Showing posts with label செய்தி அலசல். Show all posts
Showing posts with label செய்தி அலசல். Show all posts

சும்மா இருத்தலே சுகம்! சீனக்கம்யூனிஸ்டுகளை பயமுறுத்தும் Lying Flat இளைய தலைமுறை!

இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் அமித் சதுர்வேதி எழுதியிருக்கிற செய்தித்துணுக்கு ஒருமாதப் பழசுதான் என்றாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத் தம்பட்டம், பெருமிதத்தை ப்பூவென்று ஊதித்தள்ளுகிற மாதிரியே இருப்பதால் இங்கே சுருக்கமாக. இந்த 8 நிமிட வீடியோவைப் பார்த்து விடுங்கள். 


கடந்த ஏப்ரலில் ஒரு தொழிற்சாலையில் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு சும்மா இருத்தலே சுகம் என்று  blog எழுதி ஆரம்பித்து வைத்தது 31 வயதே ஆன லுவா ஹுவாஜோங் என்கிற இளைஞன். விரைவிலேயே  சீன அரசின் மீது, தங்களுடைய எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்களை அணிதிரளச் செய்கிற வாசகமாக tangping Lying Flat ஆகிப்போனது. சீன அரசு உஷாராகி இந்த வார்த்தைகளுடன் கூடிய பகிர்வுகளை, ஆதரவுக்குழுக்களை இணையத்தில் இருந்து நீக்கிவிட்டது.

ஆனாலும் புதிய அடிமைகள் கிடைப்பது வருகிற காலங்களில் குதிரைக்கொம்பாகலாம் என்கிற அச்சம் சீன அரசுக்குப் புதிய தலைவலியாக உருவெடுத்து வருகிறதோ?

மீண்டும் சந்திப்போம்.           

மண்டேன்னா ஒண்ணு! விவஸ்தையே இல்லாத இடம் #அரசியல்

பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மனசாட்சியோ விவஸ்தையோ இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். சற்றுமுன் பேசியதைக்கூட அப்படியே மாற்றிப்பேசுவதும் கூடத் தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு ரொம்பவுமே  கைவந்த கலைதான்! அதற்காக இப்படியா? பிஜேபியின் தேவேந்திர ஃபட்னவிசும் சிவசேனாவின் சஞ்சய் ரவத்தும் சந்தித்துக் கொண்ட போது கண்கள் பனித்தன வசனம் மறுபடி உயிர் பெற்றதாம்! இதயம் இனித்ததா என்பது இன்னமும் தெரியாத நிலையில் சிவசேனா எங்கள் எதிரி அல்ல; நண்பர்கள்தான் என்று தேவேந்திர ஃபட்னவிஸ் சொல்லி இருப்பதை வைத்து கூட்டணிக்கணக்குகள் மாறுகிறதா என்று இந்து தமிழ்திசை கூட செய்தி கதைக்கிறது.


அன்புமணி ராமதாசுடைய இந்தக்கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று இந்தப்படத்தைப் போட்டு பிபிசி தளம் கேள்வி கேட்டிருக்கிறது.லாபம் இல்லாத எந்தவொரு அசைவு , முடிவும் எடுக்காதவர்கள் அவர்கள் என்று தெரிந்ததனால் பாமகவை, அதன் தலைவர்களை அறிந்த எவருமே இதுபோல சிறுபிள்ளைத் தனமான கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். 


ஸ்டேன்லி ராஜன் எதிர்பார்ப்பதை எல்லாம் எங்கூரு நிதியமைச்சர் செய்துவிடுவாரா என்ன? நிதிநிலை அறிக்கை தயாரிப்பதைவிட அவரை விமரிசித்த நபர்களைக் காவல்துறையினரை விட்டுக் கைது செய்வதில் தான் அதிகம் முனைப்பு காட்டுகிறார் என்று செய்திகள் வருகின்றன. தரமற்ற விமரிசனம் என்றால் அதற்குத்தீர்வு காண சட்டபூர்வமாக நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால் பழைய ஜமீன்தார்கள் மாதிரியே செயல்பட மந்திரி விரும்புகிற மாதிரி இருக்கிறது என்பது பெரும் சோகம். மதுரைக்கு வந்த சோதனையும் கூட!

 

பதிவின் தலைப்பில் சொன்னமாதிரி எல்லா அரசியல் வாதிகளும் விவஸ்தை இல்லாதவர்கள் இல்லை. ஒரு சில அரசியல்வாதிகள் மிகத்தெளிவான பார்வையுடன் தங்கள் கருத்துக்களை முன்னுக்குப்பின் முரண் இன்றி வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம் ::திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !

திரைப்படப் படைப்பாளிகளே ! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை !! சாதி, மத பேதத்தை உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் வெளிவர 2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம்  உந்துதலாக இருக்கும்!!

நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டுவரப்படவுள்ள 1952-ம் ஆண்டு திரைப்படத்துறைத் திருத்தச்சட்டத்திற்கு சிலர் தேவையில்லாமல் தங்களுடைய எதிர்க் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவே கருதுகிறேன். 'கலை கலைக்காக' என்பதும், கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதும் பலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால்,அரசு கட்டுப்பாடுகள் இருக்காது அல்லது இருக்கக்கூடாது என்பது எதார்த்தமாகுமா?

ஒரு தெளிவான அரசியல் சாசன கட்டமைப்பு உள்ள  எந்த ஒரு தேசத்திலும் சட்டங்களும், விதிகளும் இல்லாமல் அரசு செயல்பட இயலுமா? ஒரு தேசத்தின் எல்லைக்குள் வாழும் அறிவுஜீவிகள் அவர்களின் அடிப்படை உரிமைகள் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பதைத் தெரிந்திருக்க வேண்டாமா? 

உரிமை பற்றி மட்டும் பேசுகிறவர்கள், கடமை மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேச மறுப்பது ஏன்?

ஒவ்வொரு தனி மனிதனும் அல்லது சமூக குழுக்களும் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் தாங்களாகவே உணர்ந்து  செயலாற்றக் கூடிய ஒரு காலகட்டம் உருவாகும் பட்சத்தில் திருட்டு இருக்காது; திருட்டைப் பிடிக்க போலீசும் தேவைப்படாது. கொலை; கொள்ளை இருக்காது, சாதிய; மத வன்மங்கள் இருக்காது. சுரண்டுவோர்; சுரண்டப்படுவோர் என்ற பேதமைகள் இருக்காது.  அப்போது சட்டங்களும் தேவைப்படாது; சட்டங்களை அமலாக்கக் கோடிக் கணக்கில் செலவழித்து அரசின் நிர்வாகத் துறையையும் உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது. அக்கால கட்டங்களில் "அரசு என்ற நிறுவனம் உதிர்ந்துபோகும்" என்று பொதுவுடைமை தளகர்த்தர்களான காரல் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தங்களது கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதுவே "இராம ராஜ்ஜியம்"  என்று கூறுகிறோம். இப்போது என்ன அப்படிப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார பேதமற்ற சமூகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?  

கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களும்; தொழிற்நுட்ப பிரிவினரும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அல்லும் பகலும் அயராது உழைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை, சிலர் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, ஒரு சில மணித்துளிகளில் நவீன விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த திரைப்படத்தையும்  பதிவுசெய்து அத்திரைப்படங்கள் திரையில் திரையிடப்படுவதற்கு முன்பாகவே இணையத்திலும், திருட்டு 'வி சி டி'க்களாகவும் வெளியிட்டு அத்திரைப்படக் குழுவினரின் அனைத்து முயற்சிகளையும், உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்களே, இதைத்தடுக்க ஒரு வலுவான திரைத்துறை திருத்தச் சட்டம் கொண்டு வருகின்ற போது, அதை ஏன் திரைப்படத்துறையினர் எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.?

இன்றைய நவ நாகரீக கால கட்டங்களில் திரைப் படங்களால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து போய்விடக் கூடாது என்பதற்காக எந்தெந்த திரைப்படங்களை எந்தெந்த வயதினர் பார்க்க வேண்டும் என வரையறை செய்யப்படுவதைக் கண்டு ஏன் திரைப்படத்துறையினர் அஞ்ச வேண்டும்? 'பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கருத்துகள் பரப்பப்பட்டு விடக்கூடாது' என்ற பொறுப்புணர்வு திரைப்படத் துறையினருக்கு ஏன் வர மறுக்கிறது?

இப்போது, தணிக்கை சான்றிதழை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரே ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே போதுமானது என திருத்தம் கொண்டு வருவதில் இவர்களுக்கு என்ன சங்கடம்? மத்திய திரைப்பட சான்றிதழ் ஆணையத்தால் (Central Board Of Film Certification) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பு, ஒரு திரைப்படத்திற்கு பல்வேறு முகாம்களிலிருந்து ஆட்சேபனை எழும் பட்சத்தில், மறு தணிக்கைக்கு உத்தரவிட  மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 2021 திரைப்படத்துறை திருத்தச் சரத்தை  எதிர்த்து "கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடுவது படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்தைச் சிதைத்துவிடும்" என்று எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். 1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஆயிரக்கணக்கான  திரைப்படங்கள் அச்சட்டத்தின்படியே தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளன.

தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட எல்லா படங்களுக்கும் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் கடந்த காலங்களில் தான் Censor Board மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அண்மை காலத்தில் Censor Board என்பதை Central Board Of Film Certification என்று பல படிகள் குறைத்து சான்றிதழ் வழங்கும் ஆணையமாக மாற்றப் பட்ட பின்னரே, பொறுப்பற்ற முறையில் புற்றீசல் போல பல திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஒரு திரைப்படத்திற்கு Censor Board அல்லது Central Board Of Film Certification அனுமதி அளித்த பிறகு அரசால் கூட தலையிட முடியாத சூழல் இருக்கின்ற காரணத்தினால் தான் ஆட்சேபனைக்குரிய திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்னால் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தேறுகின்றன.  தவறான திரைப்படங்களால் பாதிக்கப்படுவோருக்கு இன்று வரையிலும் நீதிமன்றம் செல்வது மட்டுமே தீர்வாக இருக்கிறது. 

'சண்டியர்' படப்பெயர் மாற்றத்திற்கு நாம் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது; 'கொம்பன்'  பட வன்முறை காட்சிகளை நீக்க நீதிமன்ற போராட்டம் நடத்தினோம். அண்மைக்காலமாக திரைப்படங்களால் இந்தியா முழுமைக்கும் சமூகத்தில் பல்வேறு சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே,அதை எதிர் கொள்ளவே இப்பொழுது மறு தணிக்கைக்கு உத்தரவிடும் அதிகாரத்தைச் சட்டமாக்கத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.இது போன்ற ஒரு மறுதணிக்கை செய்ய சட்டத்தில் இடமிருக்க வேண்டும் என்பதைத்தான் 'புதிய தமிழகம் கட்சி' தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாம் மட்டுமல்ல; திரைப்படப் பெயர், கதை, வசனங்கள், காட்சிகளால் பாதிக்கப்பட்டு நீதிமன்றமே தீர்வு என்று இருந்த பலரும் இந்த மறுதணிக்கை சட்டம் திரைப்படத் துறையினரை திருத்துவதற்கான ஒரு திருத்தச் சட்டமாகவே நிச்சயம் வரவேற்பார்கள்.

கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்போம்; அதைத் தணிக்கைக்கு உட்படுத்த மாட்டோம் என்று கூற முடியுமா?  Censor Board-க்கு கட்டுப்பட்டுத் தானே திரைத்துறை தனது 75 ஆண்டுகால பயணத்தைக் கடந்து வந்துள்ளது. திரைப்படத் துறையினர் கூறுவதைப்போல கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த திருத்தச்  சட்டமும் இப்போது கொண்டு வரப்படவில்லை. மத்திய திரைப்பட தணிக்கை துறை ஒரு திரைப்படத்திற்குச் சான்றிதழ் வழங்கிய பின்னர் இந்த நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமை, பொது அமைதி ஆகியன கருதி மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும் என்பது இப்போது புதிதாகச் சேர்க்கப்பட உள்ள சட்டத்திருத்தம். இதைக் கண்டு ஏன் திரைத்துறையினர் பயப்பட வேண்டும்.? 

"மடியில் கனம் இருந்தால்தானே, வழியில் பயப்பட வேண்டும்"  என்பதற்கிணங்க நேர்மை, தூய்மை அடிப்படையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் இச்சட்டம் குறித்து அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே?

'பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை' இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாக இருப்பினும் - ‘With Reasonable Restrictions’ அதாவது தேவையான கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே.  அதேபோல, 'There Is No Such thing as Absolute Freedom for Cinema and OTT Platform'.

1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்ட விதிகளின்படி இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவும், நமது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவு,  பொது அமைதி மற்றும் தனிப்பட்ட அல்லது சமூக அல்லது நாட்டின் மதிப்பிற்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாகவும், குற்றச் செயல்களைத் தூண்டக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்கள் பொதுவெளியில் வெளியிடத் தகுதியற்றவை என நிராகரிக்கச் சட்டம் ஏற்கனவே 70 ஆண்டுகளாக அமலில் தான் இருக்கிறது என்பதை படைப்பாளிகள் என்பவர்கள் ஏன்  படித்து புரிந்து கொள்ளவில்லை? என்பதே கேள்வி. 

ஆங்கிலேயர் காலத்திலேயே தெருக்கூத்து நடத்துவதற்கும், கிராமங்களில் நாடகங்கள் நடத்துவதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே நடைமுறையும், சட்டமும் ஆகும். தெருக்கூத்து நாடகமாகி, ஊமை படங்களாகி, பின்பு கருப்பு-வெள்ளை பேசும் படங்களாகி, தற்போது பலவண்ண டிஜிட்டல் திரைப்படங்களாகவும் நவீன வடிவம் பெற்று விட்டன.திரைப்படங்கள் மகிழ்ச்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் எடுக்கப்பட்ட வரையில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை.ஆனால், அந்தத் துறை தன்னுடைய சுய ஒழுக்கம், கட்டுப்பாடுகளிலிருந்து வெகு தூரம் விலகி, மக்களிடத்தில் ஒற்றுமையை உண்டாக்குவதற்குப் பதிலாக சாதி, மத, இன, மொழி ரீதியான வேற்றுமைகளையும்; அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அருவாள், வன்முறைக் கலாச்சாரத்தையும்; நாட்டின் பண்பாடு, கலாச்சார உணர்வுகளைப் பேணி காப்பதற்குப் பதிலாக பாலிய உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையிலும் முழுக்க முழுக்க எப்பொழுது திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டதோ, அதன் பின்புதான் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகி நாடெங்கும் திரைப்படங்களுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு போராடும் சூழல்கள் ஏற்பட்டன.

