Showing posts with label அரசியல் இன்று. Show all posts
Showing posts with label அரசியல் இன்று. Show all posts

#அரசியல்இன்று இன்னும் எத்தனை காமெடிகளைப் பார்க்கப்போகிறோமோ?

சேகர் ரெட்டியும் நாற்பது திருடர்களும்! ஒரு தனிமனித அரசாங்கத்தை நடத்திய சேகர் ரெட்டி என்று சவுக்கு சங்கர் ஒரு நீளமான பதிவை அந்தநாட்களில் எழுதியது நிறையப்பேருக்கு மறந்து போயிருக்கலாம்! அந்தப் பதிவில் இருந்த முக்கியமான விஷயமே ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமே இல்லாமல் இரண்டு கழகங்களைச் சேர்ந்த புள்ளிகள் சேகர் ரெட்டியிடம் எவ்வளவு வாங்கினார்கள் என்ற பட்டியல்தான்! அதற்கு என்ன வந்தது இப்போது என்று கேட்கிறீர்களா?


அதே மணற்கொள்ளை புகழ் சேகர் ரெட்டி முதல்வர் இசுடாலினைச் சந்தித்து கொரோனா நிவாரணநிதியாக   ஒருகோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உதயநிதி இசுடாலினும் உடனிருந்தார் என்கிறது DIPR செய்திக்குறிப்பு. சேகர் ரெட்டி தொழிலதிபர் ஜெ. சேகர் என்றாகியிருப்பது வெறும் காமெடிதானா? உதயநிதி உடனிருந்தது தற்செயலானதுதானா? அல்லது இந்தச் செய்தியில் சொல்லப்படுகிற மாதிரி சைதை துரைசாமி முன்னர் சொல்லியிருந்தாற்போல உதயநிதியின் ரெட் ஜயண்ட்ஸ் நிறுவனத்துக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருந்ததன் பின்தொடர்ச்சியா? அதிமுக ஆட்சியில் கட்டு கட்டாக பணத்துடன் சிக்கிய சேகர் ரெட்டி, திமுக ஆட்சியில் ஜெ. சேகர் ஆக உருமாறினார் திமுக எப்படி சாதியை ஒழி(ளி)ச்சுடுச்சு பார்த்தீங்களா என்று கார்டூனிஸ்ட் பாலா முகநூலில் கேட்கிறார் என்பதும் ஒரு சீரியசான காமெடியே!


புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு சோனியா காங்கிரசும் மார்க்சிஸ்ட் சேக்காளிகளும் எதற்காக லபோதிபோவென்று அடித்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம்? சோனியா காங்கிரஸ் காரன் குதித்தால் ஐயோ காசுபார்க்கிற வாய்ப்பு போச்சே என்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்!


காங்கிரஸ் பெருச்சாளிகள் வடை போச்சே என்று பொருமுவதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டுண்ணிகளாக மட்டுமே அரசியலில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற மார்க்சிஸ்டுகள் ஏன் காங்கிரஸ் காரனுக்கு மேலேயே கூவுகிறார்கள்? விவரித்துச் சொன்னால் ஒரு முழுநீள காமெடிப்படமே எடுக்கலாம்!  

 


மேலே படத்தில் இருக்கிற பெண்மணி ஷைலஜா டீச்சர்! பினரயி விஜயனுடைய முந்தைய அமைச்சரவையில் மிக முக்கியமானவராக இருந்தவர். கேரளா மாடல் என்று மார்க்சிஸ்டுகளால் தம்பட்டமடித்துக்கொண்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னணியாக இருந்தவர், இந்தமுறை மந்திரிசபையில்  சேர்த்துக்  கொள்ளப்படவில்லையாம்! பழைய முகங்களுக்கு மறுவாய்ப்புக் கொடுப்பதில்லையன்று மாநிலக்குழு இன்று கூடி முடிவிடுத்ததில் டீச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் பினரயி கூடப் பழைய முகம்தான்! The announcement has led to much anger and disappointment. Though Pinarayi Vijayan was the face of the LDF’s campaign, much of their focus was on how Kerala performed when Nipah and COVID-19 outbreaks happened. That KK Shailaja won with a landslide margin is a testament to her popularity. The party’s explanation that old faces will not be repeated has not cut much ice with many who are asking why can’t a minister be repeated if the Chief Minister remains the same. என்கிறது TNM செய்தி அதே வேளையில் புதுமுக MLA வான முகமது ரியாசுக்கு மந்திரிப் பதவி கிடைத்திருக்கிறது. அதற்கான காரணம் அவர் பினரயி விஜயனுடைய மாப்பிள்ளை என்பதாகக் கூட இருக்கலாம்! (வெளியே சொல்வார்களா என்ன!!)


