Showing posts with label வானம். Show all posts
Showing posts with label வானம். Show all posts

புதன்கிழமை! வானம்! பூமி! அரசியல்!

பா.ரஞ்சித் மீது நக்கீரனுக்கு என்ன கோபமோ தெரியாது!  வானம் கலை நிகழ்ச்சிக்கு ஜிக்னேஷ் - பா.ரஞ்சித் குத்து டான்ஸ்! என்று தலைப்பு வைத்து இருப்பதில் #உள்குத்து என்னவென்று புரிந்துகொள்ள முடிந்தவர்கள் பாக்கியவான்கள்!



அதெல்லாம் சரி! மனிதசமூகத்தின் மாபெரும் எதிரியான சாதியையும், மதத்தையும்  ஒழிக்கக் கூடிய ஒரேசக்தி பௌத்தம்தான் என்கிறார்களே! நம்மைச் சுற்றி புத்த மதத்தைப் பின்பற்றுகிற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டுதான் இப்படிப் பேசுகிறார்களா? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?


*******
திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டிருப்பது, இங்கே திராவிடக் கட்சிகளுக்கு மட்டும் கொஞ்சம் உதறலைக் கொடுத்திருக்கிறதோ?


யார் வேட்பாளர் என்பது நான்காம் தேதி தெரியும் என்று சொல்கிறார் ஸ்டாலின்! ஆனால் காசுக்கார வக்கீல் கபில்சிபலை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிற சாமானியன் யார்? வாக்காளரை விட கபில் சிபலையும் நீதிமன்றத்தையும்  நம்பியிருக்கிற அரசியல்கட்சி எது?  4ஆம் தேதிக்குள் அதுவும் தெரிந்துவிடுமா?  
  

திராவிடங்களின் இரட்டைநிலையை மேலே இரண்டு படங்களிலேயே சுருக்கமாகச் சொல்லி விடலாம் தான்! ஆனாலும் டிடிவி தினகரன் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கிற மாதிரி ஆகுமா? அதையும் பாருங்களேன்!

    

*******
இந்த இடைத்தேர்தல் பலவகையில் மற்ற கட்சிகளை விட திமுகவுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கும் என்கிறது ஹிந்து தமிழ் நாளிதழ் 

நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? சொல்லுங்களேன் !