மண்டேன்னா ஒண்ணு! அஞ்சறைப்பெட்டி! #அரசியல்

இன்றைக்கு இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐந்தாவது கட்டமாக நடப்பதில் ராகுல் காண்டி போட்டியிடும் அமேதி தொகுதியும் அடக்கம்.தேர்தல் பிரசாரத்தில் நரேந்திரமோடி மிஸ்டர் க்ளீன்  இமேஜூடன் ஆரம்பித்த ராஜீவ் காண்டி ஊழல் நம்பர் ஒன்னாக முடிந்த கதையை ஒரு கோடி  காட்டிவிட்டுப் போக ராகுல் காண்டி, பிரியங்கா வாத்ரா, நம்மூர் பானாசீனா எல்லோரும் கண்டனம் தெரிவித்து ராஜீவ் காண்டியின் பரிசுத்தமான இமேஜைக் காப்பாற்ற முனைந்ததில் மிஸ்டர் பரிசுத்தத்தின் இமேஜ் இன்னும் டார் டாராகக் கிழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதுதான் மிச்சம். நாம் மட்டும் சும்மா விட்டு வைக்கலாமா? 

  
ராஜீவ் காண்டியுடைய தாய்வழிப்பாட்டன் ஜவஹர்லால் நேரு ஆரம்பித்து வைத்த அசிங்கம், அவருக்கு வேணுங்கப் பட்டவுங்களா இருந்த எட்வினா  மவுன்ட்பேட்டன் இறந்தபோது கடலுக்கடியில் அடக்கம் செய்யப்பட்டார்.  ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்பட்ட நேரு, இரண்டு இந்திய போர்க்கப்பல்களை அந்தப்பகுதிக்கு அனுப்பி ரோஜா மலர்களைத் தூவி அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்த கதை அவருடைய உதவியாளராக  இருந்த M O மத்தாய் எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ்  மட்டும் சளைத்தவரா என்ன? இத்தாலியக்  காதல் மனைவியுடைய தாய் மற்றும்  உறவினர்கள், நண்பர் அமிதாப் பச்சன் ஜெயா பச்சன், ராகுல் காண்டியும் அவரது நண்பர்களும், பப்பி பியன்கா என்று ஒரு பரிவாரமே  கட்சத்தீவுகளில் ஒன்றான பங்காரத்தில் உல்லாச யாத்திரை போனார்களாம்!  அதுவும் பிரிட்டனிடமிருந்து வாங்கப்பட்ட INS விராட் என்கிற விமானம் தாங்கிக் கப்பலில்! இத்தாலிய உறவுமுறைகளோடு ராஜீவ் உல்லாசம்  என்பது அவர்களை பொறுத்தவரை சாதாரணம். மேலதிகத்தகவல்களுக்கு இங்கே   

NDTV பாவம், மிஸ்டர் க்ளீன் இமேஜுக்காக 
கிடந்து அல்லாடுகிறது  

ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ராஜிவ் ஊழல் செய்தார் என்பதால் தான் மக்கள் 1989ல் ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்தார்கள். ஒருவர் இறந்துவிட்டால் ஊழல் இல்லை என்றாகிவிடுமா? பிரதமரை ஒருவர் 10 மாதமாக திருடன் என்பார். ஆனால் நீ திருடன் மகன் என்று ஒருமுறை சொன்னால் தாங்கமுடியவில்லையா? இது குறித்து ப.சி பேசக்கூடாது. NDTV ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட வருமானவரி அதிகாரிக்கு எதிராக பொய் பாலியல் தொந்தரவு புகார் கொடுக்கச் சொன்னது யார்? அப்படிக் கொடுத்த பெண் யார் ஆகிய அனைத்து சிதம்பரம் ரகசியங்களும் உலகறியும்.

அந்த அதிகாரி தன்மீது சுமத்தப்பட்ட புகார் பொய் என்று நிரூபித்து மீண்டும் பணியில் சேர்ந்த அன்றே நியாய உணர்வு சிறிதளவேணும் இருந்திருந்தால் ப.சி தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ப. சிதம்பரம் தொடர்ந்து மோடிஜியை தாக்குவது பயத்தினால் என்று எனக்கு புரிகிறது. ஆனால் ப.சி ஒரு ஒழுக்கமற்ற, நேர்மையற்ற கொடூரமான மனிதர் என்பதை முழுமையாக அறிந்த ஒரு சிலருள் நானும் ஒருவன் என்ற முறையில் எச்சரிக்க விரும்புகிறேன். Thus far no further.
  
   


பிரகாஷ் ராஜ் கமல் காசர் போல நல்ல நடிகர் தான்! அதற்காக அரசியல் களத்திலுமா?  தான் சொன்னது திரிக்கப்பட்டு விட்டது, அது பொய்ச்செய்தி, அதற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று அடுத்த சீனையும் பிரகாஷ் ராஜ் போட்டு முடித்து விட்டார்.   


பிரகாஷ் ராஜும் சரி அவர் ஆதரிக்கிற டில்லி முதலமைச்சர் அரவிந்த் கேசரிவாலும் சரி, டில்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதையோ மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட உளாக்காட்டி,  ஜிகினா வேலைதான் என்பதையோ புரிந்துகொண்டமாதிரித் தெரியவில்லை.  

