Showing posts with label செய்திகளின் அரசியல். Show all posts
Showing posts with label செய்திகளின் அரசியல். Show all posts

இட்லி வடை பொங்கல்! #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும்!

இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறது.


தமிழ்நாட்டை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் ஜெய் ஹிந்த் சர்ச்சைப்புகழ் ஈஸ்வரன் கூட மாநிலத்தை மூன்றாகப் பிரிப்பது நல்லதுதான் என்று முன்பு பேசிய வீடியோ உலா வந்துகொண்டிருக்கிறது. 2015 ஆகஸ்ட் 17 தேதியிட்ட தினமலர் நாளிதழில் ஈஸ்வரன் அப்படிப் பேசிய  செய்தி வெளியாகி இருக்கிறது. 


இந்த 21 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த விஷயத்தை விரிவாக விளக்கியிருக்கிறார். என்னமோ ஸ்டாலின் அரசுக்கு விளையாட்டு காட்டத்தான் மத்திய அரசு தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்குகிறது என்பதெல்லாம் அதீத அலட்டல்.


ஊப்பீஸ் எதற்காகக் கதறுகிறார்கள் என்பது எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் விமரிசகர் ஸ்ரீராம் சேஷாத்ரி  முகநூலில் இப்படி எழுதுகிறார்:

திரு. முருகன் பதவி ஏற்கும்போது, அவர் biodata வில் கொங்குநாடு என்று இருந்தது. இன்று தினமலர் நாளிதழில் கொங்குநாடு பற்றிய headline வந்துள்ளது. பலர் என்னிடம் உங்கள் அபிப்ராயம் என்ன, இது நடக்குமா, அப்படி நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கேட்டனர். என் புரிதலை பகிர்கிறேன்.

முதலில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என்பது பல காலமாக எழும் கோரிக்கை, அதுவும் பாட்டாளி மக்கள் கட்சி வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமே. எப்படியாவது ஒரு மாநிலம் தங்கள் ஆட்சியின் கீழ் வராதா என்ற எண்ணம் மட்டுமே.

தென் தமிழ்நாடு, பொருளாதார ரீதியில் கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு வளரவில்லை, முக்கியமாக தொழில்சாலைகள், உள்கட்டுக்குமானம் போன்றவை கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு தென் தமிழ்நாட்டில் இல்லை. திருச்சிக்கு தெற்கே கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களில் இருந்த பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில் நசிந்து பல வருடங்கள் ஆகிறது, அதனை விரிவாக்க முயற்சி எந்த அரசாங்கமும் எடுக்கவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டத்தில் இருந்து தொழில்சாலைகளும் ஒன்று மூடப்பட்டன (sterlite ஒரு உதாரணம்) அல்லது புது தொழில்சாலை அல்லது சரக்கு துறைமுகம் வருவதை கிறிஸ்துவ மிஷனரிகள் தடுத்து வருகின்றன. 

இப்படி இருக்கையில், திமுக இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாகும் முயற்சியில் ஒன்றிய அரசு, ஜெய் ஹிந்து போன்ற சட்டசபை நிகழ்வுகளில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருகின்றன.

பாஜக அவர்களுக்கு வலுவான கொங்கு மண்டலத்தை மேலும்  ஸ்திரப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக, முருகன் அவர்களை மத்திய மந்திரியாகி, அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு பாஜகவின் தலைவராக்கி, மேலும் வானதி ஸ்ரீனிவாசன் அவர்களை முக்கியப்படுத்தி வருகிறது.இப்போது கொங்குநாடு என்ற முழக்கம் அரசியலாக இருந்தாலும், இந்த விதையை விதைப்பது கண்டிப்பாக பல விளைவுகளை ஏற்படுத்தும்

1. தமிழ்நாட்டில் நிர்வாகம் தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படும், இப்படி ஒரு பகுதி அதுவும் 40% மேல் வருவாய் கொடுக்கும் பகுதி பிரிந்தால், தமிழ்நாடு, முன்னேற தென் தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்து முனையவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

2. அரசியல் ரீதியாக கொங்கு மண்டலத்தில் திமுக வலுவாக இல்லாததனால், அங்கு அதிமுக பாஜக நேரடியாக அரசியல் செல்வாக்கு உள்ள கட்சியாக மாறும்

3. பிற மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டில், திமுக அதிமுக மட்டுமே வலுவான நிலை ஏற்படும்.

4. நிர்வாக ரீதியாக, சிறிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் சுலபமாக இருக்கும்

இந்த பிரிவு அரசியல் சட்டம் சார்ந்து, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால் உடனே நிகழுமா என்றால் மத்திய அரசாங்கம் முனைதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியும்.

இப்போது நமக்கு தெரியவேண்டிய ஒன்று, பாஜக இதனை திமுகவின் ஒன்றிய அரசின் கோஷத்துக்கு எதிர்வினையாக எடுத்துள்ளதா அல்லது நிஜமாகவே முயல்கிறதா என்பதுதான்.ஆனால் திமுக மத்திய அரசை சிறுமை படுத்துவதாக எண்ணி, ஒன்றிய அரசு என்று கிளப்பிவிட்டு, இந்த மாநில சீரமைப்புக்கு வழி வகுத்து விட்டதா என்றும் யோசிக்கவைத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே திமுகவினர் ஒன்றிய அரசு என்பதை சொல்ல முயலவில்லை கவனிக்கத்தக்கது 

ஒரு தெளிவான புரிதல் என்றே எனக்குப்படுகிறது. எது எப்படியானாலும், திமுகவின் வாய்ச்சவடாலில் கூட ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பதில் மகிழ்ச்சி.

மீண்டும் சந்திப்போம்.

சண்டேன்னா மூணு! #அரசியல் #தேர்தல்வானிலை #என்னமோநடக்குது

அரசியல் ஏன் எனக்கு எப்போதுமே பிடித்தமானதாக இருக்கிறதென்றால், எதிர்பாராதது எதுவோ அதையே எதிர்பார்ப்பது அரசியலில் மட்டுமே சாத்தியம்! இதனால் தானோ என்னவோ நம்மூர் அரசியலில் சின்னச்சின்ன மாற்றங்கள் தெரிந்தால் கூட குய்யோமுய்யோவென சோனியா காங்கிரஸ் கூவுவதும், என்னமோ நடக்கப் போகிறதென்று மற்றவர்கள் திகிலுடன் காத்திருப்பதும் தொடர் கதையாகிக் கொண்டு வருகிறது. வெள்ளியன்று அன்றுஉத்தராகண்ட் மாநிலமுதல்வர் தீரத் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியைக் குறிவைக்கத் தான் என சோனியா காங்கிரஸ் அலற ஆரம்பித்துவிட்டது. கொரோனா காலம் என்பதால் இடைத்தேர்தல் சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்வதற்கு முன்பாகவே தீரத் ராவத் காரணம் சொல்லி ராஜினாமா செய்திருப்பதுதான்! தீரத் ராவத் கடந்த மார்ச்சில்தான் உத்தராகண்ட் முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்ட சபை உறுப்பினராக இல்லாத அவர் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடந்து அதில் ஜெயித்தாக வேண்டும். தற்சமயம் MLA வாக இல்லாத மம்தா பானெர்ஜியும் கூட அதே மாதிரி  6 மாதங்களுக்குள் தேர்தல் நடந்து வெற்றி பெற்றாகவேண்டும் என்கிற ஒப்பீடு சரிதான்! காங்கிரஸ் கட்சி இதில் அலறுவதுதான் வேடிக்கை! விநோதமும் கூட!

   


சோனியா காங்கிரஸ் அதிகம் கவலைப்படவேண்டிய பஞ்சாப் மாநில கட்சி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்பது இன்னொரு அரசியல் வினோதம். சோனியா & கோ தயவில்லாமல் 2017 இல் பஞ்சாப் தேர்தலில் ஜெயித்துக் காட்டியவர் அமரீந்தர் சிங் என்பது ராகுல் காண்டி வகையறாவுக்கு உறுத்தலாக இருப்பதில், உட்கட்சிப்பூசல் காரணமாக வருகிற 2022 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை என்று சோனியாவும் மக்களும் நினைக்கிற மாதிரித் தெரிகிறது, இந்த லட்சணத்தில் 44 ஆண்டுகளாகக் கைவிட்டுப் போன மேற்குவங்கம் குறித்து கூக்குரல் எழுப்புவது, காங்கிரசால் மட்டுமே நடத்திக்காட்ட முடிகிற அரசியல் தமாஷா!


இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கூமி கபூர் எழுதி வரும் அரசியல் கிசுகிசு பத்தியில் ஷரத் பவார் பற்றி ஒரு சுவாரசியமான ஊகத்தைச் சொல்கிறார். பிரசாந்த் கிஷோருடன் பவார் தனியாகச் சந்தித்தது 2022 இல் சட்டசபைத்தேர்தல்களை அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ஷரத் பவார் நிற்பது பற்றித்தான் என்கிறார். 80வயதான ஷரத் பவாருக்கு அதில் ஆசை இருந்தாலும் நடக்குமா என்பது உத்தரப்பிரதேசத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது என்று சொல்வதே, பகல்கனவு என்பதையும் சேர்த்துச் சொல்வதாக இருக்கிறதோ? (சமீபத்தைய உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபி மொத்தமுள்ள 75 இடங்களில் பிஜேபி 67 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது)  கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாகத்தில் ஷரத் பவாருக்கு இதுவரை இருந்த ஆதிக்கம், சமீபத்தில் நடந்த தேர்தலில் பிஜேபியால்  உடைக்கப்பட்டிருப்பதும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறவெல்லாம் வேண்டாம், சில திருத்தங்கள் செய்தால் போதும் என்று பவார் பல்டி அடித்திருப்பதும் தேசிய அளவில் மாற்றம் வருகிறதோ இல்லையோ, மகாராஷ்டிரா அரசியலில் ஏதோ மாற்றம் வருவதற்கான அறிகுறி என்றுதான் தோன்றுகிறது.


