Showing posts with label Creature of habits. Show all posts
Showing posts with label Creature of habits. Show all posts

தன்னையறியத் தனக்கொரு கேடில்லை!

 ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.


[I+pray+to+thee+guide+copy.jpg]
தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை இப்படிச் சொல்கிறார்.

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறதுஉதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோஏதோ ஒன்று தவறாகவோஅல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம்அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால்அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோவியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
 
அதே கேலிக்குரிய பழக்கம்தவறுஅல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போதுமிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.

நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல்அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்னஇவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆகநம்மிடம் இருக்கும் அழுக்குடன்அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதுயாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கைபேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போதுகேலி செய்யத் தோன்றும்போது, "என்னஅவர் அப்படி இருக்கிறாராஅப்படி நடந்து கொண்டாராஅப்படிச் சொன்னாராஅப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போதுஉங்களுக்குள்ளேயே சொல்லிப் பாருங்கள்!

நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயேஅப்படித் தான் செய்கிறேனோ என்னவோஅவரை விமரிசிப்பதற்கு முன்னால்என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு  "அதிர்ச்சியடையும் ஒவ்வொரு தடவையும்இதே மாதிரி நல்ல விதமாகவும்புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்நமக்குள் இருக்கும் அழுக்கு,பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால்அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாகமறைவாகஅல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்நம்மிடம் இருக்கும் குறை பெரிதாகதீமை இல்லாததாகத் தெரிவதுஅடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதிஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்துஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 

ஞாயிறு மாலை! திரும்பிப் பார்க்கிறேன்!

வழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே இன்றைய பகல் பொழுது முழுக்க ஓடி விட்டது. அதனால் 2009 இல் எழுதிய ஒரு பதிவையே,  இன்றைக்கும்  அங்கு சொல்லப்பட்ட விஷயம் பொருத்தமாக இருப்பதால்  இங்கு மீள்பதிவாக.

வால் நீளமாக இருப்பது நல்லது!


சேத் கோடின் எழுதியிருக்கும் இன்றைய பதிவைப் படித்துவிட்டு யோசித்துப் பார்க்கும் போது , இதுவரை புதுவருடத் தீர்மானங்களைப் பற்றிப் பேசிய விஷயங்களுக்கு, ஒரு சுவாரசியமான திருப்பம் தெரிகிறது.  கொஞ்சம் உறுதியோடு செயல்படுத்த முடிந்தால், ஒரு திருப்புமுனையையே எதில்வேண்டுமானாலும்  ஏற்படுத்திவிட  முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று பளிச்சிடுகிறது! 

கெவின் கெல்லி என்பவருடைய இந்தப் பதிவு, தன்னுடைய சிந்தனையைப் புரட்டிப் போட்டு விட்டது என்று சேத் கோடின் ஆரம்பிக்கிறார்.

ஆயிரம் நண்பர்ளை, உங்களைப் பின்தொடர்பவர்கள், உங்களுக்காக எது  வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்களாக உங்களால் பெற முடிந்தால், என்னென்னவோ சாதிக்க முடியும்! 

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஆயிரம் என்னென்னவெல்லாம் சாதிக்கும்?

உங்களை உண்மையாகவே பின்தொடரும் இந்த ஆயிரம் பேர், நீங்கள் எது சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்பார்கள், நீங்கள் என்ன கனவுகளை விற்க முயற்சித்தாலும் தயங்காமல் வாங்கிக் கொள்வார்கள். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான் என்று பாட்டுப் பாடாமலேயே உங்கள் பின்னால் வரத் தயாராக இருப்பார்கள்.

ஆக எந்த ஒரு பெரிய சாதனை, முயற்சி, வெற்றி என்று சொல்லப்படுவதற்குப் பின்னால், இந்த மாதிரி ஆயிரம் உண்மையான பின்தொடர்ந்துவரும் நண்பர்களைச் சம்பாதிப்பதில் தான் ஆரம்பமாகிறது. ஆயிரம் என்பது ஒரு எண்ணிக்கை. இப்படிப்பட்டவர்களை உங்களோடு இணைத்துக் கொள்வதில் இருந்துதான், அவர்கள் நீங்கள் காட்டும் பாதையை ஏற்றுக்கொள்வதும், உங்களோடு கூட வருவதுமான வெற்றிப் பயணம் ஆரம்பிக்கிறது. 

கெவின் கெல்லி தன்னுடைய பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார்:

"வால் நீண்டு கொண்டே போவது இரண்டு  விதமான தரப்பை ரொம்பவுமே மகிழ்ச்சியடையச் செய்யும். அதிர்ஷ்டக்காரர்களான சந்தையைக் கைப்பற்றுகிறவர்கள், சந்தையில் வாங்குகிறவர்கள் இப்படி இரண்டு தரப்பையுமே!"


வரப்புயர நீர்  உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!

