மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி #4

தமிழ்நாட்டில் இதரஊடகங்கள்,  சேனல்களுக்கு கொஞ்சம்கூடக்  குறையாமல் வெறும் விவாத அக்கப்போர்களில் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளமும் போட்டி போட்டுக் கொண்டு விவாதங்கள் நடத்த ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான போக்கா? அல்லது இது தான் தமிழகத்தின் தலைவிதியா?



  • கர்நாடகம், குஜராத், ஒரிசா, மே.வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை.
    Quote Tweet
    ·
    #BIGNEWS "இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்!" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ns7.tv | @mkstalin | #HindiStates | #CentralGovt | @PMOIndia
    11:25 PM · May 25, 2019 · Twitter for Android  

    இதற்கு H ராஜாவின் கமெண்ட், ஒருவிதத்தில் சரிதான்! ஆனால் ஸ்டாலின் பேச்சின் உள்ளர்த்தம் ஏதோ கொஞ்சம் ஜெயித்திருக்கிறோம்! ஆதரவு தேவை இல்லாவிட்டால் கூட, ஏதோ கொஞ்சம் பார்த்து அனுசரணையாகச் செய்யுங்கள் என்பதாக மட்டுமே இருக்கிறது. பழையபடி திமுக, அடைந்தால்  திராவிடநாடு இல்லையேல் இடுகாடு என்று முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விடவில்லை.
      
        
    தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு என்கிற சிக்கலை எதிர்கொள்ளும் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் ஒரே தந்திரத்தையே கையாள்கின்றன.
    ராகுல், மம்தா, மாயாவதி, கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, லாலு, அகிலேஷ்,.. என்று மிக நீளமானது இந்த பட்டியல் .
    இந்தப் பக்கமிருந்து...கட்சியின் தலைமையாக .. தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா என்று பேசுவதும்...அந்தப் பக்கமிருந்து கட்சியின் உயர்மட்டக் குழுவின் தலைமையாக இருந்து ..தன் ராஜினாமாவை தானே நிராகரித்துவிடுவதுமாக ...நல்ல நகைச்சுவை.
    கூடுதல் நகைச்சுவையாக... கட்சியிலுள்ள பிற இரண்டாம் நிலை -மூன்றாம் நிலை அரசியல்வாதிகள்.. கட்சி தலைமை ராஜினாமா செய்தால்....தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று தப்பித்து கொள்கிறார்கள். சம்பிரதாயமாகக் கூட...தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்வதில்லை.
    சுருக்கமாக சொல்வதானால்..தலைமை பதவி வேறு யாருக்கும் கிடையாது. கட்சியின் இரண்டாம் நிலை அரசியல்வாதிக்கு தொண்டன் எப்படியோ..அது போல தான்..தலைமைக்கு ..இரண்டாம் நிலை அரசியல்வாதி!
    காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகளில் நடந்த ராஜினாமா நாடகங்களை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பார்த்து இருக்கிறோம்!  
    பித்தம் தெளிய மருந்தில்லையாம்! 

    இத்தனை பார்த்துவிட்டு உள்ளூர் காமெடி ஒன்றைப்  பார்க்க வேண்டாமா? வைகோ ஆதரவாளர்கள் போஸ்டர் ஒன்றை இப்படி மதுரையில் தெறிக்க விட்டிருப்பதாக!


    வைகோவின் ராசி எப்பூடி என்று கேட்கிறார்கள்! பாவம்! அதில் கூட ராசி முக்கியமில்லை என்று தான் சொல்ல முடிகிறதே தவிர வைகோ ராசியானவர்தான் என்று சொல்ல முடியவில்லையே! 

    மீண்டும் சந்திப்போம்.
         

    4 comments:

    1. யார் இந்த வைகோ? இன்றைக்கு திமுகவின் எடுபிடியாக இருக்கிறாரே அவரா? அவரது ஊர் எது? விளாத்திக்குளமா? 'உள்ளூரில் விலைபோகாத ஆளு' மற்ற இடங்களில் விலை போய்விடுவாரா?

      ReplyDelete
      Replies
      1. வைகோவுக்கு இப்படியொரு பரிதாபமான அரசியல் முடிவு எதிர்பார்த்ததுதானே நெல்லை!?

        Delete
    2. மதுரைப்பக்கங்களிலோ எங்கோ "வைகோவின் ராசி பற்றி இப்போது என்ன சொல்கிறீர்கள்?" என்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார்களாமே... வைகோவினால்தான் ஸ்டாலின் - திமுக- ஜெயித்ததாமே?​

      ReplyDelete
      Replies
      1. அப்படி ஒரு போஸ்டர் என்கண்ணில் இதுவரை படவில்லை ஸ்ரீராம்! அப்படியே இருந்தாலும் அதை வைகோவே நம்புவாரா என்றொரு சந்தேகம்! :-)))

        Delete

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!