இந்த ஞாயிற்றுக் கிழமை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் செய்தியாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது இருக்கிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பற்றி மட்டுமல்ல, சமீபநாட்களில் வெளிநாட்டு ஊடகங்கள், மற்றும் ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியா மீது தொடர்ந்து கக்கும் வன்மம் கலந்த விமரிசனங்களுக்கு தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பது இதன் மீதான ஒன்லைனர்.
வீடியோ 32 நிமிடம்
குளோபல் பிசினெஸ் சம்மிட் என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் நடத்திய கருத்தரங்கம். சர்வதேச அரங்கில் நம்முடைய நண்பர்களை இழந்து வருகிறோமா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் மிக ஆழமானது. "Maybe we are getting to know who our friends really are." ஒருவேளை நம்முடைய நண்பர்கள் யாரென்று தெரிந்து கொள்ளப் போகிறோமோ? முந்தைய நாட்களில் ஒதுங்கியிருப்பதே உலக விவகாரங்களை எதிர்கொள்வதற்கான வழி என்று இருந்தது இனிமேலும் அப்படியே தொடர முடியாது. உலகத்தின் 5வது பெரிய பொருளாதாரமான இந்தியா விரைவிலேயே மூன்றாவது இடத்தைப் பிடிக்க இருக்கிற தருணத்தில் எல்லோருடனும் புழங்கத்தான் வேண்டும்! தீர்வுகளையும் கண்டாக வேண்டும் என்று வெளியுறவு விவகாரங்களைக் கையாளுவதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைச் சொன்னார்.
CAA பற்றி நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி
நாலே நிமிடம்!
CAA குறித்து வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் கூட எழும் விமரிசனங்கள் கண்டனங்களுக்கு ஜெய்சங்கர் அளித்த பதில் நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி! எல்லோரையும் இருகரம் நீட்டி வரவேற்கிற எந்த ஒருநாடாவது உண்டா? "Everybody, when they look at citizenship, has a context and has a criterion. Show me a country in the world which says everybody in the world is welcome. Nobody does that. Look at America. Look at the Europeans. I can give you example of every European country. There is some social criterion," நாடற்றவர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்த சட்டத்திருத்தத்தின் வழியாக முயற்சி செய்திருக்கிறோம். அப்படிச் செய்ததிலும் கூட நமக்கே பெரும் தலைவலியாக மாறிவிடாதபடி செய்திருக்கிறோம் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஐநா மனித உரிமை ஆணையம் செலெக்டிவாக இந்த விஷயத்தில் குறுக்கிட்டதையும் கண்டித்திருக்கிறார்.
உண்மையில், நமக்கு , நம்மைத் தவிர யாரும் இல்லை என்பது தான் உண்மை. அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் தான் நாம் உறவுகளை பேனுகிறோம்...அம்மா கூட நம்முடன் இல்லை...இந்த புரிதல் தான் இந்த வாழ்வின் விடுதலை உணர்வாக இருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
பொதுவாய் உறவுகளை பேணுவதில் நான் மிக பலவீனமானவள். எந்த உறவையும் கையாளத் தெரியாது..யாரையும் ஈர்க்கவோ, இருத்தி வைத்துக் கொள்ளவோ கூடிய வசீகரம் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவுகளை தேடுகிற
மெனக்கெடல் சுத்தமாக இல்லை.அதனாலேயே என் நட்பு வட்டம சிறு வயதிலிருந்தே ஒன்றிரண்டோடு மட்டுமே இருந்து கொண்டிருக்கும்...அது தான் இப்போது வரையிலும் வந்து கொண்டிருக்கிறது.
மெனக்கெடல் சுத்தமாக இல்லை.அதனாலேயே என் நட்பு வட்டம சிறு வயதிலிருந்தே ஒன்றிரண்டோடு மட்டுமே இருந்து கொண்டிருக்கும்...அது தான் இப்போது வரையிலும் வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்துக்கு முன்பு வரை, என் எது ஒன்றுக்கும், வார்த்தைகளின் அரவணைப்பு தேடி நான் அங்கு தான் போய் விழுவேன்...