அஞ்சறைப்பெட்டியின் கடைசிப்பகுதியாக 

ஈவே ராமசாமி பற்றி உண்மையை எடுத்துக் கூறினால் அவர்கள் குரலை முடக்கவும் , அதை முழுமையாகத் தடுக்கவும் இங்கே ஒரு கூட்டம் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்யும். அந்த கூட்டம் சமீபத்தில் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்ற நண்பர் எழுப்பிய ஆதாரத்துடனான குற்றசாட்டிடை எதிர்கொள்ள முடியாமல் அவர் Facebook கணக்கை முடக்கியுள்ளார்கள் என்று செய்தி.
இதே wikipediaல் 2008 வரை ஈவேரா அவர்களுக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதாக இருந்த தகவல் - 2009ல் இருந்து மாற்றி ஈவேரா அவர்களை அவருடைய ஆதரவாளர்கள் வைக்கம் வீரர் என்று அழைத்தார்கள் என்று மாற்றினார்கள். இதற்கே பலகாலம் சண்டை போட வேண்டியதாகயிருந்தது. ஒரு உண்மையை மாற்ற இவ்வளவு அக்கபோரு.
இப்போது UNESCO விருது என்ற பொய்யை உடைத்து விட்டார்கள். இதனால் சென்ற ஆண்டுவரை ஈவேரா Awards என்ற இடத்திலிருந்த UNESCO இந்த ஆண்டு முதல் தூக்கிவிட்டார்கள் wikipediaல் இருந்து.
இப்போ அப்படி ஆதாரம் இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்??? ஆதாரத்தைக் கொடுத்து அந்த நீக்கப்பட்டது தவறு என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டுக் கதை அளப்பதற்கு வைக்கப்பட வேண்டும் வீரமணி அவர்கள். இப்படி பச்சையாக மக்களை ஏமாற்றி பலகாலம் பிழைப்பு நடத்திய திக கூட்டம் வெக்கமே இல்லாமல் கேள்வி கேட்பவர்களை எதிர்த்துக் கொதிக்கிறது. வீரமணி அவர்களுக்கும் சுபவி அவர்களுக்கும் கொதிப்பாக இருந்தால் போய் கிணற்றில் குதிக்கவும் இல்லை ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள். சும்மா நீங்கள் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு இது ஒன்றும் 1970கள், 1980கள் அல்ல , இது 2019. ஆதராம் வேண்டும். அசைக்க முடியாத ஆதாரம்.
ஈவேராவுக்கு UNESCO விருது கொடுக்கவில்லை என்றும் கூறியது மட்டும் அல்ல இங்கே பெரும்பாலும் பெரியார் அதைச் செய்தார் இதைச் செய்தார் என்று கூறும் பலவிசயம் வடிகட்டின பொய். வைக்கம் வீரர் பெரியார் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அடுத்தவன் போராட்டத்திற்கு லேபில் ஒட்டி அதை வைத்து ஆதாயம் தேடிய கூட்டம் தானே பின் எப்படி வெக்கம் இருக்கும். எதைச் சொன்னாலும் அதற்கு ஒரு முட்டுக்கொடுக்க இவர்களே ஒரு வரலாற்றை எழுதுவது இவர்களுக்குக் கைவந்த கலை. சுபவீ, வீரமணி போன்றவர்களுக்கு அதுதானே உழைப்பு , பிழைப்பு எல்லாமே.
கூடிய விரைவில் ஒட்டுமொத்தமாக ஈவேரா என்ற மனிதர் எப்படி இங்கே வலுக்கட்டாயமாக்க மக்கள் மத்தியில் முக்கியமாகப் பட்டியலின மக்கள் மத்தியில் பதியவைத்து மக்களை ஏமாற்றி எப்படி ஆதாயம் தேடினார்கள் என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை தெளிவாக வீடியோ பதிவினை கூடிய விரைவில் வெளியிடுகிறேன். நீங்கள் ஒரு ID முடக்கலாம் ஒரு பதிவை நீக்கலாம். ஆனால் உண்மை என்றென்றும் தூங்காது, அன்று ஊர் வாயையும் மூட முடியாது.
முழுவதும் அம்மணமாக நிற்க வேண்டிய அருவருப்பான நாட்களைத் திராவிட கலக்கம் அதன் அரசியல் கழகமும் சந்திக்கத் தயார் ஆகுங்கள். உங்கள் இருவரையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்கும் நாள் நெருங்குகிறது.
ஈவேரா விட்டுச் சென்று 10000கோடி சொத்துக்கு சில நக்கி பிழைக்கும் கூட்டம் வேண்டும் என்றால் அவருக்கு முட்டுக் கொடுக்கட்டும் - அவர்களுக்குப் பசிக்கும் அல்லவா. அதனால் அப்படி கீழ்த்தரமான கூட்டத்தை விட்டுவிடலாம். ஆனால் உண்மை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய காலம் இது. திராவிட அரசியல் செய்த சித்து விளையாட்டுக்களை உடைத்துக் காட்டிட வேண்டிய நேரம் இது. எனவே எல்லோரும் பேசுங்கள்.
வைக்கம் வீரர் பெரியார் என்று பாடப்புகத்தில் எழுதிப் படிக்க வைத்து அதை முக்கிய கேள்வியாகத் தேர்வுகளில் ஒவ்வொருமுறையும் கேட்டு அதை மாணவர்களை வலுகடடாயமாக படிக்க வைத்து - ஒரு மாநில மக்களையே முழுவதும் முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள் இந்த திமுக திக இரு கூட்டுக் களவாணிகளும்.
சும்மா விடக் கூடாது இவர்களை... கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு special வீடியோ வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்கிறார் மாரிதாஸ் 

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!