Showing posts with label களவாணி காங்கிரஸ். Show all posts
Showing posts with label களவாணி காங்கிரஸ். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #தேர்தல்களம் இரு மாநிலத் தேர்தல்கள்!

ஹரியானா, மஹாராஷ்டிரா இருமாநிலங்களிலும் சட்ட சபைத் தேர்தல்களுக்கான வாக்குப் பதிவும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதில் ஒரே ஒரே கேள்விதான்! ஹரியானாவிலோ மஹாராஷ்டிராவிலோ சென்ற 2014 சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த சொற்ப இடங்களையாவது காங்கிரஸ், NCP முதலான உதிரிக் கட்சிகள் தக்கவைத்துக் கொள்ள முடியுமா அல்லது அதிலும் கோட்டை விடுவார்களா என்பது மட்டும்தான்!


காங்கிரசையே தொடர்ந்து ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற  NDTV யுமே கூட அதை மறைக்கவோ தெளிவாகவே பூசிமெழுகவோ முடியவில்லை என்பது இன்றைய ஊடக அதிசயம்! இத்தனை நாட்கள் காங்கிரசை உதிரிக் கட்சி என்று நான் சொன்னதில்லை, ஆனால் இந்தத் தேர்தல்களில் அதை விட மோசம் என்பது உறுதியாகி வருவதுதான் விஷயமே! பிஜேபிக்கு சரியான அரசியல் மாற்று சக்தியாக இருப்பதற்கு லாயக்கில்லாத கட்சியாகக் குறுகிப்போய்விட்ட காங்கிரசின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவானேன்? டெக்கான் க்ரானிக்கில் நாளிதழில் Centre for the Study of Developing Societies  (CSDS) என்ற அமைப்பின் இயக்குனர் சஞ்சய் குமார் இன்று எழுதியிருக்கிற இந்தச் செய்திக் கட்டுரை கொஞ்சம் சுவாரசியமான அலசலாக இருக்கிறது. முக்கியமாக உள்ளூர்ப் பிரச்சினைகள் ஏன் சமீபகாலத் தேர்தல்களில் பிரதான காரணமாக இருப்பதில்லை? இந்தக் கேள்விக்கு சரியான காரணத்தைத் தேட இங்கே எவருமே முனைவதில்லையே, ஏன் என்கிற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருக்கிறது. 

பிஜேபிக்கு எதிர்ப்பு வெளியே இருந்து இல்லை என்பது உண்மைதான்! ஆனாலும் உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்பார்களே அதுபோல மஹாராஷ்டிராவில் சிவசேனா பிஜேபி கூட்டணியில் இருப்பதுபோக, பிஜேபி பக்கம் காற்று வீசுகிறது என்பதற்காகவே கட்சி மாறி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட ஒருநாள் ஆகலாம்!  தேர்தல் பிரசாரம் சனிக்கிழமையோடு முடிந்து விட்டாலும் சிவசேனாவின் நாளிதழ் சாம்னாவில் சஞ்சய் ராவத் ஒரு அக்கப்போரை ஆரம்பித்து வைத்திருக்கிறார்:
A day after the high-spirited campaigning for the Maharashtra Assembly polls came to an end, the Shiv Sena on Sunday sought to know why there were so many BJP rallies with leaders like Prime Minister Narendra Modi and Home Minister Amit Shah addressing them, when Chief Minister Devendra Fadnavis feels that there is no opposition left in fray to challenge his party-led alliance. “The chief minister has been asserting that the opposition ‘does not exist’ any more in the poll campaign. The question then arises about the motive behind some 10 rallies of (Prime Minister) Modi, 30 of (Union Home Minister) Amit Shah, and Fadnavis himself holding 100 rallies across Maharashtra,” Sena leader Sanjay Raut wrote in a column in the party’s mouthpiece ‘Saamana’. என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. ஆனால் இதுமாதிரி நிறைய அக்கப்போர்களைச் சந்தித்துவிட்டுத் தான் பிஜேபி இன்று வளர்ந்திருக்கிறது.


டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவகுமாரை சந்திப்பதற்காக, காங்., தலைவர் சோனியா இன்று (அக்., 21) திகார் சிறைக்கு செல்ல உள்ளார். சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் சிவக்குமார், கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் சிவக்குமாரை சோனியா சந்திக்க உள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி இன்று காலை திகாருக்கு சென்று சிவக்குமாரை சந்தித்துள்ளார் என்கிறது தினமலர்.  போகிற போக்கைப் பார்த்தால் காங்கிரசின் முக்கியப்புள்ளிகள் திஹார் சிறையிலேயே தங்கள் கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டிவருமோ?

