ஒரு புதன்கிழமை! அரசியல்! #செய்திக்கலவை

அட போங்கப்பா! தற்போதைக்கு காங்கிரஸ் தலைவராக ராகுல் காண்டியே தொடர்வாராம்! அதுவும்  மூன்று  நான்கு மாதங்களுக்குள் இன்னொரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரைதானாம்! சரியான போங்காட்டமாக இருக்கிறதே!  


காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை சீதாராம் கேசரியைத் தள்ளிவிட்டு சோனியா G ஏற்றுக் கொண்ட பிறகு 18 ஆண்டுகள் தன் வசம் வைத்துக் கொண்டிருந்து, பட்டத்து இளவரசர் ராகுலுக்கு முடிசூட்ட சரியான தருணம் பார்த்திருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் தான் ராகுல் காங்கிரஸ் தலைவரானார் என்ற கதை ஞாபகமிருந்தால் இந்த கார்டூன் என்ன சொல்லவருகிறது என்பதும் புரியும்! இருபது வருடங்களாக தலைமைப்பொறுப்புக்கு ஆள்தேட முடியாதவர்கள் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்ப நீங்களோ நானோ காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான் இல்லையே!

   
இந்த ராஜினாமா நாடகங்களுடைய யோக்கியதைதான் என்ன என்பதை இன்னொரு பழைய கார்டூன், RK லக்ஷ்மண் வரைந்த ஒன்றைப் பார்த்தாலேயே புரியும்.

   
இதோ என் ராஜினாமா! பரிசீலனைக்கு அனுப்பாதே! ராஜினாமா கொடுக்கப் பட்டது,  நிராகரிக்கப்பட்டது என்று file இல் போட்டுவிடு என்று இன்றைய நிலவரத்துக்கு அர்த்தப் படுத்திக் கொள்ளலாமா? 

நம்மூர் ஊடகங்களுடைய யோக்கியதை, ஒருபக்கச் சார்பு. பொய்களுக்கே முதலிடம் கொடுத்து ஊதிப்பெரிதாக்குவது இப்படியான அவலங்களை அம்பலப்படுத்துகிற ஒரு கேள்வி 


தமிழகத்தில் அதையும் பிஜேபி, H ராஜாதான் வந்து கேட்க வேண்டியிருக்கிறது. இதன் மீது உங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்!

மனுஷ்ய புத்திரன் வாங்குகிற காசுக்கு மேலேயே 
கூவுகிற ரகம்! 

மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன?

மின்னம்பலம் தளத்தில் சேது ராமலிங்கம் கொஞ்சம் அரைகுறைத் தகவல்களோடு முக்கியமான ஒரு விஷயத்தை அலசியிருக்கிறார். மார்க்சிஸ்டுகள் நகர்ப்புற அளவிலானதாகச் சுருங்கிவிட்டனர் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் முதல் அலசல்  இது. இந்துதமிழ்திசையில் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் அ.குமரேசன் இன்று எழுதியிருக்கிற கட்டுரை கூட இவ்வளவு உடைத்துச் சொல்லவில்லை.

மீண்டும் சந்திப்போம்.  
   

3 comments:

 1. சில நாட்களாகவே உங்களது பதிவுகளை வாசித்து வருகிறேன். மீண்டும் எனது வலைப்பதிவையும் தூசு தட்டி எழுத ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களாவது 2017 அக்டோபர் வரை வலைப்பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள்! நான் கூகிள் ப்ளஸ் வந்ததில் வலைப்பதிவுகளை மறந்திருந்தேன். முகநூலில் கலக்கிக் கொண்டிருக்கிறீர்களே! வலைப்பதிவுகளில் மீண்டும் எழுத வாருங்கள்!

   Delete
 2. google காண்டி இப்போது scene போட்டு நாடகம் நடத்துகிறார்

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!