Showing posts with label வேலைநிறுத்தம். Show all posts
Showing posts with label வேலைநிறுத்தம். Show all posts

நேற்று பொது வேலைநிறுத்தமாமே! பார்த்தீர்களா? என்ன நடந்ததாம்?

ஒரு முப்பது வருஷங்களுக்கும் மேலாக தொழிற்சங்க ஈடுபாட்டோடு தீவிரமாக இருந்திருக்கிறேன். ஒரு இடதுசாரி அரசியலையும் சேர்த்தே  முன்னெடுத்திருக்கிற அனுபவத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அல்லது பொது வேலை நிறுத்தம் என்பது மாதிரியான அரசியல் மோசடி வேறெதுவும் இருக்கமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவேன்! நேற்று ஜனவரி 8 ஆம் தேதி கூட இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை சார்ந்த தொழிற்சங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாக செய்தி ஊடகங்களில் மட்டும் ஒரு பரபரப்புச் செய்தி தொடர்ந்து ஊதப்பட்டு வருகிற வேடிக்கையை கவனித்தீர்களா? பொத்தாம்பொதுவாக சிலபல நிறைவேற்றமுடியாத கோரிக்கைகளை  சும்மா லுலுலாயிக்கு தொழிலாளர்களுக்குச் சொல்லிவிட்டு, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் போராடுவதான தங்களுடைய அரசியல் அஜெண்டாவையும்  நடத்திக் கொள்வது, இப்போது புதிதாக நடப்பது அல்ல. வருடா வருடம் குறைந்தது ஒருமுறையாவது நடக்கிற கூத்துதான்!


ஒருபக்கம் பொதுவேலை நிறுத்தம்! இன்னொருபக்கம் பாரத் பந்த் என்று அறிவிப்பு! என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாராவது பார்த்தீர்களா? குறிப்பிட்டு இந்தத் துறையில் வேலைநிறுத்தம் முழுமையாக நடந்தது என்ற தகவல் இருக்கிறதா? எந்த மாநிலத்திலாவது  பாரத்  பந்த் பாதியளவாவது வெற்றி பெற்றதாக செய்தி எதையாவது பார்த்தீர்களா? ஆனால் சென்னை அண்ணாசாலையில் விசிக திருமா, தொமுச, சிஐடியு ஆசாமிகள் சாலைநடுவே அமர்ந்து மறியல் செய்தபோது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டபோது சாலையில் உருண்டு புரண்டதாக சுமார் 1200 பேரம் கூடவே  கைதுசெய்யப்பட்டு பக்கத்தில் இருந்த திருமண மண்டபத்துக்கு அழைத்துச்  செல்லப்பட்டதாக ஒன் இந்தியா தளத்தில் பில்டப் கொடுக்கப்பட்டதைத் தாண்டி வேறேதாவது impact இருந்ததா?  பார்க்க முடிந்ததா?

நேற்றிரவு புதியதலைமுறை டிவியில் ஒரு 49 நிமிட விவாதத்தில் நெறியாளர் கார்த்திகேயன் என்னமாய் இந்த பொதுவேலைநிறுத்தம் / பாரத் பந்த் பற்றி ஏகத்துக்கும் பில்டப் கொடுக்கிறார், குறுக்குச்சால் ஓட்டிக் கேணத்தனமாய்க் கேள்விகள் கேட்கிறார் என்கிற காமெடியைக் கொஞ்சம் அனுபவித்துப் பாருங்களேன்! ஒரு சங்கம் வேண்டும் எதற்காவது உதவும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான தொழிலாளர்கள், குறிப்பாக வங்கி ஊழியர்கள், LIC ஊழியர்கள் (இவர்களில் பெரும்பாலானோருக்கு strike என்பது ஒரு non paid holiday என்பதற்கு மேல் பெரிதாக அபிப்பிராயம் இருப்பதில்லை!) கொஞ்சநேரம் தங்கள் அலுவலகம், அல்லது ஒரு பொது இடத்தில் கோஷங்கள் போட்டுக் கலைந்துவிடுவார்கள் என்பது பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன விஷயம்! இடதுசாரிகள் இத்தனை வருடங்களாகத் தலைகீழாக குட்டிக்கரணம் போட்டுப் பார்த்தும் கூட இந்தியத் தொழிலாளர்களை அவர்கள் நினைத்தபடி அரசியல்படுத்தமுடியவில்லை என்பதை இடதுசாரி இயக்கங்களின் மிகப்பெரிய தோல்வியாகவும், சறுக்கலாகவும் இருப்பது புரிகிறதா?

