Showing posts with label தரிசன நாள். Show all posts
Showing posts with label தரிசன நாள். Show all posts

இன்றைக்கு, நாள் நல்ல நாள்! தரிசன நாள்!

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம்! திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது. இந்த வருட ஏப்ரலுக்கு இரண்டு விதமான கூடுதல் சிறப்பு இருக்கின்றன! இந்த வருடம் ஏப்ரல் நான்காம் தேதி, ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த 110 ஆண்டுகள் நிறைவாக இருந்தது. 

அதே மாதிரி, அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக அடியவர்கள் கொண்டாடும் ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளுடைய நூறு ஆண்டுகள் நிறைவான தருணமாகவும், இன்றைய தினம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இன்றைக்கு தரிசன நாள். அன்னையைத் தேடி வரும் அவளுடைய குழந்தைகள் ஒன்று கூடி அவளை வணங்கிப் பிரார்த்தனை செய்யும் சிறப்பான தருணமாகவும் இருக்கிறது

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

இன்றைய தரிசன நாள் செய்தி 

ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்து  110ஆண்டுகள்  இந்த ஏப்ரல் 4 அன்று நிறைவடைந்தது  

ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். 

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. 

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும். ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:
 
1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இந்த நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்ந்து, உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

19 வருடங்களுக்கு முன் இதே நாளுக்காக எழுதியதன் மீள்பதிவு. தேவையான இடங்களில் கொஞ்சம் திருத்தங்களுடன்   

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசன நாள்! செய்தி!

ஸ்ரீ அரவிந்த அன்னை என்று கொண்டாடப்படும் Mirra Alfassa பாரிஸ் நகரில் 21 பிப்ரவரி 1878 இல் அவதரித்தார். 1914 இல் முதல்முறையாக புதுச்சேரிக்கு ஸ்ரீ அரவிந்தரை தரிசிப்பதற்காக வந்தார். 11 மாதங்கள் புதுச்சேரியில் இருந்து விட்டு, முதல் உலகப்போர் மூண்ட தருணம், பிரான்சுக்கே திரும்பினார். அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்று 4 வருடங்கள் இருந்தார். 1920 ஏப்ரல் 24 அன்று புதுச்சேரிக்குத் திரும்பிய அன்னை, இங்கேயே நிலையாகத் தங்கினார். அப்படி ஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரிக்குத் திரும்பிய நாளான ஏப்ரல் 24, அரவிந்தாசிரமத்தில் தரிசன நாளாக அன்பர்களால் கொண்டாடப்படுகிறது.
     
தரிசன நாள் என்பதென்ன? அன்னை புதுச்சேரிக்கு வந்தபிறகு எல்லாப்பொறுப்புக்களையும் அவரிடம் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனியாக மோனத்தவம் இருக்க ஆரம்பித்தார். ஆசிரமத்துக்குள்ளேயே தங்கி இருந்த சாதகர்கள் கூட அவரைச் சந்திக்க முடியாது.தங்களுக்கெழும் சந்தேகங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அன்னையிடம் கொடுக்க, அவரும் ஸ்ரீ அரவிந்தரிடம் காட்டி, பதில்களை வாங்கித் தருவார். வருடத்தின் சிலநாட்களில் மட்டும் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் சாதகர்களுக்கு மட்டுமன்றி, வெளியூரில் இருந்து வரும் அன்பர்களை சந்திக்கிற வாய்ப்பாக உருவானதே தரிசன நாட்கள் என்றழைக்கப்படுகிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக

ஆரம்ப காலங்களில், தரிசன நாள் செய்தியாக இதுமாதிரி கார்டும், மலர்ப்பிரசாதங்களும் வழங்கப் பட்டதில் அன்னையே அந்தந்த தருணத்துக்கேற்ற மாதிரி செய்தியை தன் கைப்படவே எழுதி அளித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அரவிந்த அன்னை 1973 இல் மகாசமாதி ஆன பிறகு இப்போதுள்ள வடிவத்தில் அச்சிடப்பட்ட கார்டுடன், சமாதிமீது வைக்கப்பட்ட மலர் இதழ்களை உலரவைத்து ஒரு சிறு பாக்கெட்டாக வழங்குகிறார்கள். தரிசனநாள் செய்தி ஆங்கிலத்திலும் 
பிரெஞ்சிலும் இருக்கும். இங்கே ஆங்கிலச் செய்தி மட்டும். 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி இன்றும் தம்முடன் இருப்பதை உணர முடிகிற அன்பர்கள் கூடி வழிபடுகிற சிறப்பான நாள் இன்று ஏப்ரல் 24  

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே                   

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று தரிசனநாள்! செய்தி

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனவரி 1, தரிசன நாள் செய்தி! இறையருள் நம்முடன் இரவு பகல் என எல்லாநேரத்திலும் கூடவே இருப்பதை . அமைதியாக, உள்முகமாகப் பார்க்கப் பழகினால் கண்டு கொள்ள முடியும். இந்த வருடம் முழுவதும் இதுவே நம்முடைய அனுபவமாகவும் இருக்கட்டும் என அன்போடு ஆசி வழங்குகிறார் ஸ்ரீஅரவிந்த அன்னை   
     
இதைவிட அற்புதமான துவக்கம் வேறு உண்டா என்ன?! நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளுடன்!