வந்தால் நாட்டுக்கு மிகவும் நல்லது! மீண்டும் சந்திப்போம்.   
        

சிதம்பரம் மட்டுமல்ல! சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு!

பானாசீனா விஷயத்தில் நண்பர் திருப்பூர் ஜோதிஜிக்கு இன்னமும் கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது போல! கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, மற்றும் காங்கிரசின் வழக்கறிஞர் அணிக்கு ஈடுகொடுக்கிற அளவுக்கு அரசுத்தரப்பிலும் அசகாய சூரர்கள் இருந்தால் தான் முடியும் அப்படி யார் இருக்கிறார்கள் என்றமாதிரி ஒரு பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.



இந்தமாதிரி தருணங்களில்தான் இந்திய அரசியலில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி போன்றவர்கள் தேவையும் இருப்பது நன்றாக வெளிப்படுகிறது. 5 நிமிட வீடியோதான்! விசாரணை நீதிமன்றத்தில் நேற்றைக்கு  கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி இவர்களுடைய வாதங்களை அரசுதரப்பு முறியடித்திருப்பது குறித்து சிரித்துக் கொண்டே சில விஷயங்களைச் சொல்கிறார். நாளை உச்சநீதிமன்றத்திலும் இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறதே என்கிற கேள்விக்கும் பதில் சொல்கிறார்.கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்!


சுப்ரமணியன் சுவாமி இங்கே கொஞ்சம் தெளிவாகவே தமிழில் சொல்கிறார்.தெரிந்த விஷயம்தான் என்றாலும் இன்னமும் சால்வை அழகர் உத்தமர் என்றே பேசிக்கொண்டிருந்தால் எப்படியாம்?  


INX Media விவகாரம் பற்றி நம்முடைய நினைவில் என்ன இருக்கிறது? அல்லது நமக்கு எந்த அளவுக்கு விஷயங்கள் தெரியும்? இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதன் பின்னணி என்ன? சிறையிலேய அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்ததைப் பற்றி ஏதாவது தெரியுமா? மாரிதாஸ் சில விஷயங்களை இங்கே புட்டு வைக்கிறார்.வீடியோ 16 நிமிடம்.

     
மாரிதாஸ் சொல்வது ஒருவிதம்! நேரெதிராக, சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதையும் பார்த்து விடலாம்! வீடியோ 10 நிமிடம்.    

