக்கல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
   Delete
 3. //ஆனால் வாக்காளர்கள் என்ன முடிவு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்கிற வாய்ப்பு, வசதி ரங்கராஜ் பாண்டே மாதிரியான திறமைசாலிகளுக்கும் கூட இருக்கிற மாதிரித் தெரியவில்லையே!// அக்ஷர லக்ஷம் பெரும் வார்த்தைகள்.       
  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா!

   இப்போது மேலே இரண்டாவது 17 நிமிட வீடியோவில் முதல் மூன்று நிமிடங்கள் வரை கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். மறுபடியும் கேளுங்கள். மூன்றாவதாக அடுத்தமாதமே ரஜனிகாந்த் கட்சி ஆரம்பித்துக் களத்தில் இறங்குவதாகாவே வைத்துக் கொள்ளுங்கள்! கறுப்பு ஆடா அல்லது குதிரையா? ரேசில் எந்த அளவுக்குத் தெம்போடு ஓடும், எத்தனை சதவீத வாக்குகளை இரு அணிகளிலிருந்தும் பிரிக்கும் என்பதை யாராலுமே ஊகிக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம். இரு வலுவான அணிகளில் ஏதோ ஒன்றைப் பலவீனப்படுத்தும் என்பது வேண்டுமானால் உண்மையாகலாம். ஆனால் இரு அணிகளையும் மீறித் தனித்து ஜெயிக்கும் என்பதற்கான அடையாளமே இப்போது இல்லை.

   அதிருப்தி வாக்குகளை நம்பிமட்டுமே எந்த ஒருகட்சியும் இதுவரை ஜெயித்ததில்லை. அதற்கென்று சொந்த வாக்குவங்கி இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதிருப்தி வாக்குகள், இதுவரை வாக்களிக்க வராதவர்கள் கூட வலிய வந்து வாக்களிப்பது எல்லாம் சேர்ந்தால் தான் ரஜனிகாந்த் பேசுகிறாரே #சுனாமி அது காரிய சாத்தியமாகும்! இப்போது கேள்வி ரஜனிகாந்தால் அதை சாத்தியப்படுத்த முடியுமா? முடியாது என்பதுதான் என்னுடைய பதில்.
 மீண்டும் சந்திப்போம். 

8 comments: 1. நல்லகண்ணு மாதிரி ஆட்கள் எல்லாம் நல்ல தலைவர்கள்தானே அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நல்ல தலைவர்களே இல்லை என்று குருவது எப்படி சரியாகும் முதலில் மக்கள் நல்லவர்களாக இருந்தால் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் ஆனால் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ம.த.!

   நல்லகண்ணு ஒரு நல்ல மனிதர்தான்! மறுக்க முடியாது. அதே நேரம் அவரை ஒரு நல்ல தலைவராகப் பார்க்க முடியுமா? வலது கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனை நல்ல மனிதர்களை, தோழர்களை நல்லகண்ணு முன்னுதாரணமாக வளர்த்திருக்கிறார் என்று அடையாளம் காட்ட முடியுமா? இவர் தலைவராக இருந்த காலத்திலோ, அதற்குப்பிறகோ கட்சி ஒரு சரியான நிலைப்பாடு எடுக்க என்ன செய்திருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?

   இந்தக்கேள்விகளுக்கு முதலில் விடை சொல்ல யூடிகிறதா பாருங்கள்! வலது கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி, தொடரும் அவர்களுடைய அரசியல் தவறுகளை, சரியாகப்புரிந்துகொள்ளாமல் நல்லகண்ணுவின் நல்ல தலைவர் அடைமொழியையும் புரிந்துகொள்ள முடியாது.

   Delete
 2. எல்லாரும் நல்லகண்ணு நல்ல தலைவர்னு சொல்றாங்க. அது எனக்கு உடன்பாடு இல்லை. நல்ல மனிதர், நல்ல அரசியல்வாதி, ஊழல் செய்யாதவர். அவ்ளோதான். நான் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் கொரோனா வைரஸ் பரப்பும் கம்பெனியில் வேலை பார்த்தால், நல்லவன் என்ற சொல்லில் என்ன அர்த்தம் இருக்கிறது? மக்களுக்கு நல்லது எதுவோ அதை மட்டுமே செய்யணும் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. அருமை அருமை நெல்லைத்தமிழன்.

   Delete
  2. நெ.த. சார்! ஜோதிஜி!

   தோழர் நல்லகண்ணு ஒரு நல்லமனிதர் என்பதில் சந்தேகமெதுவும் இல்லை. ஆனால் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக அவருடைய செயல்பாடுகள் எப்படி?அவரால் தன்னைப்போல எத்தனை பேரை நல்லமனிதர்களாகவாவது கட்சிக்குள் உருவாக்க முடிந்தது? குறைந்தபட்சமாக இந்த இரண்டே இரண்டு கேள்விகளுக்கு விடை சொல்ல முடிந்தால் கூடப் போதும்! நெ.த. சொல்கிற மாதிரி நல்ல அரசியல்வாதி என்கிற சர்டிபிகேட் கூட எத்தனை அர்த்தமில்லாதது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

   அதேமாதிரி தேசியத்தின் அடையாளமாகக் குமரி அனந்தன்! நல்லகண்ணுவுக்குக் கொடுக்கப்படும் விருது, அடையாளத்தை விட மிகவும் மோசமானது என்பதை ஏன் யாருமே சொல்லமாட்டேன் என்கிறீர்கள்?

   Delete
 3. ரஜினி குறித்து நீங்க எழுதிய பதில் ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. காரணம் நாளை என் 1000 வது பதிவு வெளியாகின்றது. அதில் நான் ஒரு வரியில் எழுதியிருந்ததை நீங்க தெளிவாக அப்படியே பட்டவர்த்தனமாக உடைத்து விட்டீங்க.

  ReplyDelete
  Replies
  1. ரஜனிகாந்த் மீது எனக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் இருந்தது கிடையாது ஜோதிஜி! அந்த ஒரு காரணத்தாலேயே பதிவுகளில் அந்த நடிகரைப்பற்றி நான் எழுதுவதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். இப்போது மாரிதாஸ், தமிழருவி மணியன், ரங்கராஜ் பாண்டே என்று வரிசையாகக் கிளம்பி மனிதப்புனிதர் வந்துவிட்டார் ரேஞ்சுக்கு கோவிக் கொண்டிருக்கும்போது, அதற்கு மாற்றுக்கருத்தும் அவநம்பிக்கையும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த யாராவது இங்கே எழுத வேண்டாமா?

   நாளை தேவியர் இல்லத்தில் ஆயிரமாவது பதிவு என்கிற மந்திர எண்ணிக்கையைத் தொடவிருப்பதற்கு மனம் கனிந்த வாழ்த்துகள்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!