Showing posts with label உண்மையும் விடுதலையும். Show all posts
Showing posts with label உண்மையும் விடுதலையும். Show all posts

தடுமாறும் அரசியல்! தேர்தல்களம் சூடாகிறதோ?

ஒருவழியாக, CONகிரஸ் கட்சி தமிழக வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. அதிலும் ஒரு இக்கு வைத்து சிவகங்கை தொகுதிக்கு மட்டும் பிறகு அறிவிப்பார்களாம்!காங்கிரஸ் இந்த தேசத்தைப் பீடித்திருக்கும் ஏழரை என்றால் பானாசீனா CONகிரசை பீடித்திருக்கும் ஏழரை என்பது சிவகங்கையை விட்டுக்கொடுக்காமல் நந்தி மாதிரி மறித்துக் கொண்டிருப்பதே இந்தத் தடுமாற்றம் சொல்லும் சேதி. ப.சிதம்பரத்துக்கே இந்த நிலைமையா..? கெத்தாக முடிவெடுத்து கதறவிட்ட ராகுல் காந்தி..! என்று ஆசியாநெட் தமிழில் செய்திபோட்டால் சரியாய்ப்போய் விடுமா? 

இந்து தமிழ்திசை நாளிதழ் சொன்னபடி குஷ்பூவுக்கு ஜாக்பாட்  கிடைக்கவில்லை. ஈரோட்டு வெங்காய பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் ஈவிகேஎஸ் இளங்கோவனைத் தேனி தொகுதியில் தள்ளி விட்டார்கள். ஈரோட்டு வெங்காயத் தொலி நிற்குமா தூசியாகப் பறக்குமா என்பது இப்போதே ஊகிக்க முடிகிற ரிசல்ட்தான்!

இந்த வாய்தான் ஈவிகேஎஸ் இளங்கோவனை அரசியலில் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியாமல் செய்தது என்றாலும் இந்தவாய் மட்டும் இல்லாவிட்டால் என்றோ இவரை காக்கை தூக்கிக் கொண்டுபோயிருக்கும் என்று கூட சொல்ல முடிகிறது.


உதயநிதி அரசியல் பரப்புரை செய்கிறார்! வேடிக்கை! கூட நிற்கும் வேட்பாளர் பொன்முடி வாரிசு வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்!

இப்படியெல்லாம் கார்டூன் போடுவதால் இந்து தமிழ் திசை நாளிதழ் எப்படி நடுநிலை ஊடகம் ஆகிவிடாதோ அதுபோலவே பிரியங்கா பேசுவதெல்லாம் உண்மை ஆகிவிடாது. 

