எத்தனை முறை இங்கே எழுதியிருந்தாலும், இங்கே ஊழலில் பானாசீனாவின் சாதனையை எவரும் இந்திய அரசியலில் இதுவரை முறியடிக்கமுடியவில்லை என்பதைத் திரும்ப ஒரு முறை எழுதவேண்டி வரும்போது, நம்மூர் நீதிமன்றங்கள், விசாரணை நடைமுறைகள், குற்றவாளியைத் தப்பிக்க வைக்க உதவுகிற அதிகாரிகள் என்று பல அம்சங்களைத் தொட்டு ஒருவிதமான அயற்சியும் சலிப்பும் வந்து விடுகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அதிக அளவில் ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன என்பது புகார். இந்த செலவுகளால்தான் ஏர் இந்தியா நிறுவனம் நட்டம் அடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது.
எங்கே பணம் சம்பாதிக்கிற வழி தெரிந்தாலும் அது எந்த அமைச்சகமாகஇருந்தாலும் அங்கே அப்பச்சி மூக்கை நுழைத்து விடுவார்! அடுத்து ஏதோ ஒருவகையில் அவரது மனைவியும் புகுந்துகொள்வார் என்பது அரசியல் நடப்பை கவனித்து வருகிற எல்லோருக்குமே தெரியும். 2004--2014 இந்தப்பத்தாண்டுகளில் இந்தக்குடும்பம் சம்பாதித்தது மற்ற எவரையும் விட அதிகம்! சென்னை விமான நிலைய மேற்கூரை எத்தனை முறை இடிந்து விழுந்தது என்பதற்கு எப்படிக் கணக்கே மறந்து போனதோ அதுபோலவே வாய்க்கொழுப்பு மிகுந்த சால்வை அழகரும் அவரது மகனும் எத்தனை முறை கைதுநடவடிக்கைக்கு தடை வாங்கி இருக்கிறார்கள் என்பதற்கும் கணக்கு வைத்துக்கொள்ள அலுத்து விட்டது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் O P சைனி கற்பக மரமாய் அந்த அளவுக்கு கைதுக்குத் தடை நீட்டிப்பு வழங்கிக் கொண்டே இருக்கிறார்! அடுத்தமாதம் கற்பகமரம் ஓய்வு பெறுகிறாரே, மாற்றம் வருமா என்று கேட்கிறீர்களா? இந்த மரம் போனாலென்ன? இன்னொரு இலுப்பை மரம் வராமலா போய்விடும்? அப்பச்சிகள் தெனாவட்டாகத்தான், அதே வாய்க்கொழுப்புடன் தான் அலைகிறார்கள்!

நிறைய நேரங்களில் கள யதார்த்தம் என்னவென்பதை உள்ளே இருந்து எழும் கலகக்குரல்கள்தான் காட்டிக் கொடுக்க வேண்டும்! பாகிஸ்தானுடைய இன்றைய பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பது, இந்தியாவை உடைத்துக் கொண்டு தனிநாடாக ஆனபின்னாலும் கூட இந்திய வெறுப்பில் எரியும் மனங்களாக எதற்கெடுத்தாலும் இந்தியாவுடன் போட்டி, வீண் சவடால்கள் என்றே ஆனதுதான்! இந்திய வெறுப்பில் ஒரு ஜனநாயக அமைப்பை நிறுவுவதில் தோற்றார்கள்! விளைவு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு, மேல்மட்டத்தில் இருந்தவர்கள் நாட்டைச் சூறை ஆடினார்கள்! உள்நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்தியாவுக்குத் தொல்லை கொடுப்பது ஒன்றை மட்டுமே பிரதானமாய், தீவிரவாதத்தை வளர்க்கிற பண்ணையாக மாற்றினார்கள். பழங்குடிகளுக்கு கல்வி மருத்துவம் தொழில் என்று வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதற்குப் பதிலாக ஆயுதங்களைக் கொடுத்து அக்கம் பக்கம் உள்ள நாடுகளில் மதத்தின் பெயரால் பயங்கரவாத செயல்களைச் செய்யவும் தூண்டிவிட்டார்கள்.