ஒரே மண்ணில் வாழும் மக்களிடத்தில் ஒரு பகுதியினரை உயர்ந்தவராகவும்;  மற்றொருவரை தாழ்ந்தவராகவும், ஒரு குழுவைப் பெருமை உடையவராகவும், இன்னொரு குழுவை பெருமை குறைவானவராகவும், ஒரு குழுவை வீரம் செறிந்தவராகவும், ஆளத் தகுதியானவராகவும், 'ஆண்ட பரம்பரை' என்றும் திரைப்படங்கள் கொடுத்த முத்திரை பல்வேறு சமூகங்களுக்கிடையே பிணக்குகளை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தது. இதனால் ஏறக்குறைய 30 ஆண்டுக்காலத்திற்கு மேலாகத் தமிழகம் கலவர பூமியாகவே இருந்ததை எவரும் மறந்து விட முடியாது.

திரைப்படங்கள் மூலம் ஜனநாயகம்; சமத்துவம்; சகோதரத்துவ உணர்வுகள், தேசப்பற்றுகள் வளர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அதற்கு நேர்மாறாக இந்தியத் தேசத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குகளைப் போற்றி வளர்க்கக் கூடியதாகவும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றிற்குப் புத்தம் புதிய உத்திகளை கற்றுக் கொடுப்பதற்கான தளங்களாகவும் அண்மைக்கால திரைப்படங்கள் மாறிவிட்டன. தனி மனித பிம்பங்களைக் கட்டியமைத்து அதை அரசியலுக்குப் பயன்படுத்துவது, குறுகிய காலத்தில் கோடிகளைக் குவிப்பது, குறிப்பிட்ட சில சாதி, மதங்களைப் போற்றுவது என்பது மட்டுமே திரைத்துறையில் பெரும்பாலானோரின் குறுகிய சிந்தனைகளாக மாறி உள்ளன.மேலும்,தமிழகத்தில் நிலவக்கூடிய பல்வேறு விதமான அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களுக்கும் திரைப்படங்களே முதற்காரணமாக விளங்குகின்றன.

.ஜனவரி 26, 1950  அன்று  இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த போதே இந்தியாவில் சட்டரீதியாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், 'அரிச்சந்திரா'  என்ற திரைப்படத்தில் ”நான் ஆதியிலும் ……….. அல்ல, சாதியிலும் ……….. அல்ல, நீதியிலும் ……….. அல்லவே – நானே பாதியில் …………. ஆனேனே” என்று ஒரு சாதியைக் குறிப்பிட்டு டைட்டில் சாங் போடப்பட்டது.'அலிபாபாவும் 40 திருடர்களும்' என்ற திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்படங்களில் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட போது சமூகங்கள் விழிப்பு பெறவில்லை.

 திரைக்கதைகளின் நீரோட்டத்தாலும், அதில் நடித்த பெரும் திரை ஆளுமைகளாலும் அவைகள் பெரிதாகவும் வெளியே தெரியவில்லை. அந்த திரைப்படங்கள் எல்லாம் வெளிவந்த காலகட்டத்தில் நாம் பிறக்கவே இல்லை. ஆனால், அக்காலகட்டங்களில் தான் தமிழகத்தின் மேடைகளில் பெரிய அளவிற்கு 'சாதி ஒழிப்பு' பிரச்சாரங்கள் நடைபெற்ற போதும், திரைப்படங்கள் மூலமாக அதிக அளவில் சாதி தீ வளர்க்கப்பட்டதை சாதி மறுப்பாளர்கள் ஏன் எதிர்க்கவில்லை என தெரியவில்லை.

ஆனால்,1990களுக்குப் பிறகு, திரைப்படங்களின் பெயர்களிலும், பாடல்களிலும், வசனங்களிலும், காட்சிகளிலும் சாதிய அம்சங்கள் வலிந்து புகுத்தப்பட்டன. "போற்றி பாடடி பெண்ணே, …………. காலடி மண்ணே" - "எசமான் காலடி மண்ணெடுத்து"– " திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா" போன்ற பாடல்கள் தமிழகமெங்கும் தமிழ் சாதிகளுக்குள் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று ஒருவருக்கொருவர் முட்டி மோதி இரத்தம் சிந்தும் நிலைக்குத் தள்ளியது.'மதயானை கூட்டம்' என்ற திரைப்படம் சாதி மாறி திருமணம் செய்த எண்ணற்ற இளைஞர்களையும், பெண்களையும் கௌரவக் கொலை செய்யக் காரணமாக அமைந்தது.'பாய்ஸ்' என்ற ஒரு திரைப்படத்தில் இளைஞர்கள் இடையே அபரிவிதமான பாலியல் உணர்வுகளைத் துண்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.நமது எதிர்ப்பிற்கு பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டது. 


'சண்டியர்' என்று பெயரிடப்பட்ட படம் அரிவாள் கலாச்சாரத்திற்கும், கலவரங்களுக்கும் வித்திடும் என்பதால் நாம் கொடுத்த எதிர்ப்பின் காரணமாக அத்திரைப்பட பெயர் மாற்றப்பட்டது.நாம் நீதிமன்றம் வரை சென்றதால் 'கொம்பன்'  திரைப்படத்தில் 72 வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டன. 'பாகுபலி' என்ற திரைப்படத்திலிருந்து நீதிமன்றம் மூலம் ஒரு சாதிய வார்த்தை நீக்கப்பட்டது.  'மண்டேலா' திரைப்படத்தில் ஒரு காட்சியை நீக்க ஒரு குறிப்பிட்ட பிரிவினர் போராடி வருகிறார்கள். 'தசாவதாரம்' படம் ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரின் எதிர்ப்பை சந்தித்தது. 'மருதநாயகம்' இன்னும் வெளியே வரவில்லை. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வரலாற்றுத் திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க அனுமதிக்கப் படவில்லை. இந்திய அளவில் 'பத்மாவதி' என்ற திரைப்படம் பல எதிர்ப்புகளுக்குப் பிறகு 'பத்மாவத்' என்று பெயர் மாற்றி வெளியிடப்பட்டது. 

நடிகை சர்மிளா தாகூர் விளிம்பு நிலை மக்களைத் தவறாகச் சித்தரித்ததால் இந்தியப் பட்டியலின துறையால் அழைத்து விசாரிக்கப்பட்டார். புகழேந்தி தங்கராஜின் 'காற்றுக்கென்ன வேலி' படம் நீதிமன்றம் சென்ற பிறகே வெளியானது. 'பரியேறும் பெருமாள் – அசுரன்' போன்ற திரைப்படங்களில் 'ஆண்ட பரம்பரை' என்ற சொல் சிலரின் எதிர்ப்புக்குப் பின் நீக்கப்பட்டது. 'தெய்வத்திரு மகன்' என்ற திரைப்படம் 'தெய்வத்திரு மகள்' ஆனது.'ஃபேமிலி மேன் 2' என்ற இணையத்தொடர் ஈழப்போராளிகளை இழிவு படுத்துவதாகவும்; கொச்சைப்படுத்துவதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது போன்று மக்கள் சென்சார்களை சந்தித்த படங்கள் இன்னும் எவ்வளவோ உண்டு.

சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சிறிதும் கணக்கிலே கொள்ளாமல் நாங்கள் பெரிய முதலீடு போட்டு விட்டோம் அதைப் பன்மடங்கு ஆக்குவதற்கு நாங்கள் எப்படிப்பட்ட திரைப்படத்தை வேண்டுமானாலும் எடுப்போம் என படைப்பாளிகள் மனம் போன போக்கில் செயல்படக்கூடாது  என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஒரு சில நிகழ்வுகளே சாட்சிகள்.  ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல எனவே,அந்த திரைப்படம் தயாரிக்கும் போதே அது ஏற்படுத்தும் தீய விளைவுகளைப் பற்றி கவனத்தில் கொண்டு கதைகள், காட்சிகள், வசனங்கள், பாடல்கள் இடம் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின்  எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே,சாதி, மத, பாலியல்; வன்முறைகள், தேசிய நீரோட்டத்திற்கு எதிரான சிந்தனைகளைத் தூண்டும் திரைப்படங்களை மறு தணிக்கை என்ற சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒரு படம் திரைக்கு வந்த பிறகு அதைத் தடுப்பது கடினம்.இப்போது உள்ள சட்டத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால்,ஒரு திரைப்படத்தை மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிடக் கூடிய இந்த அதிகார சட்டத் திருத்தம் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாகும்.

.தரமான திரைப்படங்களை எடுக்கவும், அது குழந்தைகளைப் பாதிக்காத; ஆபாசம் இல்லாத; அருவருப்பில்லாத; கலாச்சார சீரழிவையும், சாதி, மத பேதத்தையும் உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் வெளிவர இந்த 2021 திரைத்துறை திருத்தச் சட்டம் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம்,திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !

திரைப்படப் படைப்பாளிகளே! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை! 

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர்,புதிய தமிழகம் கட்சி.05.07.2021

மீண்டும் சந்திப்போம். 

#தலைமைப்பண்பு ஊடகங்களில் வாசகர் கடிதம்! P V நரசிம்மராவ்!

பள்ளி மாணவனாக செய்தித்தாட்களை வாசிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே செய்திகளோடு  தலையங்கம், ஆசிரியருக்கு வாசகர் கடிதம் பகுதிகளை ஒரு எழுத்து விடாமல் படிக்கிற பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. இன்றும் செய்திகளுக்கு வாசகர்கள் எழுதும் பின்னூட்டம் ஒன்று விடாமல் வாசிப்பதுண்டு தான்! இவையில்லாமல் செய்தியை முழுதாய் வாசித்த திருப்தி கிடைப்பதில்லை என்பது என்னுடைய அனுபவம்.


தினமலர் நாளிதழுக்கு ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, 57 ஆண்டுகளாய் செய்யாததை, அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றாக்கி புளகாங்கிதம் அடைந்துள்ளார்! என்ன தான் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி 'சப்பைக்கட்டு' கட்டினாலும், அதில் தி.மு.க.,வினரின் தீராத பிரிவினை மோகம் அப்பட்டமாய் தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான், சுதந்திரத்திற்கு துாண்டு கோலாய் இருந்த 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை மட்டம் தட்டும் முயற்சி. சட்டசபையிலேயே, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவரை அப்படி பேச செய்து, முதல்வர் ஸ்டாலின் ரசித்துள்ளார்.

கடந்த நுாற்றாண்டில் நடந்த போர், பிரிவினை ஆகியவற்றால், உலகம் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள், நம் கண் எதிரே உள்ளன. பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வெளிவர முடியாமல் திணறுகிறது. வங்கதேசத்தில் பழமைவாதிகளின் சேட்டைகளை ஒடுக்க முடியவில்லை. சீனாவின் பிடியில் சிக்கி, ஜனநாயகத்தை தொலைத்து விட்டது, நேபாளம். இலங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.

பிரிவினை தேடும் எந்த நாடும் முன்னேறியதில்லை. அங்கு சர்வாதிகாரமும், பயங்கரவாதமும் தான் இருக்கும். நம் மாநிலங்களிடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதை தீர்ப்பதற்கே, மத்திய அரசுக்கு நேரம் போதவில்லை. இதனிடையே, ஜல்லிக்கட்டு, இடஒதுக்கீடு, நெடுஞ்சாலை அமைத்தல், 'நீட்' என, அனைத்து விஷயத்திலும் தமிழகம், தேசிய நீரோட்டத்திலிருந்து விலகியே நிற்கிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பயங்கரவாதம், மாநில சுயாட்சி, மத வெறுப்பு, பிரிவினை எண்ணம் முதலியவற்றை ஊக்குவிக்காமல் இருப்பதே, தமிழகத்திற்கு நல்லது.என முடித்திருக்கிறார் 


முன்னாள் பிரதமர் P V நரசிம்மராவ் பிறந்த நூற்றாண்டு இது. இந்தியப்பிரதமர்களில் தகுதிக்கும் மீறி மிகவும் வியந்தோதப்பட்டவர் நேரு என்றால் தகுதிகள் நிறைய இருந்தும் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவர் நரசிம்ம ராவ் என்பது சுதந்திர இந்தியாவின் சீரழிந்த அரசியலின் சாபக்கேடுதான் இல்லையா?

தொங்கு நாடாளுமன்றம், ராஜீவ் காந்தி படுகொலை, பாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் போன்ற சிக்கல்களுக்கிடையில் பிரதமரானவர் பி.வி.நரசிம்ம ராவ். ஆயினும் அவர் பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்தரும் வகையில் முறையே 73-வது, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்ததாகும். நரசிம்ம ராவ் பிரதமரானபோது கிராம வளர்ச்சித் துறையின் கேபினட் அமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் பிரதமர் ஒருவர் கிராம வளர்ச்சித் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்ததில்லை.

விடுதலை பெற்ற இந்தியாவினுடைய அரசமைப்பின் அடித்தளமாக, தன்னாட்சி பெற்ற வலுவான கிராமப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என காந்தி வலியுறுத்திவந்தார். அரசமைப்பு நிர்ணய சபையில் இது குறித்த ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முடியாததால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிய இடம் இல்லாமலே போயிற்று. ராஜீவ் காந்தி கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். மக்களவையில் நிறைவேறிய மசோதாவானது மாநிலங்களவையில் தோல்வியுற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானவுடன் கிராம வளர்ச்சித் துறையின் அதிகாரிகளை அழைத்து, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசமைப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரிக்கும்படி பணித்தார். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மேலும், மாநிலச் சட்டமன்றங்களில் பெரும்பான்மையான சட்டமன்றங்கள் இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்துத் தீர்மானங்களை இயற்ற வேண்டும். நரசிம்ம ராவின் சிறுபான்மை அரசால் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது. அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒன்றே இதைச் செய்து முடிக்கும் ஒரே வழி என்பதில் பிரதமர் தெளிவாக இருந்தார் என்று ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரையை இந்து தமிழ்திசை தளத்தில் முழுமையாக வாசித்துப் பாருங்களேன்! தமிழ்நாட்டைச் சார்ந்த திமுக - அதிமுக பிரதிநிதிகள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்கள் தருவதைத் தாங்கள் வரவேற்றபோதும் வலுவான மாவட்டப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதைக் கொள்கைரீதியாக எதிர்ப்பதாகக் கூறினார்கள் என்பது போகிறபோக்கில் சொல்லப் பட்டது தானா?   

