Showing posts with label CAA எதிர்ப்பு அரசியல். Show all posts
Showing posts with label CAA எதிர்ப்பு அரசியல். Show all posts

சண்டேன்னா மூணு! #அரசியல் #விமரிசனங்கள் #யெஸ்பேங்க்

இந்த ஞாயிற்றுக் கிழமை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் செய்தியாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது இருக்கிறது.  இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பற்றி மட்டுமல்ல, சமீபநாட்களில் வெளிநாட்டு ஊடகங்கள், மற்றும் ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியா மீது தொடர்ந்து கக்கும் வன்மம் கலந்த விமரிசனங்களுக்கு தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பது இதன் மீதான ஒன்லைனர்.

    வீடியோ 32 நிமிடம் 

குளோபல் பிசினெஸ் சம்மிட் என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் நடத்திய கருத்தரங்கம். சர்வதேச அரங்கில் நம்முடைய நண்பர்களை இழந்து வருகிறோமா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் மிக ஆழமானது. "Maybe we are getting to know who our friends really are." ஒருவேளை நம்முடைய நண்பர்கள் யாரென்று தெரிந்து கொள்ளப் போகிறோமோ? முந்தைய நாட்களில் ஒதுங்கியிருப்பதே உலக விவகாரங்களை எதிர்கொள்வதற்கான வழி என்று இருந்தது இனிமேலும் அப்படியே தொடர முடியாது. உலகத்தின் 5வது பெரிய பொருளாதாரமான இந்தியா விரைவிலேயே மூன்றாவது இடத்தைப் பிடிக்க இருக்கிற தருணத்தில் எல்லோருடனும் புழங்கத்தான் வேண்டும்! தீர்வுகளையும் கண்டாக வேண்டும் என்று வெளியுறவு விவகாரங்களைக் கையாளுவதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைச் சொன்னார்.

CAA பற்றி நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி 
நாலே நிமிடம்!  

CAA குறித்து வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் கூட  எழும் விமரிசனங்கள் கண்டனங்களுக்கு ஜெய்சங்கர் அளித்த பதில் நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி! எல்லோரையும் இருகரம் நீட்டி வரவேற்கிற எந்த ஒருநாடாவது உண்டா? "Everybody, when they look at citizenship, has a context and has a criterion. Show me a country in the world which says everybody in the world is welcome. Nobody does that. Look at America. Look at the Europeans. I can give you example of every European country. There is some social criterion," நாடற்றவர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்த சட்டத்திருத்தத்தின் வழியாக முயற்சி செய்திருக்கிறோம். அப்படிச் செய்ததிலும் கூட நமக்கே பெரும் தலைவலியாக மாறிவிடாதபடி செய்திருக்கிறோம் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஐநா மனித உரிமை ஆணையம் செலெக்டிவாக இந்த விஷயத்தில் குறுக்கிட்டதையும் கண்டித்திருக்கிறார்.  

உண்மையில், நமக்கு , நம்மைத் தவிர யாரும் இல்லை என்பது தான் உண்மை. அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் தான் நாம் உறவுகளை பேனுகிறோம்...அம்மா கூட நம்முடன் இல்லை...இந்த புரிதல் தான் இந்த வாழ்வின் விடுதலை உணர்வாக இருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
பொதுவாய் உறவுகளை பேணுவதில் நான் மிக பலவீனமானவள். எந்த உறவையும் கையாளத் தெரியாது..யாரையும் ஈர்க்கவோ, இருத்தி வைத்துக் கொள்ளவோ கூடிய வசீகரம் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவுகளை தேடுகிற
மெனக்கெடல் சுத்தமாக இல்லை.அதனாலேயே என் நட்பு வட்டம சிறு வயதிலிருந்தே ஒன்றிரண்டோடு மட்டுமே இருந்து கொண்டிருக்கும்...அது தான் இப்போது வரையிலும் வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்துக்கு முன்பு வரை, என் எது ஒன்றுக்கும், வார்த்தைகளின் அரவணைப்பு தேடி நான் அங்கு தான் போய் விழுவேன்...
ஒருமுறை கனவு ஒன்றில் என் சிநேகிதி மறைந்து போன பிறகு , ஏதோ ஒரு நிகழ்வில் நான் கலந்து கொள்ள நேரிடுகிறது..அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலகலத்து பேசிக் கொண்டிருக்க , நான் என் சிநேகிதியை தேடுகிறேன்..அவள் மறைந்து போனது மறந்த நிலையில்.
பிறகு சட்டென உறைக்க , அந்த தருணத்தின் அனாதைத்தனம் இன்னுமே நினைவில் இருக்கிறது...எனக்கு இந்த உலகத்தில் பேச எதுவுமற்று , யாருமற்று. ..மொழி அறியாத கிரகத்தில் இனி காலத்துக்கும் தனித்து விடப்பட்டதை போல..அப்போது அந்த நிலையை தாங்கவே முடியாது மூச்சு முட்டியது..
இப்போதெல்லாம், பேசுவதற்கு எனக்கு நான் இருக்கிறேன் என்கிற இடத்தில், நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது.. 