வாட்சப்பில் வந்து ரசித்தது என்று முகநூலில் இதைப் பகிர்ந்திருக்கிறார் உண்மைத்தமிழன் :
அரசியலுக்கு வராமல் போயிருந்தால்!!!!!
பேரறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றிருப்பார்.
கருணாநிதிக்கு ஆரூர்தாஸுக்கு முந்தைய இடம் தமிழ்த் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்திருக்கும்.
ராஜாஜி, சேலத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து பேர் சொல்லும் ஜூனியர்களை வளர்த்திருப்பார்.
காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசன் மாதிரி இறுதிக் காலம் வரை நடிப்பாக இருந்திருக்கும்.
சரோஜாதேவி மாதிரி ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒருமுறை பெங்களூரில் இருந்து வந்து இங்கு பொங்கல் நேரத்தில் சிறப்புப் பேட்டி கொடுத்துவிட்டு போயிருக்கலாம்.
ஓ.பன்னீர்செல்வம் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிரான்ட்வேல்யூ கிடைத்திருக்கும்.
அண்ணாதுரையை, கருணாநிதியை, ராஜகோபாலனை, சின்னச்சாமியை, எம்.ஜி.ராம்சந்திரனை, ஜெயலலிதாவை, பன்னீர்செல்வத்தை உச்சிக்குக் கொண்டுபோய் உட்கார வைத்ததற்குப் பெயர் தேர்தல்!
அண்ணா இறந்துபோனபோது கூடிய கூட்டம் கின்னஸில் இடம் பெற்றது. ஆனால், அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார்.
நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்விக்குறி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராஜர்,சாஸ்திரி மறைவுக்குப்பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர்,சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார்.
‘தென்னகத்தில் மார்லன் பிராண்டோ’ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றிபெற வைக்கவில்லை.
‘மிஸ்டர் ராஜீவ் காந்தி.. எங்கே ஓடுகிறீர்கள்?’ என்று நாடாளுமன்றமே நடுங்க கேட்ட வைகோவை, விருதுநகர் அரவணைக்கவில்லை.
ஊரார் மெச்சிய பிள்ளைகளை சொந்த வீட்டில் அன்னியம் ஆக்கியதற்குப் பெயரும் தேர்தல்!
ஒரு மணிநேரத்துக்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கீல்கள்கூட ‘மை லார்ட்டு’ என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி சிவகாசி வெயிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க காற்றுகூட குறுக்கிடாத பாதுகாப்புடன் ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடியே பின்னே நடந்த உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்க்கிறவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும்,இந்திய அளவில் புகழ்பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன் நெல்லைத் தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்துச் சிரித்ததும் எதனால்?
தேர்தலால்!
‘அயோக்கியனின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம். அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை.நான் சொல்கிறேன்: அயோக்கியனின் முதல் புகலிடமே அரசியல்தான்’ என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக இருந்தார்.‘அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது’ என்று சொன்ன ஜெயகாந்தனும் அதில் பங்கேற்றார்.
‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணரை தலைமேல் தூக்கித் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்க்குடிமகனையும் அது விடவில்லை.அதிகார வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவும் அதில் மூழ்கினார்.
தேர்தல் மோகம் யாருக்கு வராது? கோடீஸ்வர ஏ.சி.சண்முகம் சோடா உடைப்பவரிடம் தோற்றுப் போனதும்,சிறந்த பார்லிமென்டேரியன் என்று பாராட்டப்பட்ட இரா.செழியனை வைஜெயந்தி மாலா வென்றதும்,
நல்லகண்ணு தேர்தலில் நின்றாரா என்பது கோவை தொகுதிவாசிகளுக்கே தெரியாமல் போனதும்,ராமராஜன் அதிக வாக்குகளில் வென்றதும் தேர்தல் விநோதமா?
பால்காரனுக்குக்கூட வீட்டுக்கதவைத் திறக்காத சிலர், ஐந்து தடவைக்குமேல் எம்.பி தேர்தலில் வெல்வதும்,மக்கள் பிரச்னைக்காக எப்போதும் பேருந்து நிலைய வாசல்களில் முழக்கம் போட்டு நிற்பவருக்கு 100 ஓட்டுகள்கூடத் தாண்டாததும்,
நடிகர்களை தியாகிகளாகப் பார்க்கக் கூடுவதும்,தியாகிகளை காமெடியன்களாக நோக்குவதும் ஜனநாயக விநோதமா? தனது தேகத்தைத் தேய்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம்,எலும்புருக்கி நோய் தாக்கியபிறகும் சவம் எழப்பேசிய சுப்பிரமணிய சிவா,ரத்தத்தை உறையவைக்கும் கவிதை இயற்றிய பாரதி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பெரியார்,இவர்கள் யாரும் தேர்தலில் நின்றது இல்லை.
ஈரோட்டில் மக்கள் பிரச்னைக்காக நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களிடம், ‘என் பேச்சைக் கேட்கத்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். நான் தேர்தலில் நின்றால் உங்களில் யாரும் ஓட்டுப் போடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்?’ என்று பெரியார் சொன்னார்.நின்றிருந்தால் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சோகம் பெரியாருக்கும் வந்திருக்கும்! உண்மைதானே?
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவரின் மனைவி ஜானகியை "தாய்" என்று போற்றிய அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள்,எம்.ஜி.ஆர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவரைத் தோற்கடித்த நாடு இது.
சிவாஜி படம் பார்க்காதவர் உண்டா? அவரது நடிப்பைப் புகழாதவர் உண்டா? அவர் பாட்டை இன்றும் கேட்டு கண் கலங்காதவர் உண்டா?இந்த மொத்தக் கூட்டமும் அவர் கட்சியில் சேர்ந்திருந்தால் சூரக்கோட்டைக்காரருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை சாத்தியமாகி இருக்கும்.
ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, ஜி.கே.வாசன் என எல்லோர்க்கும் உண்டு முதலமைச்சர் கனவு.அந்தக் கனவுக்கு முன்னோட்டம்கூட இன்று வரை சாத்தியம் ஆகவில்லை.
ஆனால், இப்படி யோசித்தாலே 107 டிகிரி காய்ச்சல் வரக்கூடிய கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்கள்.
செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி என்று பெருமாள் பெயர் கொண்டவர்கள் தங்களுக்கும் அது சாத்தியம் என்று நினைத்தார்கள்.அந்த அளவுக்கு அது எளிமையான பொருளா?
இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த தியாக வியர்வை காய்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்த தமிழகம் - கடந்த 40 ஆண்டுகளாக அந்தக் கட்சியைத் தள்ளி வைத்திருக்க என்ன காரணம்?
எவ்வளவு அதிகாரம் பொருந்தியவர்களாக ராஜீவ் காந்தியும் நரேந்திர மோடியும்
மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும்,தமிழ்நாட்டில் தனியாக நிற்க, தண்ணீர் குடிக்க வேண்டி வந்த கள யதார்த்ததுக்கு என்ன காரணம்?
எல்லா ஜனநாயக நெறிமுறைகளையும் பேசிய ராஜாஜி முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர் இல்லை.
ஆனால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட பல பேர், மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் என்றால் மக்களுக்கு இந்த வகை மனிதர்களைத்தான் பிடிக்கிறதா?
அன்று சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இருந்த நிழல் யுத்தம் இன்று இளங்கோவனுக்கும், சிதம்பரத்துக்கும் நடக்கிறது.
அன்று அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இருந்த ஈகோ யுத்தம், கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடந்தது.
ராஜாஜி, சாதி பார்த்திருந்தால் சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம்.
கருணாநிதி, ரத்தம் பார்த்திருந்தால் ஸ்டாலினுக்கு விட்டுத் தர முன்வந்திருக்கலாம்.
ஆனால் பதவி, இவை எல்லாவற்றையும்விட உயர்ந்ததா? வெற்றி பெற்ற கட்சிக்குத் தலைவராக இருப்பவரே முதலமைச்சர் ஆவார் என்று காத்திருக்க,
வெள்ளையனே வியக்கவைக்கும் அளவுக்குப் பதவியை மறுத்த தியாகராயர்.
நான் பதவி விலக சம்மதிக்கிறேன், ஆனால் என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று சொன்ன ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
எனக்கு உடல்நலமில்லை, முதலமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று மறுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா.
ஒன்பதாண்டுகால முதலமைச்சர் பதவியை தூசியைப்போல தட்டிவிட்டு வெளியேறிய காமராஜர் போன்றோர் வாழ்ந்த மண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் இப்போது அசிங்கமாகிப் போனதே தமிழ்நாடு.
என்ன காரணம்? சிந்தியுங்கள்...நல்ல முடிவை எடுங்கள்...வாக்களியுங்கள்..!