Kerala going the way of the rest of the country.
Quote Tweet
Sreedhar Pillai
@sri50
·
One of the new ministers in #PinarayiVijayan’s ministry is his son-in-law #MohammedRiyas!!

2:01 PM · May 18, 2021Twitter for Android

சுமந்த் சி ராமன் பொதிகையில் Sports Quiz மட்டுமே நடத்திக் கொண்டிருந்த நாட்களில் எல்லோராலும் விரும்பப்பட்டவராக இருந்தார் என்பது பழைய கதை. அரசியல் விமரிசகராக ஜோதியில் ஐக்கியமானபின் அவரும் காமெடிப்பீசாகிப்போனார் என்பது  இன்னொரு விதமான காமெடி! மார்க்சிஸ்டுகள் மட்டும் விதிவிலக்கா என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.      

மக்கள், நீதி, மய்யம்! பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி!

கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்கின்றன.  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரன், பொன்ராஜ், சந்தோஷ்பாபு, மவுரியா, சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். ` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை' என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார் என்கிறது பிபிசி செய்தி. 


வீடியோ 35 நிமிடம். விஜய் டிவி மகேந்திரன் மற்றும் சுரேஷ் அய்யர் இருவரும் சேர்ந்து தொடங்கிய சங்கையா சொல்யூஷன்ஸ், கமல் காசர் கட்சிக்கு  ஆலோசனை சொல்கிற பொறுப்பை எடுத்துக் கொண்டதில் இருந்தே பிரச்சினைகள் எழுந்ததாக சிலகாலத்துக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. தங்களை மீறிக் கமலை வேறு எவரும் அணுக முடியாதபடி சங்கையா சொல்யூஷன்ஸ் சிறப்பாகச் செயல்பட்டதில் முதல் பலி திருமதி கமீலா  நாசர்! கமல் குடும்ப நண்பர் என்பதால் பிரச்சனைகளை வெளியே பேசாமல், அமைதியாக வெளியேறி விட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த நான்கே நாட்களில் மக்கள்நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி இருப்பது கமல் காசருடைய  அரசியல் சாகசம், தலைமை  எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.  



பொள்ளாச்சி மருத்துவர் மகேந்திரன் தனது 12 பக்க அறிக்கையில் கமல் காசருடைய தலைமையின் லட்சணத்தை மிக விரிவாகவே சொல்லியிருப்பதை ரங்கராஜ் பாண்டே மேலே வீடியோவில் தெளிவாகவே எடுத்துச் சொல்கிறார்.



முன்னதாக வந்த செய்தி க்கும் இன்றைய நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? சுயேட்சைகளைத் தவிர்த்து ஐந்து முனைப்போட்டியாக நடந்து முடிந்த தேர்தலில் கமல் காசர் கட்சி+  ஐந்தாமிடத்தைத் தான் பெற்றிருக்கிறது என்பதில் பொன்ராஜ் சொன்னதுபோல தேமுதிக, சமக இருகட்சிகளுடன் கூட்டணி வைத்தது தான் என்பது உண்மையான காரணமல்ல. 