இளவரசருக்குத் துதிபாடுவது திமுகவினருக்கு சரியாகத் தோன்றலாம்! ஆனால் இப்படி அதீதமான ஆர்வக் கோளாறுகள் பெரும் சேதத்தைத்தான் ஏற்படுத்தும் என்பது அனுபவம். என்னுடைய வருத்தமெல்லாம் இப்படி மதுரையின் பெயரைக் கெடுக்கிறமாதிரியே புற்றீசல் மாதிரிக் கிளம்பி வருகிறார்களே என்பது மட்டும்தான்! போஸ்டர் அடித்தே போஸ்டைப்பிடிப்பது ஒச்சுபாலு காலத்திலிருந்தே மதுரை திமுகவைப்பிடித்திருக்கும் பெருவியாதி.


   கவனித்துப்பார்த்த ஒரு விவாதம்

மீண்டும் சந்திப்போம்.        

ஒருநாள் கூத்துக்கு மீசை ::: சரத் பவார்! (ஃபரூக்) அப்துல்லாக்கள்!

மேற்கு வங்கம், தமிழ்நாடு இரு மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாடிக்கையாளரை ஜெயிக்க வைத்த மிதப்போ என்னவோ, பிரசாந்த் கிஷோர் அகில இந்திய அளவில் தன்புகழைப் பரப்ப முனைந்திருக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப்போய்விடலாம் தான்!ஆனால் அவருடைய திட்டத்தில் காங்கிரசை ஓரம்கட்டி விட்டு சரத்பவாரை வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் ஏற்பாடு நடந்திருக்கிறது.  காங்கிரசை விட்டுவிட்டு கலந்துகொள்ள விரும்பாமல் திமுக மற்றும் ஒன்றிரண்டு கட்சிகள் தவிர்த்துவிட்டன என்பதிலேயே பிரசாந்த் கிஷோர் முயற்சி தொடங்கும்  முன்னமே தோற்றுவிட்டது.

இந்திய அரசியலில் முன்றாவது, 4வது அணி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என ஆரம்பிக்கிற சேகர் குப்தா மெதுவாக 20% ஓட்டை வைத்திருக்கும் காங்கிரசை ஒதுக்கிவிட்டு மூன்றாவது அணியை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது என்று தன்னுடைய காங்கிரஸ் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்ட மாதிரியே இந்த 23 நிமிட வீடியோ இருக்கிறது. செவ்வாய்க் கிழமையன்று டில்லியில் உள்ள சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் பவார் வந்ததே தெரியாத அளவுக்குக் கொஞ்ச நேரம் இருந்தமாதிரி போட்டோ செஷனில் தலை காட்டிவிட்டு தன்னுடைய கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுக்கூட்டத்தில்  ஆலோசனை செய்யப் போய்விட்டார் என்கிறது செய்தி. TOI நையாண்டி இங்கே.


ஜூன் 11,21,23 என்று இரண்டுவாரங்களுக்குள் சரத் பவாரைத் தேடிவந்து பிரசாந்த் கிஷோர் மூன்றுமுறை சந்தித்தார் என்பதில் என்ன உள்குத்து இருக்கும் என்று ஊடகங்கள் தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கின்றன. அதற்காகவே சந்தித்தார்களோ என்னவோ?

சரத் பவாருக்கு 80 வயதாகிவிட்டது. மகாராஷ்டிராவில் ஒரு சில ஏரியாக்களில் மட்டுமே செல்வாக்குள்ளவர் என்றாலும் கட்சிபேதமில்லாமால் சர்வ கட்சிகளுடனும்  சுமுகமான உறவை மெயின்டைன் பண்ணுகிறார் என்பதாலேயே பவாரை பிரதமர் முகமாக 2024 இல் காட்ட முடியுமா? அல்லது பவார் கைகாட்டுகிற ஒருவர், மம்தா பானெர்ஜி என்றேகூட வைத்துக் கொள்வோம், பிரதமராகி விட முடியுமா? சரத் பவாருக்குத் தன்மகள் சுப்ரியா சுலேவை மகாராஷ்டிர முதல்வராக்கிப் பார்க்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கும் இது சரியான தருணமல்ல. அப்புறம் எதற்காக பவாரை  முன்னிறுத்தி இப்படி ஒரு களேபரம்? !!   


இருவருடங்களுக்கு  முன் ஆர்டிகிள் 370 நீக்கப் பட்ட பிறகு  ஜம்மு காஷ்மீர் அரசியல்கட்சித்  தலைவர்கள் பிரதமருடைய அழைப்பையேற்று டில்லியில் இன்று சந்தித்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் முதல்வர்களாக இருந்த நான்குபேர் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, (NC) மெஹபூபா முஃப்தி (PDP), குலாம் நபி ஆசாத் (Cong) உடன் ஜம்முகாஷ்மீரிலுள்ள உதிரிக்கட்சித்தலைகள் சிலரும் கலந்துகொண்ட கூட்டத்தில் என்ன பேசப் பட்டதாம்? NDTV செய்திகளின் படி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை உரியநேரத்தில் தர உறுதியளித்தார் பிரதமர் என்று சொன்ன கையோடு இந்த சந்திப்பின் முக்கிய அஜெண்டாவாக தொகுதி மறுவரையறை செய்வதற்காக ஒத்துழைப்பைக் கோரியதுதான் இருந்தது என்றும் சொல்கிறார்கள். தேர்தல்கள் நடத்தும் முன் தொகுதிகளின் எல்லை, எண்ணிக்கையை  மறுவரையறை செய்ய அரசின் உத்தேசத்தை விவாதிக்கத்தான் இந்தக்கூட்டமே. பெரும்பாலானோர் ஆதரவு இருந்ததாகச் சொன்ன கையோடு,ஒமர் அப்துல்லா அநேகமாக எல்லாத்தலைவர்களுமே இந்த மறுவரையறை விஷயத்தில் அதிருப்தியோடு இருந்ததாக சொன்னாரென்று ஒரு பிட்டையும் சேர்த்துப் போடுவது NDTV இஷ்டைல். 

Omar Abdullah told reporters that "almost all leaders" were unhappy with delimitation only in Jammu and Kashmir. "In other states, delimitation will be taken up in 2026, why has been Jammu and Kashmir been singled out? We told the PM delimitation is not needed," he said, adding that "trust has broken between the Centre and Kashmir".  என்பதன் பின்னால் இருக்கிற அப்துல்லாக்களின் வஞ்சகம்  என்ன என்று நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறதா? நினைவு படுத்திக் கொள்ளவில்லை என்றால் அப்துல்லாக்கள் கேட்பது நியாயமாகத்தானே இருக்கிறது என்றுதான் தோன்றும். 

1980களின் மத்தியில் ஃபரூக் அப்துல்லா முதல்வராக இருந்த சமயத்தில் கொண்டுவந்த சட்டத்திருத்தங்களின் படி ஜம்மு காஷ்மீரில் வாக்களிக்கும் உரிமை அங்கே நீண்ட காலமாக வசித்துவந்த பஞ்சாபிகளுக்கும், லடாக் பகுதி மக்களுக்கும் மறுக்கப்பட்ட வஞ்சகம் delimitation இப்போது கொண்டுவரப்பட்டால் வெட்டவெளிச்சமாகி விடும் என்பதில் அப்துல்லாக்கள்  கவலை, அச்சம், புரிந்து கொள்ளக்கூடியதே! காஷ்மீரின் ஆதிக்குடிகளான பண்டிட்டுகளை அச்சுறுத்தி மாநிலத்தைவிட்டே ஒழித்த கதை என்று இன்னமும் பலவிஷயங்கள் இருக்கின்றன  

அப்துல்லாக்கள்.  முஃப்திக்கள் சூறையாடுகிற இடமாக பாகிஸ்தானிகளுக்கு இடம்கொடுக்கிற மாநிலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இதுநாள்வரை இருந்தது போதாதா?  

மீண்டும் சந்திப்போம்.    

ஒரு புதன்கிழமை! செய்திகளின் அரசியல் கொஞ்சம் சுருக்கமாக!

முதலில் இந்தியர்களாக நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வைக்கும் ஒரு செய்தியைப் பார்த்து விடுவோம்! சீனாவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்தியர்கள்


கடந்த 12 மாதங்களில் 43% இந்தியர்கள், சீனப்  பொருட்களை புறக்கணித்துள்ளனர்! லடாக்கில் (Ladakh) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley)  இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு தொடங்கியது. அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பல சாமானிய மக்கள், சீன தயாரிப்புகளை புறக்கணிக்கத்  தொடங்கினர் (Ban China Products).அதே சமயத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியர்கள், தற்சார்பு பொருளாதாரத்தை (Atmanirbhar Bharat) நோக்கிய பயணத்தை, ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு பல திட்டங்களை வகுத்தது. கூடுதலாக உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது.