தலைமைப்பண்புக்கு உதாரணமாக நரசிம்ம ராவ் என்கிற ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிற விதமாக  இந்தக் கட்டுரையை எழுதிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.ரகுபதி அவர்களுக்கு நன்றியுடன்! பிரசுரம் செய்த இந்து குழுமத்துக்கும் நன்றி.   

மீண்டும் சந்திப்போம். 

நீட் தேர்வு ரத்து என்கிற அரசியல்! உயர் நீதிமன்றம் வைத்த கொட்டு!

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதில் நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனவும் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல .நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்றும் மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர் என்பது இன்றைய செய்தி. விடியல் அரசுக்கு நீதிமன்றம் வைத்திருக்கிற முதல் குட்டும் கூட.  

 

சென்னை உயர்நீதமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ‘ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்ட போதும் ஓய்வு  பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் எதன் அடிப்படையில் இந்த குழுவை ஏற்றார் என கேள்வி எழுப்பினார். 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக ஏ.கே.ராஜன் தலைமையிரான குழு கூறுகிறது. ஒரே கணிணியில் இருந்தும் 1000-த்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதை போல் படம் எடுத்து அதை செய்தியாக வெளியிடுகிறார்கள். உண்மையில் இது தி.மு.க குழுவா? அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ‘தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என குறிபிட்ட கரு.நாகராஜன் இனியும் ஏழை மாணவர்வளின் மருத்துவக் கனவில் விளையாடக் கூடாது எனவும் நீட் தேர்வுக்கு பிறகு 405 ஏழை மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் மாசு இதற்கு  பதிலளித்து  பேசிய வீடியோ  17 நிமிடம் 


இந்தமாதிரி கமிஷன்கள் நியமிக்கப்படுவது ஏன், எதற்கு என்பதெல்லாம் அரசியல் LKG க்களுக்குமே தெரிந்த விஷயம். நண்பர் ஜெயகுமார் ஸ்ரீனிவாசன் கமிஷனின் அடிமடியிலேயே கைவைக்கச் சொல்வது முழுதாக ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கிறது. 


நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #84 #பிரிவினைஅரசியல் #ஊழல்அரசியல் #பரஸ்பரசொறிதல்

கடந்த வியாழக்கிழமை டில்லியில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் செய்து வரும் கட்சித்தலைவர்களைச் சந்தித்துப் பேசியதில், உள்ளே நடந்த மூன்று மணிநேர விவாதத்தில் என்ன நடந்தது? ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி இவர்களெல்லாம் மாநில முதல்வர்களாக இருந்தவர்கள். உண்மையைச் சொல்லப் போனால் காஷ்மீர் பிரச்சினை என மிகைப்படுத்தப் பட்ட  ஒன்றை ஊதிப்பெரிதாக்கியவர்கள் இவர்கள்தான்! மக்களுக்காகப் பேசாமல், சுயநலங்களுக்காக ஆட்சியும் அதிகாரமும் வேறு எவர் கைக்கும் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்பதை வெளியே வந்து ஊடகங்களிடம் வீராவேசமாகப் பேட்டி அளித்து வெளிப்படுத்தியவர்கள்.  

வீடியோ 12 நிமிடம் 

ஃபரூக் அப்துல்லா ஊர் போய்ச்சேர்ந்ததும் பொது வாக்கெடுப்பு, நேரு முதல் நரசிம்மராவ் வரை பிரதமராக இருந்தவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று கிளிப்பிள்ளை மோடுக்குப் போய்விட்டார். மகன் ஒமர் அப்துல்லாவோ  “It took the BJP 70 years to fulfill its political agenda for (Article) 370. Our struggle has just started. We don’t want to fool people by telling them we will get 370 back in these talks. It will be foolish to expect 370 will be back — there has been no indication it will be restored by the current government.” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டி கொடுக்கிறார் என்றால் எங்களிஷ்டத்துக்கு விடாவிட்டால் பிரிவினை பேசவும், துணைபோகவும்  தயங்கமாட்டோம் என்கிற தொனி அப்பா மகன் இருவருடைய பேச்சிலும் இருக்கிறது. இங்கே தமிழகத்தில் கூட 1920 நீதிக்கட்சி அரசாண்ட கதையின் நீட்சியாக அறிவித்துக் கொண்டது, ஒன்றிய சர்ச்சை முதல் ஜெய்ஹிந்த் இடம் பெறாததற்கு பாராட்டுரை என்று J & K அரசியல் வாதிகளுடைய சாயல் நிறையவே தெரிகிறதோ?


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியின் கேள்வியில் நியாயமான சந்தேகம் எழுகிறது. ஆளுநருக்கு இது தொடர்பாகக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். 


சோனியா காந்தி வகையறா ஊழலின் மொத்த உருவம் என்பதை 2004-2014 வரை ஐமுகூட்டணி மன்மோகன் சிங் அரசு நிரூபித்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று சோனியா ஆரம்பித்தற்கு  மன்மோகன் சிங் அரசு 100 கோடி நிதி கொடுத்தது. அரசுநிதி பெறுகிற நிறுவனங்கள் எதுவானாலும் சில நிபந்தனைகளும், அரசின் தணிக்கையும் (audit) உண்டு. ஆனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அரசின் நிபந்தனைகள் தணிக்கை எதற்கும் உடன்படவில்லை. அதுவும்போக வருகிறவன் போகிறவனிடமெல்லாம் நிதி நன்கொடையாக வாங்கி குவித்ததில் சீனர்களின் சார்பு நிறுவனமும் உண்டு. ஜாகிர் நாயக் மாதிரி மலேசியா ஓடிப்போன இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவுப்  பிரசாரகரும் உண்டு. ஜாகிர் நாயக் எதற்காக இந்த அறக்கட்டளைக்கு 50 லட்சம் நன்கொடை? அதுவும் சும்மாக் கொடுத்தாராமா? 


தகவல் ஒளிபரப்புத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த மனீஷ் திவாரிக்கு, சிறுபான்மையினர் விவகார அமைச்சர் 2013 இல் எழுதிய சிபாரிசுக்கடிதத்தின் இரு பாராக்களும் விஷயம் இன்னதென்று பல்லிளித்துச் சொல்கிறதே! 


நம்மூரில் அப்படி கடிதம் மூலம் எதுவும் சொல்லக் கூட வேண்டியதே இல்லை! நம்புங்கள்! இது திமுக ஆட்சி!  


இது 2009 இல் நக்கீரன் இதழில் வெளியான கொங்கு ஈ
ஸ்வரன் வாழ்க்கை வரலாறு. பெருமாள் முருகன் நாவலை விட அந்தநாட்களிலேயே பரபரப்பான செய்தியாகத் தான் இருந்திருக்கும் போல! நக்கீரனே 2பக்கச் செய்தி போட்டிருக்கிறதென்றால்! படத்தைப் பெரிதாக்கிப் படித்துப் பாருங்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடி, மார்க்சிஸ்டுகளுக்கு ரூ. 10 கோடி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ரூ. 15 கோடி நன்கொடை அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டப்பட்ட கதை நினைவிருக்கிறதா? பரஸ்பர சொறிதல்கள், முன்களப் பணியாளர்களுக்கு  நீண்டகாலமாகவே கிடைத்து வருகிறது என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல?

மீண்டும் சந்திப்போம்.                       

#தமிழகஅரசியல் இடைவெளி இல்லாத நான்-ஸ்டாப் காமெடி!

