இந்த நாடாளுமன்றத் தேர்தல் எந்த வகையில் வித்தியாசமானது?

இந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் எந்த வகையில் மிகவும் வித்தியாசமானது என்ற கேள்வியை எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஹிந்தி பெல்ட் குறிப்பாக 80 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உத்தரப் பிரதேசத்துக்கு இல்லாத முக்கியத்துவமும் கவனமும் வேறு எதற்கோ அளிக்கப்படுவது ஏன் என்று கேட்டுக் கொண்டது உண்டா? 

 But why is Mamata Banerjee resorting to extreme steps — in her language — and her party workers rampaging across the state?

இந்தச் செய்திக்கட்டுரையைப் படிக்கும்வரை நானும் கூட இந்தக் கோணத்தில் பார்க்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இங்கே மூன்றாவது அணி, யாரோ ஒரு மாநிலக்கட்சி ஆசாமி, காங்கிரஸ் முதுகிலேறி பிரதமர் ஆகிவிடலாம் என்று நப்பாசையோடு அலைகிற மாதிரித்தான் முதலில் ஒரு தோற்றம் இருந்தது, இல்லையா? ஆனால் மம்தா பானெர்ஜி சீரியசாகவே பிரதமர் கனவில் மிதந்ததும், மேற்கு வங்கத்தைக் கைப்பற்றியது போல நாட்டின் பிரதமர் பதவியையும் பிடித்துவிடலாம் என்று ஆரம்பநாட்கள் முதலே திட்டம் தீட்டியதையும் நாம்  கவனிக்கத் தவறி விட்டோமோ? இத்தனைக்கும் மம்தா பானெர்ஜி தன்னுடைய உறவினர்களிடம் மாநில ஆட்சியைக் கொடுப்பதற்கு பயிற்சி கொடுப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டுதான் இருந்தன.

The primary reason for the West Bengal Chief Minister’s desperation has to do with her prime ministerial ambitions. If her party cedes ground to the BJP in the state, then she will stand at a disadvantage to push forward her claim to the nation’s leadership. Unlike in the case of parties such as the Congress and the BJP which have a nationwide presence, her Trinamool Congress is restricted to West Bengal, and it’s a do or die battle for her there. Mamata Banerjee has sought to occupy the pole position as a challenger to Prime Minister Narendra Modi, outdoing other opposition leaders in spewing venom against him — calling him a thief and a goon and threatening to slap him and break his teeth என்கிறார் ராஜேஷ் சிங்.

இப்போது, இந்தத்தகவலோடு மே 23 அன்று சோனியா G கூட்ட இருக்கிற கூட்டத்தில் மம்தா பானெர்ஜி எந்த அளவுக்குப் பங்கெடுப்பார் என்ற கேள்விக்கு விடை எங்காவது தெரிகிறதா என்று பாருங்கள்! முதலில் சோனியா கூட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறவர்கள் யார்? கழன்று கொள்ளப் போகிறவர்கள் யார்? ஊகிக்க முடிகிறதா? முடிந்தால் நீங்கள் அரசியல் பிஸ்தா தான்! சலாம் வச்சுக்கிறேன்!    
    
 
#நேருபாரம்பரியம் என்பதே அடுக்கடுக்கான பொய்களின் மீது கட்டப்பட்டது என்பது என்னுடைய கருத்தாக இருக்கிறது. கூகிள் ப்ளஸ் நாட்களில் இந்த ஹேஷ்டேகில் எழுதி வந்ததில் நண்பர் நிர்மல் பிச்சை  தொடர்ந்து விவாதம் செய்வார். ஆனால் இந்திராவின் வாரிசுகள் என்பதைவிட சோனியா G வாரிசுகள் பொய்களை அடுக்குவதில் எல்லைகடந்து இன்றைக்கு சர்வதேச சமூகத்தின் முன்னால் கேலிப்பொருளாக நிற்கிறார்கள். Mamma mia! என்று மூக்கில் விரலை வைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?! 
 

காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன் கமல் காசருக்கு இந்தப் பாட்டை டெடிகேட் செய்து பதிவை முடிப்பதற்கு முன் எங்கள்Blog ஸ்ரீராமுக்கு ஒரு கேள்வியோடு முடிப்போம்!

இந்தப்பாட்டு மாதிரி நிறைய ஹிட்டுகளைக் கொடுத்த கார்த்திக் ராஜா தந்தை மாதிரியோ சகோதரன் மாதிரியோ பெரிய அளவில் பேசப்படவில்லையே, ஏன்? அடுத்த வெள்ளியன்று  வீடியோப் பதிவாகப் போட weapon supply செய்த திருப்தியுடன்.....

மீண்டும் சந்திப்போம்!
           

6 comments:

 1. மம்தாவுக்கு 30+ சீட்டுகள், மாயாவதி 30+, அகிலேஷ் 30+, திமுக 25+ இருந்தால், யாருடைய பிரதமர் கனவு நனவாகும்னு தெரியலை. ஒருவேளை மாயாவதி பிரதமர், மம்தா துணைப் பிரதமர், 5 கேபினட் திமுக என்றெல்லாம் ஆட்டம் இருக்குமா? கர்னாடகாவில் இருப்பதுபோல, 100+ சீட்டுகள் இருந்தாலும் அடங்கிப்போகும் நிலையில் காங்கிரஸ் இருக்குமா?

  ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று இதனை நினைத்துத்தான் புத்தர் சொல்லியிருப்பாரோ?

  ReplyDelete
  Replies
  1. மம்தா பானெர்ஜிக்கு 25 சீட்டுகள் கிடைப்பதே துர்லபம் தான்! மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் திரிணாமுல் கட்சியும் ஆட்சியும் நீடிப்பதுமே கேள்விக்குறிதான்! மாயாவதி வேறு பிரதமர் கனவில் இருக்கிறார் 37 தொகுதியில் போட்டி, சமாஜ்வாதி ஓட்டுக்கள் முழுக்க மாறினால் 25 சீட் ஜெயிக்கலாம். ஆனால் மம்தா விட்டுக் கொடுப்பாரா? ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது நம்மைப் போல சாமானியர்களுக்குப் புரிகிற விஷயமா என்ன?

   காங்கிரசைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசத்திலும் கணிசமாக ஜெயித்து, இதர மாநிலங்களையும் சேர்த்து 150+ என்று வந்தாலொழிய மரியாதை இல்லை. ஆனால் இரட்டை இலக்கத்தைத் தாண்டாது என்கிற போது எவர் வேண்டுமானாலும் பிரதமராக வந்துவிட்டுப் போகட்டும், வம்பு வழக்கு விசாரணைகளில் இருந்து விடுபட அனுசரணையாக இருந்தால்போதும் என்கிற நிலைமை.

   Delete
 2. கார்த்திக் ராஜா பாடல்கள் சிலவற்றை கேட்டு ரசித்திருக்கிறேன். தேடித்தான் பார்க்க வேண்டும். பார்க்கிறேன்!

  அரவிந்தன் என்கிற படம் காரா இசை என்று நினைக்கிறேன். அவர் ஏன் புகழ் பெறவில்லை என்று தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் தேடிப்பார்த்து வெள்ளி வீடியோவில் போட்டுவிடுங்கள் ஸ்ரீராம்! :)))))

   Delete
 3. கார்த்திக் ராஜா மேல அம்புட்டு பிரியமா ஸார்...!!

  ReplyDelete
  Replies
  1. பிரியம் கார்த்திக் ராஜா என்ற தனிநபர் மீது இல்லை. நல்ல ஹிட்டுக்களைக் கொடுத்த இசையமைப்பாளர் எதனால் சோபிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் தான்! நல்ல மெட்டுக்கள் எவர் போட்டிருந்தாலும் விரும்பிக் கேட்கிற வழக்கம் முன்பு இருந்தது.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!