#Breaking || "களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே மகேந்திரனின் சாதனை மகேந்திரன் விலகியதில் மகிழ்ச்சி, இனி கட்சிக்கு ஏறுமுகம் தான் - கமல் #KamalHaasan | #MakkalNeedhiMaiam
Image

கமல் காசரும் அவரது மய்யமும் வெறும் பிக் பாஸ் ஷோ மட்டும்தான் என்றாகிப்போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை! அரசியல் கட்சி நடத்துவது  வெறுமனே வசனம் பேசுவது மட்டும் இல்லை, அவ்வளவுதான்!

மீண்டும் சந்திப்போம

2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வழி) கேரளா!

திமுக கூட்டணியுடன் இணைந்து மதச்சார்பற்ற போராட்டம் (??), தமிழக நலனுக்காக (??)போராடிய காங்கிரஸை தற்போது சில சீட்டுகளுக்காக நடத்தும் விதத்தை நான் இதுவரை சந்தித்ததே இல்லை என கே எஸ் அழகிரி கண்கலங்கியதாக இந்துதமிழ்திசை நாளேடும் சேர்ந்து கலங்குகிற காமெடியோடு இன்றைய பதிவை ஆரம்பித்து விடலாமா?


சிலநாட்களுக்கு முன் கமல் காசருக்குப் பகிரங்கமாக அழைப்பு விட்டுக்கொண்டிருந்த இதே கே எஸ் அழகிரி  நேற்றைக்கு மூன்றாவது அணியின் மீதே  நம்பிக்கையில்லை என்று சொல்லியிருந்தது ஞாபகம் இருக்கிறதா? இந்த லட்சணத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்கிறதா காங்கிரஸ் என்று இந்து நாளேடு செய்திக்குத் தலைப்பிட்டிருப்பது கூடுதல் வேடிக்கை! 

ஆயிரம் ஆனாலும் பாவம்தான் காங்கிரஸ் கட்சி ! பழ கருப்பையா சமீபத்தில் மக்கள் நீதி மையம் நிகழ்ச்சியில் புதுச்சேரியில் காங்கிரஸ் எம் எல் ஏ களும் திமுக எம் எல் ஏ ஒருவரும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேஷ்டியை உருவி கோமணத்துடன் நிற்க வைத்து விட்டார்கள் என்றார் ! அங்குதான் அப்படி என்றால் இங்கு அந்த கட்சிக்கு ஆட்சியை பிடிக்கும் பேராசை எல்லாம் கிடையாது ! பாவம் எதோ 41 சீட் கேட்டு கடைசி கடைசியாக 27 சீட்டாவது கொடுங்கள் திமுகவுடன் கெஞ்சி பார்த்தார்கள் ! அவர்களோ அரக்க மனதுடன் 18 மேல் ஒன்றும் கிடையாது இல்லை நஹி லேது என்று எல்லா மொழிகளிலும் சொல்லி விட்டார்கள் ! புதுச்சேரியிலாவது கோமணத்தோடு விட்டார்கள் தமிழ்நாட்டில் அதையும் உருவி அம்மணமாக தெருவில் நிற்க வைத்து விட்டார்கள் ! மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்ணீர் விட்டு மரியாதையை இல்லாமல் நடத்தினார்கள் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் வருந்தியதாக செய்திகள் வருகிறது ! காங்கிரஸ் இனியும் அங்கே கெஞ்சி நிற்பது சரியா ? நாட்டையே பல காலம் ஆண்ட கட்சி ! அதற்கே இப்படி ஒரு நிலையா ? இந்த நிலைக்கு இந்திரா காந்தி முதல் இப்போதுள்ள ராகுல் வரை எல்லோருமே காரணம்! என்று இதே செய்தியை முகநூலில் மிகவும் சோகமான தொனியில் நக்கல் செய்து எழுதியிருக்கிறார் விஜயன் கோதண்டராமன்! ஸ்டேன்லி ராஜன் வேறு அவர் பாணியில் செம பகடி செய்கிறார்


