ஏழு பேர் விடுதலை :: சாத்தியமா? நிஜமாகவே அவசியமா?

நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என்று நம்புகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கையோடு சொன்னாரா? அல்லது நக்கலாகவா?  அது எப்படி இருந்தாலும், ஆகிற கதை மட்டும் இல்லை என்பது இங்கே அரசியல் பழகாதவருக்கும் கூடத் தெரியும். 

இலங்கைத்தமிழர் பிரச்சினையின் மீது ஆரம்ப காலத்தில் எல்லோரையும் போலவே எனக்கும் அனுதாபம் இருந்தது. நாளடைவில் விடுதலைப்புலிகள் மீது மிகைப்படுத்தப் பட்ட  பிம்பங்கள் கலைந்து போனது, ராஜீவ் காண்டி படு கொலை செய்யப்பட்ட அந்தத் தருணம், ஈழத்தமிழர் மீதிருந்த  கொஞ்சநஞ்ச அனுதாபமும் ஆதரவு உணர்ச்சியை அறவே அற்றுப் போகச் செய்தது. ஆனாலும் பொதுவெளியில் என் கருத்தாக எதையும் எழுதியதில்லை. காரணம் ஏற்கெனெவே நொந்து போயிருக்கிற ஈழத்தமிழர்கள் மனம் நொந்துவிடக்கூடாதே என்பது மட்டும்தான்! நான் அறிந்த ஈழத்தமிழர்கள் பலர் தொட்டாற்சுருங்கிகளாக இருந்ததும் ஒருகாரணம்.    இந்த ஒப்புதல் வாக்குமூலம் எழுத்து வடிவில் KP யின் ஒப்புதல் எல்லாம் ரொம்பப்பின்னாடி. 

ஸ்டேன்லி ராஜன் இன்று முகநூலில் பகிர்ந்திருக்கிற  இந்தப்பதிவு நிறையவே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது:

ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்தவர்களுக்கும் அந்த குற்றபத்திரிகையினை முழுக்க‌ தெரியும்

பேரறிவாளன் மேல் உள்ள குற்றசாட்டு பேட்டரி வாங்கி கொடுத்தான் என்பது, அதுவும் ரிமோட் கண்ட்ரோலில் மாட்டபடும் சிறிய பேட்டரி வாங்கி கொடுத்தான், அதற்கா தூக்கு என்பது தமிழ்நாட்டில் பலபேரின் நம்பிக்கை.பேரறிவாளன் மேல் ஏகபட்ட குற்றசாட்டுக்கள் உண்டு, யாழ்பாணம் சென்றது , குண்டுவெடிப்பில் கொல்லபட்ட ஹரிபாபுவோடு அவனுக்கு இருந்த தொடர்பு, ஹரிபாபு வீட்டில் கண்டெடுக்கபட்ட ஆதாரப்படி அவன் யாழ்பாணம் செல்ல திட்டமிட்ட விஷயம் என நிறைய உண்டு

ஆம் 1990ல் தன் 16ம் வயதிலே யாழ்பாணம் சென்று பல பயிற்சிகளை பெற்று திரும்பியவன் அவன், அவனோடு அந்த ஹரிபாபு என்பவனும் நெருக்கமான புலி ஆதரவாளனாக இருந்தான். ஹரிபாபுதான் ராஜிவ் கொலையினை படம் எடுத்து சிக்கி செத்தான், இவன் முதலாளிதான் ஸ்டூடியோ அதிபர் சுபா சந்தரம், அவரும் புலி அபிமானி. பேரறிவாளன் சிவராசனுக்கு கவசாகி பைக் வாங்கி கொடுத்தது முதல் நிறைய உதவினான், பேட்டரி என அவன் வாங்கியது பேட்டரி செல் அல்ல, காருக்கான பேட்டரி வகை.

ஆம் , சிவராசன் இயக்கிய வயர்லெஸ் கருவிக்கு தேவையான சக்திவாய்ந்த பேட்டரி. அதை வாங்கி கொடுத்தது ஆதாரமாக சிக்கியது, இன்னும் நிறைய உண்டு.ராஜிவ் கொலை நுணுக்கமாக திட்டமிடபட்டது, சிக்கினால் ஏகப் பட்டோரை இழுத்துவிடும் மர்ம தந்திரம் அது. அப்படித்தான் மரகதம் சந்திரசேகர் வரை சிக்கவைக்கபட்டனர். ஆனால் இந்திய புலனாய்வு துறை எதை வெட்ட வேண்டுமோ அதை வெட்டினார்கள், எதை விடக்  கூடாதோ அதை சரியாக பிடித்தார்கள்.

