வெட்டி அக்கப்போர்களால் ஆனது அரசியல், சினிமா. இலக்கியம் என்பதை நம்மூரில் தொடர்ந்து நிரூபித்து வருகிற காமெடியை ஜனங்களாகிய நாம் ரொம்பவும் ரசிக்கப் பழகி விட்டோமா? அல்லது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறமாதிரி அமைதியாக இருந்தே, ஆட விட்டுவிட்டோமா? இப்படி இங்கே நான் என்னதான் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் பதில் வராது என்பது கூடத் தெரிந்ததுதான்!
இந்த வீடியோவை இப்போது பார்க்கும்போது யூட்யூப் தளத்தில் இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 42ஆயிரத்தை தாண்டி விட்டது என்பதில் அக்கப்போர்கள் தமிழர்களுடைய வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா? இத்தனைக்கும் தவாஉ கட்சியோ வேல்முருகனோ தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் அல்ல! வீடியோ 28 நிமிடம்
Behindwoods ஆவுடையப்பன்! அனல் பறக்கும் விவாதம் நடத்தக் கூடியவர் என்பதை இந்த வீடியோவுக்கு அவர்கள் கொடுத்திருக்கிற தலைப்பிலிருந்துதான் நான் தெரிந்து கொண்டேன்! திரௌபதி திரைப்படம் குறித்து அதன் இயக்குனர் மோகன் Gயுடன் இந்த விவாதத்தில் என்ன சொல்ல வருகிறார்? யாருடைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் நிறையப்பேரை இந்தப்படம் கலவரப்படுத்தியிருக்கிறது என்பது இதே ஆவுடையப்பன் இதே தளத்தில் இன்னுமொரு விவாதத்தை செங்கொடி, கோபி இவர்களுடன் நடத்தியிருப்பதில் இருந்து தெளிவாகிறது. ஒருபக்கச் சார்பாகவே பேசுவது இங்கே ஊடகங்களின் பொதுவான இயல்பாகவே ஆகிவிட்டது என்பதால் பா, ரஞ்சித்தின் அத்துமீறல்களை சகித்துக் கொள்கிறவர்கள், திரௌபதி படத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் ஆச்சரியமில்லைதான்! அப்படி ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், அதை சட்டைசெய்யாமல் போய்விடுகிற ஆப்ஷன் ஜனங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்! திரௌபதி படத்துக்கு The News Minute தளத்தில் எடுக்கப்பட்டிருக்கவே கூடாத படம் என்று தலைப்பிட்டு ஒரு விமரிசனம் வந்திருந்தது. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
#அக்கப்போர் #சினிமா என்று பார்த்துவிட்டு #அரசியல் பக்கம் பார்க்க வேண்டாமா? புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த 45 நிமிட வீடியோ விவாதத்தில் CAA எதிர்ப்பு அரசியலைக் குறித்து மிகத் தெளிவாக, தன்னுடைய கருத்துக்களை சொல்கிறார். News 7 சேனல் மிக நேர்மையாக ஒரு விவாதத்தை குறுக்கீடுகள், கோணல் கேள்விகள் இல்லாமல் நடத்தும் என்று நினைப்பதே தவறுதான்! விஜயனுடைய குறுக்கீடுகளையும் மீறி டாக்டர் கிருஷ்ணசாமி எப்படித் தன்னுடைய கருத்துக்களை முன்வைக்க முடிந்தது என்பது ஆச்சரியம்!
இத்தனையும் பார்த்துவிட்டு, இலக்கியத்தில் என்ன அக்கப்போர், அதைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என்று யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நம்புவதால் அதை சாய்ஸில் விட்டாயிற்று. கட்டாயம் அதுவும் வேண்டும் என்று யாருக்காவது ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்! link, reference எல்லாம் தருகிறேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!