சூடான தமிழ்ப் பதிவுலகமும் உண்மையைத் தெரிந்து கொள்ள ஐந்து படிகளும்...!


பிலாத்து மன்னனிடம் பரிசேயர்கள் உண்மையை விளம்பப் போனார்களாம்! அந்த உண்மை விளம்பிகளைப் பார்த்துப் பிலாத்து மன்னன் இப்படிக் கேட்டதாகப் புதிய ஏற்பாடு சொல்கிறது!

"
ண்மை! யாருடைய உண்மை? என்னுடையதா? அல்லது உங்களுடையதா?"
 
ர்சிம் எழுதிய ஒரு பதிவு, தமிழ் வலைப் பதிவுலகத்தை நிறையவே சூடாக்கி விட்டது! அவரை ஆளுக்கு ஆள் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், அவருடைய நண்பர்களாக அறியப் பட்டவர்களது முகத்திரைகள் கிழிந்து தோரணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதும், தூற்றி எழுதியவர்களுடைய உள்நோக்கங்கள் அம்பலமாகிப் போன பின்னாலும் கூட, தங்களுடைய முதுகில் இருக்கும் ஆயிரம் பொதி அழுக்கை அகற்ற எவருமே முன்வந்த மாதிரிக் காணோம்

ன்னிப்புக் கேட்க வேண்டும், துரத்தப் படவேண்டும் என்று கருத்துக் கொட்டப் படுவதற்குக் கூட சாதி, முற்போக்கு அமைப்புக்களிடம் லைசன்ஸ் பெற வேண்டும் போல இருக்கிறது! ஷோபா சக்தி  என்ற பதிவர், இப்படி லைசன்ஸ் கொடுக்கும் ஒரு முற்போக்கு அமைப்பைப் பற்றித் தன்னுடைய பதிவில் போட்டுத் துவைத்திருக்கிறார்.
 

முற்போக்கு எழுத்தாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரோ, இன்னும் திருந்திய பாடில்லை! முற்போக்கு உபதேசம் எல்லாம் ஊருக்குத் தானே! தங்களுக்கில்லையே! சென்றவருடம் துவங்கிய தனிப்பட்ட பகையை, இப்போது த்தூ, த்தூத்தூத்து என்று துப்பிக் கொண்டிருப்பதில், முற்போக்கு இலக்கியவாதிகள் என்றாலே கண்ட இடத்தில் எச்சில் துப்புகிறவர்கள் என்றாகிப் போன பரிதாபத்தையும் பார்க்க முடிகிறது!
 
ந்தப் பதிவர்களில் எவரையும் எனக்கு முகமும் தெரியாது, இவர்கள் எவரும் எனக்கு நண்பர்களும் இல்லை. அதே மாதிரி, இவர்களோடு விரோதம் பாராட்டுகிற மாதிரிக் கூட ஒன்றுமே இல்லை! இணையத்தில் நிலவும் போக்கை அறிந்துகொள்வதற்காக இவர்கள் எழுதுவதை அவ்வப்போது படித்திருப்பதைத் தவிர  வேறு விதமான அறிமுகம், பின்னூட்டம் எதுவும் இல்லை

னிப் பட்ட நபர்கள் மீது அல்லாமல், சொல்லப் படும் கருத்து, நிகழ்வுகள் பற்றி அதனதன் தராதரத்தில் என்னுடைய கண்ணோட்டமாக மட்டுமே. தமிழ் வலைப் பதிவர்கள்  விவகாரத்தைப் பற்றிய பதிவு இல்லை இது, ஆனால் இந்த விவகாரத்தைக் கூட எப்படிச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையில் எழுதப்பட்டது என்பதைத் தெளிவாக முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  

சொன்ஃபில் - நல்ல எண்ணங்களை விதைத்தல் என்ற இயக்கத்தைப் பற்றி ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்
 
டுத்தடுத்துத் திருப்பங்களுடன் போய்க் கொண்டிருக்கும் இந்த துப்புதல்-கும்முதல் விவகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மார்க் சன்பார்ன் என்ற பதிவருடைய ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. சுயமாக சிந்திக்க வேண்டும், சுய சிந்தனை என்றெல்லாம் நிறையப் பேசுவோம்! ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என்று இந்தப் பதிவில் சொல்கிறார். ஆனால், கொஞ்சம் பயிற்சி செய்தால் கைவரக் கூடிய ஒன்று தான் என்றும் இந்தப் பதிவில் ஒரு சுட்டியைக் கொடுத்துச் சொல்கிறார்.
 