இங்கே கெவின் கெல்லி சொல்வது தலை-வால் என்ற இரண்டு அம்சத்தைப் பற்றி! வேறு எதனோடும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இப்படி ஆயிரம் உண்மையான நண்பர்களைச் சம்பாதிப்பது, முடியக் கூடிய ஒரு விஷயம் தான்! ஒரு நாளைக்கு ஒன்று என்று ஆரம்பித்தால் கூட உங்களால், மூன்று வருடங்களுக்குள் இந்த இலக்கை எட்டி விட முடியும்.

அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகிற விதத்தில் உங்களுடைய தயாரிப்பு இருக்க வேண்டும்! இங்கே உதாரணத்துக்கு வலைப்பதிவுகளையே எடுத்துக் கொள்வோமே, அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வழியைக் காட்ட உங்களால் முடியும் என்றோ, அவர்களுக்கு பயன் படுகிறவிதத்தில் உங்களுடைய பதிவுகளை அவர்களை அடையாளம் கண்டு கொள்கிற மாதிரியோ ஆரம்பித்து, அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளவும் உங்களால் முடியுமானால், ஆயிரம் பேர் மட்டுமல்ல இன்னும் அதிகமாகவே உங்களைப் பின்தொடரத் தயாராக இருப்பவர்களாக மாற்ற முடியும்!

இப்படி உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். இந்த மாதிரி நண்பர்களை சந்தோஷப்படுத்துவதே கூட ஒரு சந்தோஷகரமான அனுபவமாகவும், வாழ்க்கைக்கு உயிரூட்டுவதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு செங்கல்லாகத் தான் அடுக்குமாடிக் கட்டடம் எழும்புகிறது. உண்மையான நண்பர்களைப் பெறுவதுமே கூட ஒவ்வொன்றாகத் தான் தொடங்குகிறது. சின்னச்சின்னத் துளிகளாகப் பொழியும் மழை, பெரு வெள்ளமாக மாறுகிறது!   பசுமை தழைக்க வழிசெய்கிறது! உயிர்கள் நிறைவு பெறுவதும், திருப்தியடைவதும் இப்படித்தான் ஆரம்பமாகிறது!

புது வருடத் தீர்மானங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்பது, உங்களுடைய உடனடித் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப் படும்போது தான், எதைத் தீர்மானிப்பது, எப்படிச் சாதிப்பது என்ற குழப்பம், ஏதோ ஒன்றுக்காக இன்னொன்றைத் தியாகம் செய்ய வேண்டிய சூழல் என்றெல்லாம்வருகிறது.

உண்மையான அணுக்கமான நண்பர்களை, ஒருவருக்கொருவர் உதவியாக, ஆதூரமாக, ஆதரவான வார்த்தைகளின் வழியாகவே பதிவுகளில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்கிறபோது, ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பை வளர்த்துக் கொண்டு, வசவுகள், காயம்பட்ட மனங்கள் என்று இருக்க வேண்டிய அவசியம் தான் என்ன? வாதங்கள் பிடிவாதங்களாக இறுகிப்போய் விடாமல், இளக்கம் வேண்டும்! இணையம்இதயங்கள் இணைவதற்காகவே!  

நல்ல எண்ணங்களை விதைத்தல், வெறும் கோஷமாகவோ உபதேசமாகவோ நின்று விடாமல், தமிழ்வலைப்பதிவுகளில் வளர வேண்டும் என்பது வெறும் ஆசையாக மட்டும் இருந்தால் போதுமா? வார்த்தைகளில் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே போதுமா?

செயல்படுத்தும் வாய்ப்பும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது! நம்மிடமிருந்தே  இந்த ஆயிரத்தில் ஒன்று ஆரம்பிக்கிறது!

சேத் கோடின் அதைத் தான் ஆயிரம் என்ன செய்யும் என்பதாகச்  சொல்கிறார்! முதலில் ஆயிரத்தைச் சம்பாதிக்க ஆரம்பிப்போம்!

     
பழசுதானே என்று அலுத்துக் கொள்ளாமல் கடைசிவரை படிக்க முடிகிறதா? உபயோகமாக இருக்கிறதா? 

 மீண்டும் சந்திப்போம். 

தன்னையறியத் தனக்கொரு கேடில்லை! மாறாக, பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிட்டால் ....?

..




வ்வொரு புத்தாண்டு தினமும் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் தரிசன நாள். ஸ்ரீ அரவிந்த அன்னை ஸ்தூல உடலில் இருந்த நாட்களில் ஆசிரமத்தில் இருந்த சாதகர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வருட காலண்டர்மற்றும் புத்தாண்டு செய்தியுடன் வாழ்த்து அட்டைஎப்போதும் போல அவரவர் பக்குவத்துக்கேற்ப மலர்கள் என்றுஅன்னையின் திருக்கரங்களாலேயே பெறுவார்கள்.