ஸ்பெக்ட்ரம் ஊழல்:பத்துக் கேள்விகளும், பின் தொடரும் நிழலும்!


2ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊழ‌ல் தொட‌ர்பாக ‌முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி‌க்கு 10 கே‌‌ள்‌விகளை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கே‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று விசாரித்து வரும் சி.பி.ஐ.யின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

இந்த ஊழலையே மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஊழல் இந்திய கணக்கு, தணிக்கைத் துறைத் தலைவரின் கற்பனையில் உருவான கட்டுக் கதை என்றும் குறை கூறியிருக்கிறார் கருணாநிதி. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை நடவடிக்கைகளை, திராவிட அரசியலுக்கு எதிரான மேலாதிக்க சக்திகளின் சதி என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் மகள், குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல் பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார் கருணாநிதி. தப்ப முடியாதபடி கடினமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கருணாநிதியின் வாடிக்கை! குறிப்பிட்ட எந்தப் பெயரும் சுட்டிக் காட்டப்படவில்லை. தனி மனிதர், தனிப்பட்ட கட்சி அல்லது அமைப்பின் பெயர்கள் குறி வைக்கப் படவில்லை. வெறும் பொதுவான தூற்றுதல் தான்.

ஆனால், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல். கருணாநிதி, அவரது குடும்பத்தினர் இந்த ஊழலில் முழுவதுமாக மூழ்கி இருப்பதால், இந்த ஊழலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இயலாத காரியம் ஆகும்.

இந்த ஊழலில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

1)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முதல் செய்திகள், இந்த ஊழலில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆ. ராசாவிற்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர்தரப்பு ஊடகங்களிலும் முதன் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி.யில் தான் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், கருணாநிதியின் பேரன்களில் ஒருவர், 28.4.2011 அன்று நடைபெற்ற தி.மு.க.வின் “உயர் மட்டக் குழு” கூட்டத்தில் ஊடகங்களை பொதுவாக கருணாநிதி தாக்கிய சமயத்தில் உடனிருந்தார் என்பது தான்.