ஒருமுறை கனவு ஒன்றில் என் சிநேகிதி மறைந்து போன பிறகு , ஏதோ ஒரு நிகழ்வில் நான் கலந்து கொள்ள நேரிடுகிறது..அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலகலத்து பேசிக் கொண்டிருக்க , நான் என் சிநேகிதியை தேடுகிறேன்..அவள் மறைந்து போனது மறந்த நிலையில்.
பிறகு சட்டென உறைக்க , அந்த தருணத்தின் அனாதைத்தனம் இன்னுமே நினைவில் இருக்கிறது...எனக்கு இந்த உலகத்தில் பேச எதுவுமற்று , யாருமற்று. ..மொழி அறியாத கிரகத்தில் இனி காலத்துக்கும் தனித்து விடப்பட்டதை போல..அப்போது அந்த நிலையை தாங்கவே முடியாது மூச்சு முட்டியது..
பிறகு சட்டென உறைக்க , அந்த தருணத்தின் அனாதைத்தனம் இன்னுமே நினைவில் இருக்கிறது...எனக்கு இந்த உலகத்தில் பேச எதுவுமற்று , யாருமற்று. ..மொழி அறியாத கிரகத்தில் இனி காலத்துக்கும் தனித்து விடப்பட்டதை போல..அப்போது அந்த நிலையை தாங்கவே முடியாது மூச்சு முட்டியது..
இப்போதெல்லாம், பேசுவதற்கு எனக்கு நான் இருக்கிறேன் என்கிற இடத்தில், நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது..
கூகிள் ப்ளஸ் காலங்களில் நட்பாக இருந்து இப்போது விடுபட்டுப்போன பிரபா இன்றைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் முகநூல் பகிர்வில் கண்ணில் பட்டார். முகநூல் பக்கங்களில் புழங்குவதில்லை என்பதால் மகளிர் தின சிறப்பு விருந்தாளியாக அவருடைய நாலுநாள் முந்தைய பகிர்வு. இதுவே கூகிள் பிளஸ்சாக இருந்திருந்தால், ஏனம்மா சண்டைபோடவும் சமாதானமாகப் போகவும் நாங்களெல்லாம் இல்லையா என்று தலையில் ஒரு கொட்டும் வைத்திருக்கலாம்!
ஏற்கெனெவே ஒரு ரவுண்டு வந்த மேட்டர்தான்! ஆனால் #தமிழேண்டா குரூப்புகள் திருந்துகிற வரை இன்னும் பலரவுண்ட் வரலாம்! #வரலாம்வரலாம்வா
மார்ஜின் கால் படத்தின் ஒரு சுவாரசியமான கட்டம்
YES Bank வீழ்ச்சியை பார்க்கும் போது கண் முன்னே Margin Call படம் வந்து செல்கிறது.
அந்தப்படத்தில் வால் ஸ்ட்ரீட்டில் இயங்கும் புகழ்பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் திடீரென்று பிங்க் ஸ்லிப் கொடுத்து சில பணியாளர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். அதில் அந்த வங்கியில் நீண்டகாலமாக பணிபுரிந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவரையும் கிளப்புவார்கள். அப்போது அவர் சொல்வார் "வங்கியின் நிதி நிலை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் ஆராய்ந்து வருகிறேன். கொஞ்சம் டைம் கொடுங்கள்" என்று கேட்பார். "அதை அடுத்து வரும் உங்கள் ஜூனியர் பார்த்துக்கொள்வார். நீங்கள் கிளம்பலாம்" என்று ரொம்ப எகத்தாளமாக வெளியே அனுப்புவார் வங்கியின் மனித வளத்துறை அதிகாரி.
அவர் எல்லாவற்றையும் பேக் செய்து விட்டு கிளம்பும்போது லிப்டில் வைத்து ஒரு பென்-டிரைவில் கொடுத்து "இது ரொம்ப முக்கியம் கவனமாக இரு" என்று சொல்லிவிட்டு செல்வார்.
அதை அன்று இரவு அந்த ஜூனியர் எடுத்து ஆராய்ந்து பார்ப்பார். அங்கு அவருக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருக்கும். வங்கியின் நிதி நிலை இன்னும் சில நாட்கள் கூட தாங்காது. அவர்களின் போர்ட்போலியோ 25% விழுந்துவிட்டால் வங்கியின் மொத்த மதிப்பும் விழுந்துவிடும். அதேபோல வங்கியின் கடன் காப்பு அளவு அதன் தாங்கு திறனை விட மிக மோசமாக இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் வங்கியின் மதிப்பு விழுவது உறுதி.