கூகிள் ப்ளஸ் காலங்களில் நட்பாக இருந்து இப்போது விடுபட்டுப்போன பிரபா இன்றைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் முகநூல் பகிர்வில் கண்ணில் பட்டார். முகநூல் பக்கங்களில் புழங்குவதில்லை என்பதால் மகளிர் தின சிறப்பு விருந்தாளியாக அவருடைய நாலுநாள் முந்தைய பகிர்வு. இதுவே கூகிள் பிளஸ்சாக இருந்திருந்தால், ஏனம்மா சண்டைபோடவும் சமாதானமாகப் போகவும் நாங்களெல்லாம் இல்லையா என்று தலையில் ஒரு கொட்டும் வைத்திருக்கலாம்!

    
ஏற்கெனெவே ஒரு ரவுண்டு வந்த மேட்டர்தான்! ஆனால் #தமிழேண்டா குரூப்புகள் திருந்துகிற வரை இன்னும் பலரவுண்ட் வரலாம்! #வரலாம்வரலாம்வா  


மார்ஜின் கால் படத்தின் ஒரு சுவாரசியமான கட்டம் 

YES Bank வீழ்ச்சியை பார்க்கும் போது கண் முன்னே Margin Call படம் வந்து செல்கிறது.
அந்தப்படத்தில் வால் ஸ்ட்ரீட்டில் இயங்கும் புகழ்பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் திடீரென்று பிங்க் ஸ்லிப் கொடுத்து சில பணியாளர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். அதில் அந்த வங்கியில் நீண்டகாலமாக பணிபுரிந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவரையும் கிளப்புவார்கள். அப்போது அவர் சொல்வார் "வங்கியின் நிதி நிலை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் ஆராய்ந்து வருகிறேன். கொஞ்சம் டைம் கொடுங்கள்" என்று கேட்பார். "அதை அடுத்து வரும் உங்கள் ஜூனியர் பார்த்துக்கொள்வார். நீங்கள் கிளம்பலாம்" என்று ரொம்ப எகத்தாளமாக வெளியே அனுப்புவார் வங்கியின் மனித வளத்துறை அதிகாரி.
அவர் எல்லாவற்றையும் பேக் செய்து விட்டு கிளம்பும்போது லிப்டில் வைத்து ஒரு பென்-டிரைவில் கொடுத்து "இது ரொம்ப முக்கியம் கவனமாக இரு" என்று சொல்லிவிட்டு செல்வார்.
அதை அன்று இரவு அந்த ஜூனியர் எடுத்து ஆராய்ந்து பார்ப்பார். அங்கு அவருக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருக்கும். வங்கியின் நிதி நிலை இன்னும் சில நாட்கள் கூட தாங்காது. அவர்களின் போர்ட்போலியோ 25% விழுந்துவிட்டால் வங்கியின் மொத்த மதிப்பும் விழுந்துவிடும். அதேபோல வங்கியின் கடன் காப்பு அளவு அதன் தாங்கு திறனை விட மிக மோசமாக இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் வங்கியின் மதிப்பு விழுவது உறுதி.
அந்த ஜூனியர் அன்று இரவே தனது மேலதிகாரிக்கு இதை தெரியப்படுத்துவான். முதலில் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். இல்லை இப்போது கவனிக்காவிட்டால் வங்கி திவாலாகி விடும் என்று சொல்லவும் அலுவலகத்திற்கு ஓடி வருவார். அங்கிருந்து கதையின் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும். அந்த மேலதிகாரி அவருக்கு மேலுள்ள அதிகாரிக்கு அழைத்து சொல்வார். இதில் முடிவெடுக்க அவராலும் முடியாது. அவர் வங்கியின் CEOக்கு போன் போடுவார். அவர் நேரில் வந்து பார்த்து திகைத்துப்போய் வங்கியின் போர்டு மெம்பர்கள் அனைவரையும் அழைப்பார். இறுதியில் வங்கியின் சேர்மன் வந்து கேட்பார். இதெல்லாம் ஓர் இரவிற்குள் நடக்கும்.
