ராகுல் காண்டியின் செயல்பாடுகள் எல்லாமே கொஞ்சம் விசித்திரமான, முதிர்ச்சியில்லாத மோட்டா ரகம் என்பதாகத் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே வருகின்றன என்பதை நண்பர்கள் கவனிக்கிறீர்களா? சாம்பிளுக்கு ஒரு செய்தி!கலீஞர் எழுதிய பராசக்தி வசனம் வேறு பின்னணியில் அசர்ந்தப்பமாகப் பொருந்திவருகிறது!
ரோஷன் பெய்க் கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, Roshan Baig என்ற வார்த்தை டிவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. கர்நாடக அரசியலில் இவரது கருத்துக்கள் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரின் சிவாஜி நகரில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏவாக தேர்தெடுக்கப்பட்ட ரோஷன் பெய்க் கர்நாடக இஸ்லாமியர்களின் முகமாக அறியப்படுகிறார். உள்துறை, சுற்றுலா, ஹஜ், உள்கட்டமைப்பு, நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இலாக்காக்களை இவர் நிர்வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று புதுடில்லியில் பிஜேபி தனது கூட்டணிக் கட்சிகளோடு ஒரு விருந்துடன் நன்றி தெரிவிக்கும் கூட்டமாகவும் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது business as usual என்பதாக இருக்கிறது. ஆரவாரமோ பதட்டமோ இல்லாத அரசியல் நடவடிக்கையாகவும் இருக்கிறது.
இங்கே தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புக் கூத்தை நடத்திய ஊடகங்களுடைய நிலைமை ரொம்பவும் கேவலப்பட்டுக் கிழிந்து தொங்குவதை ஆடியோவாகக் கேட்கலாம் ! மாற்றிக் கொள்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்? மாட்டிக் கொள்வது எப்போதும் கீழ்மட்ட ஊழியனே! சேனல் முதலாளிகள் மாட்டுவதுமில்லை தங்களை மாற்றிக்கொள்வதுமில்லை!
ஏதோ இது தந்திடிவியின் யோக்கியதை தானே, மற்றவை சுத்தம் என்று நினைத்துவிடவேண்டாம்! திமுக இம்முறை முதலில் கூட்டணி அமைத்தது பிரதான ஊடகங்கள், சேனல்களுடன் தான்! அரசியல் கூட்டணி வைத்தது எல்லாம் அப்புறம்தான் என்பது சிதம்பர ரகசியம்!
இஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் - கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ரோஷன் பெய்க் வலியுறுத்தல்!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால், இஸ்லாமியர்கள் சமரசம் செய்து கொண்டு பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரான ரோஷன் பெய்க் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. அப்படி தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தால் இஸ்லாமிய சகோதரர்கள் நிலைமைக்கு ஏற்றவாறு தங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரோஷன் பெய்க் செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.
அப்படியென்றால் இஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேவைப்பட்டால் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று ரோஷன் கேட்டார்.
நாம் (இஸ்லாமியர்கள்) எப்போதும் ஒரு கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கக் கூடாது. கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு என்ன நடந்தது? காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே இஸ்லாமிய வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தது, கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை, சிறுபாம்னையினரை காங்கிரஸ் தேவைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.
அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, தேவைப்பட்டால் விலகுவேன் என்று பெய்க் கூறினார்.
கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர்கள்தான்,ஆகாயத்தில் மட்டுமே பறந்துகொண்டிருந்தால் களநிலவரம் அவர்களுக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை, தோல்விகரமான ஒரு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்ததால் காங்கிரஸ் கட்சியால் அதிக எண்ணிக்கையிலான இடங்களை கைப்பற்ற முடியாது என்பது ஆரம்பத்திலேயே எனக்கு தெரியும் என்றும் ரோஷன் பெய்க் கூறினார்.
இதோடு மட்டுமில்லாமல் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி மீதும் பெய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மாநிலத்தின் அமைச்சரவை இலாக்காக்கள் விற்பனை செய்யப்பட்டன, இதற்காக குமாரசாமியை குற்றம்சாட்ட முடியாது, அவரால் இயங்க முடியாத சூழலே தற்போது நிலவுகிறது என்று கூறி அதிரவைத்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பாஜகவுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் மாற வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால், இஸ்லாமியர்கள் சமரசம் செய்து கொண்டு பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரான ரோஷன் பெய்க் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. அப்படி தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தால் இஸ்லாமிய சகோதரர்கள் நிலைமைக்கு ஏற்றவாறு தங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரோஷன் பெய்க் செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.
அப்படியென்றால் இஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேவைப்பட்டால் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று ரோஷன் கேட்டார்.
நாம் (இஸ்லாமியர்கள்) எப்போதும் ஒரு கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கக் கூடாது. கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு என்ன நடந்தது? காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே இஸ்லாமிய வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தது, கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை, சிறுபாம்னையினரை காங்கிரஸ் தேவைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.
அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, தேவைப்பட்டால் விலகுவேன் என்று பெய்க் கூறினார்.
கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர்கள்தான்,ஆகாயத்தில் மட்டுமே பறந்துகொண்டிருந்தால் களநிலவரம் அவர்களுக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை, தோல்விகரமான ஒரு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்ததால் காங்கிரஸ் கட்சியால் அதிக எண்ணிக்கையிலான இடங்களை கைப்பற்ற முடியாது என்பது ஆரம்பத்திலேயே எனக்கு தெரியும் என்றும் ரோஷன் பெய்க் கூறினார்.
இதோடு மட்டுமில்லாமல் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி மீதும் பெய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மாநிலத்தின் அமைச்சரவை இலாக்காக்கள் விற்பனை செய்யப்பட்டன, இதற்காக குமாரசாமியை குற்றம்சாட்ட முடியாது, அவரால் இயங்க முடியாத சூழலே தற்போது நிலவுகிறது என்று கூறி அதிரவைத்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பாஜகவுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் மாற வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோஷன் பெய்க் கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, Roshan Baig என்ற வார்த்தை டிவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. கர்நாடக அரசியலில் இவரது கருத்துக்கள் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரின் சிவாஜி நகரில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏவாக தேர்தெடுக்கப்பட்ட ரோஷன் பெய்க் கர்நாடக இஸ்லாமியர்களின் முகமாக அறியப்படுகிறார். உள்துறை, சுற்றுலா, ஹஜ், உள்கட்டமைப்பு, நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இலாக்காக்களை இவர் நிர்வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் எப்போதுமே விசித்திரமான கோமாளித்தனங்கள் நிறைந்ததுதான்! காங்கிரஸ் கட்சி என்பதே கோமாளிகள் கோமாளித்தனங்களால் நிரப்பப் பட்டது என்பது இங்கே இன்னும் விசித்திரம்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!