ஸ்ரீ அன்னையை ஆராதிப்பவர்கள்தவமிருந்து அவளுடைய செய்தியைஆசியைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் பொழுது இது.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.

[I+pray+to+thee+guide+copy.jpg]
தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்.

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறதுஉதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோஏதோ ஒன்று தவறாகவோஅல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம்அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால்அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோவியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
 
அதே கேலிக்குரிய பழக்கம்தவறுஅல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போதுமிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.

நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல்அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்னஇவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆகநம்மிடம் இருக்கும் அழுக்குடன்அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதுயாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கைபேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போதுகேலி செய்யத் தோன்றும்போது, "என்னஅவர் அப்படி இருக்கிறாராஅப்படி நடந்து கொண்டாராஅப்படிச் சொன்னாராஅப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போதுஉங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயேஅப்படித் தான் செய்கிறேனோ என்னவோஅவரை விமரிசிப்பதற்கு முன்னால்என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் ஒவ்வொரு தடவையும்இதே மாதிரி நல்ல விதமாகவும்புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்நமக்குள் இருக்கும் அழுக்கு,பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால்அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாகமறைவாகஅல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்நம்மிடம் இருக்கும் குறை பெரிதாகதீமை இல்லாததாகத் தெரிவதுஅடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதிஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்துஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 

மனித்தப் பிறவியும் வேண்டுவதே! இப்படி வீணாக்கிக் கொள்ள அல்ல!



புதுச்சேரியில் இருக்கும்  ஸ்ரீஅரவிந்தாசிரமம் வம்பர்களால் மட்டுமல்ல அன்பர்களாலும்கூட   மீண்டும் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப் படுவது புதிதல்ல என்பதை இந்தப்பக்கங்களில்  ஏற்கெனெவே எழுதியிருக்கிறேன் 

ஆனந்தவிகடனில் வா.மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் இந்த வம்புச் செய்தியையும் படிக்க நேர்ந்தது,அரவிந்தரும் அன்னையும் திரும்ப வந்தாலும் கூட அழிக்கவே முடியாத கறை!.என்று முத்தாய்ப்பாக உச்சுக் கொட்டி இருப்பதைத் தவிர இந்த செய்தியை எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே தளிவாக இல்லை. போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது மட்டும் எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம், அதுபோக சம்பந்தப்பட்ட சகோதரிகளே தங்களுடைய வலைப்பதிவுகளில் தொடர்ந்து ஆசிரமத்தைப் பற்றியும்  உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கடுமையாகச் சாடி எழுதிக் கொண்டிருந்ததை எல்லாம் இங்கே படிக்கலாம்,  இவர்களுக்காக ஆதரவுக்குரலென்ற போர்வையில் இங்கேயும்.  உண்மையைக் கண்டறியக் கொஞ்சமும்  அலட்டிக் கொள்ளாத வா.மணிகண்டனைப்போல, புதுச்சேரியில் உள்ள பெரியாரிஸ்டுகளும் ஆசிரமத்தின் மீதுள்ள வெறுப்பைக் கல்லெறிதல் முதலான வக்கிரங்களாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கிறது.  



இதற்கு முந்தைய புத்தக சர்ச்சையைப் போலவே இந்த விவகாரமும் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் வேண்டுமென்றே! . 

In spite of all the ill-saying and ill-doing never have the five sisters been denied food and accommodation –  until the legal case came to a close with the verdict, not of the Trustees, but of the Supreme Court.  They chose the Legal Way. Why did they not accept the Legal Verdict?
We all know that life is not such an easy matter to deal with. One part of us wants something, while another wants just the opposite. One part sees mostly the dark side of life, while another marvels at the miracle the Earth is. Sadly, the Prasad sisters tended to see more and more the dark side of their life here, and they ended in the dark. But why drag into this obscurity those who wish to live in the light?
To those who feel so unhappy here, so bitter, so negative, the world has still many wonderful things to offer. Instead of harming the life of others, and in the end their own, instead of wasting their lives in destructive criticism, the sisters could have gathered their self-respect and courage and begin a new life, build something, whatever it may be : a farm, a school, why not the ideal ashram of their dreams! The earth is vast, and there are countless opportunities to serve the Future. And Mother India. And Mother Earth. என்று இந்தப் பக்கங்களில்  சொல்வதையும் பார்த்தேன்.ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.
ஸ்ரீ அரவிந்த அன்னையின் செயலாளராக இருந்து  நிறைய  நூல்களை எழுதியவரான திரு எம் பி பண்டிட் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய ஒரு உரையாடலை இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே சுட்டியிருக்கிறேன். மாற்றம் என்பது தானாகப் பழுத்து வெளிப்பட வேண்டியது. எவரும் எவர்மீதும் திணிக்க முடியாதது, இறைவனும் தன்னுடைய விருப்பத்தைத் தன்னுடைய சிருஷ்டி மீது திணிப்பதில்லை.  
தன்னை முதலில் மாற்றிக் கொள்ளத்தயாராக இல்லாதவர்களால் கொஞ்ச நேரப் பரபரப்புச் செய்தியாகமட்டுமே இந்த சகோதரிகளைப் போல யாருடைய கைப்பாவையாகவோ இருக்க  மட்டுமே முடியும் என்பதுதான் பரிதாபம். 
தமஸோ மா ஜ்யோதிர் கமய 

மெய்ப் பொருள் காண்பதறிவு...!