எல்லா வகைகளிலும் தீரவிசாரித்தாலும் வங்கி திவாலாகி போவதை தடுக்க முடியாது என்றுதான் வரும். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மீட்கும் வழிகள் எதுவும் கிடையாது என்று தெரியவரும்போது இரவு மூன்று மணி ஆகிவிடும். அப்போது இவர்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். வங்கியின் அனைத்து பங்குகளையும், சொத்துக்களையும் கிடைத்த விலைக்கு விற்று வெளியேறுவது என்று முடிவெடுப்பார்கள்.
இது அநியாயம், நம்மை நம்பி இந்த வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் இதனால் ஒரே நாளில் ஏமாற்றப்படுவார்கள். அவர்களின் முதலீடுகள் முற்றிலுமாக காணாமல் போகும் என்று விற்பனைத் துறை மேலதிகாரி கத்துவார். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் அதைப் பார்த்தால் நம்முடைய நிலைமை என்னாவது? இருப்பதை விற்பனை செய் உன்னுடைய ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள் என்பார். வேறுவழியின்றி அவரும் மனசாட்சிக்கு விரோதமாக ஃபயர் சேல் செய்வார்.
மொத்தத்தில் வங்கியின் மேல்அடுக்கில் உள்ள அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொண்டு வங்கியை, அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு செல்வார்கள்.
அந்தப்படத்தில் ஒருநாளில் செய்ததை எஸ் பேங்க் சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடம் செய்திருக்கிறார்கள். வங்கியின் ஆரம்பகட்ட புரமோட்டர்கள் அனைவரும் நல்ல விலைக்கு தங்கள் பங்குகளை விற்றுவிட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார்கள். ஆர்பிஐ இப்பொழுது பாவத்தை சுமக்கிறது.
- Karthikeyan   

மீண்டும் சந்திப்போம்.   

சண்டேன்னா மூணு! #அரசியல் #சினிமா #அக்கப்போர்

வெட்டி அக்கப்போர்களால் ஆனது அரசியல், சினிமா. இலக்கியம் என்பதை நம்மூரில் தொடர்ந்து நிரூபித்து வருகிற காமெடியை ஜனங்களாகிய நாம் ரொம்பவும் ரசிக்கப் பழகி விட்டோமா? அல்லது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறமாதிரி அமைதியாக இருந்தே, ஆட விட்டுவிட்டோமா? இப்படி இங்கே நான் என்னதான் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் பதில் வராது என்பது கூடத் தெரிந்ததுதான்! 

    
இந்த வீடியோவை இப்போது பார்க்கும்போது யூட்யூப் தளத்தில் இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 42ஆயிரத்தை தாண்டி விட்டது என்பதில் அக்கப்போர்கள்  தமிழர்களுடைய வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா? இத்தனைக்கும் தவாஉ கட்சியோ வேல்முருகனோ தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் அல்ல!   வீடியோ 28 நிமிடம் 


