அதிசயம்! திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல்! ரகசியம்!

ருபது சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கிற நிலையில் திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம்! இது முதல் அதிசயம்! வலது கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உடனே கூடி தி.மு.கழகத்துக்கு தங்கள் ஆதரவை முந்திக்கொண்டு தெரிவித்திருப்பது அடுத்தது! என்னவென்று கொஞ்சம் கீழே!

  
ற்கெனெவே ச.ம.உவாக  இருக்கும் ஸ்டாலினையே  வேட்பாளராக நிற்கும்படி கட்சிப் பிரமுகர்கள் வலியுறுத்துகிறார்களாம்! வழக்கம்போல வைகோ இப்படி வலிய வந்து ஆதரவு!


திருவாரூரில் மு க ஸ்டாலின் போட்டியிடுவார் - செய்தி ஆக … வேற யாரும் தி மு க வில் நிற்கத்தயாரில்லை என்பது புலப்படுகிறது … நீ வா செல்லம் … வீ ஆர் வெயிட்டிங்

முன்னொருகாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதி இது! அதனாலோ என்னவோ வலது கம்யூனிஸ்ட் கட்சி முந்திக் கொண்டு விட்டதோ? சிறிதுகாலம் முன்புவரை முத்தண்ணன் மார்க்சிஸ்ட் கட்சி நிலைபாட்டை ஆதரித்தவர்கள் இப்போது முந்திக் கொண்டு ஆதரவைக் கழகத்துக்கு அறிவிக்கிறார்கள் என்பதில் மார்க்சிஸ்டுகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, இப்போது சிற்றெறும்பாகக் குறுகிக் கொண்டே வருகிறார்கள் என்ற யதார்த்தம் வெளிப்படுகிறது, அவ்வளவு தான் என்பதே அந்த அடுத்த அதிசயம்! ரகசியம்!

********
நாம் தமிழர் கட்சி சீமான் இன்றைக்கு செய்திகளில் கூட அல்ல, ஒரு ட்வீட்டர் செய்தியில் கலக்கலாக நையாண்டி செய்யப்பட்டிருக்கிறார்! காமெடி நடிகர் எஸ் வி சேகரிடம் தான்!

தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்காமல் செய்வது தான் நாம் தமிழர் கட்சியின் நோக்கம் - சீமான். அதுக்கு ஒரே வழி சீமான் பாஜக வை ஆதரித்தால் போதும். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
8:23 PM - 31 Dec 2018       

இன்னொரு கீச்சில் சுப.வீ கிழித்துத் தொங்கவிடப் பட்டிருக்கிறாரோ?

அய்யப்பன் பக்தர்கள் அரிசி கடத்துவதற்காகத்தான் இருமுடியை பயன்படுத்தினார்கள் - சு ப வீ  
சாராயம் கடத்தத்தான் மூத்திரச்சட்டியை ஈ வே ரா பயன்படுத்தினார் என்று பதிலுக்கு சொல்லலாம் தான் … ஆனா இந்த எச்சங்க ரேஞ்சுக்கு நாம எதுக்கு இறங்கணும் 

*******
னால் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்  தலைவர் ஜான் பாண்டியன் அப்படியெல்லாம் விடுவதாய் இல்லை! +Manickam Sattainathan இதன் சுருக்கமான பகுதியை இன்று பகிர்ந்திருந்தார். ஜான் பாண்டியன் பேச்சை நீண்ட காலத்துக்கு முன் கேட்டிருக்கிறேன். இவர் இப்போது வெளிப்படையாக திராவிட அரசியலை, ஈவெராவை விமரிசிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது #திராவிடமாயை கரைந்து போய்க் கொண்டிருப்பதைக் காட்டுவதாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமோ?


*******
ஸ்டாலின் மாதிரியே தந்தைக்குப் பிறகு அவர் நடத்தும் கட்சியின் தலைமைக்குக் காத்திருப்பவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ். நேற்றைக்கு
பா ம க  வின் செயற்குழு கூட்டத்தில் இப்படிப் பேசியிருக்கிறார்.


ஆனால் காடுவெட்டி குரு குடும்பமும் விஜிகே மணியும் அன்புமணி ராமதாஸ் கனவுக்குக் குறுக்கே நிற்பதாக!


ஜனங்களாகிய நாம் தான் இவர்களைப் பற்றி இத்தனை கவலைப்படுகிறோம்! அரசியல்வாதிகள் எவராவது நம்மைப் பற்றிக் கவலைப்படுகிறார்களா என்ன??

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!