Golden Drops of Light

Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

“IT is in one’s own self that all the obstacles lie,

IT is in one’s own self that all the difficulties are found,

IT is in one’s own self that there is all the darkness and ignorance.

Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.

Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.

O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.


To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....


Always more light, more beauty, more truth!”

-The Mother
“Prayers and Meditations”

தமிழிலே ஒரே விஷயத்தை இரண்டு கோணங்களில் இருந்து எடுத்துச் சொல்லும்  அழகான முதுமொழிகள்  உண்டு:

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
 

"எண்ணம் போல வாழ்வு"

நம்முடைய துயரம், வறுமை, நோய் முதலான எல்லாம் வெளியில் இருந்தே வருவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அது போலவே, மகிழ்ச்சி முதலானவையும் வெளியில் இருந்து வருவதாக எண்ணி மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், சந்தோஷமோ, துக்கமோ வெளியில் இருந்து வருவதில்லை. தீது, நன்று எனப் பேதப்படுத்திப் பார்க்கிற எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதுமில்லை.

காளிப் பாட்டிலே பாரதி அருமையாகச் சொன்னான்:


"யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை!"


இதுவரை இவனுக்கு இந்த நுட்பம் ஏனோ தெரியாமலே போயிற்று.  தன்னைச் சுற்றி உள்ளவர்களுடைய குறைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும், தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல, இவனது அகத்தில் இருந்த அழுக்குத் தான் பிறரிடத்தில் இவன் பார்த்துக் கொண்டிருந்தது என்பது புரியாமலேயே போயிற்று.


தன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் புரட்சிகரமாக சீர்திருத்தம் செய்யப் போகிறேன் என்று கிளம்பிய இவனுக்கு  சீர்திருத்தம் என்பது முதலில் தன்னிடத்தில் இருந்து தான் தொடங்குகிறது என்பது ஏனோ புரியவே இல்லை. புரட்சி என்று பகட்டான வார்த்தையில் சொல்லப் படுவது, ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலே நடத்திக் காட்ட வேண்டிய திருவுரு மாற்றம் என்பதோ, அப்படிப் பட்ட மாற்றம், வெறும் ஆவேசத்தினாலோ, வார்த்தை ஜாலங்களினாலோ, எதையோ ஒன்றை கரித்துக் கொட்டுவதாலோ, வெறுப்பை உமிழ்வதாலோ சண்டை, சச்சரவுகள், கலகங்கள், ரத்தக் களறிகளாலோ நிகழ்வதில்லை என்கிற உண்மையை ஒரு விதமாகப் புரிந்து கொள்ளவே  இவ்வளவு நாட்கள் ஆயிற்று.


உண்மையைத் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. அதிகப் பகட்டோடு வரும் பொய்கள் திசை திருப்புவதில் மயங்குகிற போது, எது உண்மை என்பதைப் புரிந்துகொள்வதில் மயக்கம் வருவது இயற்கைதானே!


அனுபவ சாத்தியமாகிற வரைக்கும், உண்மை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கும் என்பதும், நிறையவே பட்டும், சுட்டும் கொண்ட பிறகு தான் புலப்பட தொடங்கியது.

"குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை" என்பது நிதர்சனமாகத் தெரியத் தொடங்கின நேரத்தில், பழைய பழக்கங்களில் ஊறிப் போன பிடிமானமும், வெளிச் சூழ்நிலைகளும் சேர்ந்து,'மாறப் போகிறாயா என்ன? ஒன்ணும் காமெடி கீமடி பண்ணலையே" என்று வடிவேலு ரேஞ்சுக்கு ரேக்கி விட்டுப் போய்க் கொண்டிருப்பதையும், கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.


“Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.”

ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த பிரார்த்தனையை மறுபடி படிக்கிற போது தான் சில வெளிச்சக் கீற்றுக்கள் இருண்ட மனத்தின் ஏதோ ஒரு மாற மறுக்கிற பகுதியின் மேல் விழுவதை உணர முடிகிறது. 


