ஜெகமே தந்திரம்! குப்பைகளோடு கைகோர்க்கும் திரைப்பட அரசியல்!

எல்லா (யெஸ், 100%) விமர்சனங்களும் படம் மரண மொக்கை என்று உறுதிபடக்கூறியிருப்பதால், அப்படி என்னதான் மொக்கை என்ற எண்ணத்துடனே ஜகமே தந்திரம் படத்தைப் பார்க்கப் போகிறேன் இப்படிப் பெனாத்தல் சுரேஷ் நேற்றைக்கு ட்வீட் செய்ததைப் பார்த்த பிறகுதான் ஜெகமே தந்திரம் படத்தைப் பார்க்கும் எண்ணம் எனக்கும் வந்தது.


விடலைத்தனமான பொறுக்கி வேடத்துக்கு தனுஷை விடப் பொருத்தமான நடிகனைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதும் படத்துக்குத் தேவைக்கு மேலேயே தனுஷ் இட்டுநிரப்பிவிடுவார் என டைரக்டர் நினைப்பும் சேர்ந்த விநோதக் கலவையாக உருவாகியிருக்கிற படம் ஜெகமே தந்திரம்.


இது நம்ம சேட்டைக்காரன் பதிவர்!

பூசணிக்காய் சைசில் இருப்பவரை பொரி உருண்டை எனக் குறைத்து மதிப்பிட்ட ஒன்றைத்தவிர கருத்தில் முழுக்க உடன்பட வேண்டியதாகி இருக்கிறது. பேட்டரி வாங்கினதுக்காக இங்கே ஒருத்தர் ரொம்ப நாளாக ஜெயில்ல இருக்கார் என்று ஒருவசனம்! பேரறிவாளனை ஆதரிக்கிறார்களாம்! உள்ளூர்ல விலைபோகுமா?    


ஈழத்தமிழர் மீது நம்மூர் திரைத்துறைப் புள்ளிகளுக்குத் திடீர்ப்பாசம் அக்கறை பிறப்பது புதிதல்லதான்! ஆனால் கார்த்திக் சுப்பாராஜுக்கு வந்திருப்பது அக்கறைதானா? படத்தில் சொதப்பியிருப்பது வேறுவிதமாக நினைக்க வைக்கிறது. ஈழத்தமிழருக்கு இந்தியத்தமிழர்கள் செய்தது துரோகம் இ.தமிழர் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் இன்னொரு துரோகத்தை ரிவர்சில் செய்வது என்று காதில் பூ சுற்றியிருக்கிறார் கா. சுபபராஜ்.

புரியவில்லையா? பிபிசி தமிழ் விமரிசனத்தைப் பார்த்து விடுங்கள்! இலங்கைத்தமிழரோ இந்தியத் தமிழரோ, தமிழர் என்றாலே கேணைகள்தானே என்ற நினைப்பில் ஈழத்து அரசியலும் பிரச்சினையும் தெரியாமல் ரீல் ரீலாகச் சுற்றியிருக்கிறார் கார்த்திக் சுபபராஜ்.

கா. சுபபராஜ் மாதிரியானவர்கள் படமெடுப்பது காசு பார்ப்பதற்காகத்தானே தவிர சமூக அக்கறையில் அல்ல என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான்! இவர்போன்ற ஆசாமிகள் சிறிது காலத்துக்கு முன்புவரை பள்ளிக் கூடங்கள், விவசாயிகள் என்று கலர்கலராக லேபிள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவு என்கிற லேபிளில் வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.  தமிழன் என்றவுடனேயே உச்சி மிகக் குளிர்ந்து ஏமாறத்தயாராகிவிடும் இனமல்லவா!

கொள்ளைக்காசு கொடுத்து Netflix இந்தப்படத்தை வாங்கி இருப்பதில் தயாரிப்பாளர்களோடு கதை பண்ணியவருக்கும் ஏகப்பட்ட ஆதாயம். விமரிசனங்கள் மிகவும் நெகடிவாக வந்துகொண்டிருப்பதால் தனுஷ் அவற்றைத் தவிர்ப்பதாக தினமலர் செய்தி சொல்கிறது.


     

முந்தைய பதிவை இதுவரை பார்க்காமல் இருந்தால் இப்போதாவது வாசிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்.

4 comments:

  1. ஒரு திரைப்படம் பற்றி- அதுவும் பிளேடு  வகையான திரைப்படம் பற்றி - நீங்கள் ஒரு பதிவு போட்டிருப்பபது ஆச்சர்யம்!

    ReplyDelete
    Replies
    1. வழக்கமான பொறுக்கி gangster படமாக இருந்திருந்தால் இந்தப்படத்தை சட்டை செய்திருக்கவே மாட்டேன் ஸ்ரீராம்!

      ஈழத்தமிழர் ஆதரவு வியாபாரத்தில் கா.சுபபராஜ் துருப்பிடித்த பிளேடால் கீற முயற்சி செய்திருக்கிறார் என்பதில் ஏற்பட்ட எரிச்சல், அவ்வளவுதான்!

      Delete
  2. மரண மொக்கை படம் இது. முதல் 45 நிமிடத்தில் இந்த அளவு குப்பையாக எடுக்கமுடியுமா என்றாகிவிட்டது! போறும்டா சாமி என்று நிறுத்திவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      இது பொழுதுபோக்குக்கான படமா ஏதோ அரசியல் கருத்தை வலியுறுத்தும் படமா சமூக அக்கறையில் எடுக்கப்பட்ட படமா என்பதே எடுத்தவர்களுக்குப் புரியாமல் எடுக்கப்பட்டது, அப்படித்தான் மொக்கையாக இருக்கும்.

      ஏதோ ஒரு வியாபார நுண்ணரசியல் இருக்கறதுபோல.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!