தந்தி டிவியை விட்டு வெளியேறிய பிறகு ரங்கராஜ் பாண்டே இன்னும் அதிகமாக ஜொலிக்கிறார் என்பதைப் பார்க்கையில், ஊடகக்காரனாக, செய்கிற தொழிலை நேசித்து செய்கிற எவரையும் எத்தகைய பலம் வாய்ந்த நிறுவனமாக இருந்தாலும் இருட்டடிப்புச் செய்துவிட முடியாது என்பதற்கு நல்லதொரு உதாரணமாக இருக்கிறார்! ஊடகத்துறையில் வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கிறார்.
மாணவர்களிடம் உரையாடுகிற இந்த 31 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள்!மாணவர்கள் விதவிதமாய்க் கேள்வி கேட்கிறார்கள், ரங்கராஜ் பாண்டே ஏதோ பதில் சொன்னார் என்று இல்லாமல், மனதின் அடி ஆழத்தில் இருந்து வருகிற மாதிரி நேர்மையான பதில்கள் இன்று காலை பார்த்த இந்த வீடியோ, மிக நல்ல உரையாடலாக இருந்தது, வாழ்க பாண்டே! நிகழ்ச்சியின் ஒருசிறுபகுதியாக மட்டும் எடுத்துப்போடாமல் முழு நிகழ்ச்சியையும் பகிர்ந்திருக்கலாமே என்று மிகவும் ஏங்க வைத்ததும் கூட!
பதிவர் உண்மைத்தமிழன் என்ன காரணத்தாலோ சினிமா செய்திகளைத் தருகிறவராக மட்டுமே அறியப்படுகிறார் எனினும் அவருடைய அரசியல் ஈடுபாடும் அரசியல் குறித்தான கருத்துக்களும் மிகவும் கூர்மையானவை என்பதை நண்பர்கள் எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்?
மேலே வீடியோவில் மஹாராஷ்டிரா அமராவதி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சிவசேனா வேட்பாளரைத் தோற்கடித்த நடிகை நவநீத் கௌர், மக்களவையில் உரை ஆற்றுகிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து முகநூலில் பதிவர் உண்மைத்தமிழன் எழுதியது இது:
'அரசாங்கம்', 'அம்பாசமுத்திரம் அம்பானி' ஆகிய தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்த நவ்னீத் கவுர் இப்போது பாராளுமன்ற உறுப்பினராகி செம வெயிட்டாக பேசி வருகிறார்.
இவருடைய காதல் கணவரான ரவி ராணா மகாராஷ்டிராவில் பட்நேரா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தபோதுதான் இவர்களின் திருமணமே நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு அரசியலில் ஆர்வம் காட்டிய நவ்னீத் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவின் அம்ராவதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்று போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஆனால் இடைவிடாமல் அரசியலில் ஈடுபட்டு தொகுதி முழுவதையும் பலமுறை சுறறி வந்தவருக்கு இந்தத் தேர்தலில் சீட் இல்லை என்றார்கள் காங்கிரஸார்.
போங்கடா என்று சொல்லிவிட்டு தனித்து, சுயேட்சையாகவே அதே தொகுதியில் கெத்தாக நின்று ஜெயித்தும் காட்டிவிட்டார். இப்போது காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கை நழுவியது.
அம்மணி சாதாவாக இல்லை. தன்னுடைய பாராளுமன்ற பேச்சுக்களை அரசியல் தெளிவுடன் சினிமா வசனங்களை ஒப்பிப்பது போல ஏற்ற இறக்கத்துடன் தெளிவாகவே பேசுகிறார்.
வாழ்க வளமுடன்
இதில் ஓரிரு தகவல் பிழைகள் இருக்கின்றன. அம்மணி 2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே சரத் பவாருடைய NCP யின் வேட்பாளராக நின்று தோற்றிருக்கிறார்.2019 தேர்தலில் மீண்டும் NCP வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேட்சையாகவே நின்று ஜெயித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும் இவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இவருடைய கணவர் ரவி ராணாவும் கூட ஒரு சுயேட்சை MLA தான்! அமராவதி MP தொகுதிக்கு உட்பட்ட பத்நேரா சட்டமன்றத் தொகுதியின் MLA . இந்தத்தகவலைப் படித்தபிறகு எனக்குள் எழுந்த கேள்வி நடிப்புத் தொழிலில் இருந்து வந்தவர் என்பதாலேயே ஒருவரை ஒதுக்கி வைத்துவிட முடியுமா என்பதல்ல. வேறு என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?
இரண்டு கார்டூன்கள்! இருவேறு செய்திகள்!
BKR போன்ற பலநண்பர்களுடைய கவலை எரிச்சல் எல்லாம் பிஜேபியை இப்படி காங்கிரஸ் மயப்படுத்த்திக் கேவலப்படுத்துகிறார்களே என்றிருப்பதை அறிவேன். ஆனால் இந்தக் கார்டூன் சொல்லவருவதைப்போல நிலைமை இன்னும் குடைசாய்கிற அளவுக்குப் போய்விடவில்லை என்பதுதான் என் கருத்து.
புலிவேஷம் போடுறவன் எவனாயிருந்தாலும் சரி, வடக்கே சிவசேனாவாக இருந்தாலும், இங்கே சீமான் வேல்முருகன் போல ஈழத்தமிழர் ஆதரவு வியாபாரம் செய்கிற கூட்டமாக இருந்தாலும், கொஞ்சம் சோதித்துப் பார்த்தால் புலித்தோல் போர்த்திய நரியாகவோ எலியாகவோதான் இருப்பார்கள் என்பது நடைமுறை சத்தியம்! இங்கே ஆதித்ய தாக்கரே மட்டும் விதிவிலக்கா என்ன?
மீண்டும் சந்திப்போம்.
ரங்கராஜ் பாண்டே காணொளி - உருப்படியானது. நல்லா தெளிவாகப் பேசுகிறார்.
ReplyDeleteதந்தி டிவியை விட்டு வெளியேறியது சாபமல்ல வரம்தான் என்பதை மனிதர் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார் என்ற வகையில் உங்கள்கருத்தை ஆமோதிக்கிறேன் நெல்லைத்தமிழன் சார்! இங்கே pseudo secular திராவிட விஷங்களின் நெருக்கடிக்கு ஆளானால் எப்படித் தன தனித்துவத்தை நிரூபிப்பது என்பதில் மதன் ரவிச்சந்திரன் போன்றவர்களுக்கும் ஒரு ஆதர்சமாகவும் தெரிந்ததால்தான் இந்த வீடியோவைப் பகிர்ந்ததே!
Deleteபாண்டே அவர்களின் தனிப்பட்ட வெளியே தெரியாத குணாதிசியங்களைப் பற்றி அவருடன் பணிபுரிந்த நண்பர் பகிர்ந்து கொண்டார். வியப்பாக இருந்தது.
Deleteஉள்முக யோக்கியதையை அப்படியே மூடி மறைத்து வெளித்தோற்றத்தில் மட்டும் எவரும் பொதுவெளியில் நீடிக்க முடியுமா என்ன? ரங்கராஜ் பாண்டே தினமலரில் இருந்தநாட்களில் இருந்தே கவனித்து வருகிறேன். கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். அனாவசிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதே அவருடைய வெற்றிக்குப் பின்னல் ருப்பதாகத் தோன்றுகிறது
Delete