பத்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய இடத்தை அடுத்த மனைக்காரர் ஆக்கிரமித்து,  அந்தப் பிரச்சினையின் தன்மை பரிமாணம் என்ன என்பதே இப்போது தான் வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. காசு பணம் இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற துணிவோடு ஒரு குடும்பமும் , காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு கும்பலும் சேர்ந்து கொண்டு கொக்கரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பதற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை என்ற பலவீனம் ஒரு புறம், என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை ஒருபுறம், உதவமுன்வந்த சில மனிதர்களுமே கூட, ஒரு எல்லைக்கு மேல் எதையும் செய்ய முடியாமல் நின்று விடுவதையும், நியாயம் கேட்டு எடுத்திருக்கும் முயற்சிகள் ஒரு விதமான மந்தத் தன்மையோடு தொடர்வதையும் பார்த்த பிறகு,நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடுகிற என்னுடைய இயல்பை முதலில் சோதித்து, சரி செய்து கொண்டாக வேண்டியதை உணர்கிறேன்.





இந்தப் பிரச்சினை கூட, எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காகவே வந்திருக்கலாம். என்னை சோதனை செய்து கொள்ளவேண்டிய ஒன்றை நினைவு படுத்துவதற்காக வந்திருக்கலாம்.

"என்னை எனக்கறிவித்தருள் செய்து" என்று விநாயகர் அகவலில் அவ்வைக் கிழவி சொல்லி வைத்ததற்கும் ஒரு விசேஷமான பொருள் இருப்பதை ஒருவிதமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.


எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

உனது ஒளியினால் இவனது அகமும், புறமும் நிறைவு செய்யப் படட்டும், உனது எல்லையற்ற கருணையினால், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கச் சோம்பிக்கிடக்கிற பகுதிகளும், உனது ஒளியினால் தூய்மை பெறட்டும்.

தடைகளை அகற்றுவாய் தாயே! த்ரிதேக சுத்தியை அருள்வாய்.

உனது சித்தப்படி இயங்குகிற கருவியாக இவனை ஏற்றுக் கொள்வாய் தாயே!


"உன்னை விட்டு ஒருபோதும் விலகி இருப்பதில்லை. ஏனென்றால் நானே நீ! நீயே நான்!" என்ற உறுதியை அளித்திருக்கிறாய்!



"Look for the inner causes of disharmony much more than the outer ones. It is the inside which governs the outside."

The Mother

Words of The Mother, Vol.II



ஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ கூட இருக்கிறாய் என்ற ஒரு நினைப்பே எவ்வளவு பெரிய வலிமையாக இருக்கிறது!! 





இருளில் இருந்து வெளிச்சத்திற்கு ....!


பழக்கங்களின் அடிமையாகவே இருக்கும் போது, மாற்றம் என்கிற சொல் காதில் விழுந்தாலே நமக்கு அடிவயிற்றைப் பிசைய ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் பிரபஞ்ச சக்தி நம்மைச் சும்மா விடுவதில்லை. கன்றுக்குட்டி வரமாட்டேனென்று நான்கு கால்களையும் விறைத்துக் கொண்டு முரண்டு பிடிக்கும் போது, உடையவன் ஒரு குச்சியினால் கொஞ்சம் அடி, கொஞ்சம் கொஞ்சல் இப்படி தாஜாபண்ணுகிறார் போலேயும், செம அடி கிடைக்கும் என்று பயம் காட்டுகிறார் போலேயும், கூட்டிச் செல்வது போல, நம்முடைய பகுத்தறிவு, விதண்டாவாதங்கள். கோழைத்தனங்கள், வீர தீர சாகசங்கள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒரு செல் என்கிற நிலையிலிருந்து, இன்றைக்கு ஆறறிவு படைத்த, பகுத்தறியும் தன்மை உடையதாய் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நிகழ்கிற மாற்றத்தில் நாம் ஒரு அங்கமாக இருக்கிறோமே தவிர, நாமே மாற்றத்திற்கான பிரதானமான காரணமாக இருப்பதில்லை! Every Truth awaits its time! ஒவ்வொரு உண்மையும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்று சொல்வதைப் போலவே, ஒவ்வொரு மாற்றமும், அதன் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது என்று சொல்வது கூட சரிதான்!

அடுத்து பழக்கங்களின் பிடியில் சிக்கி ஒரு மாதிரி அடிமைத்தனத்திற்குப் பழக்கப் பட்டு விட்ட நிலையில், நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்கிற மாதிரி சோம்பேறித்தனம், முதலில் தீனமான கெஞ்சலாக ஆரம்பித்து, நான் ஏன் மாற வேண்டும் நான் மாறவே மாட்டேன் என்கிற பிடிவாதமாக மாறுகிற நிலைக்கு முற்றிப் போவதையும் பார்த்திருக்கிறோம்.. அப்படி முற்றிப் போனதைக் கால ஓட்டம்  கொஞ்சம் கூட தயவில்லாமல் அடித்துக் கொண்டு போய்விடுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்கும் அடுத்து, மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், அதை எதிர்த்தே தீருவேன் என்கிற பிடிவாதத்தின் உச்சகட்டம்.இடையில் எத்தனை எத்தனையோ படி நிலைகள்.அத்தனைக்குள்ளிருந்தும், பிரபஞ்ச சக்தி நம்மை ஒரு உறுதியான  மாற்றத்திற்குத் தயார் செய்து கொண்டே இருக்கிறது.