Shared by Venkatesh
கொண்டாடும் திமுக!
‘2ஜி விவகாரத்துல அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி பிரணாப் முகர்ஜி மூலமா கலைஞருக்கே நெருக்கடி கொடுத்தது சிதம்பரம்தான். ‘ராஜினாமா செய்யச் சொல்லிடுங்க. பிரச்சினை பெரிசாகாம பாத்துக்கலாம்’ என்று கலைஞரிடம் பிரணாப்பை விட்டு பேச வைத்து அதன் பின்னர் ஆ.ராசாவை கைது செய்தது மட்டுமில்லாமல், கனிமொழியையும் இந்த வழக்கில் பிணைத்தவர் சிதம்பரம்தான். இந்த ஊழல் புகார்களால் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் வரைக்கும் வாங்கிக் கொண்டதற்குக் காரணமும் சிதம்பரம்தான். அறிவாலயத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, அதே வளாகத்தில் இருக்கும் கலைஞர் டிவியில் ரெய்டு நடத்தி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.
இதுபற்றியெல்லாம் அப்போது திமுக முக்கியப் புள்ளி ஒருவர் உள்துறை அமைச்சராக சிபிஐயை கையில் வைத்திருந்த சிதம்பரத்துக்கு போன் போட்டு, ‘ஏன் இப்படி பண்றீங்க? தலைவர் ரொம்ப வேதனையில இருக்காரு’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ப.சிதம்பரம், ‘இது கட்சி, அது ஆட்சி’ என்று கூட்டணிப் பேச்சையும், சிபிஐ ரெய்டையும் ஒப்பிட்டுப் பதில் கொடுத்திருக்கிறார். சிதம்பரத்தின் வார்த்தைகள் அப்படியே கலைஞருக்கு கொண்டு செல்லப்பட்டபோது கொதித்துவிட்டார் அவர்.
2ஜி ஊழல் மூலம் திமுகவை தமிழக அரசியலில் இருந்தே ஓரங்கட்டிவிட்டு காங்கிரசை பலப்படுத்தி தான் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்ற திட்டமும் சிதம்பரத்துக்கு இருந்தது. ஆனால் சிதம்பரத்தின் திட்டப்படி திமுக வீழ்ந்ததே தவிர, காங்கிரஸ் வளரவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தின் தாயார் மறைந்துவிட்டார். தனது நீண்ட நெடிய பொதுவாழ்வில் அரசியல் மாச்சரியங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களின் இறப்புக்கு கூட அஞ்சலி செலுத்துவதும் இரங்கல் வெளியிடுவதும் கலைஞரின் வழக்கம். ஆனால் ப.சிதம்பரத்தின் தாயார் மறைவுக்கு கலைஞர் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. வீட்டில் சிலர், ‘நாங்க போய் பார்த்துட்டு வந்துடட்டுமா’ என்று கலைஞரிடம் கேட்டுப் பார்த்ததற்கு, ‘வெட்கம் , சூடு , சொரணை இல்லாதவன் தான் அங்க போவான்’ என்று பதில் சொன்னார் கலைஞர். மறப்போம், மன்னிப்போம்னு எப்போதும் சொல்கிற கலைஞரே அந்த அளவுக்கு பதில் சொன்னார் என்றால்... கடைசி காலத்தில் அரசியல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் கலைஞர் அனுபவித்த வேதனைகளுக்கு சிதம்பரம் எவ்வளவு தூரம் காரணமா இருந்திருப்பார்னு பார்த்துக்கங்க. கலைஞரே மன்னிக்க முடியாத சிதம்பரத்தை நாங்க எப்படி மன்னிப்போம்’ என்கிறார்கள் கலைஞரின் குடும்ப வட்டாரத்தில். இந்த சூழலில்தான் சிதம்பரம் விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘அவர் சட்ட வல்லுநர். தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படினு அவருக்குத் தெரியும்’ என்று பூடகமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். ஆக சிதம்பரம் கைதானால் திமுகவினர் வெடிவெடிக்காத குறையாய் கொண்டாடுவதுதான் தமிழக அரசியல் நிலவரம்’
இந்த ட்வீட்டில் சொல்கிறமாதிரி நிஜமாகவே மிரட்டல் விடுக்கப் பட்டதா என்றெல்லாம் கேட்காதீர்கள்! சோனியாG எப்பேர்பட்டவர் என்று நமக்கு என்ன தெரியும்?


ஆனால் அம்மணி எவ்வளவு பெரிய பொய்யர் என்பது நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எப்போதுமில்லாத அதிசயமாக ராஜீவ் காண்டியின் 75ஆம் பிறந்தநாளை ஒரு வருடம் கொண்டாடப்போவதாக ஆரம்பித்துப் பேசிய பொய்களை, அக்ஷய் சந்தர் கார்டூனில் கிண்டல் செய்கிறார். 

ஒரே ஒரு கேள்விதான்! 

இன்னும் எத்தனை நாளைக்கு சிதம்பரம்,   சோனியாG  காங்கிரசை சகித்துக் கொடிருக்கப்போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.
  

சண்டேன்னா மூணு! காங்கிரஸ்! ரங்கராஜ் பாண்டே! படித்ததில் பிடித்தது!

சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்றைக்கு பீர்பால் கதையாக நான்கு முட்டாள்கள் என்று மானாட மயிலாட இருந்த நாட்களில் இந்தப்பக்கங்களில் எழுதிய கதையை எடுத்துப் போட்டிருந்தது ஒரு காரணமாகத் தான் என்றால் நம்பவா போகிறீர்கள்? காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று நாள் முழுவதும் ஆலோசித்து ஆலோசித்து ராகுல் காண்டியே தலைவராகத் தொடரவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளாததால்,கடைசியில் சோனியாG யே இடைக்காலத் தலைவர் என்று முடிவு செய்தார்களாம்! டில்லி கையைவிட்டுப் போய்விட்டாலும் இன்னும் பாதுஷா மிதப்பு மட்டும் போகாத காங்கிரஸ் கட்சியில் வேறென்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

  
எதையும் தள்ளிப்போட்டுக் கொண்டேபோவது, இடைக்கால ஏற்பாடுகளில் மட்டுமே காலம்தள்ளுவது, பாதுஷாக்களுக்குத் துதிபாடுவது மட்டுமே (அதுவும் காசுக்குத்தான்) உட்கட்சி ஜனநாயமாகவும் கொள்கையாகவும் வைத்திருக்கிற ஒருகட்சி அந்த ஒரு குடும்பத்தை மட்டுமே முகம்பார்த்திருப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல தான்!  சோனியாG தலைமைக்கு மறுபடி வந்துவிட்டதால் மட்டும் அதன் செயல்பாடுகளில் மாற்றம் வந்து விடுமா என்ன? ட்வீட்டரில் காங்கிரஸ் தலைமையை எந்த ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தார்கள் என்றொரு நக்கல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று பூவா தலையா போட்டுப் பார்த்தா என்ற ரீதியில் சூப்பர் லந்து!