அது எந்தக்கழகமாக இருந்தாலும் சரி கழக ஆட்சியில் காமெடிக்குப் பஞ்சமிருந்ததே இல்லை! அரசியல் தெரியாத ஆசாமிகள்தான் இதுபோலக்காமெடிகளைக் கொடுமை என்றும் கிறுக்குத்தனங்கள் என்றும் பேத்துவார்கள்! இன்றைய காமெடிகளைக் கொஞ்சம் போலப் பார்த்துவிடலாமா?  மொத்தமாகப் பார்த்தால் நெஞ்சு தாங்காது என்பது வேறுவிஷயம்! 


ஹரன் பிரசன்னா போட்டிருந்த விளக்கப்படம் கீழே 


அடேய் ஒரு பயலையும் நம்பாத..
இங்க காக்கா, குருவி, அணிலுன்னு உன்ன பார்க்க வச்சிட்டு அந்த பக்கம் வண்டி வண்டியா எத கடத்துறானுகளோ யார் கண்டா?
அணில பார்த்துட்டு கடல் மாட்டு வண்டிய விட்டுராதீங்கடா....

இப்படி உஷாரையா உஷாரு என்று எச்சரிக்கை செய்து இருப்பதை எத்தனைபேர் கவனித்தார்களோ தெரியாது!


அடுத்த வல்லுநர் குழுவுக்கு ஆலோசனை ரெடி! 


 

அட! அப்பிராணி மன்மோகன்சிங்கை நினைக்கக்கூட இங்கே  ஆளிருக்கிறதா ? எனக்கு மயக்கமே வந்துவிட்டது! 


இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் ஆளுநர் நமது வாழ்த்துக்குரியவரே! union government என்பதைத் தமிழில் ஒன்றிய அரசு என்று போட்டிருப்பது அவருக்குத்தெரியுமோ தெரியாதோ?


பானாசீனா, ரகுராம் ராஜன் செய்த வேலை! 1.30 லட்சம் கோடிரூபாய் மதிப்புக்கு எண்ணெய்க் கடன் பத்திரங்களை  2021. 2023. 2024, 2025,2026  நிதியாண்டில் திருப்பிச்செலுத்த வேண்டியிருப்பதும் பெட்ரோல் டீசல் விலையில் சுமையாக இருக்கிறது.  


கரோனா மூன்றாவது அலையின் தாக்குதலை எப்படி தடுப்பது? மற்றும் சமாளிப்பது என்பது குறித்தும், அதற்குண்டான பல ஆயத்த பணிகளை மாநில அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நேரமிது. எனவே இரண்டாவது அலைக்கான ஊரடங்கே இன்னும் முழுமையாகத் தளர்வு செய்யப்படாத நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. உடனடியாக தமிழக அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.என்று ஒரு அறிக்கையில் சொல்லி இருக்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. முழு அறிக்கையையும் இங்கே வாசிக்கலாம்.

என்னதான் காமெடி என்று ஆரம்பித்தாலும் சீரியசாகத்தான் பதிவை முடிக்க வேண்டியிருப்பது தமிழக அரசியல் களத்தின் ட்ராஜெடி.

மீண்டும் சந்திப்போம்.

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் TN ஆளுநர் உரையும் அதன் எதிரொலிகளும்!

உலக அரசியல் வரலாற்றிலேயே முதன்முதலாக என்று ஆரம்பித்தால் அபஸ்வரமாகி விடுமென்று பயந்தோ  என்னவோ இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு புரட்சிகரமான அறிவிப்பை தி.மு. கழக அரசு இன்று ஆளுநர் உரையில் செய்துள்ளது.“வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்”  என்று 1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் 4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர்.என இந்து தமிழ்திசை செய்தி சொல்கிறது.


இவர்கள் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறதோ இல்லையோ, சட்டசபையின் முதல்கூட்டத்தை ஆளுநர் உரையுடன் தொடங்குவது என்கிற மரபையும் சன் டிவி விளம்பரக்கூவல் ரேஞ்சுக்குக்  கொண்டுவந்துவிட்டார்கள். Union Government (ஒன்றிய  அரசு) என்று ஆளுநரைத் தனது உரையில் சொல்லவைத்து அற்பத்திருப்தி அடைந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதற்கு எதிர்வினைகள் நிறையவே எதிரொலித்து வருவது சிறப்பு மகிழ்ச்சி.

ஒரு விஷயத்தை பற்றி யாரும் பேசுவதில்லை.ஆம், ரகுராஜன் உள்ளிட்ட அந்த ஆறு முகங்கள் சாதாரணம் அல்ல, அவற்றின் ஒரு நிமிட வருமானமே பல்லாயிரம் டாலர்களை தாண்டும். சும்மா வந்து அவர்கள் ஆலோசனை சொல்வார்கள் என்பது பிரையன் லாரா கொட்டாம்பட்டிக்கு தெருவோர கிரிக்கெட் ஆட வருவார் என்பதற்கு சமம். ஆம், மிகபெரிய சம்பளம் அவர்களுக்கு செல்லும் இந்த 6 பேரின் சம்பளம் என்பது தமிழக அரசின் மிகபெரிய செலவு

அவர்களுக்கு சம்பள விவரம் என்ன? செலவு என்ன என ஆளும் கட்சியும் சொல்லவில்லை எதிர்கட்சியும் கேட்கவில்லை. சரி, இவர்கள் 6 பேருக்கு அவசியம் என்றால் எதற்கு தமிழக நிதியமைச்சர்? எதற்கு அவருக்கு பொறுப்பு வெட்டி சம்பளம்? அவர் என்ன திறமை இல்லாதவரா? திறமை வாய்ந்தவர் எனில் ஏன் 6 பேர் கொண்ட முட்டு, அதுவும் பிரமாண்டமான முட்டு?

நிதி அமைச்சர் தன்மானம் உள்ளவர் எனில் ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும் இது அவரின் சுயமரியாதைக்கான பெரும் சவால். மானமிருந்தால் அவர் ராஜினாமா செய்யட்டும் இல்லை ஹிஹிஹ்ஹி என பல்லிளித்தால் நீடிக்கட்டும்.

சரி பொருளாதாரத்தில் ஆளில்லை என பன்னாட்டு பெருமூளைகளை அழைக்கும் அரசு, நாளை தமிழக உளவுதுறையினை பலபடுத்த ரிட்டையர்டு இஸ்ரேல் மொசாட் ஆசாமிகளை அழைக்குமா? காவல் துறையினை வலுபடுத்த சர்வதேச போலீஸ் நிபுணர்களை அழைப்பார்களா? ஒவ்வொரு துறைக்கும்  ஆங்கிலேயனும் அந்நியனும் எனில் இவர்களுக்கு என்னதான் வேலை? ஏன் வெட்டியாக பதவி?

எதிர்கட்சி அதிமுக கோமாவில் சிக்கிவிட்டது இனி அது 5 வருடம் கழித்துத்தான் எழும். தேசிய கட்சியான பாஜக இதை கேட்கலாம், 6 பேர் நியமன சம்பளம், அந்நிய நாட்டவருக்கு ஏன் தமிழக வேலை வாய்ப்பு என கேட்கலாம்.கேட்பார்கள் என எதிர்பார்ப்போம். ஆக என்ன தெரிகின்றது?  