முப்பது வருடங்கள் ஒரு பொதுத்துறை வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஏகப்பட்ட முரண்பாடுகளை, மாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாத மன நிலைகளை, நிர்வாகத்தின் தலை முதல் கால் வரையில் பார்த்து சலித்து, ஒரு கட்டத்தில் இங்கே வேலை செய்வதை விட மாடு மேய்க்கிற வேலை கிடைத்தாலும் அதுவே சொர்க்கம் என்று முடிவெடுத்து வெளியே வந்தாயிற்று.

வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கையில் தான், மாற்றம் என்பது இருமுனையிலும் கூர்மையான கத்தி, எவரெவரோ,எது எதுவோ மாறவில்லை என்று போராடிக் கொண்டிருந்த போது,தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞையை இழந்து நிராயுதபாணியாய் நின்றது புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது போல, வெற்றிகளை விட தோல்விகளே மாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும்.இப்படிச் சொல்லும் பொது, தோல்வியே வெற்றிக்குத் தானாக அழைத்துக் கொண்டுபோகும் என்பதல்ல. தோல்வி தந்த பாடத்தைச் சரியாகக் கற்றுக் கொண்டால், அந்தப் படிப்பினையே வெற்றிக்கான ஆதாரமாக, படியாக இருப்பதென்னவோ உண்மை.

ஒரு வலைக் குழுமத்தில் ஸ்ரீ அரவிந்தரின் இந்த செய்தியைப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. படித்ததும் ஒரு தெளிவான சிந்தனைக்கு வழியும் பிறந்ததை உணர்ந்தேன் என்று சொன்னால் மிகையானது இல்லை.

WORK AS A TEST

Yes, obviously, that is one great utility of work that it tests the nature and puts the sadhak in front of the defects of his outer being which might otherwise escape him.

- Sri Aurobindo

ஸ்ரீ அரவிந்த அன்னை இந்த வேலை செய்வதில் உள்ள சூக்குமத்தை சுருக்கமாக எப்படிச் சொல்கிறார் என்பதையும் பாருங்கள்!


"There is no bad work - there are only bad workers. All work is good when you know how to do it in the right way. Everything. And it is a kind of communion. If you are fortunate enough to be conscious of an inner light, you will see that in your manual work, it is as if you called the Divine down into things; then the communion becomes very concrete, there is a whole world to be discovered, it is marvelous."

- The Mother

மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே
தான் இருக்கிறது.விதை முளைப்பதற்கு உதவியாக நம்முடைய  அணுகுமுறை, மன நிலை பொருந்தி வருகிறதா என்பது தான் கேள்வி.

நானே நானோ? மெல்ல மெல்ல மாறினேனோ? 
 
மாறித் தான் ஆக வேண்டும்! பழைய நினைப்பு எதுவும் நடவாது! தானாய் எல்லாம் மாறும் என்று சோம்பிக் கிடப்பதும் உதவாது.

எத்தகைய சூழ்நிலை, வேலை என்பதல்ல-அதை எப்படிப் பட்ட மனோபாவத்துடன் நாம் செய்கிறோம் என்பதே வேலையின் உண்மையான பயனை தீர்மானிக்கிறது.

குப்பை அள்ளுவதானாலும், அரசாட்சி செய்வதானாலும் மாற்றத்தின் அடிப்படை விதி இது தான். 

இந்த ஞானம் வந்த பிறகு வேறென்ன வேண்டும்?

இப்படி ஒரு தெளிவு, ஞானம் வருவதற்கே முதலில் தெய்வத்தின் கருணை இருந்தாக வேண்டும். அப்படி வருகிற ஞானம், வைகையில் வெள்ளம் வந்து அடுத்த கணமே காணாமல் போய்விடுகிற மாதிரி இல்லாமல், நிலைத்து நிற்பதற்கும் கூட தெய்வம் தான் துணை நிற்க வேண்டும்.

அதனால் தான் தமஸோ மா ஜ்யோதிர்  கமய என்று இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் என்று  இறையருளை இறைஞ்சுகிற வழக்கம் இங்கே தொன்று தொட்டு இருக்கிறது. 

அசதோ  மா சத் கமய
 
தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

ஓம் ஷாந்தி ஷாந்தி  ஷாந்தி:
 
 

சூடான தமிழ்ப் பதிவுலகமும் உண்மையைத் தெரிந்து கொள்ள ஐந்து படிகளும்...!


பிலாத்து மன்னனிடம் பரிசேயர்கள் உண்மையை விளம்பப் போனார்களாம்! அந்த உண்மை விளம்பிகளைப் பார்த்துப் பிலாத்து மன்னன் இப்படிக் கேட்டதாகப் புதிய ஏற்பாடு சொல்கிறது!

