உளறும் வைகோ! திணறும் காங்கிரஸ்! காஷ்மீர்!

காஷ்மீர் விஷயத்தில் நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியமான முடிவை அரசு அறிவித்து, அதன்மீதான சட்டத் திருத்த மசோதா ராஜ்யசபாவில் மூன்றில் இரு பங்குக்கும் மேலான மெஜாரிட்டியில் நிறைவேற்றப் பட்டதையும் பார்த்தோம்.  தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டின கதையாக இங்கே தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட உதிரி அமைப்புக்கள். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த தமீமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை, SDPI, முஸ்லிம் முன்னேற்றக கழகம் ஆகிய  இஸ்லாமிய அமைப்புகள் , மே 17 திருகன் காந்தி, டைரக்கடக்கர் வ கௌதமன் சுபவீ செட்டியார்  உள்ளிட்டவர்கள் கூடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகை இடப்போவதாக அறிவித்து சென்னை வேளச்சேரி சின்னமலையில்  அவரவர் கொடிகளுடன் ஒரு கேலிக் கூத்து, தற்சமயம் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் வேறு இப்படி லந்தடிக்கிறார் .





சிறுபான்மைக்காவலர் வேஷம்போடுவதில் திமுகவுடன் இத்தனை அமைப்புக்கள் போட்டியா என்ற கேலியான கேள்வி ஒன்று எழுந்ததற்கு மேல் இந்தச் செய்தியில் முக்கியத்துவம் எழுவுமில்லை என்றாலும், இந்த மாதிரியான உதிரி அமைப்புகள் ரொம்பவுமே சிலுப்பிக் கொண்டிருப்பதை இங்கு உள்ள அரசும் நாமும் இன்னும் எத்தனைநாலைக்குச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்ற கேள்வி முக்கியமானது.
   
வைகோ. பாவம் தன்னை இன்னமும் ஒரு புலியாகவே  ஜனங்கள் நம்பிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் போல! சாயம் வெளுத்துக் கேவலப்பட்டு நிற்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல யாருமே இல்லையா?


வர் மாதிரி உளறுவாயர்களை விடுங்கள்!  ஐநா சபை தலையிடுமே  என்றெல்லாம் உதார் விடுகிறார். விஷயம் புரிந்து உளறுகிறாரா அல்லது புரிந்துகொள்ள முடியாமல் உளறுகிறாரா என்பதை இன்னமும் இவரை நம்புகிற மதிமுக தொண்டன் முடிவு செய்துகொள்ளட்டும். இவரை ராஜ்யசபா எம்பியாக அனுப்பி திமுக இன்னுமொரு தவறை வேண்டும் என்றே தெரிந்துதான் செய்திருக்கிறது. அதற்கான விலையையும் அவர்கள் கொடுக்கத்தான் வேண்டும். 

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் சட்டப்படியே செல்லுபடியாகுமா என்பதை ஒரு அரசியல் சாசன வல்லுநர் / வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே என்ன கருத்தை சொல்கிறார் என்று கொஞ்சம் பார்த்துவிடலாம். ஏனென்றால் இன்னும் கொஞ்சநாட்களுக்கு திடீர் எக்ஸ்பெர்ட் அவதாரம் எடுக்கும் பலர் சட்டத்தை அவரவர் இஷ்டம்போல வளைத்து வளைத்து வியாக்கியானமும் கருத்தும் சொல்வதை கேட்டே ஆகவேண்டிய தலைவிதி ஒன்றிருக்கிறதில்லையா?

காங்கிரஸ்காரர்களுடைய  நிலைமை இன்னும் பரிதாபம்! இன்று லோக்சபாவில் Kashmir Reorganisation Bill மீது விருப்பம்  இருக்கிறதோ இல்லையோ எதிர்த்துப் பேசியே ஆகவேண்டிய பரிதாபமான நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதைப் பார்க்கும் போது சோனியாG யின் பிடிமானமும் செல்வாக்கும் கட்சிக்கு உள்ளேயே குறைந்துபோய்க்  கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மனீஷ் திவாரி பேசும்போது  எல்லாப் புகழும் ஜவஹர்லால் நேருவுக்கே என்ற ரீதியில் பேசியது ஒரு நல்ல உதாரணம். இந்திரா காண்டி, ராஜீவ் காண்டி அப்புறம் மன்மோகன் சிங் மாதிரி ஒரு டம்மிப்பீஸை முன்னுக்கு நிறுத்தி சோனியாG backseat driving செய்த சாமர்த்தியம் இவை எதுவும் விவாதத்தில் பேச உதவியாக இல்லை என்கிற கள யதார்த்தம் காங்கிரசைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

                 
தீதும் நன்றும் பிறர்தர வாரா! முன்னால் செய்த தவறுகள் அத்தனைக்கும் பொறுப்பேற்கவும் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும் என்கிற கர்மா தியரி காங்கிரஸ் கட்சி விஷயத்தில் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. நேரு, இந்திரா பெயரைச் சொல்லியோ வாரிசு பரம்பரை என்றோ காங்கிரஸ்கட்சி  இனிமேலும் பிழைத்திருக்க எந்தவொரு வழியுமில்லாமல் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கிறது.  

லோக்சபா விவாதங்களை நேரலையில் கேட்டுக் கொண்டே இந்தப் பதிவை இந்த அளவுடன் முடித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
  
     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!