ராகுலைக் கூட்டிவந்து டான்சாட விட்டு, தண்டால், push ups எல்லாம் எடுக்கவிட்டு பாதிரிமார்கள் ராகுல் ராகுல் என்று அல்லேலூயா கூவுகிற மாதிரிக் கூவியதில் கிடைக்காத ஆதரவு, அனுதாபமெல்லாம் கே எஸ் அழகிரி கண்ணீர் சிந்திய செய்திக்கு மிகப்பரவலாக வருவதைப் பார்த்தால் எனக்கும் ......! 😅😂😂


மல்லுதேசத் தேர்தல் களத்தைப்பற்றியும் கூட விரிவாக இங்கே எழுத ஆசைதான்! உள்ளூரக்கதையில் ஆசை இருக்கிற அளவுக்கு அடுத்தவீட்டுக் கதையில் ஆர்வம் இருக்குமா என்கிற தயக்கமும் இருக்கிறது. என்ன செய்ய? கொஞ்சம் யோசனைகள் வரவேற்கப் படுகின்றன!


"நாங்கள்தான் மாநிலத்தில் முதன்முதலாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளோம். இந்த முறை 291 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் 50 பெண் வேட்பாளர்கள், பட்டியலினத்தவர்கள் 79 பேர், பழங்குடியினர் 17 பேர், 42 முஸ்லிம் வேட்பாளர்கள் என 291 பேர் போட்டி இடுகின்றனர்.எங்கள் கூட்டணிக் கட்சியான கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கியுள்ளோம். டார்ஜ்லிங், கிலம்பாங், குர்சியாங் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்று அறிவித்த மம்தா பானெர்ஜி எத்தனை சிட்டிங் MLAக்கள் இந்தமுறை கழற்றிவிடப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை சொல்ல மறந்துவிட்டார்.  வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவித்துவிட்டால் மட்டும்? ஜெயித்துவிடமுடியுமா என்ன? 

முன்பாக, பவானிபூர், நந்திகிராம் என இருதொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று சொன்ன மம்தா இப்போது செம தில்லுடன் நந்திகிராம் தொகுதியில் மட்டுமே போட்டியிடப் போகிறாராம்!   மேற்குவங்கத்தில் தேர்தல்களம் சூடாகியிருக்கிற அளவுக்குத் தமிழ்நாடு இன்னமும் சூடேறவில்லை என்கதைக் கவனிக்கிறீர்கள்தானே? மீண்டும் சந்திப்போம்.

சண்டேன்னா மூணு! மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு! #2021தேர்தல்களம்

2020ஆம் ஆண்டு ஒருவழியாக விடைபெறத்தயாராகிக் கொண்டிருக்கிற தருணம் இது! அடுத்த ஆண்டின் முதல் பாதிக்குள் சட்டசபைத் தேர்தல்களை சந்திக்கப்போகிற மாநிலங்களின் அரசியல் களநிலவரம் இப்படித் தான் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாதபடி, ஒவ்வொன்றிலும் பிரத்தியேகமான குழப்பங்கள்! நேற்றும் இன்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாமேற்கு  வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். திரிணாமுல் கட்சியின் தூணாக இருந்த, சுமார் 110 சட்ட சாபைத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்த சுவேந்து அதிகாரி ஒரு MP, 8 TMC + 2 காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  60ற்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், ஜில்லா பரிஷத், பஞ்சாயத் சமிதி உறுப்பினர்களோடு, அமித் ஷா முன்பாக நேற்றைக்கு பிஜேபியில் சேர்ந்திருப்பதில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போய்த் தொலையட்டும் நல்லதுதான் என்று பொருமித் தீர்த்திருக்கிறது. 


சேகர் குப்தா, நிறைய அனுபவம் வாய்ந்த ஊடகக் காரர்தான்!  நடுநிலையானவர் அல்லவென்பதை இங்கே பலமுறை அழுத்தமாகச் சொல்லி வந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த 29 நிமிட வீடியோவில் மேற்குவங்க அரசியலின் நேற்று இன்று நாளையாக என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்! 