அதை அன்று இரவு அந்த ஜூனியர் எடுத்து ஆராய்ந்து பார்ப்பார். அங்கு அவருக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருக்கும். வங்கியின் நிதி நிலை இன்னும் சில நாட்கள் கூட தாங்காது. அவர்களின் போர்ட்போலியோ 25% விழுந்துவிட்டால் வங்கியின் மொத்த மதிப்பும் விழுந்துவிடும். அதேபோல வங்கியின் கடன் காப்பு அளவு அதன் தாங்கு திறனை விட மிக மோசமாக இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் வங்கியின் மதிப்பு விழுவது உறுதி.
அந்த ஜூனியர் அன்று இரவே தனது மேலதிகாரிக்கு இதை தெரியப்படுத்துவான். முதலில் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். இல்லை இப்போது கவனிக்காவிட்டால் வங்கி திவாலாகி விடும் என்று சொல்லவும் அலுவலகத்திற்கு ஓடி வருவார். அங்கிருந்து கதையின் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும். அந்த மேலதிகாரி அவருக்கு மேலுள்ள அதிகாரிக்கு அழைத்து சொல்வார். இதில் முடிவெடுக்க அவராலும் முடியாது. அவர் வங்கியின் CEOக்கு போன் போடுவார். அவர் நேரில் வந்து பார்த்து திகைத்துப்போய் வங்கியின் போர்டு மெம்பர்கள் அனைவரையும் அழைப்பார். இறுதியில் வங்கியின் சேர்மன் வந்து கேட்பார். இதெல்லாம் ஓர் இரவிற்குள் நடக்கும்.
எல்லா வகைகளிலும் தீரவிசாரித்தாலும் வங்கி திவாலாகி போவதை தடுக்க முடியாது என்றுதான் வரும். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மீட்கும் வழிகள் எதுவும் கிடையாது என்று தெரியவரும்போது இரவு மூன்று மணி ஆகிவிடும். அப்போது இவர்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். வங்கியின் அனைத்து பங்குகளையும், சொத்துக்களையும் கிடைத்த விலைக்கு விற்று வெளியேறுவது என்று முடிவெடுப்பார்கள்.
இது அநியாயம், நம்மை நம்பி இந்த வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் இதனால் ஒரே நாளில் ஏமாற்றப்படுவார்கள். அவர்களின் முதலீடுகள் முற்றிலுமாக காணாமல் போகும் என்று விற்பனைத் துறை மேலதிகாரி கத்துவார். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் அதைப் பார்த்தால் நம்முடைய நிலைமை என்னாவது? இருப்பதை விற்பனை செய் உன்னுடைய ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள் என்பார். வேறுவழியின்றி அவரும் மனசாட்சிக்கு விரோதமாக ஃபயர் சேல் செய்வார்.
மொத்தத்தில் வங்கியின் மேல்அடுக்கில் உள்ள அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொண்டு வங்கியை, அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு செல்வார்கள்.
அந்தப்படத்தில் ஒருநாளில் செய்ததை எஸ் பேங்க் சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடம் செய்திருக்கிறார்கள். வங்கியின் ஆரம்பகட்ட புரமோட்டர்கள் அனைவரும் நல்ல விலைக்கு தங்கள் பங்குகளை விற்றுவிட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார்கள். ஆர்பிஐ இப்பொழுது பாவத்தை சுமக்கிறது.
- Karthikeyan
மீண்டும் சந்திப்போம்.
கதம்பமாக பல வித செய்திகளை இங்கே ஒரே இடத்தில் படிக்க முடிந்தது, நன்றி
ReplyDeleteவாருங்கள் ம.த.!
Deleteவலைப்பதிவுகளில் குறைந்தது மூன்று விஷயங்களையாவது சொல்வதை நீண்டநாட்களாகவே என்னுடைய வழக்கமாக வைத்திருக்கிறேன். வாசித்ததற்கு நன்றி!
இது போல நீங்கள் கதம்பமாக கொடுப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. வெண்பொங்கலில் முந்திரி போல!
ReplyDeleteவாருங்கள் பந்து!
Deleteஇந்த format உங்களுக்குப் பிடித்திருப்பதில் சந்தோஷம்!