தமிழகத்தில் குறிப்பாக திமுகவில் ஒருவரும் திறமையானவர் இல்லை என்பதால் அமெரிக்காவிலும் லண்டனிலும் இருந்து மூளைகளை வாங்கியுள்ளார்கள் திமுக சுல்தான்கள்.இதற்கு தமிழக மக்களின் வரிபணம் வெட்டியாக செலவழிக்கபட வேண்டும்.இதற்கு ஏன் ஸ்டாலின் முதலமைச்சர், தியாகராஜன் நிதியமைச்சர்? நேரடியாக ரகுராம் ராஜனிடமே மாநிலத்தை ஒப்படைத்து விடலாம் என்று முகநூலில் சரமாரியாக கேள்வி எழுப்புகிறார் ஸ்டேன்லி ராஜன். அத்துடன் விட்டாரா?


சகோதரர்கள் பேசிக்கொள்வதாக இங்கே ஒரு பகடி 

"அங்க பாத்தியாண்ணே, ஒரு காலத்துல திமுகவுல பொருளாதாரம்னா நம்ம அப்பாவத்தான் கூப்பிடுவாக, டெல்லில அப்பா அமைச்சரால்லாம் இருந்தாக‌. அப்பாவுக்கு அப்புறம் நம்மளத்தானண்ணே சேர்த்திருக்கணும், என்ன விடுண்ணே வெறும் கேசட்டு கடைய இப்போ அம்பானி அளவுக்கு ஆக்கின உன் மூளைய விட இங்க யாருண்ணே வேணும், வேற எதுக்குண்ணே உனையெல்லாம் விலக்கி வச்சி இப்படி பண்றாங்க"

"தம்பி, அமெரிக்க மூளை எல்லா இடத்திலும் ஜெயிக்குமா? ஆப்கன் ஆப்ரிக்கான்னு அவனுக தலைய பிச்சிட்டு போறமாதிரி இங்கயும் ஓடபோறானுக பாரு... விமான பெட்ரோலை எவனாவது மண்ணெண்ணெய் ஜெனரெட்டர்க்கு பாவிப்பானா? முடியுமா? அவுக அதத்தான் பண்ணிட்டு இருக்காக‌ "


பொருளாதாரப்புளி ஜெயரஞ்சனுக்கு இதிலே என்ன வேலையாம்? 

ஆளுநர் உரை, பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்! திமுக தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவோம் என்று தேதி போட்டுச் சொன்னார்களா என்று நிதியமைச்சர் கேட்டார் அல்லவா!  அதற்கு ஸ்டேன்லி ராஜன் பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! 

 


கார்டூனிஸ்ட் அமரன் இதே விஷயத்தை இன்னமும் தெளிவாகப் படம் போட்டே சொல்லியிருக்கிறார்.


திமுக ஆட்சிக்குவந்த நாட்களிலிருந்தே கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றியதே இல்லை என்பதை இதைவிடத்தெளிவாக சொல்லிவிட முடியுமா?   

அமைச்சர் தியாகராஜன் கொஞ்சம் திமிருடனேயே கொடுத்த பேட்டியின் வீடியோ நேற்றைய பதிவில் இருந்ததே, எத்தனை பேர் முழுதாகப்பார்த்தீர்கள்? ஸ்ரீராம்! உங்களுக்கும் தான் இந்தக்கேள்வி! இன்றைய தினமலரில்  நிஜத்தைப் பேசாமல் காற்றில் வாள் வீசும் தியாகராஜன்! என்று நிதியமைச்சருடைய முழக்கத்தில் இருந்த தவறான விஷயங்களை பட்டியலிட்டு பதிலும் சொல்லி இருக்கிறார்கள். 



மாநில அரசு விதிக்கும் VAT ரூ. 34.03 இலிருந்து ஒரு ஐந்து ரூபாய் குறைத்துக்கொள்ள முடியாதா? இதற்கு நேரடி பதில் சொல்ல முடியாத அமைச்சர் பிரதமர் என்னவோ வரிப்பணத்தில் தனக்காக சொந்தவீடு கட்டுகிற மாதிரி மழுப்பினார். இப்படி அவதூறாகப் பேசி தடைகோரிய  ஒருவருக்கு நீதிமன்றம் மனுவைத்தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சரூபாய் அபராதம் விதித்ததே! அந்த விஷயத்தை அமைச்சருக்கு நினைவு படுத்தாமல், அதன்மீது தமிழக பிஜேபி வழக்குத் தொடருமா என்ற கேள்வியை எழுப்பும் அப்பாவி இணையவாசி மீது பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்துவிடமுடியும்?


ஆட்சிக்கு வந்தே வெறும் 46 நாட்கள் தானே ஆகிறது! அதற்குள் மார்க் போடுவதா என்று கேட்கிறீர்களா? வந்தது போனதையெல்லாம் சிக்சர்களாக சாதனைப் பட்டியலில் திமுகவினர் சேர்த்துக்கொண்டே போவதில் கார்டூனிஸ்ட் அமரன் கொடுத்திருக்கிற பூஜ்யம் மார்க் சரிதான் என்று படுகிறது.

மீண்டும் சந்திப்போம்.         


#அரசியல்இன்று கொஞ்சம் செய்தி! கொஞ்சம் விமரிசனம்!

மக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது தமிழக அரசியலின் நிகழ்நேரக் காமெடி!தானாக நடந்ததா அல்லது திரைமறைவில் வேறு எவருடைய இயக்கத்திலோ நடக்கிறதா என்ற கேள்விக்கு விடைதேடினீர்களானால் அது இன்னமும் தமாஷாக இருக்கும்! 


தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார். கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளது மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது சந்தோஷ் பாபுவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் மதுரவாயல் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியாவும் விலகியுள்ளார் என இந்து தமிழ்திசை ஆதங்கத்தோடு செய்தி வெளியிடுகிற சாக்கில் உள்ளூர சந்தோஷப் படுகிறதோ? 
 
முகநூலில் ஹரன் பிரசன்னா தனியே அதகளம் செய்து கொண்டு இருக்கிறார்!! 

பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகியுள்ளதற்கு தனியே ஒரு களை எடுத்தல் கடிதம்‌ எழுத சோம்பலாக இருப்பதால், மகேந்திரனுக்கு எழுதிய கடிதத்தையே பத்மப்ரியா என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும்.
- மக்கள்‌ மாஜி மய்யம்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவிப்பு. பத்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அம்பது பேர் விலகினால் எந்த ஒரு தலைவனும் ஆடிப் போக மாட்டானா? களையை எடுப்பது எளிதா கட்சியையே எடுப்பது எளிதா என்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும். - மக்கள் காலி மய்யம்.

எத்தனை பேர் விலகினாலும்‌ புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அத்தனை பேர் விலகவும்‌ சம‌ வாய்ப்பு தரப்படும்.- மக்கள் நாதியற்ற மய்யம்.

"பழ கருப்பையா இன்னும் விலகவில்லை என்றே நினைக்கிறேன். பழ கருப்பையா விலகல் என்று கூகிளில் தேடினால் 1,44,876 ரிசல்ட் வருவதால் உறுதி செய்ய முடியவில்லை' என்று மக்கள் பீதி கட்சித் தலைவர் ப்ளீஸ் ஹெல்ப் என்ற தலைப்பில் டிவிட்டரில் வெளியிட்டதைத் தொடர்ந்து பரபரப்பு கூடி உள்ளது.

