இட்லி வடை பொங்கல்! #79 பிரசாந்த் கிஷோர்! ஒரு கார்டூன்! ஒரு மரணம்!

IPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருக்குத் தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை இன்று இணையத்தில் அவர் பஹத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒரு உரையாடல் பெரும் கவனத்தையும் சர்ச்சையையும்  ஒருசேர ஈர்த்திருக்கிறது.வீடியோ 16 நிமிடம்.  கிளப் ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று விஷயங்களை ஒப்புதல் வாக்குமூலம் மாதிரிச் சொல்லி இருக்கிறார். பிஜேபியின்  அமித் மாளவியா  !.Modi is hugely popular in Bengal and there is no doubt about it. There is a cult around him across the country.  2.There is anti-incumbency against TMC, polarisation is a reality,3. SC votes is a factor plus BJP’s election machinery, says Mamata Banerjee’s strategist in an open chat. என்று கீச்சியிருப்பது ட்வீட்டரில் பரபரப்பாக இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. லிங்கில் பிரசாந்த் கிஷோர் பேசியதன் ஆடியோ இருப்பதைக் கொஞ்சம் கேளுங்கள் 


"Suvendu is not a factor. Hindus, schedule caste, Dalit and Hindi speaking population are the key factors. Around 50-55 per cent of Hindus are voting for BJP. There are around one crore Hindi speaking population in West Bengal. Matuas will predominantly vote for the BJP. When we made a survey and asked people whose government will be formed in Bengal. The outcomes predominantly come in favour of the BJP. In-ground there are workers of BJP," என்று பிரசாந்த் கிஷோர் பேசியிருப்பது ஆடியோவில் இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் ஆடியோவை மறுக்க ம்முடியாமல் முழு ஆடியோ உரையாடலையும் வெளியிடுமாறு பிஜேபிக்கு சவால் விடுத்திருக்கிறார் . மடியில் கனமில்லை என்றால் முழு ஆடியோவையும் அவரே வெளியிட வேண்டியது தானே! மேற்கு வங்கத்திலேயே அப்படி என்றால் இங்கே தமிழ் நாட்டில் பிரசாந்த் கிஷோருடைய உத்திகள் என்ன மாதிரித் திரும்பப்போகிறதோ? இப்படி யோசனை ஓடுவது இயல்புதான் இல்லையா!  


சிச்சோறு வீரமணி என்று மு க அழகிரி மகனால் நாம கரணம் செய்யப்பட்டவரும் சரி, காசுக்குச் சோரம் போன தமிழக ஊடாகங்களும் சரி . இப்படித்தான் திமுகவில் கட்டுண்டு கிடக்கிறார்களோ? முகநூலில் இருந்து கார்டூனிஸ்ட் அமரன் வரைந்த படம்.   

*******

ளவரசர் பிலிப் என்றழைப்பதா எடின்பர்க் கோமகன் என்றழைப்பதா என்று நேற்றிலிருந்து ஒரே குழப்பம்! ஏனென்றால் பிரிட்டிஷ் அரச குடும்பத்தவர்களுக்கு அளிக்கப்படும் பட்டங்களெல்லாம் நம்மூர் கலீஞர் டாக்டர் கலீஞர் ஆனமாதிரி அர்த்தமற்றவை என்பது தான்  வரலாறு. மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் நேற்று மதியம் காலமானார் என்பது வெறும் செய்தி மட்டுமல்ல. இல்லாத ராஜாங்கம், இல்லாத பிரபுத்துவம், இல்லாத பழம்பெருமை இப்படி ஏகப்பட்ட இல்லாத விஷயங்களை இன்னமும் இருக்கிற மாதிரியே காட்டிக் கொள்வது தான் பிரிட்டிஷ் வரலாறு என்பதைப் புரிந்து கொள்ள முடியுமானால் போலித்தனமே பிரிட்டிஷ் காரர்களுடைய தொட்டுத் தொடரும் ஒரே பாரம்பரியம் என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதே இல்லை,  


வீடியோ 16 நிமிடம். அசந்தர்ப்பமான உளறல்களுக்குப் பெயர்போன இந்தப்பிரபலத்துக்கு வயது 99 இன்னும் இரு மாதங்கள் இருந்திருந்தால் 100 ஐத் தொட்டிருப்பார் பிரிட்டனில் 100 வயதைத் தொடும் குடிமக்களுக்கு ராணியிடமிருந்து வாழ்த்துச் சொல்லி ஒரு தந்தி வருமாம்! இறந்துபோன பிலிப் மட்டும் நூறைத் தொட்டிருந்தால் ராணி அவருக்கு எப்படி வாழ்த்துச் சொல்லியிருப்பார்?  By custom, every British citizen who attains the age of a hundred receives a congratulatory telegram from the Queen. But what happens if the Queen happens to be your wife? Would she have handed the telegram to Philip at breakfast, reaching shyly over the marmalade? Or, as a stickler for tradition, would he have had to stand by the front door and wait for the arrival of the mail, like everyone else? Alas, we shall never know. என்று உருகுகிற இந்தச் செய்தி இன்னும் சில விவரங்களையும் சேர்த்தே சொல்கிறது. 

