புதன்கிழமை! அதென்ன ரயில் மறியல்? முழு அடைப்பு?

பொதுவேலைநிறுத்தம் என்றாலே ரயில் மறியல். முழு அடைப்பு, கலவரங்கள், வன்முறை எல்லாமே சேர்ந்து கொள்கிறதே! ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்காமலேயே ஊமைச் சனங்களாக மட்டுமே நாம் குறுகிக் கிடப்பதாலா?




போராட்டங்கள் என்ற பெயரில் சென்றவருடம் தான்தோன்றித்தனமாக அராஜகத்தில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமன் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கிற ஒரு தீர்ப்பு ஒரு முன்னோட்டம் தான்! இந்தப் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிட்டு இயக்குநர் கவுதமன் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்திய அரசியல் சாசனம் போராட அனுமதி வழங்கியுள்ள போதும் அதற்கும் நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும், முறையான அனுமதியைப் பெறாமல், சட்டவிரோதமாக போராட்டம் நடத்தி மக்களுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை எனவும் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்கிறது இந்தச் செய்தி 

நீதிமன்றங்களோ அரசோ பார்த்துச் செய்தால்தான் உண்டு என்று எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பார்க்கிற ஊமைச் சனங்கள் தாமா நாம்? முந்தையபதிவுகளில் நிலுவையில் இருக்கும் கேள்விகளோடு இதையும் சேர்த்துவிடாமல் ஒரு பதில் சொல்லுங்களேன்!  
*******
#போனதபா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது #முடியட்டும் ன்னு பெருசா ,,,,,அபசகுனமா எழுதினாங்க திமுக உளுத்தம்பருப்புகள். இந்த முறை ஸ்டாலினை முன்னாடி உட்கார வெச்சு #முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் ,,,,,,ன்னு கொட்டை எழுத்திலே எழுதறாங்களே,,,,,,

உளுத்தம்பருப்புகளே ஸ்டாலினை பார்த்தா பாவமா இல்லையா,,,,,?

இப்படி அனுதாபப்படுகிற அளவுக்கு என்ன நடந்துவிட்டதாம்? டிடிவி தினகரன் இப்படிக் கமென்ட் அடித்தாரே, இதுவாக இருக்குமோ?

அதெல்லாமில்லை! நமக்கு நாமே என்று இசுடாலின் தானாகவே தேடிக் கொண்டதுதானாம்!


திருவாரூர் கிராமசபை கூட்டத்தில் பொய் சொல்லி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஸ்டாலின் ட்விட்டரில் அடுத்த ட்ரெண்ட் #FRAUDSTALIN என்கிறார்களே!

*******

அர்னாப் கோசுவாமியா? ஆரு பாப்பாங்க? அதுவும் நிர்மலா சீதாராமனுடன் பேட்டியா? என்று கேட்கிறவர்கள் இருக்கிற இதே இணையத்தில் தேடிப் பிடித்துப் பார்க்கிறவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

இது புதுசு!

4 comments:

  1. வெல்லும் வார்த்தை, கொல்லும் வார்த்தை பற்றி எழுதி இருந்தேன். அதில் கே ஆர் ராமசாமி அவர்கள் பாடிய ஒரு அபசகுனப் பாடலுடன் (அவர் சுமரியாதைக்காரர்) அவர் பாடும் வாய்ப்பே பறிபோனதாம். அது போல வேறு உதாரணங்களும் உண்டு! முற்றுப்புள்ளி என்று இவர் ஆரம்பித்திருப்பது கமா ஆகிறதா பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்! தமிழில் இதை அறம் என்று கவிஞர்கள் வார்த்தையில் சொல்வார்கள்! கே ஆர் ராமசாமி மட்டுமல்ல, டி எம் சௌந்தரராஜன் கூட ராசியில்லாராஜா என்று பாடவைத்துப் பிழைப்பை இழுத்து மூடிவிட்டார் என்று டி ராஜேந்தர் மீது காட்டமாகப் புலம்பியது உண்டு. அறிவாலயப் பகுத்தறிவு இதையெல்லாம் ஒத்துக்கொள்ளாது.கமாவில் இப்போதே இருப்பதைத்தான் முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிடுவார்கள் போல இருக்கிறது!

      Delete
  2. அர்னாப் - நிர்மலா பேட்டி பின்னர்தான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. அர்னாப் வீடியோவில் ஏற்கெனெவே எழுப்பப்பட்ட கேள்விகள், அதே பதில்கள்தான்! ஏற்கெனெவே முழுத் தகவலையும் படித்திருந்தால், இதில் பார்ப்பதற்குப் புதிதாக ஒன்றுமில்லைதான்! அவசரமில்லை.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!