நான் கட்சியில் இருந்து விலகேன் என்றுதான் போஸ்ட் செய்ய நினைத்தேன். ஆனால் எதோ நெட்‌ பிரச்சினையில் கட்சியில் இருந்து விலகுவேன் என்று போஸ்ட் ஆகிவிட்டது. அந்த ஸ்க்ரீன் ஷாட்டை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். கமலே‌ விலகினாலும் நான் விலகமாட்டேன். இது அவருக்கும் தெரியும்.
- கவிஞர் சி.நாகன்.


வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டு அருகிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகம்  செய்வதும் தொடக்கம். ஸ்டெர்லைட் போராளிகளைக் கண்டா வரச்சொல்லுங்க! பாடகன் கோவனை கையோடு கூட்டி வாருங்க! 


சாந்தினி தமிழரசன்! இப்படி ஒரு நடிகையை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் துணிச்சலாக ஒரு கேள்வியை தமிழக அரசுக்கு முன்வைத்திருப்பதாக தினமணி செய்தி சொல்கிறது.


சினிமா படப்பிடிப்புகள் தவிர டிவி சீரியல் படப்பிடிப்பும் தங்குதடங்கல் இல்லாமல் நடைபெற்று வருவதில் விஜய் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்ற பிரபலங்கள் சிலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட செய்தியை நீங்களும் படித்திருக்கக்கூடும்.

கொரோனா பரவலைத் தடுக்க வேண்டியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்! பதில் கிடைக்காது என்பது மட்டுமல்ல .....!

மீண்டும் சந்திப்போம்.   



மண்டேன்னா ஒண்ணு! #அரசியல்

அதிமுகவில் EPS - OPS இருவருக்கும் இடையில் நடந்து வரும் இழுபறி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக  யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் நீடித்ததில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்றத் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


நாளை 11 ஆம் தேதி சமஉக்கள் பதவியேற்கவிருக்கும் நிலையில் அதிமுகவில் இப்படி ஒரு இழுபறி தேவையே இல்லாதது. OPS கட்சிக்குள் தனது செல்வாக்கு என்ன என்பதை  உணராமலேயே இதுவரை இருந்திருக்கிறார் என்பது விசித்திரம் ஆனால் உண்மை. தமிழக சட்டசபை வரலாற்றில் ஒரு முதல்வரும் இரண்டு முன்னாள் முதல்வர்களும் இருப்பது இது இரண்டாவது முறை. 2006 இல் கருணாநிதி முதல்வர், எதிர்வரிசையில் ஜெயலலிதா, OPS என இரு முன்னாள் முதல்வர்கள்! 2021 இல் இசுடாலின் முதல்வர்,  EPS - OPS என இரு முன்னாள் முதல்வர்கள் என்பது வெறும் தகவல் தான்! உபயோகம், சுவாரசியம் இருக்குமா என்பது உங்கள் சாய்ஸ்!   

இன்றைய இந்து தமிழ்திசை நாளேட்டில் என்.மகேஷ் குமார் எழுதியிருக்கும் ஒரு செய்திக்கட்டுரை கொஞ்சம் வேடிக்கை,தகவல் பிழையுடன் இருக்கிறது. கருணாநிதி பூர்வீகம் ஆந்திரா என்பது எம்ஜியார் முதல்வராக இருந்த நாட்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாகவே நடந்தது என்பது வேடிக்கை. ஆந்திரா, தமிழகம் எல்லாம் ஒன்றாக இருந்த சமயத்தில் என ஆரம்பித்திருப்பது தகவல் பிழை. தமிழகத்தின் வட எல்லையாகத் திருவேங்கடம் என்றுதான் இருந்திருக்கிறதே தவிர ஆந்திராவும் தமிழகமும் ஒன்றாக இருந்ததே இல்லை.


உரையரங்கத்தை யார் நடத்துகிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்! திருக்கோவில் நடைமுறைகளுக்குத் தெளிவும் தீர்வும் சொல்ல இவர்கள் யார்? 

  
http://srirangam.org/ கோவிலின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்ட pdf வடிவ அறிவிப்பு மேலே. ஜீயர்களை நியமிக்க இவர்கள் யார்?

இப்பொழுதும் கூட மாநிலத்தில் புதிய அரசு அமைந்து நான்கே நாட்கள் தான் ஆகிறது என்பதால் விமரிசனம் செய்வதைத் தவிர்க்கிறேன். மூன்றுமாதம் அல்லது 100 நாட்கள் என விமரிசிப்பதைத் தவிர்ப்பது கூட நானாக ஏற்படுத்திக்கொண்ட, சுய கட்டுப்பாடு மட்டும்தான்!

மீண்டும் சந்திப்போம். 

மக்கள், நீதி, மய்யம்! பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி!

கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்கின்றன.  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரன், பொன்ராஜ், சந்தோஷ்பாபு, மவுரியா, சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். ` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை' என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார் என்கிறது பிபிசி செய்தி. 


வீடியோ 35 நிமிடம். விஜய் டிவி மகேந்திரன் மற்றும் சுரேஷ் அய்யர் இருவரும் சேர்ந்து தொடங்கிய சங்கையா சொல்யூஷன்ஸ், கமல் காசர் கட்சிக்கு  ஆலோசனை சொல்கிற பொறுப்பை எடுத்துக் கொண்டதில் இருந்தே பிரச்சினைகள் எழுந்ததாக சிலகாலத்துக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. தங்களை மீறிக் கமலை வேறு எவரும் அணுக முடியாதபடி சங்கையா சொல்யூஷன்ஸ் சிறப்பாகச் செயல்பட்டதில் முதல் பலி திருமதி கமீலா  நாசர்! கமல் குடும்ப நண்பர் என்பதால் பிரச்சனைகளை வெளியே பேசாமல், அமைதியாக வெளியேறி விட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த நான்கே நாட்களில் மக்கள்நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி இருப்பது கமல் காசருடைய  அரசியல் சாகசம், தலைமை  எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.  



பொள்ளாச்சி மருத்துவர் மகேந்திரன் தனது 12 பக்க அறிக்கையில் கமல் காசருடைய தலைமையின் லட்சணத்தை மிக விரிவாகவே சொல்லியிருப்பதை ரங்கராஜ் பாண்டே மேலே வீடியோவில் தெளிவாகவே எடுத்துச் சொல்கிறார்.



முன்னதாக வந்த செய்தி க்கும் இன்றைய நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? சுயேட்சைகளைத் தவிர்த்து ஐந்து முனைப்போட்டியாக நடந்து முடிந்த தேர்தலில் கமல் காசர் கட்சி+  ஐந்தாமிடத்தைத் தான் பெற்றிருக்கிறது என்பதில் பொன்ராஜ் சொன்னதுபோல தேமுதிக, சமக இருகட்சிகளுடன் கூட்டணி வைத்தது தான் என்பது உண்மையான காரணமல்ல. 


#Breaking || "களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே மகேந்திரனின் சாதனை மகேந்திரன் விலகியதில் மகிழ்ச்சி, இனி கட்சிக்கு ஏறுமுகம் தான் - கமல் #KamalHaasan | #MakkalNeedhiMaiam
Image

கமல் காசரும் அவரது மய்யமும் வெறும் பிக் பாஸ் ஷோ மட்டும்தான் என்றாகிப்போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை! அரசியல் கட்சி நடத்துவது  வெறுமனே வசனம் பேசுவது மட்டும் இல்லை, அவ்வளவுதான்!

மீண்டும் சந்திப்போம