இதனால் கடந்த 12 மாதங்களில், 43% இந்தியர்கள் சீன பொருட்களை (Made in China) புறக்கணித்துள்ளனர். கிட்டத்தட்ட 60% பேர் சீனாவில் தயாரித்த பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றனர் ஆனால், அவர்கள் கூட இந்த காலகட்டத்தில் 1-4 பொருட்களே வாங்கியுள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால், நுகர்வோரின் விழிப்புணர்வு (consumer awareness) இந்த ஓராண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது! #GalwanValleyClashes #china #madeinchina என்கிறது - சாணக்யா செய்திக்குழு -


மருது பாண்டியர்கள் என்றழையிக்கப்பட்ட மருது சகோதரர்கள் இன்றைக்கு 220 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலை முழக்கம் செய்தநாள் ஜூன் 16 கவிஞர் கண்ணதாசன் சொந்தமாகத் தயாரித்த சிவகங்கைச் சீமை திரைப்படம் மருது பாண்டியர்கள் வரலாற்றைச் சொன்ன காவியம். நேரம் ஒதுக்கிப்பாருங்களேன்!  


டில்லியில் 962 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை 13500 கோடி ரூபாய் வீண் ஆடம்பரச் செலவு என்று கூவிய இடதுசாரிகள், கேரளாவில் ரூ. 56443  கோடி செலவில் காசரகோடு - திருவனந்தபுரம் ரயில்பாதை அமைக்கும் திட்டத்தைப் பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருப்பதேன்? யாராவது fevicol போட்டு ஒட்டி விட்டார்களா என்ன?


நாளை மாலை பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார் என்பதைக் குறித்து ஏகப்பட்ட அலப்பறைகள் கிளம்பியதில் ஸ்டேன்லி ராஜனுடைய நச்சென்ற பகிர்வு. சந்திப்பில் முக்கியமான விஷயம் முதல்வருடன் செல்கிறவர்கள் பட்டியலில் நிதியமைச்சர் இல்லை, ஆனால் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இருக்கிறார். டாட்.


வீசுவது கறித்துண்டு பொறை பிஸ்கட் எதுவானாலும் நேரத்துக்கு வரவில்லையென்றால் இப்படித்தான்! அதனால் விகடன் திருந்திவிட்டது என்றா சொல்லிவிட முடியும்?  #முன்களப்பிணி 



கோவிலை  நிர்வகிப்பதைக்குறித்து ஆகமங்களில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகமங்கள் தான் கோவில் நிர்வாகத்துக்கான அத்தாரிட்டி! HR &CE அல்ல. 


அயோத்தி ராமஜென்மபூமி நிலம் வாங்கியதில் மோசடி என்று உத்தரப்பிரதேச அரசியலில் கிளப்பி விடப்பட்ட வேகத்திலேயே, கிளப்பியவர்கள் முகத்தில் கரிபூசிக் கொள்ளவேண்டி வந்தது. எப்படி என்பதை கோலாகல ஸ்ரீனிவாஸ் விவரிக்கிறார். வீடியோ 18 நிமிடம்.

மீண்டும் சந்திப்போம்.     
   

மண்டேன்னா ஒண்ணு! சில #அரசியல்சுவாரசியங்கள்

கலகக்கார பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கல் தம்பதியினருக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை கலிஃபோர்னியாவிலுள்ள சான்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் லிலிபெட் டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்ஸர் என்று பெயர் இடப்பட்ட குழந்தை பிறந்ததாக ஹாரி - மேகன் அறிவித்து இருக்கிறார்கள். .


லிலிபெட் என்பது ராணி எலிசபெத் II இன் செல்லப் பெயர். எலிசபெத் என்ற பெயரை உச்சரிக்க முடியாத சிறுமியாக லிலிபெட் என்று சொன்னதையே செல்லப் பெயராக ராணியின் தந்தை வைத்ததாக அதற்கும் ஒரு கதை சொல்வார்கள். டயானா ஹாரியின் அம்மா அடுத்து வருகிற இரண்டும் கொள்ளுப்பாட்டன் கொள்ளுப் பாட்டியின் குடும்பப்பெயர். பிரிட்டிஷ் ஊடகங்களில் இப்போதே டிசைன் டிசைனாகக் கதைக்க ஆரம்பித்து விட்டார்கள்.The Queen will be 'desperately unhappy' that Harry and Meghan have used her 'very private' and 'special' nickname Lilibet to name their second child after they were so 'rude' about her and the Royal Family, a royal expert claimed today என்கிறது Daily Mail  பிரிட்டிஷ் குடிமகன்களுக்கு அரசகுடும்பத்தைப் பற்றி எரிந்த கட்சி எரியாத கட்சியாக லாவணி பாடுவதைத் தவிர வேறு வேலையே இருந்ததில்லை என்பதுதான் இதன் சுவாரசியம்!அரசியல்!


சந்தோஷமே உன்னுடைய ரகசியம் என்ன? இந்தக் கேள்விக்கு 
பதிலாக அவரவருக்குத் தோன்றுவதைச் சொல்வார்கள். ஆனால் சந்தோஷத்தைத் தருபவை என்பதே உலகளாவிய வியாபாரமாக ஆகிவிட்டது. 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சந்தையாக ஆகிவிட்டது. இந்த 10 நிமிட வீடியோவைப் பாருங்கள்!சந்தோஷம் என்பதன் அளவுகோல் என்ன? உங்களுடைய கருத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கே அரசியல் வாதிகள் நிரந்தரக் கோமாளிகளாக இருப்பதை நிறுத்திவிட்டு, பொறுப்போடு இருந்தாலே நிம்மதி, அதுவே சந்தோஷம்!எப்படி என்கிறீர்களா? 


இந்த ஒரு வீடியோவே அது நியாயமானது தான்  என்பதைச் சொல்லும். 30 நாட்களிலேயே நிறையச் சாதித்துவிட்டார்களாம்! அப்படி என்ன சாதித்து விட்டார்களாம்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
   

 இது ஒரு சோற்றுப்பதம். இதுவும் போதாதா? 



நீட்டை உயர்மட்டக்குழு அமைத்துக் கைகழுவியாகி விட்டது. பெரம்பலூர் அனிதா சாந்தியடைவதாக!  

ஹிந்து என் ராமுக்கு வந்த சோதனை! 100/100 மார்க் கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?


ஏதோ ஆர்வக்கோளாறில் போட்டிருக்கிறார்கள் என்பது ஒருபக்கம்! இவர்கள் மொத்தமுமே வியாதிகள்தான் என்பது இன்னொரு பக்கமாக   பயமுறுத்துகிறதே! 

விதியே! விதியே! தமிழகத்தை என்செய நினைத்தாய்? 

கொஞ்சம் கொசுறு செய்திகளில் #அரசியல்இன்று

ஊரடங்கில் சற்று தளர்வு கொடுக்கபடுமா? : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை என்ன தளர்வோ தெரியாது, ஆனால் நிலமை கட்டுக்குள் வராமல் செய்யப் படும் ஊரடங்கு தளர்வு என்பது பின்னால் வரபோகும் மிகபெரிய கொரொனா அலைக்கும் அதனையொட்டி வரும் ஊரடங்குக்கான திறவுகோல் என்பது பல நாடுகளில் உணரப் பட்ட உண்மை என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் அலுத்துக்கொண்ட மாதிரியே தமிழக அரசு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.


மருத்துவ நிபுணர்கள் அரசியல் கட்சிகள் ஆலோசனைப் படி ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 14 வகையான மளிகைப் பொருட்களைக் குடும்ப அட்டைகள் வாயிலாகப் பொதுமக்களுக்கு அளிக்கும் முடிவுடன் ஊரடங்கை அதே கட்டுப் பாடுகளுடன் ஜூன் 7 வரை ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்கிறது இந்து தமிழ்திசை தந்தி செய்தியும் இந்து செய்தியும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித் தெரிகிறதா? அவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை. அரசை நிர்வகிக்கிறவர்களே தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவதில் ஆலோசனை சொல்கிற அதிகாரிகளோ செய்திவெளியிடுகிற  ஊடகங்களோ கூடவே சேர்ந்து ஊசலாடாமல் இருக்க முடியுமா?   

*******

நேற்றைக்கு கோபாலபுரம் வீட்டில் மு க அழகிரி தனது தந்தை படத்துக்கு அஞ்சலி செலுத்தினார், தாயார் தயாளுவை நலம் விசாரித்தார் ஆசி பெற்றார் என்ற செய்திகள் ஒரு ஓரமாக வந்ததே தவிர அண்ணன் தம்பி இருவரும் சந்தித்துக் கொண்டதாக செய்தி எதுவும் வரவில்லை. ஆனாலும் மு க அழகிரி அசாத்தியப் பொறுமையோடு அமைதி காக்கிறார். எல்லாம் அவர் நேரம் என்பதற்குமேல் என்ன சொல்ல?

இப்படி பவனி வந்ததெல்லாம் அந்தக்காலம்! 

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இரண்டாவது வரவாக மகன் பிறந்திருப்பதை ஒட்டி சென்னைக்கு வந்திருக்கும் சமயத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்ள இன்னமும் ஒரு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். நம்பிக்கை தானே எல்லாம்.😌😢

எல்லாச் செய்திகளுமே கொசுறு என்றால் செய்திக்கான முக்கியத்துவமே இல்லாமல் போய்விடும் என்பதாவ் சில  பயனுள்ள தகவல்களுடன் கூடிய வீடியோ: 

சிலகாலமாகவே நான் தமிழக சேனல் விவாதங்களைப் பார்ப்பதில்லை. முன்கூட்டிய முடிவுகளுடன், ஒருபக்கச் சார்பாகவே நிகழ்ச்சிகளை cook up செய்கிறவர்களைக் கவனித்து ஒன்றுமே ஆகப்போவதில்லை. அதேநேரம் கொஞ்சம் விவஸ்தையோடு செய்திகளை அலசி அதன் மீது விமரிசனமாகச் செய்பவர்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விவாதங்கள் என்ற பெயரில் ஜனங்களை முட்டாளடிக்கிற வெட்டி அக்கப்போர்களை தவிர்ப்பது நம் மனநலத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது தான், இல்லையா?