அதனால் தானோ என்னவோ இங்கே தமிழகத்தில் இடதுசாரிகள் மார்க்சீயம் பேசுவதைக் கூட மறந்து விட்டு திராவிடர் கழகம், தி மு கழகம், விசிக என்று குறுகிய பார்வைகொண்ட இயக்கங்களின் பின்னால் போய் ஒட்டிக்கொண்டிருக்கிற பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்!

ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த இடது சாரிகள் இன்றைக்கு கழகங்களிடம் காசுக்காகவும் கையேந்துகிறவர்கள் என்கிற அவப்பெயரை சம்பாதித்ததோடு, ஒரு அரசியல் சக்தியாக இருக்கிற தகுதியையும் இழந்து விட்டு பரிதாபமான முட்டுச்சந்துக்குள் நிற்கிறார்கள்.

ஆனாலும் வாயமட்டும் காதுவரை நீளுவது இன்னமும் குறையவில்லை என்பது இன்னொரு சோகம்.

மீண்டும் சந்திப்போம்.      
         

புதன்கிழமை! அதென்ன ரயில் மறியல்? முழு அடைப்பு?

பொதுவேலைநிறுத்தம் என்றாலே ரயில் மறியல். முழு அடைப்பு, கலவரங்கள், வன்முறை எல்லாமே சேர்ந்து கொள்கிறதே! ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்காமலேயே ஊமைச் சனங்களாக மட்டுமே நாம் குறுகிக் கிடப்பதாலா?




போராட்டங்கள் என்ற பெயரில் சென்றவருடம் தான்தோன்றித்தனமாக அராஜகத்தில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமன் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கிற ஒரு தீர்ப்பு ஒரு முன்னோட்டம் தான்! இந்தப் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிட்டு இயக்குநர் கவுதமன் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்திய அரசியல் சாசனம் போராட அனுமதி வழங்கியுள்ள போதும் அதற்கும் நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும், முறையான அனுமதியைப் பெறாமல், சட்டவிரோதமாக போராட்டம் நடத்தி மக்களுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை எனவும் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்கிறது இந்தச் செய்தி 

நீதிமன்றங்களோ அரசோ பார்த்துச் செய்தால்தான் உண்டு என்று எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பார்க்கிற ஊமைச் சனங்கள் தாமா நாம்? முந்தையபதிவுகளில் நிலுவையில் இருக்கும் கேள்விகளோடு இதையும் சேர்த்துவிடாமல் ஒரு பதில் சொல்லுங்களேன்!  
*******
#போனதபா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது #முடியட்டும் ன்னு பெருசா ,,,,,அபசகுனமா எழுதினாங்க திமுக உளுத்தம்பருப்புகள். இந்த முறை ஸ்டாலினை முன்னாடி உட்கார வெச்சு #முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் ,,,,,,ன்னு கொட்டை எழுத்திலே எழுதறாங்களே,,,,,,

உளுத்தம்பருப்புகளே ஸ்டாலினை பார்த்தா பாவமா இல்லையா,,,,,?

இப்படி அனுதாபப்படுகிற அளவுக்கு என்ன நடந்துவிட்டதாம்? டிடிவி தினகரன் இப்படிக் கமென்ட் அடித்தாரே, இதுவாக இருக்குமோ?

அதெல்லாமில்லை! நமக்கு நாமே என்று இசுடாலின் தானாகவே தேடிக் கொண்டதுதானாம்!


திருவாரூர் கிராமசபை கூட்டத்தில் பொய் சொல்லி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஸ்டாலின் ட்விட்டரில் அடுத்த ட்ரெண்ட் #FRAUDSTALIN என்கிறார்களே!

*******

அர்னாப் கோசுவாமியா? ஆரு பாப்பாங்க? அதுவும் நிர்மலா சீதாராமனுடன் பேட்டியா? என்று கேட்கிறவர்கள் இருக்கிற இதே இணையத்தில் தேடிப் பிடித்துப் பார்க்கிறவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

இது புதுசு!

செவ்வாய்! கொஞ்சம் வாய் திறந்துதான் பேசுங்களேன்!