மாற்றுவெடிகுண்டாக வந்த ஆதிரையே விடுவிக்கபட்டபொழுது பேரறிவாளன் ஏன் விடுவிக்கபடவில்லை என்றால் விஷயம் அவனின் பிடிவாதம்.இன்றுவரை புலிகளுடனான தன் தொடர்பை அவன் ஒப்புக் கொள்ளவில்லை, அவன் செய்த புலி ஒத்துழைப்பை எங்குமே ஏற்கவில்லை. விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, அவனிடம் பெரும் பிடிவாதமும் இன்னும் பிடிக்கும் வீண் அடமும் உண்டு. சரி அவன்மேல் குற்றம் இல்லை என்றால் புலிகளால் வஞ்சகமாக ஏமாற்றப் பட்டேன் என் ஒருவார்த்தை சொன்னானா?

இல்லை, அவன் சொல்லவில்லை சரி, அவன் தாயான அற்புத நடிகையான அற்புதம்மாளாவது சொன்னாளா?

இல்லை. பின் எங்கிருந்து விடுவார்கள்?

இதில் சிலர் உடனே சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி என பொங்கலாம். ராஜிவ் கொலைக்கு பின் காங்கிரஸ் இந்நாட்டை 20 வருடம் ஆண்டது, என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? சரி, சு.சாமி சந்திராசாமியினை விசாரித்து உள்ளே போடவேண்டுமென்றால் வை.கோப்பால்சாமியினை என்ன செய்யவேண்டும்?

"திமுக ஆட்சியும் அவர்கள் ஒத்துழைப்பும் இருந்திராவிட்டால் ராஜிவ் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை" என சொன்ன ஜெயின் கமிஷன் அறிக்கைபடி என்ன செய்யலாம்? ராஜிவ் கொலைக் கைதிகள் 7 பேரில் 3 பேரே இந்தியர்கள் நால்வர் இலங்கையர்கள், நாடுவிட்டு நாடு கொல்லவந்தவர்களை விடுவி என்பது முட்டாள் தனமானது. மீதி மூவரில் நளினி கடைசி வரை முழு உண்மையினை சொல்லவில்லை, காதலனை காப்பாற்ற சில உண்மைகளை சொன்னாளே தவிர இன்னும் முழு அப்ரூவர் ஆகவில்லை. குறைந்த பட்சம் தான் செய்தது தவறு என்று கூட சொன்னதில்லை

இந்த பேரறிவாளன் சாதாரண நபர் அல்ல, 16 வயதிலே இலங்கை சென்றவன், இந்திய ராணுவத்துக்கு எதிராக சாத்தானின் படைகள் எனும் புத்தக தயாரிப்பில் முழுக்க உதவியன். ராஜிவ்கொலையில் பிடிபடாவிட்டால் அவன் இலங்கைக்கு தப்பியிருக்கும் அபாயமும் உண்டு.

பேரறிவாளன் இன்னும் உண்மையினை ஒப்புக் கொள்ளாதவன், இவ்வளவு நடந்தபின்னும் அவன் மேலான புலிதொடர்பு ஆழமாக நிரூபிக்கபட்டபின்பும் இன்னும் தான் அப்பாவி என சொல்லி கொள்ளும் ஒரு குற்றவாளி. முதலில் அவன் தன் தவறை ஒப்புக் கொள்ளட்டும்,  16 வயதில் மகனை தறுதலையாக்கி தேசவிரோதியாக்கிய அந்த அற்புதம்மாளும் தன் தவறை ஒப்புகொள்ளட்டும். அதன்பின் அடுத்த காட்சியினை பார்க்கலாம்

மேலே பகிர்வின் சுட்டியில் பின்னூட்டங்கள் இன்னும் அதிகத் தகவல்களைக் கொட்டுகின்றன. நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதும், எழுவர் விடுதலையும் ஆகிற கதை போலத் தெரியவில்லை என்றாலும், என்னமோ உடனே  சாதித்துக் காட்டப்போகிறமாதிரி என்னமாய் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!! 