இந்த 39 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் ABP ஆனந்த பஜார் பத்ரிகா நிறுவனம் C Voter என்கிற கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நாடெங்கும் 543 மக்களவைத் தொகுதிகளிலும் (சில  leading questions ரகத்திலானவை, ஜனங்களிடமிருந்து என்னபதில் வர  வேண்டுமென்பதற்காக கொக்கிபோட்டுக் கேட்கப்படுபவை)மக்களுடைய அபிப்பிராயத்தில் நரேந்திர மோடி என்ன இடம் வகிக்கிறார் என்பதான கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறார்கள். ABP மோடி மீது அத்தனை  நம்பிக்கை கொண்ட ஊடகமல்ல என்பதை இங்கே  குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

ABP-C Voter கருத்துக்கணிப்பில் தெரியவந்த விவரங்கள் என்னென்ன என்பதை கோலாகல ஸ்ரீநிவாஸ் எளிதாகப் புரிந்துகொள்கிற விதத்தில் விளக்குகிறார் என்பது கூடுதல் விசேஷம். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள் என்று வேண்டுகிறேன்.    

மீண்டும் சந்திப்போம்.

#அரசியல்இன்று கொஞ்சம் செய்தி! கொஞ்சம் விமரிசனம்!

மக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது தமிழக அரசியலின் நிகழ்நேரக் காமெடி!தானாக நடந்ததா அல்லது திரைமறைவில் வேறு எவருடைய இயக்கத்திலோ நடக்கிறதா என்ற கேள்விக்கு விடைதேடினீர்களானால் அது இன்னமும் தமாஷாக இருக்கும்! 


தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார். கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளது மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது சந்தோஷ் பாபுவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் மதுரவாயல் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியாவும் விலகியுள்ளார் என இந்து தமிழ்திசை ஆதங்கத்தோடு செய்தி வெளியிடுகிற சாக்கில் உள்ளூர சந்தோஷப் படுகிறதோ? 
 
முகநூலில் ஹரன் பிரசன்னா தனியே அதகளம் செய்து கொண்டு இருக்கிறார்!! 

பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகியுள்ளதற்கு தனியே ஒரு களை எடுத்தல் கடிதம்‌ எழுத சோம்பலாக இருப்பதால், மகேந்திரனுக்கு எழுதிய கடிதத்தையே பத்மப்ரியா என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும்.
- மக்கள்‌ மாஜி மய்யம்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவிப்பு. பத்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அம்பது பேர் விலகினால் எந்த ஒரு தலைவனும் ஆடிப் போக மாட்டானா? களையை எடுப்பது எளிதா கட்சியையே எடுப்பது எளிதா என்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும். - மக்கள் காலி மய்யம்.

எத்தனை பேர் விலகினாலும்‌ புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அத்தனை பேர் விலகவும்‌ சம‌ வாய்ப்பு தரப்படும்.- மக்கள் நாதியற்ற மய்யம்.

"பழ கருப்பையா இன்னும் விலகவில்லை என்றே நினைக்கிறேன். பழ கருப்பையா விலகல் என்று கூகிளில் தேடினால் 1,44,876 ரிசல்ட் வருவதால் உறுதி செய்ய முடியவில்லை' என்று மக்கள் பீதி கட்சித் தலைவர் ப்ளீஸ் ஹெல்ப் என்ற தலைப்பில் டிவிட்டரில் வெளியிட்டதைத் தொடர்ந்து பரபரப்பு கூடி உள்ளது.

நான் கட்சியில் இருந்து விலகேன் என்றுதான் போஸ்ட் செய்ய நினைத்தேன். ஆனால் எதோ நெட்‌ பிரச்சினையில் கட்சியில் இருந்து விலகுவேன் என்று போஸ்ட் ஆகிவிட்டது. அந்த ஸ்க்ரீன் ஷாட்டை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். கமலே‌ விலகினாலும் நான் விலகமாட்டேன். இது அவருக்கும் தெரியும்.
- கவிஞர் சி.நாகன்.


வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டு அருகிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகம்  செய்வதும் தொடக்கம். ஸ்டெர்லைட் போராளிகளைக் கண்டா வரச்சொல்லுங்க! பாடகன் கோவனை கையோடு கூட்டி வாருங்க! 


சாந்தினி தமிழரசன்! இப்படி ஒரு நடிகையை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் துணிச்சலாக ஒரு கேள்வியை தமிழக அரசுக்கு முன்வைத்திருப்பதாக தினமணி செய்தி சொல்கிறது.


சினிமா படப்பிடிப்புகள் தவிர டிவி சீரியல் படப்பிடிப்பும் தங்குதடங்கல் இல்லாமல் நடைபெற்று வருவதில் விஜய் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்ற பிரபலங்கள் சிலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட செய்தியை நீங்களும் படித்திருக்கக்கூடும்.

கொரோனா பரவலைத் தடுக்க வேண்டியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்! பதில் கிடைக்காது என்பது மட்டுமல்ல .....!

மீண்டும் சந்திப்போம்.   



இட்லி வடை பொங்கல்! #81 #அரசியல் #தேர்தல்அரசியல் #கொரோனாஅரசியல்

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்து வெற்றி பெற்ற கட்சிகள் பதவியேற்பும் அனேகமாக நடந்து விட்டது. தேர்தல் களச்சூடு தணிந்து, ஆட்சி செய்வதில் வென்ற கட்சிகள் கவனம் செலுத்துகிற நேரத்தில், எங்குமே போணியாகாத சோனியா காங்கிரஸ் கட்சி மட்டும் மோடி வெறுப்பு அஜெண்டாவில் செயல்பட்டு வருவதை இந்து தமிழ்திசை செய்தியில் பார்த்தபோது சிரிப்புத்தான் வருகுதையா! அதேபோல காமெடி செய்து சிவசேனாவும் சோனியா காங்கிரசுக்குச் சமமான இடத்தைப் பெற்றிருக்கிறது.  


மூன்று மாநிலங்களில் தோற்றதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யவேண்டும் என்று அறிக்கைவிட்ட அதிமேதாவி திருமாவளவன் கூட, தனது பல்லவியை மாற்றிக் கொண்டதாக இந்து தமிழ்திசை கார்டூன் நையாண்டி செய்திருக்கிறது.

ஆனாலும் கூட சிவசேனா கட்சிப்  பத்திரிகை சாம்னா தலையங்கத்தில் இன்றைக்கு சோனியா காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிற விதமே அலாதி! நேரு -காந்தி (இந்திரா&வாரிசுகள்) ஏற்படுத்தி விட்டுப் போன அமைப்பின் மீதுதான் இன்று இந்தியாவே பிழைத்திருக்கிறதாம்! இந்தியா டுடே தளம் செய்தி  சொல்கிறது  "In clear terms, India is surviving on the system created by Nehru-Gandhi. Many poor countries are offering help to India. Earlier, countries like Pakistan, Rwanda and Congo used to get help from others. But due to the wrong policies of today's rulers, India is going through that situation now," உடனே சிவசேனாவுக்கு சோனியா காங்கிரஸ் மீது பாசம் பொங்கிவழிவதாக தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள்! தன்னுடைய கையாலாகாத்தனம், திறமையின்மை, ஊழல், கட்டுக்குள் கொண்டுவர முடியாத கொரோனா,  இப்படி வரிசையாகப் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் சிவசேனாவுக்கு, மராத்தா மக்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்திருப்பதில் விரக்தியின் விளிம்புக்கே போனவர்கள் தங்களது ஏலாமையை இப்படித்தான்  உபதேசம் செய்து வெளிப் படுத்துவார்கள்! மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியும் தேர்தல் வன்முறைகளில் உயிர்ப்பலி விவகாரத்தில் மத்திய அரசின் குழு  அனுப்பப்பட்டிருப்பதில், குழு ஆய்வு செய்ய வேண்டாம், என்னை வேலைசெய்ய விடுங்கள் என்று வசனம் பேசியதோடு கப்சிப்.

அதிமுக வெற்றிபெற்றால் மந்திரியாகிவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய அதிமுக எம்பிக்கள் வைத்தி லிங்கம், கே பி முனுசாமி இருவரும் எம்பி பதவியை ராஜினாமா செய்வார்களா? அல்லது சட்டசபையில் மவுசே இல்லாமல் சமஉ ஆக இருப்பதைத் தேர்ந்து எடுப்பார்களா? சரியாக ஊகித்துப் பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு  பரிசெல்லாம் கிடையாது. ஆனால் தமிழக அரசியலை நன்றாகப்புரிந்து வைத்திருக்கிற பெருமையோடு காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்! 


அதிமுகவில் எதிர்க்கட்சித்தலைவராக வரப்போகிறவர் யார்? EPS  அல்லது  OPS இந்தக்கேள்விக்கும் கூட அந்தக் கட்சியால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை! 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துக் கலைந்து விட்டார்கள்! உங்கள் ஊகம் என்ன?


கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்கள்  முழு ஊரடங்கை அறிவித்திருக்கின்றன. சோனியா காங்கிரஸ், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே போல சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும், மாநில அரசைப்பொறுப்பாக்கக் கூடாதென்று ஆகாத கதை பேசாமல், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக முதல்வர் முழு ஊரடங்கை அறிவித்திருப்பதற்கு மனப் பூர்வமான வாழ்த்துகள்!

ஆளும்கட்சி திமுக அரசியலை விமரிசிப்பதற்கான தருணம் இதுவல்ல. திமுக அரசை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு விமரிசிப்பதான எண்ணம் இல்லை. ஆக்கபூர்வமான செயல்பாடு இருந்தால் மனப்பூர்வமான ஆதரவு நிச்சயம் உண்டு. 