"
ண்மை! யாருடைய உண்மை? என்னுடையதா? அல்லது உங்களுடையதா?"
 
ர்சிம் எழுதிய ஒரு பதிவு, தமிழ் வலைப் பதிவுலகத்தை நிறையவே சூடாக்கி விட்டது! அவரை ஆளுக்கு ஆள் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், அவருடைய நண்பர்களாக அறியப் பட்டவர்களது முகத்திரைகள் கிழிந்து தோரணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதும், தூற்றி எழுதியவர்களுடைய உள்நோக்கங்கள் அம்பலமாகிப் போன பின்னாலும் கூட, தங்களுடைய முதுகில் இருக்கும் ஆயிரம் பொதி அழுக்கை அகற்ற எவருமே முன்வந்த மாதிரிக் காணோம்

ன்னிப்புக் கேட்க வேண்டும், துரத்தப் படவேண்டும் என்று கருத்துக் கொட்டப் படுவதற்குக் கூட சாதி, முற்போக்கு அமைப்புக்களிடம் லைசன்ஸ் பெற வேண்டும் போல இருக்கிறது! ஷோபா சக்தி  என்ற பதிவர், இப்படி லைசன்ஸ் கொடுக்கும் ஒரு முற்போக்கு அமைப்பைப் பற்றித் தன்னுடைய பதிவில் போட்டுத் துவைத்திருக்கிறார்.
 

முற்போக்கு எழுத்தாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரோ, இன்னும் திருந்திய பாடில்லை! முற்போக்கு உபதேசம் எல்லாம் ஊருக்குத் தானே! தங்களுக்கில்லையே! சென்றவருடம் துவங்கிய தனிப்பட்ட பகையை, இப்போது த்தூ, த்தூத்தூத்து என்று துப்பிக் கொண்டிருப்பதில், முற்போக்கு இலக்கியவாதிகள் என்றாலே கண்ட இடத்தில் எச்சில் துப்புகிறவர்கள் என்றாகிப் போன பரிதாபத்தையும் பார்க்க முடிகிறது!
 
ந்தப் பதிவர்களில் எவரையும் எனக்கு முகமும் தெரியாது, இவர்கள் எவரும் எனக்கு நண்பர்களும் இல்லை. அதே மாதிரி, இவர்களோடு விரோதம் பாராட்டுகிற மாதிரிக் கூட ஒன்றுமே இல்லை! இணையத்தில் நிலவும் போக்கை அறிந்துகொள்வதற்காக இவர்கள் எழுதுவதை அவ்வப்போது படித்திருப்பதைத் தவிர  வேறு விதமான அறிமுகம், பின்னூட்டம் எதுவும் இல்லை

னிப் பட்ட நபர்கள் மீது அல்லாமல், சொல்லப் படும் கருத்து, நிகழ்வுகள் பற்றி அதனதன் தராதரத்தில் என்னுடைய கண்ணோட்டமாக மட்டுமே. தமிழ் வலைப் பதிவர்கள்  விவகாரத்தைப் பற்றிய பதிவு இல்லை இது, ஆனால் இந்த விவகாரத்தைக் கூட எப்படிச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையில் எழுதப்பட்டது என்பதைத் தெளிவாக முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  

சொன்ஃபில் - நல்ல எண்ணங்களை விதைத்தல் என்ற இயக்கத்தைப் பற்றி ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்
 
டுத்தடுத்துத் திருப்பங்களுடன் போய்க் கொண்டிருக்கும் இந்த துப்புதல்-கும்முதல் விவகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மார்க் சன்பார்ன் என்ற பதிவருடைய ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. சுயமாக சிந்திக்க வேண்டும், சுய சிந்தனை என்றெல்லாம் நிறையப் பேசுவோம்! ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என்று இந்தப் பதிவில் சொல்கிறார். ஆனால், கொஞ்சம் பயிற்சி செய்தால் கைவரக் கூடிய ஒன்று தான் என்றும் இந்தப் பதிவில் ஒரு சுட்டியைக் கொடுத்துச் சொல்கிறார்.
 
டைமுறையில் என்ன நடக்கிறது? எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், சுயமாகச் சிந்திப்பதற்கு, அதன் தொடர்ச்சியாகச் செயல்களை வகுப்பதற்கு நமக்குத் தயக்கமாக இருக்கிறது. மாற்றங்களைக் கண்டு அஞ்சி, நான் இப்படியே இருந்து விட்டுப் போய் விடுகிறேனே என்று பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்து விட்டுப் போய்விடுகிற சோம்பேறித் தனமும் ஒட்டிக் கொள்கிறது!
 
விளைவு? நமக்காக எவரோ தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது! உண்மை என்னவென்று கண்டு சொல்ல வேண்டியிருக்கிறது! ஊமைச் சனங்களாகவே, அடுத்தவர் சொல்வதற்கு ஆமோதிக்க முடியாமலும், மறுப்புத் தெரிவிக்க முடியாமலும் இரண்டும் கெட்டான்களாகவே இருந்து பழகிப் போய்விட்டது.  

