மேற்கு வங்க அரசியல்களத்தைப் பற்றி வரும் செய்திகள் கொஞ்சம் ஆச்சரியத்தைத் தருகிற ரகம். என்னதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை பிஜேபிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு எடுத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிமட்டத் தொண்டர்கள் பிஜேபிக்கு உதவி செய்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி கொஞ்சம் விவரங்களோடு செய்தியைச் சொல்கிறது. இது அரசியலில் புதிதல்லதான் ஒரு பொது எதிரிக்கெதிராக, களத்தில் இதர எதிரிகள் informal ஆக ஒன்று சேர்வது, அங்கே இங்கே என்று களத்தில் கீழ்மட்டத்தில் சகஜம்தான். ஆனால் மேற்கு வங்கத்தில் இது மாநிலம் தழுவியதாக இருப்பது தான் ஆச்சரியம் தருகிற விஷயம். CPIM தலைமையும் கூட இதைக் கவலையுடன் கவனித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
Unishey half, Ekushey saaf' ('19 இல் பாதி '21 இல் முழுவதும்,) என்று மௌனமாகத் தங்கள் கட்சித்தொண்டர்களே பிஜேபிக்கு உதவுவதில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை என்னசெய்வது என்று புரியாமல் ட்வீட்டரில் மட்டும் இந்த மாதிரி வீர வஜனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
'19 இல் பாதி '21 இல் முழுவதும் என்ற silent slogan உடன் (இந்தத் தேர்தலில் பாதியாவது, '21 அசெம்பிளி எலெக்ஷனில் முழுதுமாக திரிணாமுல் காங்கிரசைக் காலிசெய்வோம்) மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் வேலைசெய்வது மம்தா பானெர்ஜிக்கும் தெரிந்தே இருக்கிறது. என்ன நடக்கிறதாம்?
பிஜேபிக்கு ஹிந்திபெல்டில் இருக்கிற மாதிரி மேற்கு வங்க மாநிலத்தில் கட்சி நிறுவனபலம் அடிமட்டம் வரை இல்லை. திரிணாமுல், காங்கிரஸ், இடதுசாரிகள் அளவுக்கு அங்கே அடிமட்டத்தில் சிப்பாய்கள் இல்லை. ஆனால் மம்தா பானெர்ஜி ஆட்சியில் அதீத அடக்குமுறைக்கு ஆளான மார்க்சிஸ்ட் சிப்பாய்கள் பிஜேபிக்கு உதவுவதன் மூலம் திரிணாமுல் கட்சியின் வீழ்ச்சிக்கு அடிகோலாக இருக்க முனைந்திருக்கிறார்கள். உதாரணமாக கொல்கத்தா வடக்குத் தொகுதியில் 1862 பூத்துகள் இருப்பதில் பிஜேபிக்கு 500 பூத்துகளுக்கு மட்டுமே தன்னுடைய கட்சித் தொண்டர்களை நியமிக்க முடிந்திருக்கிறது. திரிணாமுல் கட்சியின் சிட்டிங் எம்பி சுதீப் பந்தோபாத்யாயைத் தோற்கடிக்கிற வாய்ப்பு பிஜேபிக்கு பிரகாசமாக இருப்பதால் பிஜேபிக்கு ஆள் இல்லாத பூத்துகளை தேர்தல்நாளில் விழிப்போடு கவனித்துக் கொள்வதாக CPIM தொண்டர்கள் discreet ஆக முன்வந்திருக்கிறார்கள் என்கிற போது உதவியை யார் மறுப்பார்கள்?
In an attempt to get more seats in West Bengal, the BJP led by Prime Minister Modi and his right-hand man Amit Shah, have been vigorously fanning the flames of religious division and animosity during their campaigning in the state. Read more..
cpim.org/views/bjp%E2%8…
6:00 PM · May 8, 2019 · TweetDeck
தேர்தல் அரசியலில் வாக்குகள் வேண்டுமென்றால் புலிகள் கூடப் புல்லைத் தின்கிற வினோதமும் நடக்கும்! ஐயோ! புலியா, புல்லும் தின்னுமா என்று கேட்பீர்களேயானால் கண் முன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் இருக்கிறது.
வேறென்ன சொல்ல?
மே 24ல் இந்த மாதிரி கட்டுரைகளுக்கெல்லாம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா) அர்த்தம் தெரிந்துவிடும்.
ReplyDeleteநெல்லை, ஏன்? மே 23 தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியாதா?
Delete