பிரசாந்த் கீழோர் வந்து தூக்கி நிறுத்த முடியாத அளவுக்கு மம்தா பானர்ஜியின் அரசியல் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்த்ருக்கிறதே! இந்த களயதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சொல்லப்படும் ஆரூடங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

 

அசாமில் கூட அதே நிலைமைதான் போல! டிசம்பர் 26 அன்று அமித் ஷா அங்கே வரும்போது காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் முண்டியடித்துக் .கொண்டு பிஜேபியில் சேரக்காத்திருப்பதாகச் செய்திகள்! Election looming, Congress leaders look to join BJP in  Assam என்கிறது நேற்றைய எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்

தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் எப்படிப் போகிறது?  


ஏகப்பட்ட பில்டப்புடன், ஒரு போர்க்குரலை எழுப்பப் போகிறார் இசுடாலின் என்று துரைமுருகனுடைய  முன்னோட்டத்துடன் நடந்து முடிந்த திமுகவின் கலந்துரையாடல் கூட்டம் ( மேடையிலிருந்தவர்கள் தவிர அப்படி யார் யாருடன் கலந்து என்னென்ன உரையாடினார்களாம்? கேட்கக் கூடாத கேள்வி இது! பதில்தான் எல்லோருக்கும் தெரியுமே!) நடந்தது முடிந்தது!      


அதிமுகவை நிராகரிப்போம்! இதுதான் திமுகவின் போர் முழக்கமா?  1600 பிரசார பேச்சாளர்கள் 14000 இடங்கள்! ஜெயலலிதா பாணியில் யாருடன் கூட்டணி எத்தனை சீட் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! 200 சீட் இலக்கு! இதெல்லாம் வழக்கமான பல்லவிதானே! 

நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளனர்  என்று  பேசியிருப்பதன் பொருள் என்ன? 

பேசிப்பேசியே தமிழகத்தைக் கெடுத்த இரண்டு கழகங்களுமே  குழப்பத்தில் இருப்பதையே காட்டுவதாகத் தான் எடுத்துக் கொள்ளண்டியிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம். 

#தேர்தல்களம் காங்கிரசைத் தொடரும் தோல்விகள்! ராமச்சந்திர குகா குமுறுகிறார்!

ஏன் தான் தேர்தல்கள் அடுத்தடுத்து வருகின்றனவோ? தேர்தல், ரிசல்ட் என்ற வார்த்தைகளே சோனியா காங்கிரசைக் குலைநடுங்க வைக்கிற மாதிரி ஆயினவோ? ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெறும் 2 கவுன்சிலர்களை மட்டுமே பெற முடிந்த காங்கிரஸ், தான் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபியிடம் தோல்வியை சோனியாவின் பிறந்தநாள் பரிசாக அளித்திருக்கிறது.

Sonia Gandhi not to celebrate her birthday in view of farmers’ protests, Covid-19. The Congress leader, who will turn 74 on December 9, is currently in Goa after doctors advised her to shift out of Delhi in view of heavy pollution and poor air quality that had aggravated her chest infection.The Congress leader, who will turn 74 on December 9, is currently in Goa after doctors advised her to shift out of Delhi in view of heavy pollution and poor air quality that had aggravated her chest infection என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ். அம்மணி பிறந்தநாளைக் கொண்டாடாமல் போனதற்கு அவருடைய உடல்நலக்குறைவு மட்டுமே காரணம்! போன வருடம் கூடத்தான் கொண்டாடவில்லை! அதற்கு  என்ன காரணம் சொன்னார்களாம்?   


சரித்திரத்தின் சாட்சி என அழைக்கப்படும் ராமச்சந்திர குஹா, தன்னுடைய ஒருகண் பார்வையிலிருந்து மட்டுமே சரித்திரம் பேசுகிறவர் என்பது நண்பர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். ராம் குஹா நேருவின் அதிதீவிர அபிமானி, இந்தியா ஒரு நாடானதே நேருவினால்தான் என்று வாசகர்களை நம்பவைக்க அரும்பாடுபடுகிறவர். நேருவுக்கு  பாரம்பரியம் என்று ஒன்று இருந்ததாகவும் அதை இப்படித் தொடர் தோல்விகளால் கெடுக்கிறார்களே என்கிற கோபத்தால் மட்டுமே சோனியா & கோவைப் போய்த் தொலையுங்கள் என்று 2014க்குப் பிறகு தொடர்ந்து எழுதி வருபவர்.