Behindwoods ஆவுடையப்பன்! அனல் பறக்கும் விவாதம் நடத்தக் கூடியவர் என்பதை இந்த வீடியோவுக்கு அவர்கள் கொடுத்திருக்கிற தலைப்பிலிருந்துதான் நான் தெரிந்து கொண்டேன்! திரௌபதி திரைப்படம் குறித்து அதன் இயக்குனர் மோகன் Gயுடன் இந்த விவாதத்தில் என்ன சொல்ல வருகிறார்? யாருடைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் நிறையப்பேரை இந்தப்படம் கலவரப்படுத்தியிருக்கிறது என்பது இதே ஆவுடையப்பன் இதே தளத்தில் இன்னுமொரு விவாதத்தை செங்கொடி, கோபி இவர்களுடன் நடத்தியிருப்பதில் இருந்து தெளிவாகிறது. ஒருபக்கச் சார்பாகவே பேசுவது இங்கே ஊடகங்களின் பொதுவான இயல்பாகவே ஆகிவிட்டது என்பதால் பா, ரஞ்சித்தின் அத்துமீறல்களை  சகித்துக் கொள்கிறவர்கள், திரௌபதி படத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் ஆச்சரியமில்லைதான்! அப்படி ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், அதை சட்டைசெய்யாமல் போய்விடுகிற ஆப்ஷன் ஜனங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்! திரௌபதி படத்துக்கு The News Minute தளத்தில் எடுக்கப்பட்டிருக்கவே கூடாத படம் என்று  தலைப்பிட்டு ஒரு விமரிசனம் வந்திருந்தது.  ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


#அக்கப்போர் #சினிமா என்று பார்த்துவிட்டு #அரசியல் பக்கம் பார்க்க வேண்டாமா? புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த 45 நிமிட வீடியோ விவாதத்தில் CAA எதிர்ப்பு அரசியலைக் குறித்து மிகத் தெளிவாக, தன்னுடைய கருத்துக்களை சொல்கிறார். News 7 சேனல் மிக நேர்மையாக ஒரு விவாதத்தை குறுக்கீடுகள், கோணல் கேள்விகள் இல்லாமல்  நடத்தும் என்று நினைப்பதே தவறுதான்! விஜயனுடைய குறுக்கீடுகளையும் மீறி டாக்டர் கிருஷ்ணசாமி எப்படித் தன்னுடைய கருத்துக்களை முன்வைக்க முடிந்தது என்பது ஆச்சரியம்! 

இத்தனையும் பார்த்துவிட்டு, இலக்கியத்தில் என்ன அக்கப்போர், அதைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என்று யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நம்புவதால் அதை சாய்ஸில் விட்டாயிற்று. கட்டாயம் அதுவும் வேண்டும் என்று யாருக்காவது ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்! link, reference எல்லாம் தருகிறேன்!

மீண்டும் சந்திப்போம்.            
          

யார் வாய்ஸ் கொடுத்து என்ன செய்ய? தீர்வை விரும்புகிறோமா?

ரஜனி வாய்ஸ்! இசுடாலின் வாய்ஸ்! இன்னும் என்ன வேண்டும்? என்று நேற்றிரவு எழுதியபிறகு அங்கேயே இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாமோ என்று தோன்றுகிற அளவுக்குக் காலையில் இதைப் பற்றியே ஏகப்பட்ட குரல்கள்! போதாக்குறைக்கு கமல் காசரும் ரஜனி வாய்சுக்கு ஆதரவு தெரிவித்தது வேறு ஒரு சர்ப்ரைஸ். ஆக ரஜனி வாய்சுக்கு முன்னால் இசுடாலின் வாய்ஸ் எடுபடாமலேயே போய்விட்டதை இங்கே யாராவது கவனித்தீர்களா?  திமுகவினர்  ஏன் தொடர்ந்து ரஜனியின் அரசியல் பிரவேசத்தைக் குறித்து அதிகம் எரிச்சல்படுகிறார்கள் என்பதைத் தெளிவாகவே புலப்படுத்துகிற விஷயம் இது. 