டைமுறையில் என்ன நடக்கிறது? எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், சுயமாகச் சிந்திப்பதற்கு, அதன் தொடர்ச்சியாகச் செயல்களை வகுப்பதற்கு நமக்குத் தயக்கமாக இருக்கிறது. மாற்றங்களைக் கண்டு அஞ்சி, நான் இப்படியே இருந்து விட்டுப் போய் விடுகிறேனே என்று பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்து விட்டுப் போய்விடுகிற சோம்பேறித் தனமும் ஒட்டிக் கொள்கிறது!
 
விளைவு? நமக்காக எவரோ தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது! உண்மை என்னவென்று கண்டு சொல்ல வேண்டியிருக்கிறது! ஊமைச் சனங்களாகவே, அடுத்தவர் சொல்வதற்கு ஆமோதிக்க முடியாமலும், மறுப்புத் தெரிவிக்க முடியாமலும் இரண்டும் கெட்டான்களாகவே இருந்து பழகிப் போய்விட்டது.  

வறு செய்கிறவர்கள் மிகச் சிறு சதவீதம் தான்! ஆனால் பெரும் பான்மை, ஊமைச் சனங்களாகக் கையாலாகாத்தனத்தோடு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் போதுஇணையப் பதிவுகளாக இருக்கட்டும், அரசியல் விவகாரங்களாக இருக்கட்டும்தங்களுடைய சுயலாபத்துக்காகச் சீரழிப்பவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டியதுதான்!
 
னமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டா என்கிறது சித்தர்பாடல் ஒன்று! மனமது செம்மையாகக் கொஞ்சம் பயிற்சி வேண்டியிருக்கிறது! பரீட்சைக்கு முன்னாள் பென்சிலைச் சீவிக் கூராக வைத்திருப்பது போல! கேப்பையில் கிலோக் கணக்காக நெய் வடிகிறது என்பது போலச் சொல்லப் படுபவற்றை நம்புவது மிக எளிது!சொல்கிறவர்கள், நாம் அதை நம்புகிற கேணையர்களாக இருக்க வேண்டும் என்று தானே மானாட விட்டு மயிலாட விட்டுச்  சொல்கிறார்கள்!
 
சொல்லப்படுவது எதுவானாலும் அதில் உண்மை இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் தீர விசாரித்துப் பார்த்துவிட்டு அப்புறம் நம்பினால் கூத்தாடுகிற கோமாளிகளிடம் ஏமாறுகிற ஏனவாயர்களாக  என்றைக்கும் இருக்க மாட்டோம்.

முதலில், ஒரு விஷயத்தை உண்மையை எப்படித் தெரிந்து கொள்வது? கொஞ்சம் எளிதான ஐந்து படிகளில் பார்க்கலாம்

முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது.
ணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்பொது, திரித்துச் சொல்வதும் ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம் என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
ப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டு மூடி மறைத்திருக்கிறது  என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.

ரண்டாவதாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்

முதல் பத்தியில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.

னத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!

மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத் திறமையினால் சொல்லப் பட்டிருந்த போதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.

வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்

நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப் படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

வறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியா விட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகள் போலச்  சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.

ந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது.

கேப்பையில் நெய் வடிகிறது என்று ஒருவர் சொல்கிறார்! அது புனைவா, பகடியா, அல்லது அரசியலா என்று கொஞ்சம் ஆராய்ந்து தான் பார்க்கலாமே! சொல்கிறவர் என்ன உள்நோக்கத்தோடு  சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் போகும் தருணங்களில் கேணையர்களாக்கப் படுவது சர்வ நிச்சயம்!

சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், சொறிந்து கொள்வது கூட ஆரம்பத்தில் சுகமாகத் தான் இருக்கும்! போகப் போக ரணமாகி விடும், தெரியும் இல்லையா! சுய சொறிதலானாலும், பிறரைச் சொறிந்து விடுவதானாலும் சரி!
 
வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும். பிறருக்குக் கெடுதல் நினையாமை, பிறரை நிந்தை செய்யாமை மேலோட்டமாகப் பார்க்கும்போது உப்புச் சப்பற்றதாகத் தான் தெரியும். சாத்வீகமான இது போன்ற விஷயங்கள் எல்லாம் பட்டுப் போன மரத்தையும் துளிர்க்கச் செய்பவை!
 
தனால் தான் எண்ணம் போல வாழ்வு என்று சித்தர்கள் சொன்னார்கள்.
 
தை நினைக்கிறாயோ, நீ அதுவாகவே ஆகிறாய் என்று இந்திய ஞான மரபும் சொல்கிறது.

ர்சிம் அல்லது அவரைக் கும்முகிறவர்கள் எப்படியோ போகட்டும்! இப்போது இப்படி அடித்துக் கொண்டு நாறுகிறவர்கள் அடுத்த பதிவர் சந்திப்பு வரும்போது அல்லது ஏதோ பட்டறையில் சந்தித்துக் கொள்ளும்போது  மாமா-மாப்பிள்ளே, சகா, தோழா என்று கூடிக் குலவிக் கொள்வார்கள்! அப்புறமாகக் காத்திருந்து இப்படி முதுகில் குத்திக் கொள்வார்கள்! வடை போச்சே என்று தவிப்பார்கள்!

ந்த ஐந்து படிகளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு என்ன தோன்றுகிறது என்பதை எனக்கு எழுதுங்களேன்! உருப்படியாக, நமக்குப் பயன் படுகிற மாதிரி உள்ளதை மட்டும் பார்ப்போமே!

முன்பு எழுதிய பதிவு இங்கே! பொருத்தம் கருதி, சில மாற்றங்களுடன், இங்கே மீள்பதிவாக. 

7 comments:

 1. அருமையான பதிவு....

  ReplyDelete
 2. :)எவரும் கவனத்தில் வைத்துக்கொள்ளமாட்டார்கள். அருமை ஐயா.

  ReplyDelete
 3. கன்கொன்! முதல் வருகைக்கு நன்றி!

  ராதாகிருஷ்ணன்!
  சுகுணா திவாகர் பதிவு உட்பட வேறு சில இடங்களிலும், இந்தப் பிரச்சினையில் நீங்கள் தெரிவித்திருந்த கருத்துக்களைப் படித்தேன்!

  அது ஒருபக்கம் இருக்கட்டும்! இந்த ஐந்து படிகளைப் பற்றி இரண்டு பேருமே ஒன்றும் சொல்லவில்லையே!
  ஐந்து படிகளே போதுமா? இன்னும் அதிகப் படிகள் வேண்டியிருக்குமா?

  ReplyDelete
 4. 6 th step - keep watch some time before you finalising

  ReplyDelete
 5. வாருங்கள் திரு.பாலு!

  ஆறாவதாகக் கொஞ்ச காலம் பொறுத்திருந்து முடிவு செய்வது என்பதாகச் சொல்லியிருப்பது சரிதான்! அது உண்மை என்பதை என்றைக்கும் மாறாத ஒன்றாக, ஒரு பொது உண்மையைக் காணுகிற தத்துவார்த்த நிலையாகப் பார்க்கும்போது அவசியப் படுகிற ஒன்று.

  இந்த ஐந்து படிகள் வெறும் எலிமெண்டரி லெவல் தான்! கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தறிவதே மெய் என்று சொல்வோமில்லையா, அந்த ஆரம்ப நிலையை எடுத்துக் கொண்டு சொல்கிற படிகள்.

  இந்த ஆரம்ப நிலையைக் கூட நம்மில் பலர் பெரும்பாலான தருணங்களில் எட்டுவதில்லை. மார்க் சன்பார்ன் எழுதிய பதிவின் சுட்டியில் கொஞ்சம் படித்துப் பாருங்கள். இன்னும் கொஞ்சம் யோசிக்க வைக்கிற பதிவு அது!

  ReplyDelete
 6. ttpian/பதி என்ற பதிவரிடம் இருந்து வந்த ஒரு ஒரு வரிப் பின்னூட்டம், இந்தப் பதிவின் உள்ளடக்கத்துக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல் இருந்ததால் நிராகரிக்கப் படுகிறது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!