ஒரு இந்தியப் பெருமிதம்! நிலவுக்கும் போவோம்!

இன்றைய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தபோது சந்திராயன் 2 இன் குறிப்பிடத் தகுந்த ஒரு சாதனையைப் பற்றிய செய்தியையும் பார்த்தேன். அதாவது, அமெரிக்கா, ரஷ்யா இரண்டுநாடுகளும் சந்திரனுக்கு அனுப்பிய விண் கலங்களை விட பாதிக்கும் குறைவான நேரத்திலேயே இந்திய விண்கலம் சந்திரனைத் தொட்டுவர எடுத்துக் கொள்கிறது என்ற செய்தி TOI  நாளிதழில் வெளியாகியிருக்கிறது. பூமியின் வளிப்பாதையிலேயே 22 நாட்களுக்கு மேல் சுற்றிக் கொண்டு வரும் சந்திராயன்2 வருகிற செப்டெம்பர்7 அன்று தான் சந்திரனில் தரை இறங்கப்போகிறது என்கிறபோது இந்த ஒப்பீடு சரியா என்ற சந்தேகம் செய்தித்தலைப்பைப் பார்த்த போது வந்ததை இரண்டு infographics இல், தொடர்ந்து ISRO தலைவர் திரு K சிவன் விளக்கியதில், ஒரு இந்தியப் பெருமிதமாக நம்முடைய விஞ்ஞானிகளை போற்றி  வணங்கத்  தோன்றியது.  


அமெரிக்கா மூன்று விண்வெளிவீரர்களுடன் சந்திரனுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம் சந்திரனில் இறங்க நாலேகால் நாட்கள் எடுத்துக் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்த செலவும் அதிகம் பிடிக்கும் சாட்டர்ன் V ராக்கெட் விண்கலத்தை நேரடியாகவே சந்திரனுக்கு அனுப்பி, 8 அல்லது 9 நாட்களில் வீரர்கள் பூமிக்கு திரும்பி விட்டார்கள். இதற்கு ஆன செலவு 2016 மதிப்பில் 8300 கோடி ரூபாய்கள். சாட்டர்ன் V ராக்கெட்டுக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் 490 கோடி ரூபாய்கள். இதை எப்படி இந்திய முயற்சியோடு எந்த வகையில் ஒப்பிட முடியும் என்று சொல்கிறார்கள்?  


ஆனால் அமெரிக்கர்களோடு செலவில் போட்டியிட முடியுமா?புத்திசாலித்தனத்தை உபயோகித்து, 22 நாட்கள் பூமியைச் சுற்றிக்கொண்டே வந்து சந்திரனுடைய ஈர்ப்புவிசைக்குள் ஆகஸ்ட் 14 அன்று நுழைந்து,  மெல்ல மெல்ல சந்திரனின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தியே நெருங்கி  சந்திரனை 13 நாட்கள் சுற்றி வந்து செப்டம்பர் 7 அன்று விண்கலம் சந்திரனில் இறங்குகிறது. இதில்  முக்கியமான விஷயம் என்னவென்றால்  விண்கலம் சந்திரனுடைய ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தியே சந்திரனின் வளிப்பாதைக்குள் நுழைகிறது. ராக்கெட் எரிபொருள் செலவு விரையம் இல்லை. மொத்தச்செலவும் மிக குறைவு. இதே டெக்னிக்கை இந்த ஆண்டின் துவக்கத்தில் இஸ்ரேல் வெற்றிகரமாகப் பயன்படுத்தி சந்திரனுக்கு ஒரு விண் கலத்தை அனுப்பியிருக்கிறது. BBC ஒப்பாரி வைத்தது போல கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் சந்திரனுக்குப் பயணம் செய்ய ஆயிரம் கோடி ரூபாய்களை விரையம் செய்தது என்று  அல்ல, நம்முடைய விஞ்ஞானிகள் அளந்து செலவு செய்திருக்கிறார்கள், மற்றவர்களுடைய சாதனையை மிஞ்சி இருக்கிறார்கள், நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டிய செய்தி.          

ஒரு நல்ல விஷயத்தைப் பேசும்போது அரசியல் செய்திக்கலப்பு வேண்டாமே என்று தவிர்க்கிறேன்! இது என்ன புதுசாய் இருக்கு என்று ஆச்சரியப்படுகிறவர்களுக்காக ஒரே ஒரு லிங்க் மட்டும் போதும் இல்லையா?


Not only did the Congress fail to mobilise opposition on the Kashmir issue, but even many of its MPs did not know the party line on Article 370.என்கிறார் கல்யாணி ஷங்கர்   

மீண்டும் சந்திப்போம்.
   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!