 



கமல் காசருடைய ரெண்டுங்கெட்டான்தனமான பாராட்டைவிட, செலெக்டிவாக கண்டனம் தெரிவித்த பகுதிக்கு மட்டும் நியாயமானது என்று ஹிந்து என்.ராம் சர்டிபிகேட் கொடுத்திருப்பது இடதுசாரிகளின் பித்தமும் வன்மமும் எந்த அளவுக்குத் தலைக்கேறி இருக்கிறது என்பதன் அடையாளம். இரும்புக்கரம் கொண்டு டில்லி போராட்டங்களை ஒடுக்கியிருக்க வேண்டும் என்று ரஜனிகாந்த் சொன்னதை நியாயம் என்று என்.ராம் ஒப்புக்கொள்வதாக எடுத்துக் கொள்ளலாமா? அதென்ன செலெக்டிவாக ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக் கொள்வது? எதையும் முழுமையாகப் பார்க்கவோ புரிந்து கொள்ளவோ முடியாத இடதுசாரி கோமாளிகளால் என்ன செய்துவிட முடியும்?
                                       
 
ராஜன் ராதாமணாளன்! வால்பையன் பதிவர் அருணுடைய சேக்காளி! கொஞ்சம் குத்தல், நக்கல் தூக்கலாக இருக்கிற எழுத்துக்குச் சொந்தக்காரர். ரஜனி பேச்சு - கமல் பாராட்டுக்குக் கொஞ்சம் விரிவாகவே எள்ளிநகையாடி முகநூலில் பகிர்ந்திருக்கிறார். அதற்கு அப்புறம் வந்த 2வது ரவுண்டு நக்கல் இது!   
                                             
ஆர்னாப் கோஸ்வாமி நேற்று ரிபப்லிக் டிவியில் நேற்று நடத்திய 53 நிமிட விவாதம் கொஞ்சம் உருப்படியான தகவல்களோடு இருந்தது. நிறையாக கேள்விகளும்!

விடையைத் தேடுகிறோமா என்ன? எனக்கு இப்படி ஒரு சந்தேகத்தையும் எழுப்பிய விவாதம்.

மீண்டும் சந்திப்போம்.                           
    

#1200 சண்டேன்னா மூணு! டொனால்ட் ட்ரம்ப்! ஷாஹீன் பாக்! தா பாண்டியன்!

டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகை Khangress கட்சியில் ஏகத்துக்கும் காண்டு கிளப்பியிருக்கிறது. அதே போல டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் இந்த வருகையால் இந்தியாவுக்கு ஒரு பயனுமில்லை என்று சொல்லி விட்டார். ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பையும் அவரது பரிவாரத்தையும் வரவேற்பதற்கு ஏற்பாடுகள் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன என்பதில் ஒரு சராசரி இந்தியன் கண்ணுக்குப் படுகிற விஷயங்களையும் தாண்டி வேறுவிஷயங்களும் இருக்கின்றன. 

 வீடியோ 26 நிமிடம் 

இந்த வருகையின் போது எந்த வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்பதில் இந்தியத்தரப்பின் மீது குறை சொல்ல முடியாது. அமெரிக்கத்தரப்பு விரும்புகிறபடி உடன்பாடு எட்டப்படாததால் அவர்களே வெளியேறிவிட்டார்கள். பாதுகாப்புத்துறைக்காக கொஞ்சம் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதுபோக ஒருசில அணு உலைகள் வாங்க அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்பதெல்லாம் ஊகங்களே! அப்படியானால் டொனால்ட் ட்ரம்ப் இத்தனை ஆர்வத்தோடு இந்திய சினிமாக்களைத் தொட்டு ட்வீட் செய்து, ஒரு 36 மணிநேர வருகைக்குத் தயாராவானேன்? இங்கே இந்தியர்கள் அமெரிக்காவை அமெரிக்க அதிபரை அண்ணாந்து பார்க்கிற மாதிரி. டொனால்ட் ட்ரம்பும் அமெரிக்க இந்தியர்களுடைய வாக்குகளை மனதில் வைத்துக்கொண்டே வருகிறார்! இத்தனைக்கும் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்புக்கான அப்ரூவல் ரேட்டிங் நாலில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதாக செய்தி. ட்ரம்ப் தலைமுடியும் சும்மா ஆடாது என்றிருக்க Khangress ஓவராகப் பொருமுவானேன்? இதுதானய்யா காங்கிரசு! 