ன்றும் நாளையும் பொதுவேலைநிறுத்தம் என்று இடதுசாரிக் கட்சிகள் முன்னிருந்து இயக்கும் மத்திய தொழிற்சங்கங்களோடு பின்னிருந்து இயக்கும் வங்கி, காப்பீட்டு ஊழியர் சங்கங்கள், காங்கிரஸ் கட்சியின் INTUC திமுகவின் தொ.மு ச அப்புறம் நிறைய உதிரிகளும் சேர்ந்திருக்கிறார்கள். சுமார் 20 கோடி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள் என்று AITUC பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் சொல்கிறாராம்!(அத்தனை வாக்குகள் விழுந்திருந்தால், மத்தியில் ஆட்சியையே பிடித்திருக்கலாமே! யாரும் கேட்க மாட்டீர்களா?)   

Trade Union activists protesting while courting arrest during two day long Bharat Bandh called by Trade Unions, at Hazra in Kolkata on Tuesday 8th January 2019. செய்தி மற்றும் படத்துக்கு நன்றியுடன் (ARIJIT SEN / Hindustan Times)

மாற்றங்களை எதிர்கொள்வது! தடுமாறும் வங்கி ஊழியர்கள்!  என்று இங்கும், 


வேலைநிறுத்தங்கள்! அர்த்தமிழந்து போன சாங்கியம்! 


Why do people go on strike?
What makes or breaks a strike?
Aren’t strikes a bit unfair to customers or service users?
What’s the role of governments in all this?
How else could workers express their dissatisfaction with the way they’re being treated?
Is there an ideal set-up anywhere in the world? 
Have you ever been on, or considered going on, strike?


ப்படி ஏழு கேள்விகளை முன்வைத்து எழுதியிருந்ததை ஒருமுறை வாசித்துவிட்டு , உங்களுக்கு என்ன மனதில் படுகிறதோ அதைக் கொஞ்சம் வாய்திறந்து பேசுங்கள்!

 


னால் மேற்குவங்க முதல்வர்  மம்தா பானெர்ஜி இடது சாரிகளுக்கு பந்த் அதுஇது என்று நடத்தி 34 வருடங்களாக மாநிலத்தைச் சீரழித்தது போதுமென்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். செய்தி இங்கே  

*******

சென்னை புத்தககாட்சியில் புத்தகம் வாங்கிவிட்டீர்களா? புத்தகம் வாசிப்பது பற்றி ஜோதிடம்  கூறும் ரகசியங்கள்!

இப்படி இதற்கும் ஜோதிடம் பார்க்கச் சொல்கிறது தினமணி. பொன்மாலைப்பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் கூகிள் பிளஸ்சில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்! 

இரண்டே நாட்களில் எலக்கியவாதி ஆவது எப்படி ?

1. நேரா புத்தக கண்காட்சிக்கு போய் அஞ்சாறு எலக்கிய ஆளுமைகள புடிச்சி கன்னத்தோடு கன்னம் ஒட்டி போட்டோ எடுத்துருங்க "ஏய்... யாருய்யா நீ ?" அப்டீன்னு கேட்டா... நாந்தான் அனலினியன், புனல்தலையன் அப்டி இப்டீன்னு எதுனா சொல்லி சமாளிங்க...! " பயபுள்ள இவனும் எலக்கியவாதிதான் போலன்னு" நம்பிருவாங்க.

2. எல்லா ஸ்டால்லயும் போய் சிரிச்சி சிரிச்சி பேசுங்க... பட் எலக்கியவாதிங்க சிரிக்க மாட்டாங்க... முறைப்பாங்க... ஆனாலும் நீங்க சிரிக்கனும்...!

3. வீட்டுக்கு வந்த உடனே, ஃபேஸ்புக்குல உள்ள சொடலமுத்துங்கற ஒங்க பேர, சொடலமுத்திரன் அப்டீன்னு மாத்திருங்க...

4. "அவன் எழுதிய புத்தகத்தை நான் குப்பையில் கிடாசுகிறேன், இவன் எழுதிய புத்தகத்தை நான் ராக்கெட் செய்து விடுகிறேன், இது கல்யோவ்ஸ்கி - டி - லே த்மபுடிக்கி எழுதிய பிரெஞ்சு நாவலின் தழுவல், அவனையெல்லாம் ஏரித்தண்ணில முழுக வெச்சி அடிச்சாலும் அவனுகெல்லாம் எலக்கியம் வராது" என்றெல்லாம் பதிவ போட்டுத்தள்ளுங்க...