2) ராசா, இதர நபர்களுக்கு எதிரான வழக்குகள் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சா‌ற்றுகளின் அடிப்படையில் சி.பி.ஐ.யினால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, இந்திய கணக்கு, தணிக்கைத் துறை தலைவரால் இந்திய நாடாளுமன்றத்தில் தகுந்த ஆவணங்களுடனும், வலுவான வாதங்களுடனும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3) அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், தி.மு.க.விற்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. முக்கிய பங்காற்றுகின்ற, கருணாநிதியின் மகனும், பேரனும் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

4)
ஒரு வருடத்திற்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த இந்த ஊழல் வழக்கு தீங்கிழைக்கும் கும்பல் கூரை மேல் ஏறி நின்று கூக்குரலிட்டதன் காரணமாக முக்கியத்துவம் பெறவில்லை; உலகின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய புலனாய்வுத் துறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை உச்ச நீதிமன்றமே முடுக்கி விட்டதன் காரணமாகத் தான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

5)
இந்த வழக்கில், சி.பி.ஐ. இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இன்னும் நிறைய குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, செவி வழிச் செய்தி அல்லது நாகரிகமற்ற குற்றச்சா‌ற்றுக்களின் அடிப்படையிலோ நடைபெறவில்லை. மாறாக, 80,000 பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

6)
இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் ஆ.ராசா, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டுமல்ல. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு படைத்த தொழில் குழுமத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்களும், தலைமை செயல் இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், இந்த ஊழலை மூடி மறைக்கும் விதமாக, “செல்வாக்கு படைத்த ஒரு குழுவினரின் அரசியல் சதுரங்க விளையாட்டு இது” என்று அபத்தமாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதி!

நான் இப்பொழுது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன். கருணாநிதி அனுமதி அளித்திருந்தால், வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்தக் கேள்விகளை ஊடகங்களே அவரிடம் கேட்டிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

1)
கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 விழுக்காடு பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி.யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவிற்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?

2) தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

3) 20
விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி.யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

4)
கலைஞர் டி.வி.யில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி தராததையடுத்தே, கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?

5)
சர்ச்சைக்குரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பயனாளியான டி.பி. ரியால்டி குழுமத்திடம் இருந்து கலைஞர் டி.வி. 214 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் ஒரு தடவை நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பல முறை நடை பெற்று இருக்கின்றது. இந்தப் பணம் ஏன் வாங்கப்பட்டது? ராசாவால் விதி முறைகளுக்கு முற்றிலும் முரணாக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாகத் தான் இந்தப் பணம் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட கலைஞர் டி.வி.யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?

6) 2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன், ராசாவை ‌‌சி‌.பி.ஐ விசாரிக்க தொடங்கியவுடன், டி.பி. ரியால்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை “உத்திரவாதமற்ற கடன்”ஆக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?

7)
திடீரென்று இந்தக் "கடனை வட்டியுடன்" திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

8)
ஜெனிக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போர்வையில்,  தன்னுடன் நெருங்கி பழகியவர்களின் நிறுவனமான துபாயைச் சேர்ந்த இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம், டி.பி. ரியால்டி நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் குழுமத்தில் இடம் பெற்றதற்கு கருணாநிதியின் விளக்கம் என்ன?

9)
கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில், ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரிமாணங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன?

10) "
கனிமொழி என் மகள் என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை; கனிமொழி தி.மு.க.வின் விசுவாசமிக்க உண்மையான தொண்டர் என்ற முறையில்" ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, கட்சியை இழிவுபடுத்த தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி! இறுதி மூச்சுவரை கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள், கட்சிக்காக தங்கள் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் தொண்டர்கள் இது போன்ற பிதற்றலை நம்புவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா?

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. ராசாவுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கலைஞர் டி.வி., கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பின் புகலிடமாக விளங்கும் அய‌ல்நாட்டு வங்கிகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் பணத்தை குவித்து வைத்து இருக்கின்றனர்.

கனிமொழியை மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சி.பி.ஐ. தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அனைவரும் பயனடைந்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், 2ஜி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

இது ஜெயலலிதா தொடுத்திருக்கும் பத்துக் கேள்வி கணைகள்!

இந்தக் கேள்விக்கணைகளுக்கு சிபிஐ தரப்பில் இருந்து கசியும் செய்தியாக, குட்டு அம்பலப்பட்ட பிறகுதான்,முதல் தகவல் அறிக்கை தாக்கலான பிறகு தான் அவசர அவசரமாக  கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், "கடனாக" மாற்றப்பட்டு, அப்புறம் வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், கலைஞர் டிவியின் வரவு செலவுக் கணக்கில் அறுபத்துச்சொச்சம் கோடி வரவில், செலவு போக வெறும் ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் தான் நிகர லாபமாகக் காட்டப் பட்டிருப்பதும், ஏற்கெனெவே செய்திகளில் கசிந்ததுதான்!