காசு நட்டமா நின்னிடுச்சா? அப்ப ப்ரியங்கா வாத்ராதேன்! 

12:11 AM · Aug 11, 2019Twitter Web App 
   
சோனியாG காங்கிரஸ் இனிமேலும் இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விக்கு நண்பர்கள் இன்னமும் தெளிவாக ஒரு பதில் சொல்லக் காணோமே!
  

ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டது பற்றி இங்கே யார் யாரோ என்ன என்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரங்கராஜ் பாண்டே பேசக்கூடாதா? சில புதிய விஷயங்களுடன் பேசுவது ரங்கராஜ் பாண்டே பேச்சின் சிறப்பம்சம். கொஞ்சம் கேட்டுத் தான் பாருங்களேன்!  


முகநூல் பகிர்வுகளில் கொஞ்சம் வித்தியாசமான அல்லது ஒரு தெளிவான கருத்தைச் சொல்கிறவைகளைப் படித்ததில் பிடித்தது என்று முகவுரை சொல்லாமலேயே  இங்கே பகிர்ந்து வருவதை நண்பர்கள் கவனித்திருப்பீர்கள். அந்த வகையில் இன்றைக்குப் படித்ததும் பிடித்ததுமாக!

“சங்கத்தைக் கலைச்சிட்டீயளாம்லா?”
“எவஞ் சொன்னான்?” என்றார் சவத்தளவு சங்கக்காரியதரிசி, பொங்கியபடி “ நான் இருக்கற வரை ,எங்காள் இருக்கறவரை எளவுசவம் என்றுமிருக்கும்”
”பாகிஸ்தான் டிவில சொன்னாவோ. அதாங்கேட்டேன். ஒங்களப் பத்தி அவந்தான் நல்லாத் தெரிஞ்சி வைச்சிருக்கான்”
”தலைவரு பாவம்” பெருமூச்செறிந்தார் “ இவிங்க கொள்ளுத்தாத்தா காலத்துல எப்படி வளந்துச்சி?! பஞ்சசீலம் ஆர்ட்டிக்கிள் 370, 35 ஏ-ன்னு பொளந்து கட்டினாவ. இப்ப...”
“விடுங்க. நாம போஸ்ட் போட்டுருவம். யூரி பக்கம், யூரியா ஆலை வைக்க கடும் எதிர்ப்பு”
காஷ்மீரத் தோளர்களுக்கு ஆதரவாக , சின்னதாய்க் கோவணம் அணிந்து சியாச்சென் பகுதியில் தோலர் ஆர்ப்பாட்டம்’
“அதுக்கெல்லாம் பாகிஸ்தான்ல ஆளிருக்கு. நான் வேலையை விட்டுட்டு ஆலோசகரா இருக்கன். கம்பெனி போர்டு வாசல்ல பாக்கலையோ அண்ணாச்சி?”
“வே! என்ன கன்ஸல்டன்ஸி?”
“வெட்டியா வேலையில்லாம இருக்கறவங்களுக்கு இலவசமா ஆலோசனை. ஏதோ நம்மால ஆன சிறு தொண்டு. என்ன சொல்லுதீய?”
போன் மணி அடிக்க, அவர் சுறுசுறுப்பானார் “ ஸ்பீக்கர் போன்ல போடுதேன். நீங்களும் கேளுங்க”
“அலோ, சவச அண்ணாச்சியா? ஒரு உதவி வேணும்லா?”
“பேஸ்புக் நண்பர்கள் போல கடன் கேக்காம, போன்ல மட்டும் உதவி கேட்டாச் சரி. என்ன ப்ரச்சனை?”
“எம் பொண்டாட்டியோட சித்திப் பாட்டிக்கு 75 வயசாவுது”
“அதெல்லாம் ப்ரச்சனை இல்லீங்க. ”
“அவங்க மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண் கண்ட தெய்வம்ல எல்லாம் நடிச்சிருக்காங்க. அஞ்சலி தேவி “அழைக்காதே , நினைக்காதே” பாட்டுல, முத ஸீன்ல லெப்டு ஸைடு,மூணாவது ஆளா, இறங்கி வருவாங்க..ஆஆஆன்னு பாடிகிட்டு”