A recent headline in the Hindustan Times summed up all that is wrong with the Congress Party today, and why under its present leadership, the party cannot present an effective or credible alternative to the Bharatiya Janata Party. The headline read: "Sonia Gandhi not to celebrate her birthday in view of farmers's protests, Covid-19". The vanity and self-regard in this public pronouncement was staggering, if entirely characteristic. Do the Gandhis think they are akin to royalty, so that the cancellation of one of their birthday parties becomes a mark of identification with their suffering subjects? 

Why The Gandhis Must Go Now - by Rama chandra Guha     Updated December 09, 2020 12:02 pm IST மேலே இன்றைக்கு NDTV :தளத்தில் ராமச்சந்திர குஹா அழாத குறையாகக் குமுறி எழுதியிருக்கும் Opinion கட்டுரையின்  துவக்க வரிகள். Whether or not Sonia Gandhi celebrates her birthday this year (or any other) will not affect the nation's future. The sacrifice she should make is to retreat from politics, and take her children with her. Their departure will increase our chances of rescuing what. remains of the Republic from the ravages of Hindutva authoritarianism.என்று  முடித்திருப்பதில் நேரு பாரம்பரியம், பரம்பரை மீதான அபிமானம் அக்கறை வெளிப்படுவதை விட நரேந்திர மோடியைத் தேர்தல்களில் தோற்கடிக்க முடியவில்லையே என்கிற இயலாமையே அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. லிங்கில் முழுப்புலம்பலையும் படித்துப்பாருங்கள்   

Patriots And Partisans என்கிற புத்தகத்தில் ராமச்சந்திர குஹா,  ‘இந்திரா காந்தி மட்டும் அறுபதுகளில் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று கற்பனை பண்ணி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம்!

காங்கிரசின் கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பலகால கட்டங்களைக் கொண்டது. அல்லது காங்கிரஸ் என்ற பெயரில் வெவ்வேறுநபர்களின் ஆளுமையின் கீழ் இருந்த வெவ்வேறு குழப்பங்களைக்  குறிப்பிடுகிற ஒரு பெயர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

இப்படிக் கொள்கைகள் எல்லாம் காங்கிரசுக்கு இருந்ததா? இருக்கிறதா? என்பதில் ஆரம்பிக்கிற  குழப்பம், என்றைக்கும் தீருவதாயில்லை! 1885 இல் மாட்சிமைதாங்கிய ராணியின் சர்க்கார் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசா இன்றைக்கு இருப்பது? ஸ்ரீ அரவிந்தர், திலகர், கோகலே காலத்தைய காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1920 க்குப் பிறகு,மகாத்மா காந்தி வந்தபிறகு 1942 இல் வெள்ளையனே வெளியேறு என்று இயக்கம் நடத்திய காங்கிரசா இன்றைக்கு இருப்பது?

நேரு காலத்தில் இருந்த காங்கிரசா இது? கட்சியை உடைத்து இண்டிகேட் ஆக்கிய இந்திரா காலத்து காங்கிரசா இன்றைக்கிருப்பது?

இன்றைக்கிருக்கிற காங்கிரசின் சரித்திரம் சீதாராம் கேசரியை ஓரம் கட்டிவிட்டு, அன்டோனியோ மைனோ என்கிற சோனியா கட்சித்தலைவர் ஆனதிலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டீர்களானால், மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது எளிது!  ஏன் இவர்களை நிராகரிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துத்தான்!  

காங்கிரசின் கதையைச் சொல்லி எழுதியவை இங்கே பலமுறை பலவிதமாகச் சொல்லப்பட்டதுதான்! எதுவும் புதிதல்ல    

மீ.ண்டும் சந்திப்போம்.