It is by a constant remembrance........!

ஏப்ரல் 24-ஸ்ரீ  அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிலையாகத் தங்கிய நாள், தரிசனநாளாக அடியவர்களால் கொண்டாடப்படுகிற தினம்.

இதைப்பற்றிய முந்தைய பதிவு இங்கே.

“Break the moulds of the past, but keep safe its gains and its spirit, or else thou hast no future. “  
Sri Aurobindo

Thoughts and Aphorisms- Aphorism 237

"The sceptic mind doubts always because it cannot understand, but the faith of the God-lover persists in knowing although it cannot understand. Both are necessary to our darkness, but there can be no doubt which is the mightier. What I cannot understand now, I shall some day master, but if I lose faith and love, I fall utterly from the goal which God has set before me."

Sri Aurobindo

Thoughts and Aphorisms-Aphorism 468 

இன்றைக்கு, நாள் நல்ல நாள்! தரிசன நாள்!

ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் இன்றைய தரிசன நாள் செய்தி!

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம்! 

திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது.

இந்த வருட ஏப்ரலுக்கு இரண்டு விதமான கூடுதல் சிறப்பு இருக்கின்றன! இந்த வருடம் ஏப்ரல் நான்காம் தேதி, ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த நூற்றாண்டு நிறைவாக இருந்தது. சென்ற வருடம், ஒரு அற்புதமான தருணம் தொடங்கும் நூற்றாண்டின் தொடக்கமாக இதைப் பற்றி சில படங்களுடன் பதிவு ஒன்று இந்தப்பக்கங்களில் இருக்கிறது. 

அதே மாதிரி, அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக அடியவர்கள் கொண்டாடும் ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளுடைய தொண்ணூறு ஆண்டுகள் நிறைவான தருணமாகவும், இன்றைய தினம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இன்றைக்கு தரிசன நாள். அன்னையைத் தேடி வரும் அவளுடைய குழந்தைகள் ஒன்று கூடி அவளை வணங்கிப் பிரார்த்தனை செய்யும் சிறப்பான தருணமாகவும் இருக்கிறது

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்த நூறாவது ஆண்டு, இந்த ஏப்ரல் 4 அன்று நிறைவடைந்தது  

ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். 

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. 

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும்.
ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:
 
1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இந்த நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்ந்து, உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

இது சென்ற வருடம் எழுதியதன் மீள்பதிவு தான்! தேவைப்படுகிற இடங்களில் சிறு மாற்றங்களுடன்!

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.....!

பிப்ரவரி மாதம் பிறந்தாலே, ஒரு இனம்புரியாத பரவசம் வந்து சேர்ந்து விடுகிறது!

வெளியே எத்தனையோ விஷயங்களில் மனம் அலை பாய்ந்தாலுமே கூட, மனம் ஸ்ரீ அன்னையின் பிறந்தநாள் பிப்ரவரி 21 ஆம் தேதி வருவதை ஒட்டி, தரிசன நாள் செய்திக்காகக் காத்துக் கிடக்கிற தவம் கூடவே தொடங்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், புதுச்சேரி ஆசிரமத்திற்குச் சென்று நேரில் தரிசன நாள் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள நேரம் கைகூடாமல் இருந்தபோதிலுமே கூட, மனம் அங்கே தான் மையம் கொள்ள விரும்புகிறது. அவளே எல்லாம் என்று இருந்துவிடத் தவிப்பு  இப்போதுதான் பற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

பிரபலமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதையும் பார்த்தாயிற்று! போலித்தனமான தலைவரே என்ற அழைப்பில், கூடியிருந்த கூட்டங்கள் எதிலுமே மயக்கம் அதிகமிருந்ததில்லை என்றாலும் அதிலேயே உழன்ற வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தாயிற்று! நண்பர்களே பகையாகி, உடல்நலமும் கெட்டு, மன நிலையும் ஒத்துழைக்காமல் இருந்த நரகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

அனுபவங்கள் ஒவ்வொன்றும், ஒரு காரணத்திற்காகவே நமக்கு அருளப்படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் நம்மை உயர்த்துவதற்காகவே! நம்மைப் பக்குவப்படுத்துவதற்காகவே! 
அவரவர்க்கு வேண்டிய விதத்தில், வேண்டுகிற நேரத்தில் கிடைப்பதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து வியந்திருக்கிறேன். வெற்றிகளாக நான் எண்ணிய எதுவும் நிலைக்கவில்லை என்பதோடு வெற்றிகளே என்னுடைய சுமையாகவும் ஆகிப்போனதாய் அறியவும் ஒரு நேரம் வந்தது. உலக அளவீடுகளின்படி நான் வெற்றி பெற்ற மனிதனில்லை! புத்திசாலியுமில்லை!

