முதலில் இந்தியர்களாக நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வைக்கும் ஒரு செய்தியைப் பார்த்து விடுவோம்! சீனாவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்தியர்கள்
கடந்த 12 மாதங்களில் 43% இந்தியர்கள், சீனப் பொருட்களை புறக்கணித்துள்ளனர்! லடாக்கில் (Ladakh) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு தொடங்கியது. அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பல சாமானிய மக்கள், சீன தயாரிப்புகளை புறக்கணிக்கத் தொடங்கினர் (Ban China Products).அதே சமயத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியர்கள், தற்சார்பு பொருளாதாரத்தை (Atmanirbhar Bharat) நோக்கிய பயணத்தை, ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு பல திட்டங்களை வகுத்தது. கூடுதலாக உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
இதனால் கடந்த 12 மாதங்களில், 43% இந்தியர்கள் சீன பொருட்களை (Made in China) புறக்கணித்துள்ளனர். கிட்டத்தட்ட 60% பேர் சீனாவில் தயாரித்த பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றனர் ஆனால், அவர்கள் கூட இந்த காலகட்டத்தில் 1-4 பொருட்களே வாங்கியுள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால், நுகர்வோரின் விழிப்புணர்வு (consumer awareness) இந்த ஓராண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது! #GalwanValleyClashes #china #madeinchina என்கிறது - சாணக்யா செய்திக்குழு -
நாளை மாலை பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார் என்பதைக் குறித்து ஏகப்பட்ட அலப்பறைகள் கிளம்பியதில் ஸ்டேன்லி ராஜனுடைய நச்சென்ற பகிர்வு. சந்திப்பில் முக்கியமான விஷயம் முதல்வருடன் செல்கிறவர்கள் பட்டியலில் நிதியமைச்சர் இல்லை, ஆனால் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இருக்கிறார். டாட்.
வீசுவது கறித்துண்டு பொறை பிஸ்கட் எதுவானாலும் நேரத்துக்கு வரவில்லையென்றால் இப்படித்தான்! அதனால் விகடன் திருந்திவிட்டது என்றா சொல்லிவிட முடியும்? #முன்களப்பிணி
மருது சகோதரர்கள் பற்றி வேறுவிதமாக மபொசி அல்லது எஸ்ரா அல்லது இருவரும் எழுதி படித்த நினைவு. குறிப்பாக மபொசி தனது = தமிழக சுதந்திரபோராட்ட வரலாறு புத்தகத்தில்.அவர் இந்த சகோதரர்களின் ஆங்கிலேயே எதிர்ப்பை வேறு விதமாக சித்தரிக்கிறார். இந்த ஜாம்பு தீவு மீட்பு பற்றி நானும் பார்த்து விட்டு படிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன்.
ReplyDeleteகட்டபொம்முவை வீரபாண்டிய கட்டபொம்மனாக glorify செய்தது மபொசி மட்டும்தான். அந்தநாட்களிலேயே இந்த மிகைப்படுத்துதலைப்பற்றிய சர்ச்சைகள் இருந்தன ஸ்ரீராம்! வீரபாண்டிய கட்டபொம்மன் படமாக வெளிவந்தசமயத்தில் மருதுசகோதரர்களைப் பற்றிய காவியமாக சிவகங்கைச் சீமையைக் கண்ணதாசன் சொந்தமாகத் தயாரித்து வெளியிட்டார். கையைச் சுட்டுக்கொண்டார். கல்கண்டு தமிழ்வாணன் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்றொரு புத்தகம் வெளியிட்டார்.
Deleteஇங்கே நிஜத்தைவிட கலரில் வீர வசனங்கள் பேசுகிற திரைப்படங்களானாலும் , கலர்கலராய் ரீல் சுற்றுகிற அரசியலானாலும் அவைகளுக்குத்தான் மவுசு.
ஆம். தெரியும். அந்தப் புத்தகத்திலும் இருக்கிறது. கட்டபொம்முவின் தம்பி மருது சகோதரர்களில் இளையவரிடம் அடைக்கலம் புகுந்ததாகவும், அதைத் தொடர்ந்த களேபரங்களில் இவர்கள் ராஜ்யத்தை ஆங்கிலேயர் அபகரிக்க முயல அதனால் விளைந்த போராட்டங்களுமாய் சென்றிருக்கிறது. தனக்காகப் போராடினாலும், வெள்ளையனை எதிர்த்ததால் அதுவும் வீர சுதந்திர போராட்டத்தில் சேர்ந்ததாய்ப் படித்தேன்.
Deleteஊமைத்துரையைக் காப்பாற்ற மருதுசகோதரர்கள் எடுத்த முயற்சியில் ஆங்கிலேயர்களுடைய விரோதத்தை சம்பாதித்துக் கொண்டது ஒருபக்கம். காளையார் கோவிலை பீரங்கி வைத்துத் தகர்க்கப்போவதாக மிரட்டியதில் கோவிலைக் காப்பாற்ற சின்ன மருது ஆங்கிலேயர்களிடம் தன்னை ஒப்புக் கொடுத்ததில் மரண தண்டனையை ஏர்க்கநேரிட்ட து காளையார்கோவில் கோபுரத்தின் எதிரே தன்னுடைய தலையைப் புதைத்து விடுமாறு வேண்டிக்கொண்டதும் நிறைவேற்றப்பட்டது. மருது சகோதரர்களின் வாரிசை மலேசியாவுக்கு நாடுகடத்தியது பிரிட்டிஷ் அரசு.
Deleteமேலே சிவகங்கைச் சீமை திரைப்படம் என்ற வார்த்தைகளிலேயே திரைப்படத்தின் யூட்யூப் லிங்க் இருக்கிறது ஸ்ரீராம்! எத்தனையோ குப்பைகளில் நேரத்தை வீணடிக்கிறோம், கொஞ்சம் நேரம் ஒதுக்கி அந்தப்படத்தைப் பார்த்து விடுங்களேன்.
இன்றைக்குப்பார்த்தாலும் படத்தைப்பார்த்துவிட்டுக் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடிந்ததில்லை என்பது என்னுடைய அனுபவம். ஏனென்றால் மறவர் பூமி என்னுடைய சொந்த மண்ணும் கூட.