டில்லி ஷாஹீன் பாக் போராட்டத்தின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் நாடகமான Merchant of Venice இல் வருகிற ஷைலக் தனக்குச் சேரவேண்டிய pound of flesh நெஞ்சுக்கறிக்காக கெடுபிடி செய்கிற மாதிரியே! AAPக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தோம் இல்லையா? CAA /NRC /NPR இவைகளுக்கு எதிராக டில்லி சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாம்! வெறும் 500 இஸ்லாமியப்பெண்கள் கும்பலாகக் கூடி டில்லி ஜாபராபாத் மெட்ரோ ரயில் நிலையத்துக்குப் போகவிடாமல் ரகளை செய்ததில் மெட்ரோ ஸ்டேஷன் மூடப்பட்டதும் பயணிகள் அவதிக்கு உள்ளானதும்தான் மிச்சம்! 

  
தா பாண்டியன்! வலது கம்யூனிஸ்ட் கட்சி எப்படி எல்லாம் சீரழிந்தது சீரழித்தது என்பதற்கு வாழும் உதாரணமாக இருப்பவர் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வது மிகவும் உத்தமம்!  வீடியோ 38 நிமிடம்.

டிஸ்கி 1: இட்லி வடை பொங்கல்! #63 நேற்றே வெளியாகியிருக்க வேண்டியது! எழுதியதை பாதியில் மூடி விட்டேன். இன்று காலை, தலைப்பை மட்டும் அப்படியே வைத்து, இன்றைய செய்திகளை வைத்தே புதிதாக எழுதி வெளியிட்டாயிற்று.

இது இந்தப்பக்கங்களில் 1200வது பதிவு.       
     

திமுகவின் R S பாரதியும் வண்ணாரப்பேட்டை போராட்டமும்

திமுகவின் அமைப்புச் செயலாளர் R S பாரதியின் ஒரு விஷ(ம)த்னமான பேச்சைப்பற்றி சமூக வலை தளங்களில் பரவலாகவும் பலவிதமாகவும் விவாதிக்கப்படுவது, அவருக்கே நிறைய ஆச்சரியங்களைத் தந்திருக்கலாம்! ஏனென்றால் இதுவரை R S பாரதி என்கிற இந்த நபருக்கு இத்தனை வெளிச்சம் கிடைத்ததில்லை, யாரும் இவரை அவ்வளவு பெரிய ஆளாக சட்டை செய்வதாகவும் எனக்குத் தெரிந்து இல்லை. ஆனாலும் ஏதோ காரணத்துக்காக ஒரு துரும்பு தூணாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.

வீடியோ 12 நிமிடம் 

R S பாரதியை மன்னிப்புக் கேட்க வைத்த பேச்சு என்று தலைப்புக் கொடுத்ததிலும் கூடப் பிழையிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் வருத்தம் தெரிவித்து ட்வீட்டரில் செய்தி போட்டிருக்கிறார். கோவில் குருக்கள் பற்றிப் பேசியதற்கோ ஊடகங்களைத் தரக்குறைவாக பேசியதற்கோ வருத்தம் தெரிவித்தமாதிரி இல்லை. இப்போது நான் பதிவில் பேசவந்தது R S பாரதி பேச்சோ செலெக்டிவாக தெரிவித்த வருத்தம் என்கிற பசப்போ இல்லை. சமூகவலைத்தளங்களில் இந்தப்பேச்சு என்ன மாதிரியான ஊகங்களை, அப்படியும் இருக்குமோ என்கிற மாதிரியான கான்ஸ்பிரசி தியரிகளைத் தூண்டி விட்டிருக்கிறது என்பது மட்டும்தான்!