5. "தமிழ்" என்பதை "தமில்" என்றெழுதி, அந்த தவறை சுட்டிக்காட்டுபவனிடம், குமரிக்கண்டத்தில் தமில் என்றுதான் பிருந்தது, ஹீத்ரு மொழியில் இருந்து வந்ததுதான் "ழ" எனும் எழுத்து, என்று அவன் குரல்வளையை கடித்துத்துப்புங்கள்...
இரண்டாம் நாள் மாலை ஆறு மணிக்கு "எலக்கியவாதி" ரெடி...!

பதிவு பகிர்வு : ராம்ஜி இசை மழலை

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனும் கலாய்க்கிறார்!

‪இதற்கு சவாலாக பெரியார் நூல்களை சீனாவில் சீப்ரேட்டில் அச்சடித்து இலவசமாக விநியோகிக்கலாமே வீரமணி. எனக்கெல்லாம் பெரியார்போல் யாராவது சொத்து எழுதிவைத்துவிட்டுப்போனால் காலச்சுவடு கண்ணன் கேஸ்போடுவாரோ என்று பயந்து நடுங்காமல் வருவது வரட்டுமென்று இலக்கியத்தை சோவியத்போல இப்படிப் பரப்புவேன்‬
Photo

வேலைநிறுத்தங்கள்! அர்த்தமிழந்து போன சாங்கியம்!



இரண்டு வேலைநிறுத்தங்களுக்கிடையே சனி ஞாயிறு லீவு வேற! இது டிசம்பர் மாதக் கூத்து!  











வேலைநிறுத்தங்கள், தொழிலாளியின் கடைசி ஆயுதமாகச் சொல்லப்பட்டதெல்லாம் போய் தொடர்கதை ஆனதையும் தாண்டி மெகாசீரியல் அபத்தங்களாக ஆகிவிட்டதை, ஒரு முன்னாள் தொழிற்சங்கவாதியாக வருத்தத்துடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.



எண்பதுகளிலேயே வேலைநிறுத்தங்கள் பயனற்றவை தான் என்றாகிப்போன பிறகும் கூட, இங்கே சங்கங்களோ பின்னிருந்து நடத்துகிற கட்சிகளோ படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவில்லை.  இதையும் ஒரு அரசியல் போராட்டமாகத் தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். Change Management  மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி  என்று ஏற்கெனெவே அங்கே ஒரு புத்தகத்தை முன்வைத்துப் பேசியதை மறுபடியும் நாட்டு நடப்புக்களை வைத்துப் இங்கேயும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.


ஒருநாள் வேலைநிறுத்தங்கள் பயனற்றுப்போனதால் இப்போது impact அதிகமாக இருக்க வேண்டுமென்று விடுமுறைநாட்களை ஒட்டியோ, அடுத்தடுத்து தொழில் சுணக்கம் ஏற்படுத்துகிற மாதிரி ஒருநாள் அப்புறம் இரண்டுநாள் என்று அறிவித்துக் கொண்டு போவதில் டிசம்பர் 21 க்கும் ஜனவரி 9க்கும் இடைப்பட்ட இருபது நாட்களில் இது மூன்றாவது! முந்தைய காலங்களைப் போல Indefinite Strike என்று அறிவிப்பதற்கும் எந்தத் தொழிற்சங்கத்துக்கும், பின்னிருந்து இயக்குகிற அரசியல் கட்சிகளுக்கும் இப்போது தைரியமில்லை

It’s a tried and tested method to express your dissatisfaction with the way you’re being treated at work – but is it effective? என்று 7 கேள்விகளை முன்வைத்து இங்கே ஒரு செய்திஅலசல்  

Why do people go on strike?
What makes or breaks a strike?
Aren’t strikes a bit unfair to customers or service users?
What’s the role of governments in all this?
How else could workers express their dissatisfaction with the way they’re being treated?
Is there an ideal set-up anywhere in the world? 
Have you ever been on, or considered going on, strike?

இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதும் பதிலும் வெளிநாடு ஒன்றில் தான் என்றாலும் கேள்விகள் இங்குள்ள சூழலுக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் வேலைநிறுத்தங்கள் பெரும்பாலும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் மீதல்லாமல்,  பின்னிருந்து இயக்குகிற அரசியல் கட்சிகளுடைய சொந்த அஜெண்டா மீது நடப்பதுதான் என்பது சிதம்பர ரகசியம்!

இந்த  ஏழு கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்ன? மௌனமாகக் கடந்துபோய்விடாமல், ஒரு பதில் சொன்னால் தான் என்ன? !! 