மீண்டும் சந்திப்போம்.              

இட்லி வடை பொங்கல்! #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்

கொஞ்சம் உள்ளூர் அக்கப்போர்களிலிருந்து விடுபட்டு வேறு செய்திகளைப்பார்க்கப்போகலாம் என்று பார்த்தால் பிரிட்டிஷ்.அரசகுடும்பத்து அக்கப்போர்கள் முன்னே வந்து நிற்கின்றன  இன்று இங்கே சென்னையில் மறைந்த நடிகர் விவேக் அவர்களுடைய இறுதிச்சடங்கு மாலை 5 மணிவாக்கில் மாநில அரசு மரியாதையோடு நடக்கவிருக்கும் அதே வேளையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நம்மூர் நேரப்படி இரவு 8.30 மணிக்குத் துவங்கவிருக்கிறது. பேரன் ஹாரி மனவருத்தப்படக்கூடாது என்பதற்காக இறுதிச் சடங்கில் பங்கேற்கிற அரசகுடும்பத்தவர் எவரும் ராணுவ உடையணிந்து வரவேண்டாம் என 95 வயதாகும் ராணி  கருணையோடு சொல்லி இருக்கிறாராம்.

 

ராயல் அக்கப்போர்கள் அத்தனை சீக்கிரமாக முடிந்து விடுவதில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை என்ற சாக்கில் கூடுமானவரை சர்ச்சைகளைத் தவிர்க்க முயற்சித்தாலும், ராணியின் வாரிசுகளான இளவரசர் வில்லியம் இளவரசர் ஹாரி இருவருக்குமிடையிலான துவந்தம் இன்னும் முடியவில்லை. ராணியின் 4 மக்களும் சவப்பெட்டியைத் தொடர்ந்துவரும்போது பேரன்கள் இருவரும் தோளோடு தோள் உரசப் பின்தொடர மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராணியின் மகள் இளவரசி ஆனியின் மகன் பீட்டர் பிலிப் சகோதர்களுக்கிடையில் சேர்ந்துவருவாராம்! இந்த ராயல் தமாஷாவை ஒரு திருவிழா மாதிரி ஆங்கிலேயர்கள் கொண்டாடுவது விசித்திரம்தான் இல்லையா?


மேலே படத்தில் செயின்ட் ஜார்ஜ் சேபலில் தரைக்கு 16 அடி கீழே இருக்கிற 200 வருடப் பழமையான அரச குடும்பத்தினருக்கான சவப்பெட்டகத்தில் ராணி எலிசபெத்  இறக்கும் வரையில்  இளவரசர் பிலிப்பின் உடல் வைக்கப் படுகிறது. ராணி இறந்த பிறகு இருவரது உடல்களும் விண்ட்ஸர் மாளிகையில் இருக்கும் இன்னொரு  இடத்தில் சேர்த்தே புதைக்கப்படும் என்கிறது செய்தி The Prince Consort passed away earlier this month at the age of 99 and his funeral is set to take place this afternoon.His remains will be placed behind a set of iron gates around 16ft underground and will stay there until his wife Queen Elizabeth II dies.They will both then be placed in the King George VI Memorial Chapel, Windsor, alongside George VI and Queen Elizabeth.


இந்த வீடியோ செய்தியின் நம்பகத்தன்மை என்ன? ப்ரம்ம செலானி கொஞ்சம் தரவுகளோடு கேள்வி எழுப்பியிருக்கிறார்.


கொரோனாவின் புதிய வடிவம் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவது கவலையளிப்பதுதான் என்றாலும் அதை விட ஜனங்களுடைய பொறுப்பின்மையும், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளுடைய விஷமத்தனமான பிரசாரங்களும், ஏற்கெனெவே தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகிற ஜனங்களை இன்னமும் தேவையே இல்லாத குழப்பம் அச்சத்தில் தள்ளுகிற மாதிரித் தான் இருக்கிறது. உள்ளூர் திருமா முதல் நேருபரம்பரையின் தத்தி வாரிசு ராகுல் காண்டிவரை கைகோர்த்துச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இங்கே பார்க்கலாம்.  


பந்தயம் கட்டுவதும் தீனா மூனா கானா ஆசாமிதான்!

மீண்டும் சந்திப்போம்.  


இட்லி வடை பொங்கல்! #79 பிரசாந்த் கிஷோர்! ஒரு கார்டூன்! ஒரு மரணம்!

IPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருக்குத் தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை இன்று இணையத்தில் அவர் பஹத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒரு உரையாடல் பெரும் கவனத்தையும் சர்ச்சையையும்  ஒருசேர ஈர்த்திருக்கிறது.



வீடியோ 16 நிமிடம்.  கிளப் ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று விஷயங்களை ஒப்புதல் வாக்குமூலம் மாதிரிச் சொல்லி இருக்கிறார். பிஜேபியின்  அமித் மாளவியா  !.Modi is hugely popular in Bengal and there is no doubt about it. There is a cult around him across the country.  2.There is anti-incumbency against TMC, polarisation is a reality,3. SC votes is a factor plus BJP’s election machinery, says Mamata Banerjee’s strategist in an open chat. என்று கீச்சியிருப்பது ட்வீட்டரில் பரபரப்பாக இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. லிங்கில் பிரசாந்த் கிஷோர் பேசியதன் ஆடியோ இருப்பதைக் கொஞ்சம் கேளுங்கள் 


"Suvendu is not a factor. Hindus, schedule caste, Dalit and Hindi speaking population are the key factors. Around 50-55 per cent of Hindus are voting for BJP. There are around one crore Hindi speaking population in West Bengal. Matuas will predominantly vote for the BJP. When we made a survey and asked people whose government will be formed in Bengal. The outcomes predominantly come in favour of the BJP. In-ground there are workers of BJP," என்று பிரசாந்த் கிஷோர் பேசியிருப்பது ஆடியோவில் இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் ஆடியோவை மறுக்க ம்முடியாமல் முழு ஆடியோ உரையாடலையும் வெளியிடுமாறு பிஜேபிக்கு சவால் விடுத்திருக்கிறார் . மடியில் கனமில்லை என்றால் முழு ஆடியோவையும் அவரே வெளியிட வேண்டியது தானே! மேற்கு வங்கத்திலேயே அப்படி என்றால் இங்கே தமிழ் நாட்டில் பிரசாந்த் கிஷோருடைய உத்திகள் என்ன மாதிரித் திரும்பப்போகிறதோ? இப்படி யோசனை ஓடுவது இயல்புதான் இல்லையா!  


சிச்சோறு வீரமணி என்று மு க அழகிரி மகனால் நாம கரணம் செய்யப்பட்டவரும் சரி, காசுக்குச் சோரம் போன தமிழக ஊடாகங்களும் சரி . இப்படித்தான் திமுகவில் கட்டுண்டு கிடக்கிறார்களோ? முகநூலில் இருந்து கார்டூனிஸ்ட் அமரன் வரைந்த படம்.   

*******

ளவரசர் பிலிப் என்றழைப்பதா எடின்பர்க் கோமகன் என்றழைப்பதா என்று நேற்றிலிருந்து ஒரே குழப்பம்! ஏனென்றால் பிரிட்டிஷ் அரச குடும்பத்தவர்களுக்கு அளிக்கப்படும் பட்டங்களெல்லாம் நம்மூர் கலீஞர் டாக்டர் கலீஞர் ஆனமாதிரி அர்த்தமற்றவை என்பது தான்  வரலாறு. மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் நேற்று மதியம் காலமானார் என்பது வெறும் செய்தி மட்டுமல்ல. இல்லாத ராஜாங்கம், இல்லாத பிரபுத்துவம், இல்லாத பழம்பெருமை இப்படி ஏகப்பட்ட இல்லாத விஷயங்களை இன்னமும் இருக்கிற மாதிரியே காட்டிக் கொள்வது தான் பிரிட்டிஷ் வரலாறு என்பதைப் புரிந்து கொள்ள முடியுமானால் போலித்தனமே பிரிட்டிஷ் காரர்களுடைய தொட்டுத் தொடரும் ஒரே பாரம்பரியம் என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதே இல்லை,  


வீடியோ 16 நிமிடம். அசந்தர்ப்பமான உளறல்களுக்குப் பெயர்போன இந்தப்பிரபலத்துக்கு வயது 99 இன்னும் இரு மாதங்கள் இருந்திருந்தால் 100 ஐத் தொட்டிருப்பார் பிரிட்டனில் 100 வயதைத் தொடும் குடிமக்களுக்கு ராணியிடமிருந்து வாழ்த்துச் சொல்லி ஒரு தந்தி வருமாம்! இறந்துபோன பிலிப் மட்டும் நூறைத் தொட்டிருந்தால் ராணி அவருக்கு எப்படி வாழ்த்துச் சொல்லியிருப்பார்?  By custom, every British citizen who attains the age of a hundred receives a congratulatory telegram from the Queen. But what happens if the Queen happens to be your wife? Would she have handed the telegram to Philip at breakfast, reaching shyly over the marmalade? Or, as a stickler for tradition, would he have had to stand by the front door and wait for the arrival of the mail, like everyone else? Alas, we shall never know. என்று உருகுகிற இந்தச் செய்தி இன்னும் சில விவரங்களையும் சேர்த்தே சொல்கிறது. 

நம்மூர் ஹிந்து ஆங்கில நாளிதழ் இளவரசர் பிலிப் சென்னைக்கு  இரண்டுமுறை வந்திருக்கிறாராக்கும் என்று பீற்றிக்கொள்கிறது.

