சண்டேன்னா மூணு! காங்கிரஸ்! ரங்கராஜ் பாண்டே! படித்ததில் பிடித்தது!

சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்றைக்கு பீர்பால் கதையாக நான்கு முட்டாள்கள் என்று மானாட மயிலாட இருந்த நாட்களில் இந்தப்பக்கங்களில் எழுதிய கதையை எடுத்துப் போட்டிருந்தது ஒரு காரணமாகத் தான் என்றால் நம்பவா போகிறீர்கள்? காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று நாள் முழுவதும் ஆலோசித்து ஆலோசித்து ராகுல் காண்டியே தலைவராகத் தொடரவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளாததால்,கடைசியில் சோனியாG யே இடைக்காலத் தலைவர் என்று முடிவு செய்தார்களாம்! டில்லி கையைவிட்டுப் போய்விட்டாலும் இன்னும் பாதுஷா மிதப்பு மட்டும் போகாத காங்கிரஸ் கட்சியில் வேறென்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

  
எதையும் தள்ளிப்போட்டுக் கொண்டேபோவது, இடைக்கால ஏற்பாடுகளில் மட்டுமே காலம்தள்ளுவது, பாதுஷாக்களுக்குத் துதிபாடுவது மட்டுமே (அதுவும் காசுக்குத்தான்) உட்கட்சி ஜனநாயமாகவும் கொள்கையாகவும் வைத்திருக்கிற ஒருகட்சி அந்த ஒரு குடும்பத்தை மட்டுமே முகம்பார்த்திருப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல தான்!  சோனியாG தலைமைக்கு மறுபடி வந்துவிட்டதால் மட்டும் அதன் செயல்பாடுகளில் மாற்றம் வந்து விடுமா என்ன? ட்வீட்டரில் காங்கிரஸ் தலைமையை எந்த ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தார்கள் என்றொரு நக்கல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று பூவா தலையா போட்டுப் பார்த்தா என்ற ரீதியில் சூப்பர் லந்து!

காசு நட்டமா நின்னிடுச்சா? அப்ப ப்ரியங்கா வாத்ராதேன்! 

12:11 AM · Aug 11, 2019Twitter Web App 
   
சோனியாG காங்கிரஸ் இனிமேலும் இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விக்கு நண்பர்கள் இன்னமும் தெளிவாக ஒரு பதில் சொல்லக் காணோமே!
  

ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டது பற்றி இங்கே யார் யாரோ என்ன என்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரங்கராஜ் பாண்டே பேசக்கூடாதா? சில புதிய விஷயங்களுடன் பேசுவது ரங்கராஜ் பாண்டே பேச்சின் சிறப்பம்சம். கொஞ்சம் கேட்டுத் தான் பாருங்களேன்!  


முகநூல் பகிர்வுகளில் கொஞ்சம் வித்தியாசமான அல்லது ஒரு தெளிவான கருத்தைச் சொல்கிறவைகளைப் படித்ததில் பிடித்தது என்று முகவுரை சொல்லாமலேயே  இங்கே பகிர்ந்து வருவதை நண்பர்கள் கவனித்திருப்பீர்கள். அந்த வகையில் இன்றைக்குப் படித்ததும் பிடித்ததுமாக!

