காங்கிரசின் ராஜீவ் ஒப்பாரி! தேர்தலில் கைகொடுக்குமா ?

ராஜீவ் காண்டியுடைய தாய்வழிப்பாட்டன் ஜவஹர்லால் நேரு ஆரம்பித்து வைத்த அசிங்கம், அவருக்கு வேணுங்கப் பட்டவுங்களா இருந்த எட்வினா  மவுன்ட்பேட்டன் இறந்தபோது கடலுக்கடியில் அடக்கம் செய்யப்பட்டார்.  ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்பட்ட நேரு, இரண்டு இந்திய போர்க்கப்பல்களை அந்தப்பகுதிக்கு அனுப்பி ரோஜா மலர்களைத் தூவி அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்த கதை அவருடைய உதவியாளராக  இருந்த M O மத்தாய் எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ்  மட்டும் சளைத்தவரா என்ன? இத்தாலியக்  காதல் மனைவியுடைய தாய் மற்றும்  உறவினர்கள், நண்பர் அமிதாப் பச்சன் ஜெயா பச்சன், ராகுல் காண்டியும் அவரது நண்பர்களும், பப்பி பியன்கா என்று ஒரு பரிவாரமே  கட்சத்தீவுகளில் ஒன்றான பங்காரத்தில் உல்லாச யாத்திரை போனார்களாம்!  அதுவும் பிரிட்டனிடமிருந்து வாங்கப்பட்ட INS விராட் என்கிற விமானம் தாங்கிக் கப்பலில்! இத்தாலிய உறவுமுறைகளோடு ராஜீவ் உல்லாசம்  என்பது அவர்களை பொறுத்தவரை சாதாரணம். மேலதிகத்தகவல்களுக்கு இங்கே  என்று திங்கள் கிழமையன்று எழுதிய விவகாரம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் நண்பர்கள் எவருமே இதைப் பெரிதாக எடுத்துக் கொண்ட மாதிரித் தெரியவில்லை.  அந்த அளவுக்கு அதிகார துஷ்பிரயோகத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு போகும் அளவுக்கு அறிவார்ந்த சமூகம் இருக்கிறது.


திருமதி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்குப் பொறுமையாக பதில் சொல்கிறார். இந்த விவகாரத்தை 2013 இலேயே வெளிக் கொண்டுவந்த இந்தியா டுடே, அவுட்லுக் வார இதழ்களுக்கு மறுப்பு சொல்லாத நபர்கள் சிலர் இப்போது நரேந்திர மோடி விஷயத்தைப் போட்டுடைத்ததும் பொங்குகிறார்கள். வைஸ் அட்மிரல் ராம்தாஸ் பிரதமர் சொன்னதை மறுத்திருக்கிறார்.அன்றைய பிரதமர் அதிகாரபூர்வமான பயணத்துக்குத் தான் INS விராட்டைப் பயன்படுத்தினார் என்பதோடு முடித்துக் கொண்டார். ஆனால் அந்த விமானந்தாங்கிக் கப்பலில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் துஷ்ப்ரயோகம் செய்யப்பட்டது உண்மைதான் என்கிறார்கள். இங்கே நேரு பரம்பரைக்கு மிக விசுவாசமான அதிகார வர்க்கம், பரம்பரைப் புகழைக் காப்பற்றுகிற வேலையில், உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டே வருவதை உங்களில் எத்தனைபேர் அறிந்திருப்பீர்கள் என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை. 1962 இந்திய சீனப்போரில் நேருவும் அவரது நிர்வாகமும் செய்த முட்டாள்தனங்கள் இன்று வரை பொதுவெளியில் வைக்கப்படவில்லை. நேரு என்று இந்தப் பக்கங்களில் தேடிப்பார்த்தால் ஏகப்பட்ட பதிவுகள் கிடைக்கும். 


அர்னாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்த நாட்களிலேயே காட்டுக்கூச்சல் காரணமாக அதிகம் பார்ப்பதைத் தவிர்த்தவன் நான். இப்போது ராகுல் சிவசங்கர் விவாதங்களை முன்னெடுக்கிறார் என்றாலும் அந்த சேனலை அதிகம் பார்ப்பதில்லை. இந்த விவகாரம் குறித்து ராகுல் நடத்திய அரைமணிநேர விவாதம் கொஞ்சம் விவரங்களைச் சொல்கிறது என்பதைக் கவனித்ததால், இங்கேயும் பகிர்கிறேன். பெண்கள் தங்கும் வசதியில்லாத INS விராட்டில், ஒருமாதம் முன்னதாகவே திட்டமிடப்பட்டு, அட்மிரலுடைய அறை டபிள் பெட் ரூமாக மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டுச் சொல்வதைக் கவனியுங்கள்.  