மீண்டும் சந்திப்போம்  

சண்டேன்னா மூணு! #அரசியல் #அராஜகஅரசியல் #காமெடிஅரசியல்

பொதுவாக ஊடக விவாதங்களில் அடிக்காத குறையாக, குரலை மட்டும் உயர்த்திப் பேசுகிற SP  லட்சுமணன் போன்ற ஆசாமிகளை நான் அதிகம் சட்டை செய்ததே இல்லை. தான் சொல்வதுதான் சரி என்கிற மாதிரி ஒரு அதிகாரத்தொனியுடன் பேசுகிறவர்களை வேறென்ன தான் செய்வதாம்? ஆனால் இந்த 27 நிமிட வீடியோவில் லட்சுமணன் தன்னுடைய அஜெண்டாவில் இருந்து தமிழக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறார் என்பதை நன்றாக வெளிப்படுத்திய விதம் இங்கேயும் பகிர வைத்தது. 


முதலாவது, இங்கே இரு கழகங்களும் வலிமையோடு இருக்க வேண்டும், அப்படி  இருந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மாநிலக்கட்சிகளை உயர்த்துப் பிடிக்கிற உளுத்துப்போன ஒரு வாதம்! தேசியக்கட்சிகள் வேண்டாம் என்பது உட்கிடக்கை. அடுத்தது, பாமகவை தாஜா செய்ய வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செய்ததில் அதிமுக இதர பெரிய சமூகங்களுடைய கடுமையான அதிருப்தி, எதிர்ப்பை சம்பாதித்து இருப்பதாக. தேமுதிக வெளியேறியது டிடிவி தினகரன் தனித்துப்போட்டி இவையெல்லாம் அதிமுக வாக்குகளை பிரிக்கும் என்ற கருத்து இப்படியான விஷயங்களில் கொஞ்சம் தெளிவுடன் பேசுகிற மாதிரி கதம்பமான ஒரு நேர்காணல். மாநிலக்கட்சிகள் உருவாக, வளர்ந்ததற்கான காரணங்கள் எல்லாமே அடிபட்டுப் போனபிறகு, மாநிலக்கட்சிகளுடைய உபயோகம் முடிந்து விட்டதாகவே நான் பார்க்கிறேன். உங்களுடைய கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்!


கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு ஜோதிமணி அரசியல் செய்கிற விதமே தலைகீழாக மாறிப்போய் விட்டது.அம்மணியின் ஆட்டத்தால் சத்தியமூர்த்தி பவனே அதிர்ந்துபோய்க் கிடப்பதில் "கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித் தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கொதித்திருக்கிறார் கோபண்ணா 

ஏற்கெனவே சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக MLA கு க செல்வம் பிஜேபியில் ஐக்கியமான நிலையில் இன்றைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக MLA டாக்டர் சரவணனும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் என்கிறது செய்தி. அரசியலில் இந்தமாதிரி காமெடிகள் சகஜம், செந்தில் மாதிரி காமெடியன்களும் அரசியலுக்கு வந்து சேருவது  காமெடிக்கொடுமை. என்னென்ன காமெடிகளை இனிமேலும் பார்க்கப்போகிறோமோ?    

படித்ததில் பிடித்தது: 

இந்தியா டுடேவின் "south conclave"ல் நேற்று (3/13/21) மூன்று நேர்காணல் தொடர்ச்சியாக நேரலையில் காண நேர்ந்தது. மூன்று தமிழர்கள். ஒருவர் திராவிடத்தின் போர்வாள். மற்ற இருவரும் பிஜேபியில் மத்திய அமைச்சர்கள். 

திராவிடத்தின் போர்வாள், உள்ளே வந்ததும் அவருக்கு ராஜ மரியாதை கொடுக்கப் பட்டது. கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டு போய் உட்கார வைத்து "அடுத்த முதல்வர் நீங்கள் தான்" என்ற ஏத்திவிட்டனர். அவரும் அது ஏதோ ஒரு தேர்தல் மேடைப் பிரச்சாரம் போல தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார். வழக்கமான "corruption commission collection" என்ற உலகப்புகழ் பெற்ற வாக்கியத்தையும், "நான் ஆதாரத்தோடுதான் பேசுவேன்" என்றும் பேசினார். அதற்கப்புறம் நடந்த கேள்வி பதில்  "காந்தகண்ணழகி, இந்தா இங்கே பூசு" வகை. மூன்றே மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. மூன்றும் "அடுத்த முதல்வர் நீங்கதான். என்ன செய்வீங்க" என்று தும்பைப்பூவால் வருடி விடும் கேள்விகள். 

வலிமையற்ற தோளினாய் போ போ போ, மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ என்று பாடத் தோன்றியது.

அடுத்து வந்தவர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர். What a change! Night watchman அவுட் ஆகி விட்டு போனபின் சச்சின் டெண்டுல்கர் ஆட வந்தது போல இருந்தது இவர்கள் இருவரும் கேள்விகளை கையாண்டது. அவர்களின் திட்டத்தை எவ்வளவு அழகாக விவரிக்கின்றனர்! திட்டமிடல் at its best. அதை விவரிக்கும் திறன் அதனினும் அருமை.நிர்மலா சீதாராமன், தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும், தொழிற்சாலைகளுக்கான முதலீடு பற்றியும் மற்ற சிக்கலான விஷயங்களையும் அனாயாசமாக பேசிக்கொண்டிருந்தார். இப்படி ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக மோடிக்கு பெரிய நன்றி.

அடுத்து வந்தவர் வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கர். ப்ப்பா என்ன தெளிவு, என்ன துணிவு. சீனாவுடனான சண்டை பற்றி பேசுகையில் "அவர்கள் கை கொடுத்தா நானும் கை கொடுப்பேன், கை ஓங்கினா கையை எடுப்பேன்" என்பதை ஆங்கிலத்தில் "if you extend your hand I will shake hands . But if you point a gun at me, I will pull my gun. That is logical., isnt" அதிரடியாக சொன்னார். "இந்த நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று எல்லைக்கு வெளியில் இருந்து, அவர்கள் வசதிக்காக, சொல்வதை ஒருநாளும் கேட்க மாட்டோம்" என்று சொல்லும்போது பாரதியின் "வெற்றி கொண்ட கையினாய் வா வா வா விநயம் நின்ற நாவினாய் வா வா வா" என்று பாடத்  தோன்றியது.மறுபடியும், இப்படி ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக மோடிக்கு பெரிய நன்றி.What a contrast between the two sets of leaders! 

தந்தை, மகன் பேரன் என்று தலைவர்களை ஒரே முகவரியில் இருந்து கொடுக்கும் கட்சிக்கும், மூலை முடுக்கெல்லாம் நல்ல திறமையைத் தேடி, தகுதிக்கு மதிப்பு கொடுக்கும் கட்சிக்கும் எத்தனை வித்தியாசம். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். தமிழரின் பெருமை நிர்மலா சீதாராமன் மற்றும் S .ஜெய்ஷங்கர் வகை மட்டுமே. அப்பன் பெயரை சொல்லி பதவிக்கு வருபவர்கள் அல்ல. 

ஒழியட்டும் மன்னராட்சி! நிமிரட்டும் தமிழகம்! என்று முகநூலில் புளகாங்கிதப்பட்டிருக்கிறார் எஸ் சண்முக நாதன்

மீண்டும் சந்திப்போம்.

மம்தா பானெர்ஜி நாடகம்! தேமுதிகவின் தற்கொலை முயற்சி! நாம் தமிழர் கட்சி சீமான்!

தோற்று விடுவோமோ என்கிற பயம் வரும் போதெல்லாம் அரசியல்வாதிகள், தங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகம் நடத்துவது, நம்மூர் அரசியலின் வாடிக்கையாகிப்போன வேடிக்கை. லேட்டஸ்ட்டாக அந்த நாடகத்தை நடத்தி அனுதாபம் தேட முயற்சித்திருப்பவர் வங்கத்தின் பெண்புலி என்று சொல்லிக்கொள்கிற மம்தா பானெர்ஜி. நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் 18 கோவில்கள் மற்றும் ஒரு மசூதிக்கு விசிட் அடித்திருக்கிறார். முதல்முறையாக தன்னுடைய பிராமண அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டது பலவீனத்தின் முதல் அடையாளம். அதேமூச்சில், ஒரு தாக்குதல் நாடகமும் நடத்திக் கொண்டது மிக வினோதம்.


வீடியோ 21 நிமிடம். "தாக்குதல் நடந்ததாக கூறி மக்களிடம் அனுதாபம் தேட முதல்வர் மம்தா பானர்ஜி முயலுகிறார். தாக்குதல் முயற்சி, சதி திட்டம், கொலை முயற்சி இது எல்லாமே தோல்வியின் வெளிப்பாட்டை காட்டுகிறது. அந்நேரத்தில் போலீஸே இல்லை என மம்தா பானர்ஜி கூறுவதை கேட்டால் சிரிக்கதான் தோன்றுகிறது. தேர்தல் வெற்றி பெற முடியாத நிலையில் அதனை மறைக்கவே இதுபோன்ற நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்".என்று கிண்டலாகச் சொல்கிறார்  சோனியா காங்கிரசின் அதிர் ரஞ்சன் சவுத்ரி. 


"Not even one Police official was present. 4-5 people intentionally manhandled me in presence of public. No local police present during program not even SP. It was definitely a conspiracy. There were no police officials for 4-5 hrs in such huge public gathering" says WB CM இது ANI twit. மம்தா சொல்வது நம்புகிற மாதிரியா இருக்கிறது?