நம்மூர் ஹிந்து ஆங்கில நாளிதழ் இளவரசர் பிலிப் சென்னைக்கு  இரண்டுமுறை வந்திருக்கிறாராக்கும் என்று பீற்றிக்கொள்கிறது.

மீண்டும் சந்திப்போம்  

8 comments:

 1. பிரஷாந்த் கிஷோர் எதற்கு ரெகார்ட் செய்து வைத்திருக்கப்போகிறார்? அவருக்கு மடியில் கனமில்லை என்பதால், எதிரணியை முழு ஆடியோவையும் வெளியிடுமாறு சொல்கிறார் என்றே நினைக்கிறேன். அவர் கட்சி சார்ந்தவர் கிடையாது. அவர் மம்தாவிற்காக இந்தத் தேர்தலில் வேலை பார்க்கிறார்.

  நம்ம ஊரிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகை என்று போடுங்க. அது ஏதோ நம்ம நாட்டுக்காக செயல்படும் பத்திரிகை மாதிரி நீங்க போட்டிருப்பது அர்த்தமாகிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாதப்படி பிரசாந்த் கிஷோர் தன பேசியத்தைப்பதிவு செய்யவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், பதிவு செய்தவர்களிடமிருந்து வாங்கமுடியுமே நெல்லைத்தமிழன் சார்!

   பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் சார்பு இல்லை என்று சொல்வதும் திமுகவினர் கோடிகோடியாய் செலவுசெய்து தேர்தலில் நிற்பது பொதுச்சேவை செய்வதற்காகத்தான் என்பதை நம்புவதும் ஒன்றுதான்!

   //நம்மூர் ஹிந்து ஆங்கில நாளிதழ்// தெளிவாகத்தானே இருக்கிறது?

   Delete
  2. அத்திப் பழத்தைப் பிய்த்துப் பார்த்தால் அத்தனையும் சொத்தை..

   அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்து விட்டார்கள்..

   Delete
  3. பிரசாந்த் கிஷோர் என்ற தனி மனிதனுக்கு அரசியல் எண்ணங்கள் இருக்கலாம். ஆனா அவர் தொழிலுக்கு அது இருக்காது.

   நாட்டைத் துண்டாடி, தவறுகள் செய்தாவது தன் கட்சிக்காரனை வெல்ல வைக்க வேணும் என்ற போக்கு ஆபத்தானது. வக்கீல்களும், தனியார் பள்ளி, மருத்துவ மனைகளும் அதைத்தானே செய்கின்றன

   Delete
  4. அப்படி அத்தனையும் சொத்தைத்தான் என்றுஒரேயடியாகத் தள்ளிவைத்துவிடுவது சாத்தியமா துரை செல்வராஜூ சார்?

   தேர்தல் ஜனநாயகத்தில் ஆகக் கம்மியான சொத்தையைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் மட்டுமே நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பிரச்சினை, எது எவ்வளவு சொத்தை என்பதை பார்த்துப்பார்த்து,கம்மியான சொத்தையைத் தேர்ந்தெடுக்க நாம் முனைகிறோமா அல்லது வாளாவிருக்கிறோமா என்பது மட்டும்தான்!

   Delete
  5. நெல்லைத்தமிழன் சார்!

   ஓட்டுப்பொறுக்குவதற்காக இங்கே காங்கிரஸ் மாதிரியான கட்சிகளே தேசநலனை மறந்து தேசியத்தையும் துறந்து பிரிவினை சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கையில், பிஜேபி ஒன்றுமட்டும் தான் தேசியம், தேசநலன் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பது கண்கூடு.

   நாட்டில் உள்ள எல்லா உதிரிகளும் பிஜேபியை எதிர்ப்பதை, தேசநலனுக்கு எதிரானது என்றே பார்க்கவேண்டியிருக்கிறது. பிரசாந்த் கிஷோர் போன்றவர்களுக்கு சந்தர்ப்ப வாத அரசியல் இருக்கிறது, அதைவைத்துக் காசுபார்க்கவும் தெரிந்திருக்கிறது!

   ஆனால் இதுமாதிரியான ஆசாமிகளிடம் நாம் மறுபடி மறுபடி ஏமாந்து கொண்டே இருக்கவேண்டுமா என்பதுதான் கேள்வி.

   Delete
 2. இரண்டாவது கார்ட்டூன் cute !

  ReplyDelete
  Replies
  1. விஜயபாரதம் இதழுக்காக வரைந்த படமாம் இது!

   முதல் கார்டூனுக்கு என்ன குறைச்சல்? OpIndia தளத்தில் பிரசாந்த் கிஷோர் ஆடியோ விஷயமாகச் சுடச்சுட செய்திக்கட்டுரைக்காக வரைந்த கார்டூன், எவ்வளவு எளிமையாக விஷயத்தை பார்ப்பவருக்குக் கடத்தி விடுகிறது!!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!