குற்றச்சாட்டுகளுக்குச் சரியாகப் பதில் சொல்ல  முடியாத காங்கிரஸ் கட்சி, ராஜீவ் காண்டியை வி பி சிங் அரசு பிஜேபி துணையோடு படுகொலைசெய்யப்படுவதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்று முகாரி பாட ஆரம்பித்து விட்டதில்  என்ன மாதிரியான அனுதாபத்தை இந்தத் தேர்தலில் தேடித்தரும்? 

சொல்லுங்களேன்!
         

6 comments:

  1. M O மத்தாய் எழுதியதில் உண்மை கொஞ்சம் குறைவு என்றும் சொல்கிறார்கள். இந்தத்தகவலைச் சொல்லவில்லை. ராஜீவ் காந்தியை குறை சொல்வதை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. ராஜீவ் படுகொலையை பி ஜே பி கண்டு கொள்ளாமல் விட்டது என்று எதை வைத்துச் சொல்கிறார்கள்? ராஜீவ் மற்றும் அவருடன் மரணித்தவர்களைக் கொலை செய்தவர்களை மன்னிக்கத் தயாராய் இருப்பது அவர்கள்தானே?

    ReplyDelete
    Replies
    1. //ராஜீவ் படுகொலையை பி ஜே பி கண்டு கொள்ளாமல் விட்டது // - என்று யார் சொல்கிறார்கள்? படுகொலைக்கு ஒரு விதத்தில் காரணமான திமுக, மதிமுக, பெரியாரிஸ்டுகள் என்று எல்லோருடனும்தான் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறதே. திமுக, இந்திய தேசத்துக்கு எதிராக, ரகசியங்களை விடுதலைப் புலிகளுடன் பகிர்ந்துகொண்டது என்பதற்குத்தானே திமுக அரசு கலைக்கப்பட்டது.

      இன்றைக்கு சில சீட்டுகள் கிடைக்கும் என்பதற்காக, தந்தையின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி கூட்டு வைத்துக்கொண்டு சம்பந்தமில்லாதவர்களைத் தூற்றுவது எதற்காக?

      Delete
    2. ஸ்ரீராம்! நேருவுடைய பலவீனங்களை மறைக்க அன்றைய அதிகார வர்க்கம் எப்படிப் பாடுபட்டதென்பதற்கு 1962 சீனப்போரின் போது அறிவிக்கப்பட்ட அவசர நிலை சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமலில் இருந்ததே சாட்சி. இந்திரா நாளைய நெருக்கடி நிலை போல சாதாரண ஜனங்களைப்பாதிக்காததால், அதிகம் தெரியாமல் இருந்தது. மத்தாய் புத்தகத்தில் பல விஷயங்கள் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம், ஆனால் பொய்களால் எழுதப்பட்டதல்ல என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

      Delete
    3. அப்புறம், ராஜீவ் படுகொலை! ராஜமுத்திரை நாவலை வைத்துச் சொன்னதை போல விபி சிங்கின் உள்நோக்கங்கள் உள்ளடிவேலைகள் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் இருக்கின்றன. ஆனால் உள்ளடிவேலைகளின் பலன் எதையும் அனுபவிக்காமலேயே அவருடைய கதையும் முடிந்து, மறந்தும் போனது.

      ஆனால் நேற்றைக்கு அகமது படேல் பிஜேபியைத் தொடர்புபடுத்திப் பேசியிருப்பது அபத்தம். இன்னும் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

      Delete
  2. ஒருவரை அசிங்கப் படுத்தி ஆதாயம் காண்பவர்கள் அரசியல் வியாதிகள் நாம்நமக்குப் பிடித்தவாறு எடுத்துக் கொண்டு சமாதான மடைகிறோம் தலைவர்களைப் பற்றி எழுதிலாபம் சம்பாதிப்பவர்க்சளை நம்புவடும் நம்பாததும் நம் பெர்செப்ஷனே

    ReplyDelete
    Replies
    1. GMB சார்! நீங்கள் சொல்வது ஒருவகையில் சரி! ஆனால் இதை யார் முதலில் ஆரம்பித்து வைத்தார்கள் என்று பார்த்தல்லவா இங்கே பதிவுகளில் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருப்பது? விவிலியத்தில் சொல்லியிருக்கிறதே என்று ஒரு கன்னத்தில் அறைந்தால் இரு கன்னத்திலும் திருப்பிக் கிடைக்குமா கிடைக்காதா என்றுகூடத் தெரியாதவர்களா அந்த இத்தாலியாக் கிறித்தவத்தாயின் பிள்ளைகள்? :))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!