“சங்கத்தைக் கலைச்சிட்டீயளாம்லா?”
“எவஞ் சொன்னான்?” என்றார் சவத்தளவு சங்கக்காரியதரிசி, பொங்கியபடி “ நான் இருக்கற வரை ,எங்காள் இருக்கறவரை எளவுசவம் என்றுமிருக்கும்”
”பாகிஸ்தான் டிவில சொன்னாவோ. அதாங்கேட்டேன். ஒங்களப் பத்தி அவந்தான் நல்லாத் தெரிஞ்சி வைச்சிருக்கான்”
”தலைவரு பாவம்” பெருமூச்செறிந்தார் “ இவிங்க கொள்ளுத்தாத்தா காலத்துல எப்படி வளந்துச்சி?! பஞ்சசீலம் ஆர்ட்டிக்கிள் 370, 35 ஏ-ன்னு பொளந்து கட்டினாவ. இப்ப...”
“விடுங்க. நாம போஸ்ட் போட்டுருவம். யூரி பக்கம், யூரியா ஆலை வைக்க கடும் எதிர்ப்பு”
காஷ்மீரத் தோளர்களுக்கு ஆதரவாக , சின்னதாய்க் கோவணம் அணிந்து சியாச்சென் பகுதியில் தோலர் ஆர்ப்பாட்டம்’
“அதுக்கெல்லாம் பாகிஸ்தான்ல ஆளிருக்கு. நான் வேலையை விட்டுட்டு ஆலோசகரா இருக்கன். கம்பெனி போர்டு வாசல்ல பாக்கலையோ அண்ணாச்சி?”
“வே! என்ன கன்ஸல்டன்ஸி?”
“வெட்டியா வேலையில்லாம இருக்கறவங்களுக்கு இலவசமா ஆலோசனை. ஏதோ நம்மால ஆன சிறு தொண்டு. என்ன சொல்லுதீய?”
போன் மணி அடிக்க, அவர் சுறுசுறுப்பானார் “ ஸ்பீக்கர் போன்ல போடுதேன். நீங்களும் கேளுங்க”
“அலோ, சவச அண்ணாச்சியா? ஒரு உதவி வேணும்லா?”
“பேஸ்புக் நண்பர்கள் போல கடன் கேக்காம, போன்ல மட்டும் உதவி கேட்டாச் சரி. என்ன ப்ரச்சனை?”
“எம் பொண்டாட்டியோட சித்திப் பாட்டிக்கு 75 வயசாவுது”
“அதெல்லாம் ப்ரச்சனை இல்லீங்க. ”
“அவங்க மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண் கண்ட தெய்வம்ல எல்லாம் நடிச்சிருக்காங்க. அஞ்சலி தேவி “அழைக்காதே , நினைக்காதே” பாட்டுல, முத ஸீன்ல லெப்டு ஸைடு,மூணாவது ஆளா, இறங்கி வருவாங்க..ஆஆஆன்னு பாடிகிட்டு”
“அலோ, எங்க பாட்டி, அதே பாட்டுல ரைட்ல அஞ்சாவது. இது என்ன ப்ரச்சனை?”
“இத்தனை வருசம் கழிச்சி அவங்களுக்கு படம் வேணும்னு ஆசை வந்திருச்சி. நம்ம தமிழ்த்திரையுலகு அவங்களைப் கவனிக்கணும்னா என்ன செய்யலாம்னு...”
”அவங்க பேரென்ன?”
“சென்னம்மாள்”
”இனிமே சே. அன்னம்மாள்னு பெயர் வக்கணும். பாட்டி இனிமே, ”சே அவர்கள் தமிழ்நாட்டுக்கு 1958ல வந்தப்ப எங்க வீட்டுலதான் கஞ்சி குடிச்சார்”னு சொல்லணும். ஒரு பழைய ஈயச் சொம்பை எடுத்துவைச்சி, இதுதான் அந்தச் சொம்புன்னு பேப்பர்ல செய்தி கொடுக்கணும்”
“சார். மீடியாக்காரன் இதுக்கு வருவானா?”
வருவானாவா? இதுக்குத்தான் வருவான். பின்ன, உருப்படியா காயல்பட்டினத்துல கல்லூரி கட்டினதுக்கா ந்யூஸ் போடுவான்?”
“சரி, பொற்வு?”
“தாத்தா, பாட்டியை ‘என் டோளர்”னு அழைக்கணும்”
“யோவ்! பாட்டி பொம்பளை. நீ மாட்டுக்கு தோழர்னு சொன்னா ஆம்பளைன்னுலா ஆயிரும்?”
“அதைப்பத்தி தாத்தால்லா கவலைப்படணும்?”
“எளவு போட்டு. பொறவு என்ன செய்யணும்?”
“லே என்பது திருநவேலி பாசை. எனவே லடாக் , திருநவேலி சார்ந்ததுன்னு பாட்டி கூவணும். லடாக், காஷ்மீர் என்பது தமிழர் உரிமை - வெளங்கிடுங்க”
“பாட்டி கும்மிடிப்பூண்டி தாண்டினதில்ல”
“யாருல தாண்டியிருக்கா? சொல்றதுல என்ன கொறஞ்சு போச்சி? அனந்த்நாக்ல அதானி மில் வருது. உதாம்ப்பூர்ல ஜியோ பாக்டரி.. இதெல்லாம் பசுமையை அழிக்கும்னு அலறணும். காஷ்மீர்க்காரன் கோவணத்தைப் பிடுங்கும் பாசிஸ அரசுன்னு கத்தணும்”
“இதுல தமிழ்த்திரைப்படம் கிடைக்குமங்கீய?”
“கண்டிப்பா. மடிசார் கட்டிகிட்டு கிண்டலா ரெண்டு அசிங்க வசனம் பேசிட்டா, முடிஞ்சது கதை. சரி, பாட்டி எத்தனாப்பு வர படிச்சிருக்கா?”
“ஸ்கூலே பாத்ததில்ல”
“அப்ப நேஷனல் எஜுகேஷன் பாலிஸி பத்தி ஒரு அறிக்கை விடணும். எந்த சினிமாக்காரி படிச்சுட்டு பேசுதா? நம்ம பாட்டி மட்டும் விதிவிலக்கா இருக்கணுமாங்கேன்?”
”பாயிண்ட்டு அண்ணாச்சி! ரொம்ப நன்றி!”
சவச புன்னகையுடன் ஏறிட்டார்.” இப்ப எங்களைப் புகழ்ந்து ஒரு பாட்டு பாடிட்டா வாயி வெந்திருமோ?””
”அதென்ன லடாக்கு? எனவோர் தமிழர்
மதங்கொள் கரிபோல் எழுந்தே வினவ,
அதெல்லாம் சிறுவன் ஒருசொல் மிதிக்க
இதெல்லாம் சவத்துப் பொழைப்பு”
(முழுக்க முழுக்க இயற்சீர் வெண்டளை மட்டுமே விரவிவரும் ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

மீண்டும் சந்திப்போம்.
      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!