இதுவும்கூட பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த உத்திதானோ? இங்கே தமிழகத்திலும் இப்படி ஒரு மலினமான ஸ்டன்ட் அரங்கேறுமோ?  


கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கும் கூட களம் எப்படி யதார்த்தம் எப்படி என்பது புரிந்திருப்பது மிக மிக ஆச்சரியம்! 

ஆனால் ரங்கராஜ் பாண்டேவுக்குத் தன்னை அரசியலில்  முதிர்ச்சியான சாணக்யனாகக்  காட்டிக்கொள்வதில் அங்கங்கே கொஞ்சம் சறுக்கல் ஏற்படுகிறதோ? 

ரங்கராஜ் பாண்டே தேமுதிகவின் தற்கொலை முயற்சி பற்றி விளக்கும் 45 நிமிட வீடியோ. மனைவி, மச்சான், மக்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது எத்தனை சத்தியமான வாக்கு! ஆனால், பாண்டே கொஞ்சம் சொன்னதையே திருப்பிச் சொல்லி அறுக்கிறார் என்று முகநூலில் ஒரு கமென்ட் பார்த்தேன். அரசியல் என்றாலே ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப பேசுவது, செய்வது தானே!   


என்னய்யா இது.. பாவம் ஏதோ ஒளறிகிட்டு அலையுதுன்னு பார்த்தா.. Narayanan Swaminathan ஜி.. பொசுக்குன்னு முழுசா மரை கழண்ட கேஸு.. அடுத்த படிய ஹாஸ்பிடலில் அடமிட்தான் பண்ணனும்... இல்லைன்னா துணியை கிழிச்சுண்டு அலையும்னு சொல்லிட்டாரு..? என்று முகநூலில் அதிசயிக்கிறார் திருமதி எஸ்.பிரேமா.  .

_________________

ஒரு மருத்துவ நண்பர் சொன்னார் சீமானுக்கு இருப்பது mythomania என்ற வியாதி.. 

பொதுவாக எல்லா மனிதர்களும் எப்போதாவது தேவை ஏற்படும் போது ஒன்றிரண்டு பொய்கள் சொல்வது சாதாரணமானது தான். ஆனால் தேவையே இல்லாமல் தான் பேசும் எல்லா விஷயங்களிலும் பொய் கலந்து பேசுவது என்பது ஒரு மனோவியாதி. இவர்களை pathological liar என்பார்கள்.இவர்களால் பொய் கலக்காமல் பேசவே முடியாது. Klepto mania என்று திருடும் வியாதி உண்டு.. பணக்கரர்களாக இருப்பார்கள்.. ஆனால் சின்ன சாக்லேட்டை திருடுவார்கள்.. அதை காசு கொடுத்து வாங்க முடியும். ஆனால் அந்த திருட்டுத்தனம் தரும் த்ரில் அதனால் சுரக்கும் ஹார்மோன்களுக்கு அடிமையாக இருப்பார்கள். 

அதே போலத்தான் ரசிகர்கள் அடிக்கும் விசிலுக்கும் கைதட்டலுக்கும் அது கொடுக்கும் போதைக்கும் அடிமையாக ஆகிவிட்டார் சீமான்.. அதனால் ஓரிருவர் இருக்கும் பேட்டியில் கூட பொய் பேசாமல் அவரால் இருக்க முடிவதில்லை.. ஒரே பொய்யை சொன்னால் அதே ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை எனும் போது புதிது புதிதாக பொய்களை இட்டு கட்டுகிறார்.. இது முற்றிப்போனால் மனநல மருத்துவமனையில் சேர்ப்பது தான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார்.

Google செய்து  கிடைத்த தரவுகளை பார்த்தால் பத்து பொருத்தமும் அப்படி பொருந்துகிறது..!

மீண்டும் சந்திப்போம்.  

சண்டேன்னா மூணு! #அரசியல் #தேர்தல்காலஅரசியல் #முடிவேஇல்லாதகாமெடி

2021 தேர்தல் களத்தில் தமிழ்நாட்டின் தனித்துவம் இப்படி ஆக இருக்கிறது::: நாம் தமிழர் கட்சிக்குள் RSS புகுந்து விட்டதாக அமீர் கூறியதை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியில் ஹிந்து முன்னனி புகுந்து விட்டதாக தினகரனும் மக்கள் நீதி மய்யத்தில் பஜ்ரங் தள் புகுந்து விட்டதாக திருமா வளவனும், வைகோவுக்குள் விஸ்வ ஹிந்து பரிஷத் புகுந்து விட்டதாக சீமானும் கூறினார்கள்.தொடர்ந்து அதிமுகவுக்குள் சங் பரிவார் அமைப்புகள் புகுந்து விட்டதாக ஸ்டாலினும், திமுகவுக்குள் பாஜக புகுந்து விட்டதாக சவுக்கு சங்கரும் கூறினார்கள்.ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் என்ன புகுந்தது என்று எனக்கே தெரியவில்லை என்று அறிவாலய வாசலில் கையில் பட்டியலுடன் நின்று கொண்டிருந்த KS அழகிரி கண்ணீர் மல்க கூறினார்! நிஜந்தானோ என மயங்க வைக்கிற ஒரு பகடியுடன் சண்டேன்னா மூணு பக்கங்களில் தொடரலாமா? நன்றி சிவா! via FB


சீமானின் நாம் தமிழர் கட்சி ஒன்றைத்தவிர, தனிக்கட்சி ஆரம்பித்து போணியாகாத சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தலைமுறை சேனலின் ரவி பச்சமுத்து நடத்தும் IJK , அப்புறம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், கலாம் பெயரை வைத்துக் கட்சி ஆரம்பித்து நடத்த முடியாத பொன்ராஜ் என்று ஒரு சிறுகும்பல் கமல் காசரோடு கைகோர்த்துக் கொண்டு, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்துவிட்டார்கள் என்பது நிகழ் நேரக்காமெடி! இவர்களோடு இன்னும் சில உதிரிகள் வந்து சேரலாம் என்கிறார்கள்! இந்த லட்சணத்தில் "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள், நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என கமல் காசர் ட்விட்டரில் கொதித்து எழுந்தாராம்!  காலக்கொடுமை! வேறு சொல்வது?


பிரதமர் நரேந்திர மோடி கொல்கொத்தா பிரிகேட் மைதானத்தில் இன்றைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருக்கிறார். சினிமா நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் MPயாக இருந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி பிஜேபியில் சேர்ந்து விட்டார்.நரேந்திர மோடி இங்கே பேசிக் கொண்டிருக்குவிலை உயர்வுக்கு ம் அதேவேளையில் சிலிகுரியில் மம்தா பானெர்ஜி, சமையல் கேஸ் விலாய் உயர்வுக்கு எதிராக பாதயாத்திரை ஸ்டன்ட் நடத்திக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், மம்தா பானெர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும்.இடையிலான தேர்தல் யுத்தம் களைகட்டுகிறது என்று யாரோ சொன்னார்கள்! இங்கே தமிழகம் மாதிரி அழுது வடியவில்லை!

'தங்கக் கடத்தலில் கேரள முதலமைச்சர், அவருடைய மூன்று கேபினட் சகாவுகள், சட்டசபை சபாநாயகர் அன்றைய தனிச் செயலாளர் ஆகியவர்கள் நேரடியாகத் தொடர்புள்ளவர்கள்."சொப்னா சுரேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலம். கேரள அரசியலில் நிறைய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலே வீடியோ 21 நிமிடம்.
கேரளத்தில் கூட தேர்தல்களம் சூடேறிவிட்டது.

மீண்டும் சந்திப்போம்.

2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வழி) கேரளா!

திமுக கூட்டணியுடன் இணைந்து மதச்சார்பற்ற போராட்டம் (??), தமிழக நலனுக்காக (??)போராடிய காங்கிரஸை தற்போது சில சீட்டுகளுக்காக நடத்தும் விதத்தை நான் இதுவரை சந்தித்ததே இல்லை என கே எஸ் அழகிரி கண்கலங்கியதாக இந்துதமிழ்திசை நாளேடும் சேர்ந்து கலங்குகிற காமெடியோடு இன்றைய பதிவை ஆரம்பித்து விடலாமா?


சிலநாட்களுக்கு முன் கமல் காசருக்குப் பகிரங்கமாக அழைப்பு விட்டுக்கொண்டிருந்த இதே கே எஸ் அழகிரி  நேற்றைக்கு மூன்றாவது அணியின் மீதே  நம்பிக்கையில்லை என்று சொல்லியிருந்தது ஞாபகம் இருக்கிறதா? இந்த லட்சணத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்கிறதா காங்கிரஸ் என்று இந்து நாளேடு செய்திக்குத் தலைப்பிட்டிருப்பது கூடுதல் வேடிக்கை! 