யார் இதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற நினைப்பிலேயே, தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நெஞ்சுரத்தை என்னவென்று சொல்வது?

இது தொடர்பாக நேற்றும் இன்றும் வெளியான இரண்டு செய்திகளைப் பாருங்களேன்! செய்திகளுக்கு தட்ஸ்தமிழ், தினமணி இரு நிறுவனங்களுக்கும் நன்றியுடன்!


டெல்லி: 2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கனிமொழி தொடர்புடைய தமிழ் மையம் அமைப்பு பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.


கனிமொழி, தமிழ் மையம் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த மையம்தான், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தி வருகிறது.

2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழ் மையம் அமைப்பின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ் மையம் அமைப்பு, 2ஜி உரிமம் பெற்ற சில தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில், தமிழ் மையம் அமைப்புக்கு அந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நேரடியாகவே நன்கொடைகளை வழங்கியது தமிழ் மையம் அமைப்பின் ஆடிட் செய்யப்பட்ட பாலன்ஸ் ஷீட் மூலம் தெரிய வருவதாக அந்த செய்தி கூறுகிறது. அந்த காலகட்டத்தில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராசா இருந்தார். அப்போதுதான் 2ஜி உரிமங்களும் அவரால் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய தகவலால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சூடு கூடியுள்ளது.

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி ; 2ஜி வழக்குக்கு பிறகே ஒப்பந்தம்: சிபிஐ தகவல்


புது தில்லி, மே 1: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட பின்னரே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி அளிக்கப்பட்டது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் இதைத் தெரிவித்துள்ளது.

ஸ்வான் டெலிகாம், டி.பி. ரியாலிட்டி நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது. டிசம்பர் 23,2008-ஆகஸ்ட் 7,2009-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணம் கைமாறியுள்ளது. இந்தத் தொகை கலைஞர் டி.வி.க்கு அளிக்கப்பட்டது குறித்து அப்போது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை.

 இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அக்டோபர் 21,2009-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

 இதையடுத்துதான் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 27,2010-ல் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 இந்த வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து விசாரிக்கத் தொடங்கி, இந்த வழக்கில் தீவிரம் காட்டியதை அடுத்தே பணத்தை கலைஞர் டி.வி. திருப்பி அளித்துள்ளது என்று சிபிஐ குற்றம்சுமத்தியுள்ளது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் கணக்காளர் சதீஷ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மொஹமத் மொரானி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இவர்கள் அளித்த தகவல் மூலமே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.200 கோடிக்கான ஒப்பந்தத்தை கலைஞர் டி.வி. மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தரப்பினருக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மறைமுகமாக லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் உஸ்மான் பல்வா, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குநரான மறைந்த சாதிக் பாட்சா ஆகியோர் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியிருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்தப் பணத்தை கடனாகப் பெற்றதாகவும், அதை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் டி.வி. தரப்பில் கூறப் படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிபிஐ தாக்கல் செய்துள்ள துணைக் குற்றப்பத்திரிகையில், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை "கூட்டுசதியாளர்' என்று குற்றம்சுமத்தியுள்ளது. மே 6-ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கனிமொழிக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறு மனமே ஆறு! அட! மே 6 ஆம் தேதி நெருங்கி வருகிறதே! அன்றைக்குக் கனிமொழி நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் இல்லையோ?!

உச்சகட்ட காமெடி என்னவென்றால், இத்தனைக்குப் பிறகும், நேற்று முன்தினம் ஜெயந்தி நடராஜன், நேற்று ஜி கே வாசன் இன்று எவரோ இப்படிக் காங்கிரசின் சார்பில் ஒவ்வொருவராக திமுக தலைவரை சந்தித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பதும், வெளியே வரும்போது திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று சொல்லிக் கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் அபசுரமாக கண்டனூர் பானா சீனா மட்டும், கொஞ்சம் உண்மை நிலவரத்தைப் பேசியிருப்பது இன்னொரு காமெடி! அனேகமாக, நாளை அல்லது நாளை மறுநாள் இவரும் கோபாலபுரத்துக்குப் போய் சந்தித்து தேறுதல் சொல்ல வேண்டி வரலாம்! 

மானாமதுரை, மே 1: மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இவர்களுக்கு முன்னாலேயே, காமெடியன் வடிவேலு இந்த வேலையைத் தொடங்கி வைத்ததை இந்தப்பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்! நினைவுக்கு வருகிறதா!!