வறு செய்கிறவர்கள் மிகச் சிறு சதவீதம் தான்! ஆனால் பெரும் பான்மை, ஊமைச் சனங்களாகக் கையாலாகாத்தனத்தோடு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் போதுஇணையப் பதிவுகளாக இருக்கட்டும், அரசியல் விவகாரங்களாக இருக்கட்டும்தங்களுடைய சுயலாபத்துக்காகச் சீரழிப்பவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டியதுதான்!
 
னமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டா என்கிறது சித்தர்பாடல் ஒன்று! மனமது செம்மையாகக் கொஞ்சம் பயிற்சி வேண்டியிருக்கிறது! பரீட்சைக்கு முன்னாள் பென்சிலைச் சீவிக் கூராக வைத்திருப்பது போல! கேப்பையில் கிலோக் கணக்காக நெய் வடிகிறது என்பது போலச் சொல்லப் படுபவற்றை நம்புவது மிக எளிது!சொல்கிறவர்கள், நாம் அதை நம்புகிற கேணையர்களாக இருக்க வேண்டும் என்று தானே மானாட விட்டு மயிலாட விட்டுச்  சொல்கிறார்கள்!
 
சொல்லப்படுவது எதுவானாலும் அதில் உண்மை இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் தீர விசாரித்துப் பார்த்துவிட்டு அப்புறம் நம்பினால் கூத்தாடுகிற கோமாளிகளிடம் ஏமாறுகிற ஏனவாயர்களாக  என்றைக்கும் இருக்க மாட்டோம்.

முதலில், ஒரு விஷயத்தை உண்மையை எப்படித் தெரிந்து கொள்வது? கொஞ்சம் எளிதான ஐந்து படிகளில் பார்க்கலாம்

முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது.
ணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்பொது, திரித்துச் சொல்வதும் ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம் என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
ப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டு மூடி மறைத்திருக்கிறது  என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.

ரண்டாவதாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்

முதல் பத்தியில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.

னத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!

மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத் திறமையினால் சொல்லப் பட்டிருந்த போதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.

வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்

நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப் படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

வறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியா விட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகள் போலச்  சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.

ந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது.

கேப்பையில் நெய் வடிகிறது என்று ஒருவர் சொல்கிறார்! அது புனைவா, பகடியா, அல்லது அரசியலா என்று கொஞ்சம் ஆராய்ந்து தான் பார்க்கலாமே! சொல்கிறவர் என்ன உள்நோக்கத்தோடு  சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் போகும் தருணங்களில் கேணையர்களாக்கப் படுவது சர்வ நிச்சயம்!

சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், சொறிந்து கொள்வது கூட ஆரம்பத்தில் சுகமாகத் தான் இருக்கும்! போகப் போக ரணமாகி விடும், தெரியும் இல்லையா! சுய சொறிதலானாலும், பிறரைச் சொறிந்து விடுவதானாலும் சரி!
 
வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும். பிறருக்குக் கெடுதல் நினையாமை, பிறரை நிந்தை செய்யாமை மேலோட்டமாகப் பார்க்கும்போது உப்புச் சப்பற்றதாகத் தான் தெரியும். சாத்வீகமான இது போன்ற விஷயங்கள் எல்லாம் பட்டுப் போன மரத்தையும் துளிர்க்கச் செய்பவை!
 
தனால் தான் எண்ணம் போல வாழ்வு என்று சித்தர்கள் சொன்னார்கள்.
 
தை நினைக்கிறாயோ, நீ அதுவாகவே ஆகிறாய் என்று இந்திய ஞான மரபும் சொல்கிறது.

ர்சிம் அல்லது அவரைக் கும்முகிறவர்கள் எப்படியோ போகட்டும்! இப்போது இப்படி அடித்துக் கொண்டு நாறுகிறவர்கள் அடுத்த பதிவர் சந்திப்பு வரும்போது அல்லது ஏதோ பட்டறையில் சந்தித்துக் கொள்ளும்போது  மாமா-மாப்பிள்ளே, சகா, தோழா என்று கூடிக் குலவிக் கொள்வார்கள்! அப்புறமாகக் காத்திருந்து இப்படி முதுகில் குத்திக் கொள்வார்கள்! வடை போச்சே என்று தவிப்பார்கள்!

ந்த ஐந்து படிகளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு என்ன தோன்றுகிறது என்பதை எனக்கு எழுதுங்களேன்! உருப்படியாக, நமக்குப் பயன் படுகிற மாதிரி உள்ளதை மட்டும் பார்ப்போமே!

முன்பு எழுதிய பதிவு இங்கே! பொருத்தம் கருதி, சில மாற்றங்களுடன், இங்கே மீள்பதிவாக.