ஆயிரம் ஆனாலும் பாவம்தான் காங்கிரஸ் கட்சி ! பழ கருப்பையா சமீபத்தில் மக்கள் நீதி மையம் நிகழ்ச்சியில் புதுச்சேரியில் காங்கிரஸ் எம் எல் ஏ களும் திமுக எம் எல் ஏ ஒருவரும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேஷ்டியை உருவி கோமணத்துடன் நிற்க வைத்து விட்டார்கள் என்றார் ! அங்குதான் அப்படி என்றால் இங்கு அந்த கட்சிக்கு ஆட்சியை பிடிக்கும் பேராசை எல்லாம் கிடையாது ! பாவம் எதோ 41 சீட் கேட்டு கடைசி கடைசியாக 27 சீட்டாவது கொடுங்கள் திமுகவுடன் கெஞ்சி பார்த்தார்கள் ! அவர்களோ அரக்க மனதுடன் 18 மேல் ஒன்றும் கிடையாது இல்லை நஹி லேது என்று எல்லா மொழிகளிலும் சொல்லி விட்டார்கள் ! புதுச்சேரியிலாவது கோமணத்தோடு விட்டார்கள் தமிழ்நாட்டில் அதையும் உருவி அம்மணமாக தெருவில் நிற்க வைத்து விட்டார்கள் ! மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்ணீர் விட்டு மரியாதையை இல்லாமல் நடத்தினார்கள் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் வருந்தியதாக செய்திகள் வருகிறது ! காங்கிரஸ் இனியும் அங்கே கெஞ்சி நிற்பது சரியா ? நாட்டையே பல காலம் ஆண்ட கட்சி ! அதற்கே இப்படி ஒரு நிலையா ? இந்த நிலைக்கு இந்திரா காந்தி முதல் இப்போதுள்ள ராகுல் வரை எல்லோருமே காரணம்! என்று இதே செய்தியை முகநூலில் மிகவும் சோகமான தொனியில் நக்கல் செய்து எழுதியிருக்கிறார் விஜயன் கோதண்டராமன்! ஸ்டேன்லி ராஜன் வேறு அவர் பாணியில் செம பகடி செய்கிறார்


ராகுலைக் கூட்டிவந்து டான்சாட விட்டு, தண்டால், push ups எல்லாம் எடுக்கவிட்டு பாதிரிமார்கள் ராகுல் ராகுல் என்று அல்லேலூயா கூவுகிற மாதிரிக் கூவியதில் கிடைக்காத ஆதரவு, அனுதாபமெல்லாம் கே எஸ் அழகிரி கண்ணீர் சிந்திய செய்திக்கு மிகப்பரவலாக வருவதைப் பார்த்தால் எனக்கும் ......! 😅😂😂


மல்லுதேசத் தேர்தல் களத்தைப்பற்றியும் கூட விரிவாக இங்கே எழுத ஆசைதான்! உள்ளூரக்கதையில் ஆசை இருக்கிற அளவுக்கு அடுத்தவீட்டுக் கதையில் ஆர்வம் இருக்குமா என்கிற தயக்கமும் இருக்கிறது. என்ன செய்ய? கொஞ்சம் யோசனைகள் வரவேற்கப் படுகின்றன!


"நாங்கள்தான் மாநிலத்தில் முதன்முதலாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளோம். இந்த முறை 291 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் 50 பெண் வேட்பாளர்கள், பட்டியலினத்தவர்கள் 79 பேர், பழங்குடியினர் 17 பேர், 42 முஸ்லிம் வேட்பாளர்கள் என 291 பேர் போட்டி இடுகின்றனர்.எங்கள் கூட்டணிக் கட்சியான கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கியுள்ளோம். டார்ஜ்லிங், கிலம்பாங், குர்சியாங் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்று அறிவித்த மம்தா பானெர்ஜி எத்தனை சிட்டிங் MLAக்கள் இந்தமுறை கழற்றிவிடப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை சொல்ல மறந்துவிட்டார்.  வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவித்துவிட்டால் மட்டும்? ஜெயித்துவிடமுடியுமா என்ன? 

முன்பாக, பவானிபூர், நந்திகிராம் என இருதொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று சொன்ன மம்தா இப்போது செம தில்லுடன் நந்திகிராம் தொகுதியில் மட்டுமே போட்டியிடப் போகிறாராம்!   மேற்குவங்கத்தில் தேர்தல்களம் சூடாகியிருக்கிற அளவுக்குத் தமிழ்நாடு இன்னமும் சூடேறவில்லை என்கதைக் கவனிக்கிறீர்கள்தானே? மீண்டும் சந்திப்போம்.

ஒரு புதன்கிழமை! சசிகலா ஒதுங்குகிறார்! சுதீஷ் கிச்சுகிச்சு! கூட்டணி உதிரிகள்!

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி VK சசிகலா இந்தத் தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்று ஆளுக்காள் எதையெதையோ  குழப்பிக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்று ஒரு அறிக்கை விட்டு, திமுகவினரது எதிர்பார்ப்பில் மண்ணைப் போட்டிருக்கிறார். ஒதுங்குவது தற்காலிகமாகவா அல்லது நிரந்தரமாகவா? எதுவானாலும் எடப்பாடியார் எடுத்த கறாரான முடிவுக்கு பிஜேபியும் சரியென்று சொல்லிவிட்டது போல!  


டிடிவி தினகரன் நன்றாக சமாளிக்கிறார். எழுத்தாளர் மாலன் சாணக்யா சேனலில் சசிகலா ஒதுங்குவது தற்காலிகமானதுதான் என்று சொல்லிக்  கொண்டு இருக்கிறார். இன்றைய ஊடகவிவாதங்கள் வீணாகப் போனதுதான் மிச்சம்! ஊடகங்களுக்கு அறமும் இல்லை, வெட்கமும் இல்லை என்பது தெரிந்த விஷயம்.


தேமுதிகவின் துணை செயலாளர் / விஜயகாந்தின் மச்சான் எல் கே சுதீஷ், கொஞ்சம் அதிகப்படியாகவே உளறியிருக்கிறார். விஜயகாந்த் வளர்த்த கட்சியை பொருளாளர் பிரேமலதாவும் அவருடைய சகோதரர் சுதீஷும் சேர்ந்து முடிவுரை எழுதாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.


திமுக கூட்டணியில் இருக்கும் உதிரிக்கட்சிகளுக்கு அவர்களுடைய இடம் என்ன என்பதை திமுக தலைமை பூடகமாக உணர்த்திவிட்டதுபோல! காங்கிரஸ் உட்பட எல்லா உதிரிகளுக்கும் சீட் ஒதுக்குவதில் கறாராக இருக்கும் திமுக தலைமையை எதிர்த்துப் பேச முடியாமல், மாற்றுவழியை யோசிக்கமுடியாமல் தவிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

சுயமரியாதையோடு வெளியே வருகிற தைரியம் எந்த உதிரிக்கட்சிக்கும் இல்லை! ஒட்டுண்ணியாக இருந்தே காலம் தள்ளுவதற்காகவே கட்சிநடத்துகிறவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? பெரிதாகப் புரட்சி கிளர்ச்சி எதுவும் இருக்காது என்பது தெரியுமில்லையா?

2021 தேர்தல் களத்தில் சுவாரசியங்கள் கூடிக்கொண்டே வருகிறது! மீண்டும் சந்திப்போம்.    

சண்டேன்னா மூணு! #பாமகஅரசியல் #ராகுல்அரசியல் #திமுகஅரசியல்

தமிழக அரசியலில் உதிரிக்கட்சியாக மட்டுமே இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வேறென்ன சாமர்த்தியங்கள் இருக்கிறதோ தெரியாது! கூட்டணி பேரம் பேசுவதில் மிக சாமர்த்தியசாலிகள்! தேர்தலில் வெற்றிபெற்று ஆதாயம் பெறுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்! கூட்டணி பேரம் ஒன்றிலேயே அதிக ஆதாயம் பார்க்கிற சாமர்த்தியம் உள்ள கட்சி இங்கே பாமக மட்டும் தான்! எல்லாப்புகழும் ஆதாயமும் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே என்றால் நம்புவீர்களா?


நாளை முக்கியமான முடிவெடுக்கப்போவதாக அவசர நிர்வாகக்குழு கூடுவதாக அறிவித்திருந்ததை ஒரு வாரம் தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்! பேரம் படிந்து விட்டதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! அதிமுகவுடன் பேரம் பேசிக்கொண்டே, திமுகவுடனும் பேசுகிறார்கள்! 2016 இல் இப்படித்தான் தேதிமுகவின் பிரேமலதாவை இரண்டுபக்கமும் ஊசலாடவிட்டு,  திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரைமுருகன் நன்றாக வைத்துச் செய்தது போல, இப்போது பாமகவுக்கும் நடந்தால் மிக நன்றாகத்  தான் இருக்கும்! நடந்தேற வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோமே!


தேமுதிக இந்தமுறை முந்திக்கொள்ளப் பார்க்கிறது என்பதில் சென்ற முறை பாமக முந்திக்கொண்டு தேவையானதை வாங்கிக் கொண்டது, தேமுதிக பின்தங்கி கொடுத்ததை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில் ஒட்டிக் கொண்டது மாதிரி ஆகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை தெரிகிறது. ஆனால் தேவையே இல்லாமல் சசிகலாவைப் பற்றி ஏன் பேசினார்?    


ராகுல் காண்டி தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் விஜயமாக வந்திருக்கிறார். தமிழகத்துக்குப் புதிய ரட்சகனாகத் தன்னை அறிவித்துக்கொண்டு தேர்தல் பரப்புரை செய்ய ஆரம்பித்திருப்பதில் மறந்துபோய்க்கூட இசுடாலின் பெயரையோ திமுக கூட்டணியைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. என்ன சோகமோ என்ன உள்குத்தோ? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? கேவி தங்கபாலு மொழிபெயர்க்க வராதது பெருங்குறை! 


திமுகவின் நிரந்தரக் காமெடியன் துரை முருகன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்காமல் பதிவை முடித்து விடமுடியுமா? கையில் ஊசி, வேல் என்று எதுவும் இல்லாமலேயே குத்துகிற கலை தெரிந்தவர். இசுடாலின் கையில் வேலைக் கொடுத்துவிட்டால் மட்டும் ......? என்!று கேட்கிற மாதிரியே இல்லை! *இப்போதாவது, தனித்துப் பிரசாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டு-என்றும் சேர்த்தே சொல்லியிருப்பது துரை முருகனுடைய பிரத்தியேகமான லந்து!

மீண்டும் சந்திப்போம்.