“அலோ, எங்க பாட்டி, அதே பாட்டுல ரைட்ல அஞ்சாவது. இது என்ன ப்ரச்சனை?”
“இத்தனை வருசம் கழிச்சி அவங்களுக்கு படம் வேணும்னு ஆசை வந்திருச்சி. நம்ம தமிழ்த்திரையுலகு அவங்களைப் கவனிக்கணும்னா என்ன செய்யலாம்னு...”
”அவங்க பேரென்ன?”
“சென்னம்மாள்”
”இனிமே சே. அன்னம்மாள்னு பெயர் வக்கணும். பாட்டி இனிமே, ”சே அவர்கள் தமிழ்நாட்டுக்கு 1958ல வந்தப்ப எங்க வீட்டுலதான் கஞ்சி குடிச்சார்”னு சொல்லணும். ஒரு பழைய ஈயச் சொம்பை எடுத்துவைச்சி, இதுதான் அந்தச் சொம்புன்னு பேப்பர்ல செய்தி கொடுக்கணும்”
“சார். மீடியாக்காரன் இதுக்கு வருவானா?”
வருவானாவா? இதுக்குத்தான் வருவான். பின்ன, உருப்படியா காயல்பட்டினத்துல கல்லூரி கட்டினதுக்கா ந்யூஸ் போடுவான்?”
“சரி, பொற்வு?”
“தாத்தா, பாட்டியை ‘என் டோளர்”னு அழைக்கணும்”
“யோவ்! பாட்டி பொம்பளை. நீ மாட்டுக்கு தோழர்னு சொன்னா ஆம்பளைன்னுலா ஆயிரும்?”
“அதைப்பத்தி தாத்தால்லா கவலைப்படணும்?”
“எளவு போட்டு. பொறவு என்ன செய்யணும்?”
“லே என்பது திருநவேலி பாசை. எனவே லடாக் , திருநவேலி சார்ந்ததுன்னு பாட்டி கூவணும். லடாக், காஷ்மீர் என்பது தமிழர் உரிமை - வெளங்கிடுங்க”
“பாட்டி கும்மிடிப்பூண்டி தாண்டினதில்ல”
“யாருல தாண்டியிருக்கா? சொல்றதுல என்ன கொறஞ்சு போச்சி? அனந்த்நாக்ல அதானி மில் வருது. உதாம்ப்பூர்ல ஜியோ பாக்டரி.. இதெல்லாம் பசுமையை அழிக்கும்னு அலறணும். காஷ்மீர்க்காரன் கோவணத்தைப் பிடுங்கும் பாசிஸ அரசுன்னு கத்தணும்”
“இதுல தமிழ்த்திரைப்படம் கிடைக்குமங்கீய?”
“கண்டிப்பா. மடிசார் கட்டிகிட்டு கிண்டலா ரெண்டு அசிங்க வசனம் பேசிட்டா, முடிஞ்சது கதை. சரி, பாட்டி எத்தனாப்பு வர படிச்சிருக்கா?”
“ஸ்கூலே பாத்ததில்ல”
“அப்ப நேஷனல் எஜுகேஷன் பாலிஸி பத்தி ஒரு அறிக்கை விடணும். எந்த சினிமாக்காரி படிச்சுட்டு பேசுதா? நம்ம பாட்டி மட்டும் விதிவிலக்கா இருக்கணுமாங்கேன்?”
”பாயிண்ட்டு அண்ணாச்சி! ரொம்ப நன்றி!”
சவச புன்னகையுடன் ஏறிட்டார்.” இப்ப எங்களைப் புகழ்ந்து ஒரு பாட்டு பாடிட்டா வாயி வெந்திருமோ?””
”அதென்ன லடாக்கு? எனவோர் தமிழர்
மதங்கொள் கரிபோல் எழுந்தே வினவ,
அதெல்லாம் சிறுவன் ஒருசொல் மிதிக்க
இதெல்லாம் சவத்துப் பொழைப்பு”
(முழுக்க முழுக்க இயற்சீர் வெண்டளை மட்டுமே விரவிவரும் ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

மீண்டும் சந்திப்போம்.