மீண்டும் சந்திப்போம் .

8 comments:

 1. தடை செய்யப்பட அந்த சாத்தானின் படைகள் புத்தகம் எங்காவது இணையத்தில் கிடைக்கிறதா என்று அப்போது தேடிப்பார்த்தேன்.  ஊ..ஹூம்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்! இணையத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை (அதாவது, நான் முயற்சி செய்யவில்லை) ஆனால் கொஞ்சம் வயசாளியான தி க ஆசாமி எவரிடமாவது அந்தப் புத்தகம் அல்லது மேல்விவரங்கள் கிடைக்கும்.

   தி க ஆசாமிகள் ஒன்றும் சே குவேரா மாதிரிப் புரட்சிகரமாக எழுதி, பேசுகிறவர்கள் அல்ல. லாஜிக்கே இல்லாத விதண்டாவாதம் தவிர வேறென்ன அந்தப்புத்தகத்தில் எதிர்பார்க்கிறீர்கள்? IPKF பற்றியது என்றால் முன்னாள் CBI அதிகாரி ரகோத்தமன் பேசியது யூட்யூபிலேயே கிடைக்கிறது.

   Delete
 2. வீடு திறந்து கிடந்ததே குற்றம்...

  ReplyDelete
  Replies
  1. இப்படி நம்மை நொந்துகொள்வதால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது சொல்லுங்கள்!

   Delete
  2. அப்படி அல்ல. வீட்டில் உள்ளவர்களில் சிலரே, திருடர்களை உள்ளே விட்ட குற்றத்தைச் செய்தவர்கள். அவர்கள் யாரென்று தெரியாததுபோலவே இருக்கிறீர்களே... அவர்களெல்லாம் தேசத் துரோகிகள், நல்லவர்கள் வேடம் போட்ட நயவஞ்சகர்கள். கடைசி காலத்தில், யாரை எதிர்த்தார்களோ அவரது பூட்சை நக்கிக்கொண்டு வாழும் தண்டனையை, இயற்கை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.

   Delete
  3. திருடர்கள் யார் கூட்டாளிகள் யார் என்பது தெரியாமல் எப்படி நெல்லைத்தமிழன் சார்! இதற்கான பதிலை கீழே உள்ள உங்கள் பின்னூட்டக் கேள்விக்கு எழுதிய பிறகே இதைக் கவனித்தேன்.

   Delete
 3. 7 பேர் விடுதலை சாத்தியமற்றது, கூடாது என்று நான் நினைக்கிறேன். பல விஷயங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள்.

  இந்திய அரசியல் தலைவரைக் கொலை செய்துவிட்டு, பிறகு மன்னித்துக்கொள்ளுங்கள், ஈழத் தமிழர்களுக்கு உதவுங்கள் என்று சொன்னால் யார் செய்வார்கள்? எல் டி டி ஈ முழுவதுமாக அழிக்கப்பட்டதற்குக் காரணமே ராஜீவ் கொலைதான்.

  ReplyDelete
  Replies
  1. சாத்தியமற்றது என்பதுதான் இன்றுவரை உள்ள களயதார்த்தம் நெல்லைத்தமிழன் சார்!

   வெளியே சொல்லவேண்டிய அவசியம் என்ன? எழுவர் விடுதலை என்பதும் இங்கே ஒரு அரசியல் ஷோகேஸ் அவ்வ்ளவுதான்! நடக்காது என்பது கேட்பவர்களுக்கும் தெரியும் ஆனாலும் இதை ஒரு உணர்ச்சிகரமான வாக்கு சேகரிக்கும் உத்தியாக மட்டுமே பயன் படுத்துவார்கள்.

   பேரறிவாளனுடைய தந்தை திராவிடர் கழகத்தில் ஒரு முக்கியமான புள்ளி. பேரறிவாளனை மாட்டிவிட்டதுமே கூட திக தலைவர்தான் என்றொரு தகவலும் உண்டு. வை கோவே ஒருகட்டத்தில் புலிகளைக் காட்டிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுவது உண்டு. ராஜீவ் கொலையுண்டதில் சோனியாவின் பங்கென்ன என்பது உட்பட இன்னும் வெளிவராத மர்மமுடிச்சுக்கள் நிறையவே உண்டு.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!