காங்கிரஸ்காரனின் பொய்யும் புளுகும் .....!!

கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எட்டு நாளிலே தெரிஞ்சு போகுமே என்பதெல்லாம் காங்கிரஸ் கூமுட்டைகள் விஷயத்தில் ரொம்பவுமே ஜாஸ்தி என்பதை சமீபத்தில் அவர்கள் ஜெயித்த மூன்று மாநிலங்களில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்கான நிதி முதலான அரசுத் திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட நிதி ஆட்டைய போட்டு காங்கிரஸ் கட்சி ஆசாமிகளின் டில்லி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த கதை மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்துக்கு வேணுங்கப் பட்டவுங்க வீடுகளில் வருமானவரி நடந்த சோதனையில் அம்பலத்துக்கு வந்தது. விவசாயிகளின் கடன் ரத்து என்றார்கள். என்னாயிற்றாம்?


அதே மத்தியப்பிரதேசத்தில் வெறும் 9000 ரூபாய் கடனுக்காக ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டது செய்தியாக ஊடகங்களில் வந்தபிறகாவது காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஏதாவது செய்தாரா என்றால், இல்லை. ஆனால் காங்கிரஸ் மேதாவி பானாசீனா சப்பைக்கட்டு கட்டுவதற்கொரு குறைச்சலும் இல்லை. நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தே பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசுவதில் காங்கிரசும் இங்கே திமு கழகமும் முன்னணியில் இருப்பது தெரிந்ததுதானே என்கிறீர்களா? எவர் கேட்கப்போகிறார்கள் என்ற மமதையில் தானே இத்தனையும் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு, கேள்வி  கேட்க ஆரம்பித்தாலொழிய இந்த அவலம் மாறாது.


சத்யமேவ ஜெயதே என்பதை நம்பியது ஒரிஜினல் காந்தி! இந்த டூப்ளிகேட் காண்டிகள் அல்ல என்பது தெரிந்திருந்தால் RTI மனுப்போட்டு இவர்கள் சொல்வதெல்லாம் சுத்தப்பொய் தான் என்பதை புதிதாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அதுவும் இந்தத் தேர்தலில் பப்புவும் பப்பியும் பொய்களைத் தவிர வேறொன்றும் பேசுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு பேசுவதைப் பார்த்தால் ...!!  


பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமாம்!
சுஜாதா பெயரைச் சொல்லி 
இங்கே இவர்கள் தங்களைப் 
பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள்  

கடை சாத்துவதற்கு முன்னால் ஒரு நல்ல செய்தியைப் பார்த்து விடலாமா? 

State-run telco Bharat Sanchar Nigam Limited (BSNL) said that it has installed 54000 towers during 2018-2019, which is higher than the combined figures of the previous 3 years.BSNL has also started installing 4G towers during the financial year 2018-2019 and has installed around 5,340 4G towers till April-2019. என்கிறது இந்தச்செய்தி      

பொதுத்துறை நிறுவனங்களின் மீது எனக்குப் பெரும் நம்பிக்கை உண்டு. சரிவிலிருந்து மீண்டுவரவேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட!

  

4 comments:




  1. நான் சிறுவனாக இருந்த போது அப்பாவும் அம்மாவும் காசி சென்று வந்து, அவர்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். அப்போது அம்மா சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. முங்கி எழுந்தால் நம்மைச் சுற்றிலும் பிணம் மிதந்து கொண்டே செல்கிறது என்றார். அன்று முதல் அடுத்த இருபது ஆண்டுகள் காசி குறித்து பல விதங்களில் படித்து வந்துள்ளேன். ஒரு பெரிய ஜனத்திரள் நம்பும் (மதரீதியாக) ஊரை காங்கிரஸ் எந்த அளவுக்கு புறக்கணித்து வந்துள்ளது. அங்குள்ள லாபி, மாசடைந்த ஊர் போன்றவற்றை வாசித்து என்னுள் உருவான மனக்குமறல் அதிகம். இப்போது மோடியின் சொந்தத் தொகுதி அது. சமீபத்தில் வாசித்துள்ள கட்டுரை வாயிலாக 50 ஆண்டுகள் பெறக்கூடிய வளர்ச்சியை அந்தத் தொகுதி பெற்றுள்ளது. காரணம் மோடியின் நேரிடையான கவனிப்பு. இது போல பல விசயங்களில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் மோடி அரசாங்கம் செய்ய காரியங்கள் எனக்கு கவரக்கூடியதாக இருந்தது. இந்த பிஎஸ்என்எல் விசயத்தை மோடி தொடக்கம் முதல் சிறப்பாக கொண்டு வந்து இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். அதற்குப் பின்னால் எத்தனை பிரச்சனைகள், லாபி இருந்தாலும் அடித்து நொறுக்கியிருக்க வேண்டும். காரணம் டிஜிட்டல் இண்டியா, கேஷ்லெஸ் எக்கானமி போன்ற கோஷத்தின் அடிப்படையே இது தான். என்ன தான் தனியார் பங்களிப்பு வளர வேண்டும் என்றாலும் அவர்கள் லாபம் இருக்கும் இடத்தில் தான் கவனம் செலுத்துவார்கள். மற்ற இடங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். அரசின் பொதுத்துறை என்பது லாபம் வேண்டாம். அதே சமயத்தில் நட்டம் இல்லாமல் இருந்தாலே போதும் என்ற நிலையில் இயங்கியிருக்க வேண்டும். அது முடியும் கூட. இப்போது இந்த செய்தி அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்போது ஜியோ லேண்ட் லைன் சேவையில் உள்ளே வரப் போகின்றது. என்ன ஆகப்போகின்றது என்று தெரியவில்லை. அவர்கள் நேர்வழியில் வர மாட்டார்கள். அடித்து நொறுக்கி தன் இடத்தை தக்க வைக்கவே முயல்வார்கள். 60 சதவிகித கிராமங்களைக் கொண்ட இந்தியாவில் பிஎஸ்என்எல் மீண்டு வந்தால் மட்டுமே மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் மக்களும் அரசாங்கமும் நெருக்கமாக மாற முடியும். அதிகார ஆணவத்தில் இருக்கும் அதிகாரிகளின் கொட்டத்தை அடக்க முடியும். இல்லாவிட்டால் காங் ஆட்சி போல அடுத்த ஐந்தாண்டுகள் மோடிக்குத் தான் கெட்ட பெயர் உருவாகும். பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      ஒப்பீட்டளவில் 55 வருடங்கள் நேரடியாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கட்சி சாதிக்கத் தவறிய நிறைய விஷயங்களை கடந்த ஐந்தாண்டுகளில் நரேந்திர மோடி அரசு சாதித்திருக்கிறது. முக்கியமாக, கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் என்பதே இல்லாமல் நடந்த ஒரு ஆட்சி. காங்கிரசின் ராகுல் காண்டி ஆதாரமில்லாமல் ரஃபேல் விமான பேரத்தில் ஊழல் என்று தொடர்ந்து கோவிக் கொண்டிருப்பதால் மட்டுமே ஊழல் கறையை மோடி அரசுமீது சுமத்த முனைகிறார் என்பது வெளிப்படை.

      Delete
    2. BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைக் குறித்துப் பேச நிறைய இருக்கிறது.

      உதாரணத்துக்கு நல்ல தலைமை, திறமையான நிர்வாகம். பொதுத்துறை நிறுவனங்களில் இந்த இரண்டும் மிகவும் அரிதானவை. அப்படியே வாய்த்தாலும் ஊழல் அரசியல் உள்ளே புகுந்து அவர்களை சாய்த்துவிடும்.
      முடிவெடுக்கிற திறமை இருந்தும் கூட முதுகெலும்பில்லாத நிர்வாகமாக பலநேரங்களில் அமைந்துவிடுகிற சோகம் இந்திய பொதுத்துறைக்கு வாய்த்த சாபம்.

      ஐந்துக்கு மேற்பட்ட பெரிய உருக்காலைகள் பொதுத்துறையில் இருந்தும் இரும்புவிலையை ஒரே ஒரு உருக்காலை மட்டுமே வைத்திருந்த டாட்டா ஸ்டீல் முதலில் அறிவித்த பிறகே பொதுத்துறை உருக்காலைகள் தங்களுடைய விலையை அறிவிக்கும் என்கிற அவலம் இங்கே நீண்டநாட்கள் இருந்ததை அறிவீர்களா?

      BSNL ஒரு வெல்லும் நிறுவனமாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள, நிறைய மாற்றங்களுக்குத் தயாராக வேண்டியிருக்கும். ஒரு நரேந்திர மோடியால் மட்டும் அதைச் சாதித்துவிட முடியும் என்று எதிர்பார்ப்பதே முதலில் சரிதானா?

      Delete
    3. நிச்சயம் அவரால் முடியும். இந்த விசயத்தில் அவர் மிக மிக கூடுதல் கவனம் எடுத்தே தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவருக்குத்தான் மிகப் பெரிய பாதிப்பு உருவாகும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

      டாட்டா உருக்காலை தகவல் இதுவரையிலும் அறியாத தகவல்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!