தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதில் நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனவும் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல .நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர் என்பது இன்றைய செய்தி. விடியல் அரசுக்கு நீதிமன்றம் வைத்திருக்கிற முதல் குட்டும் கூட.
சென்னை உயர்நீதமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ‘ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்ட போதும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் எதன் அடிப்படையில் இந்த குழுவை ஏற்றார் என கேள்வி எழுப்பினார். 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக ஏ.கே.ராஜன் தலைமையிரான குழு கூறுகிறது. ஒரே கணிணியில் இருந்தும் 1000-த்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதை போல் படம் எடுத்து அதை செய்தியாக வெளியிடுகிறார்கள். உண்மையில் இது தி.மு.க குழுவா? அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ‘தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என குறிபிட்ட கரு.நாகராஜன் இனியும் ஏழை மாணவர்வளின் மருத்துவக் கனவில் விளையாடக் கூடாது எனவும் நீட் தேர்வுக்கு பிறகு 405 ஏழை மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் மாசு இதற்கு பதிலளித்து பேசிய வீடியோ 17 நிமிடம்
இந்தமாதிரி கமிஷன்கள் நியமிக்கப்படுவது ஏன், எதற்கு என்பதெல்லாம் அரசியல் LKG க்களுக்குமே தெரிந்த விஷயம். நண்பர் ஜெயகுமார் ஸ்ரீனிவாசன் கமிஷனின் அடிமடியிலேயே கைவைக்கச் சொல்வது முழுதாக ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கிறது.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!