R.S.பாரதி DMKவின் திசை திருப்பும் வேலைக்கான பலி கடா.
CAAக்கு எதிரான போராட்டம் இஸ்லாமியர்கள் நடத்தும் முறையும் அவர்களின் தீவிரவாதப் போக்கும் பெரும்பான்மை ஹிந்து ஓட்டு வங்கியை DMKக்கு எதிராகத் திரும்புகிறது.
போராடும் இஸ்லாமியர்களை தன் இஷ்டப்படி கட்டுப்படுத்த முடியவில்லை.
CAAக்கு எதிராக ஹிந்துக்களையும் ஒருங்கிணைக்க முடியவில்லை.
CAA சட்டத்தில் ஹிந்துக்களுக்கும் பிரச்சனை என்ற விஷ வாதத்தையும் ஹிந்துக்களுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை.
இறுதி ஆயுதமாக பேரிடர் போது இஸ்லாமியர் தொண்டைக் காட்டி ஹிந்துக்களிடம் அனுதாபம் பெறும் முயற்யும் தோல்வி.
இதன் மூலம் நடுநிலை ஹிந்துக்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக திராவிடக் கட்சிகளின் பக்கம் இருந்து விலகி ஹிந்து சார்பு கட்சிகள் பக்கம் நகர ஆரம்பித்து உள்ளனர்.
இதன் பின்னரும் CAA போராட்டம் தொடர்வது DMKக்கு நல்லது இல்லை. அதைத் திசை திருப்பும் நிர்பந்தம் DMKவுக்கு. அதற்கான முதல் முயற்சி தான் RS பாரதி. இனி வலை தளங்கள் CAAவை  விட்டு விட்டு RS பாரதியைத் தத்தெடுத்துக் கொள்ளும்.
இன்னும் கொஞ்ச நாளில் CAAக்கு எதிரான போராட்டம் நீர்த்துப் போகும். வரும் நாட்களில் நிகழும் புதிய உப்புக்குப் பெறாத விஷயம் ஒன்று கையில் எடுக்கப்பட்டு ஊதிப் பெரிதாக்கப்படும். CAA போராட்டம் மறக்கடிக்கப்படும்.
CAAக்கு எதிரான போராட்த்தின் இத்தனை நாள் வன்முறை சட்டப்புறம்பான செயல்பாடுகள் மறைக்கப்பட்டு இறுதியாக காவலர் தடியடி மட்டும் அவ்வப்போது நினைவுறுத்தப்பட்டும். நீண்ட நாட்களுக்குப் பின் காவலர் நடவடிக்கை மட்டும் எதிர்மறை எண்ணத்தை உருவக்கும் விதமாக பிம்பத்தை எற்படுத்தும்விதமாக அவ்வப்போது பிரச்சாரம் நடக்கும். உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம்.
ஸ்டாலின் கையில் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் இது போன்ற எச்சங்களே மிஞ்சும். உருப்படியாக எதுவும் நடந்திருக்காது. 

ஊடகக்காரர்களையும் மிஞ்சுகிற விதத்தில் Conspiracy தியரிகள் அங்குமிங்குமாகக் கிளம்புவதைப் பார்த்து என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நிற்பதைத் தவிர வேறுவழி? 

வீடியோ 50 நிமிடம் 

ஆனால் மதன் ரவிச்சந்திரனுக்கு அஜெண்டா வேறு! நிகழ்ச்சிக்கு ஒரு நாலைந்து பேரைக் கூட்டி வந்து ஒரு சூடான விவாதத்தை நடத்திமுடித்து விடுவது மட்டும்தான்! குறைந்தபட்சம் தனக்காவது திருப்தி அளித்ததா என்றாவது அவர் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அடுத்தநிகழ்ச்சிக்குப்போவது அவருக்கே நல்லது என்பதை யார் அவருக்குச் சொல்வது?

        
வண்ணாரப்பேட்டை போராட்டம் என்று சொல்லி விட்டு அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லையா? இன்று உயர்நீதி மன்றம் விதித்த தடையையும் மீறி, சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று பல நகரங்களிலும் இஸ்லாமிய அமைப்புக்கள் தமிழக அரசின்மீது ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டமாகக் கூடி, தங்களுடைய பலத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள் 

வீடியோ 16 நிமிடம் 

சென்னையில் சேப்பாக்கத்தோடு நிறுத்திக் கொண்டு கூட்டம் கலைந்து விட்டதாக செய்தி சொல்கிறது. இந்த வீடியோவின் கடைசியில் ஆர் கே ராதாகிருஷ்ணன் என்கிற பத்திரிகையாளர் பேசுகிற விதத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்.

இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமியர்களுடைய எதிர்ப்பு, கவலை, வலிமை இப்படி எதையும் வெளிப்படுத்தப் போவதில்லை. நாங்கள் எவருக்கும் எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படமாட்டோம் என்றே போய்க்கொண்டிருப்பது பொதுசமூகத்திலிருந்து அவர்கள் தனிமைப்பட்டு நிற்பதில்தான் போய்முடியப் போகிறது என்பதுதான் இப்போதைக்கு என் வருத்தம்.

மீண்டும் சந்திப்போம்.
            

இட்லி வடை பொங்கல்! #62 CAA எதிர்ப்பு அரசியல்! எங்கே போகிறோம்?

டில்லியில் ஒரு ஷாஹீன்பாக் மாதிரி தமிழகத்திலும் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் சாலைகளை மறித்துக் கும்பலாக அராஜகம் செய்வது நேற்றிரவு ஆரம்பித்திருக்கிறது கல்வீச்சு, தடியடி, சிலர் கைது, கைது செய்ததை எதிர்த்து மாநிலத்தில் பலபகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், கைதானவர்கள் விடுதலை என்று வளர்ந்து, வண்ணாரப்பேட்டையில் இன்றும் 2வது நாளாக தர்ணா தொடர்கிறது.


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றே புரிந்து கொள்ள விடாமல் காரணமற்ற அச்சத்தை, அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்ற சில அரசியல் கட்சிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாகவே  செய்து வருகின்றன.

வீடியோ 15 நிமிடம் 
CAA பிரச்சினை இருந்தால் விவாதிக்கத் 
தயார்!:: அமித் ஷா  

இங்குள்ள இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு கலவர பூமியாக்க SDPI, PFI, TNTJ முதலான அமைப்புக்கள் முயற்சிசெய்வதும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஆரோக்கியமான ஒரு  உரையாடலுக்குத் தயாராக இல்லாத அவர்களுடைய   போக்கு, ஒரு சிவில் சமூகமாக கவலை கொள்ளச் செய்கிறது. 


தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தை எப்படி டீல் செய்யப்போகிறார்கள்?  வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவா? அராஜகத்துக்கு வித்திடும் நபர்களைக் கண்டறிந்து களையெடுப்பதிலா? இப்போதைக்குப் பிரச்சினை ஓய்ந்தால் போதுமென்றா?


இந்த 37 நிமிட விவாதத்தைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்! இங்கே விவாதங்கள், கருத்து சுதந்திரம், முதலான எல்லாமே ஒருதலைப்பட்சமாகவே நடப்பது பற்றி எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறோமா? நக்கீரன் கோபால்களுக்கும் ஆளூர் நவாஸ்களுக்கும் கொடுக்கும் கவனத்தில் ஒரு பகுதியாவது, இவர்கள் சொல்வது உண்மைதானா, இன்னொரு தரப்பு என்ன என்று தெரிந்துகொள்வதில் காட்டியிருக்கிறோமா? நாராயணி பாசு புத்தகம் எழுதினால் அது சர்ச்சை ஆக்கப்படுகிறதே எதனால் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? JNU முதலான மத்திய அரசுபல்கலைக்கழகங்கள், இடதுசாரிக் குறுங்குழுக்களின் பிரச்சாரக்களமாகவே இருப்பதை இன்னமும் சகித்துக் கொண்டே இருந்தாகவேண்டுமா?
எழுபது வருடங்களுக்கும் மேலாக இப்படி ஒருதலைப் பட்சமான உரையாடல்களையே கேட்டுப் பழக்கப் பட்டுவிட்டோம், மீட்சி எப்போது என்ற கேள்விகள் எழுவது இயல்பு. விடைகாண முயற்சிப்பதும் கூட இயல்புதான்!   

சீரியசாகவே போயிட்டிருந்தா எப்படி? சற்றே நகுக!        


அடடே! மதி என்னமோ கற்பனையாகக் கார்டூனில் நேரு மீது அபாண்டமாகப் பழிசுமத்திவிட்டார் என்று பொங்க விரும்பினால் பொங்கிக் கொள்ளுங்கள்! அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி மட்டும்!

எங்கே போகிறோம்? மீண்டும் சந்திப்போம்