இம்ரான் கானே சமீபத்தில் ஒப்புக் கொண்டபடி, பாகிஸ்தானுக்குள் ஆயுதப்பயிற்சி பெற்ற தீவீரவாதிகள் 35000 முதல் 40000 வரை இருப்பார்கள் என்கிற செய்தியில், அவர்களுக்கு கொஞ்சம் காசும் வேலையும் கொடுத்து எங்காவது அனுப்பாவிட்டால், அவர்களது தாக்குதல் வளர்த்தவர்கள் மீதே பாய்ந்துவிடுவதான ஒரு சாபமும் இருப்பது புரிகிறதா? அதைத்தான் ஆயிஷா சித்திக்கி என்கிற பாகிஸ்தானிய ஸ்காலர், நூலாசிரியர் இம்ரான் கானுக்கும் ராணுவத்தளபதி பாஜ்வாவுக்கும் அவர்கள் முகத்தையே கண்ணாடியில் பார்த்துக் கொள்கிற மாதிரி மேலே வீடியோவில் சொல்லி இருக்கிறார். வீடியோ 3 நிமிடம்தான்!
இந்து தமிழ்திசையில் கூட சமயங்களில் உண்மைக்கு நெருக்கமாக சில செய்திகள் வந்துவிடும்! கிட்டத்தட்ட ஒன்றேகால் வருடம் கழித்து இந்தப்புத்தகத்தைப் பற்றிய அறிமுகமாக! வந்திருக்கிற மாதிரி!
Sardar Patel – Unifier of Modern India
by R.N.P. Singh
Publisher: Vitasta Publishing Private Limited (18 May 2018)
Language: English
ISBN-10: 9386473240
ASIN: B07D5XLHL3

Patel was convinced, ‘small States cannot subsist as independent entities without endangering Indian unity’ and this book tells the bold and brazen story of how State by State, from Junagadh to Patna, Travancore to J&K, that is, two-thirds of the land mass was shepherded under Mother India’s wings, by one man’s steadfast commitment to the larger cause, ‘no further division’ of the subcontinent. India is today suffering the consequences of ignoring Patel’s advise on Kashmir and China. Though it covers just five years of Sardar Patel’s life and times, this is a work of historicity that every Indian must read to understand how India came to be the India that Google today shows us.
இது புத்தகம் வெளிவந்தபோதே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தக அறிமுகம்.
அதென்ன #1001 ? இது இந்தப்பக்கத்தில் எழுதப்படும் ஆயிரத்தொன்றாவது பதிவு.
மீண்டும் சந்திப்போம்.
உங்க மூலமாகத்தான் சைனி அடுத்த மாதம் விடைபெறுகின்றார் என்பதனை அறிந்தேன். மோடி ஒரு வேளை அப்பனையும் மகனையும் உள்ளே வைத்தால் உண்மையிலேயே கில்லாடி தான். இல்லாவிட்டால் எங்க ஊர்காரர் தான் கில்லாடி. டீலா? நோ டீலா?
ReplyDeleteஇந்தவிஷயத்தில் நான் பெட் கட்டுகிற மாதிரி இல்லை ஜோதிஜி! :-))))
Deleteஇதே ஓ பி சைனியை ரொம்ப நியாயஸ்தர், நியாயம் கிடைத்துவிடும் என்று நம்பி 2011 முதல் நான் எழுதிவந்த பதிவுகள் இப்போதும் என்னைக் கேலிசெய்கிற மாதிரி இங்கேய இருக்கின்றன என்பதை மறந்துவிடவில்லை.
கவலைப்படாதீர்கள். இன்று மாலை தேடி வந்து விட்டார்கள். சென்னை டெல்லி வீட்டில் ஆள் இல்லை. வெள்ளி நல்ல செய்தி வரும்.
Deleteஇதை எழுதுகிற இந்தநிமிடம் வரை பானாசீனா ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் இன்னமும் இவருடைய SLP மீதான விசாரணையைத் தொடங்கவில்லை. பார்க்கலாம்
Delete