இது 5/1/2019 தேதியன்று சேர்க்கப்பட்ட டிஸ்கி. இங்கே 
பதில்கள் எதுவும் வரவில்லை ஆனால் இதைப்பற்றி கூகிள் ப்ளஸ் தளத்தில் செய்திருந்த அறிமுகத்துக்கு இரண்டு நண்பர்கள் பதிலளித்திருந்தார்கள். அதையும் பதிவின் உள்ளடக்கமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன்       
  • Palani Chamy's profile photo
    புதிய பொருளாதாரக் கொள்கை தாக்கம் ஒரு காரணமாக இருக்கிறது.
    இரண்டு ஒரு தொழிற்சாலை ஒரு பொருள் (அது டிவி அல்லது வாசிங்மிஷின் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது கார் பஸ் லாரி)உற்பத்தி முறை போய் ஒரு பொருளுக்கு பல இடங்களில் உற்பத்தி என்றமுறையில் (அரசின் சலுகைகள் உதவி யோடு வரிவிலக்கு மின்கட்டண சலுகைகள்) உற்பத்தி முறை மாதிரி இருப்பதால் அதற்கேற்ப தொழிற் சங்க கொள்கை மாறாமல் இருப்பது பின்னடைவு
    இதற்கு முதலில் ஒரே பொருள் உற்பத்தி செய்யும் கம்பெனி கிளைகள் எல்லாம் ஒரே சங்கமாக மாறவேண்டும். பின்னர் ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என விரிவடைய வேண்டும்.
    கட்டுரை படிக்க வில்லை இது என்னுடைய எண்ணம்.
    REPLY
    15h
  • Raguveeradayal Thiruppathi Iyengar's profile photo
    1960லிருந்தே அனேக‌மாக‌ வேலை நிறுத்த‌ம் வெற்றியாயிருக்கிற‌து ஆனால் கோரிக்கைக‌ள் நிறைவேறிய‌தாக‌ச் சொல்ல‌ முடியாது. அனேக‌மாக‌ எல்லா இட‌ங்க‌ளிலும் க‌ம்யூனிஸ்ட்டுக‌ள் ஆதிக்க‌ம் என்ப‌தால் அவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப‌ போராட்ட‌ங்க‌ள் வெடிக்க‌ வைக்க‌ப்ப‌டும். ஆனால் இப்போதெல்லாம் அதுவும் No work No Pay என்று ஆன‌ பிற‌கு லீவு எடுத்து ஓடும் வ‌ழ‌க்க‌ம் அதிக‌ரித்திருக்கிற‌து. குறிப்பாக‌த் தொலைபேசித் துறையில் ம‌க்க‌ளிட‌ம் பிஎஸ்என்எல் அனேக‌மாக‌ ம‌திப்பிழ‌ந்து போன‌ நிலையில் மாற்றி யோசிக்க‌த் தெரியாத‌ க‌ம்யூனிஸ்ட் த‌லைமைக‌ள் வ‌ச‌ம் மாட்டிக்கொண்ட‌ ஊழிய‌ர்க‌ள் பாவ‌ம்!
    REPLY
    3h
  • Krishna Moorthy S's profile photo
    +Raguveeradayal Thiruppathi Iyengar ஆப்பரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் இறந்துவிட்டார் கதையாகத் தான் வெற்றி பெற்றதாக இங்கே வேலைநிறுத்தங்கள் நம்ப வைக்கப் படுகின்றன. No work No Pay என்பதனால் மட்டுமல்ல, இங்கே வேறு மாற்று என்ன என்பதை யோசிக்க முடியாத நடுத்தர வர்க்கம் (எல்லாத் தொழில்களிலும் தான்), இங்கே தொழிற்சங்கங்களை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது.

    மாற்றி யோசிக்க‌த் தெரியாத‌ க‌ம்யூனிஸ்ட் த‌லைமையால் என்பது மட்டுமே முழு உண்மை அல்ல. மாற்றி யோசிக்க முடிந்திருந்தால் அவர்கள் ஏன் இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருக்கப் போகிறார்கள்?

    +Palani Chamy வலைப்பதிவில் ஒரு ஏழு கேள்விகளை முன்வைத்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதில் எத்தனைபேர் பதில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

    வலைப்பதிவுகளில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும் என்றே விரும்பினேன். அது நிகழாததால் தான் G + தளத்தில் சின்னச் சின்னதாக செய்திகளின்மீது ஒருசிறு குறிப்பு அல்லது கேள்வியை முன்வைத்து எழுத ஆரம்பித்தேன்.