தோல்விகள், அவமானங்கள் என்னைச் சுருட்டி முடக்கி வைத்துவிடவில்லை! ஒவ்வொரு தோல்விக்குப் பின்னாலும், நான் எங்கே தவறு செய்தேன் என்பதைத் தெளிவாகக் காட்டி, நான் போக வேண்டிய பாதை எது என்பதை வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பதையும்  அறிகிற நேரமும் வந்தது.  பூஜ்யத்தைச் சின்னதாக வரைந்தால் என்ன, பெரிதாக வரைந்தால் என்ன? வட்டம் மா'வட்டமாகி விடுமா? அப்போதும் அது பூஜ்யம் தானே!

Consent to be nothing and none என்று  ஸ்ரீ  அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற நிலையை வேண்டிக் காத்திருக்கிறேன் தாயே!
நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன்,  பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம் ஜீவன் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் உனது ஒளியையே வேண்டி நிற்கிறேன்.

ஒவ்வாத எண்ணங்களோடும் செயல்களோடும் இருக்க நேரிடும் போது கூட
அன்னை என்னோடு இருக்கிறாள்! அவள் என்னைப்பார்த்துக் கொள்வாள் !
இந்த ஒரு நம்பிக்கையே என்னைச் சரிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது.
எண்ணமும் எழுத்தும் உன்னதே என்று இருக்கும் பரம சுகநிலை அருள்வாய்!
புதுவையிலோ, உனது இருப்பிடத்திற்கு அருகிலோ இருக்கும் வாய்ப்பு இல்லை.
ஆனாலும் உனது அருளும்  ஒளியும்  இங்கேயும்  நிறைந்திருப்பதைஅறிகிறேன் அம்மா!
அருளுக்கும் ஒளிக்கும் தூரம் ஏது? உனக்கும் எனக்கும் தடைச் சுவர்கள் தானேது?
நாளைக் காலையில் உன்னுடைய தரிசனம் வேண்டி வரிசையில்  நிற்கும் அடியவர்
பலருடன், என்னுடைய இந்தப் பிரார்த்தனை மலர்களும் சேர்ந்து நிற்கும்!

என்னையும் உனது அன்பிற்குத் தகுதியான குழந்தையாக ஏற்றுக்கொள்வாய் அம்மா!
 
இதுவே இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!

ஓம் ஆனந்தமயி,
சைதன்ய மயி , சத்யமயி பரமே !

     Get this widget |     Track details  |         eSnips Social DNA   

இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!

நவம்பர்  17,  ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த நாள். ஆசிரமத்தின் தரிசன நாளாக அனுசரிக்கப்படும் நாள் இது., அன்னையை வணங்கச் செல்பவர்களுக்கு, அவரவர் பக்குவத்திற்குத் தகுந்தபடி அன்னை ஒரு செய்தியை அளிப்பது உண்டு! கூடவே அதற்குத் துணை செய்யும் மலர்களும்!

இன்றைக்கும் அந்த நடை முறை அனுசரிக்கப்படுகிறது. இங்கே காண்பது ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்கு, நாளை ஸ்ரீ அன்னையின் சமாதியைத் தரிசிக்கச் செல்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் செய்தி. நேரில் செல்பவர்களுக்கும், கடிதம் மூலமாக வேண்டுபவர்களுக்கும் மலர்களும் (சமாதி மேல் அர்ப்பணிப்புடன் விக்கப்பட்ட மலர்களைக் காய வைத்து அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் படம் ஒட்டிய சிறு பாக்கெட்டுக்குள் வைத்து) பிரசாதமாகக் கிடைக்கும்.

உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன் என்ற அன்னையின் வார்த்தைகளை, அனுபவத்தில் மட்டுமே கண்டு உணர முடியும்

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
எனது கரணங்கள், மனம் ஜீவன் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.
ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் உனது ஒளியையே வேண்டி நிற்கிறேன்.
ஒவ்வாத எண்ணங்களோடும் செயல்களோடும் இருக்க நேரிடும் போது கூட
அன்னை என்னோடு இருக்கிறாள்! அவள் என்னைப்பார்த்துக் கொள்வாள் !
இந்த ஒரு நம்பிக்கையே என்னைச் சரிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது.
எண்ணமும் எழுத்தும் உன்னதே என்று இருக்கும் பரம சுகநிலை அருள்வாய்!
புதுவையிலோ, உனது இருப்பிடத்திற்கு அருகிலோ இருக்கும் வாய்ப்பு இல்லை
ஆனாலும் உனது அருளும்  ஒளியும்  இங்கே நிறைந்திருப்பதைஅறிவேன் அம்மா!
அருளுக்கும் ஒளிக்கும் தூரம் ஏது? உனக்கும் எனக்கும் தடைச் சுவர்கள் தானேது?
நாளைக் காலையில் உன்னுடைய தரிசனம் வேண்டி வரிசையில்  நிற்கும் அடியவர்
பலருடன் என்னுடைய பிரார்த்தனை மலர்களும் சேர்ந்து நிற்கும்!

என்னையும் உனது அன்பிற்குத் தகுதியான குழந்தையாக ஏற்றுக்கொள்வாய் அம்மா!
இதுவே இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!

The Mother left her physical body on 17th November 1973