வாய்க்கொழுப்பு சீனாதானா நேற்றிரவு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வீரவஜனம் பேசிவிட்டு ஓடிப்போய் தன்னுடைய வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டதையும் சிபிஐ அதிகாரிகள் சுவரேறிக் குதித்து உள்ளேபுகுந்து அவரைக் கைது செய்து கொண்டு போனதையும் நான் மட்டுமல்ல இங்கே திமுக உடன்பிறப்புகளுமே கூட ஒருவித கொண்டாட்ட மனநிலையுடன் பார்த்ததை இணையச் செய்திகளில் இன்று பார்க்க முடிகிறது.
Srinivasan J
சிதம்பரம் வீட்டில் CBI officers சுவர் ஏறி குதித்ததை புதுமையாக பார்க்கிறார்கள். இதற்கு முன் தயாநிதிமாறன் வீட்டில் இதே போல CBI officers சுவர் ஏறி குதித்தர்கள்
அப்போது CBIயின் தலைவராக அந்த துறையின் அமைச்சராக இருந்தவர் இதே ப.சிதம்பரம் அவர்கள்.
ஆக அப்பச்சிக்கும் இதேமாதிரி நடத்திக் காட்ட நேற்றைக்கு ஆசை வந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட சில தலைகளைத் தாண்டி சிதம்பரம் கைதைக்குறித்து கவலைப்படுகிறர்வர்கள் எவரையும் காணோம். இன்றைக்கு டில்லி ஜந்தர்மந்தரில் காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று திமுக ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்ட கண்டனக் கூட்டத்தில் காங்கிரசின் குலாம் நபி ஆசாத் கலந்துகொண்டார். 15 கட்சி பங்கேற்பு என்று கலீஞர் செய்திகளில் மட்டும் பார்க்க முடிந்தது. KD சகோதரர்களுடைய சன்செய்திகளில் கூடப் பெரிதாக எந்த கவரேஜையும் காணோம். சால்வை அழகர் பானாசீனா எந்தக்காலத்திலும் மக்களால் விரும்பப்பட்ட தலைவராக இருந்ததில்லை. தலைவிதியே என்று சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததாகத் தகவல்.
சதீஷ் ஆசார்யா இந்தக் கார்டூனில் என்னமோ சொல்ல வந்து ஆனால் சொல்லாமல் விட்டமாதிரித் தெரிகிறதோ? அமித் ஷா பானாசீனா மாதிரி வாய்க்கொழுப்புடன் அலைந்ததாகவோ, விசாரணையை எதிர்கொள்ளாமல் சீப் டிராமா நடத்தியதாகவோ எந்தவொரு தகவலுமே இல்லையே!
குப்பைகளை எங்கே தூக்கிப்போடவேண்டும் என்று தெரிந்த உள்துறை அமைச்சராக அமித் ஷா என்கிறார்களா என்ன!?
ஹிந்து நாளிதழுக்கு வேறு கவலை! சுரேந்திரா கார்டூன் இன்று.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!