வங்கக் கடல் கடைந்த மாதவன்! ஏன் கடைந்தானாம்?

மகர சங்கராந்தியாக  தைப் பொங்கல் நாளைக்குத் தான் என்றாலும், திருப்பாவையின் 30 வது பாசுரம் வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை என்று வருவது இன்று தானே! 

அதென்ன வங்கக்கடல்? அதைப்போய் யார், எதற்காகக் கடைந்தாராம்? ஆண்டாள் பாசுரத்துக்கு மிகவும்  சுவாரசியமான விளக்கம் சொல்கிறார் துஷ்யந்த் ஸ்ரீதர். இந்த வருட மார்கழி மாத காலைப் பொழுதுகள் எல்லாம் இவருடைய உபன்யாசத்தோடு தான் ஆரம்பிக்கும்! இன்றைக்கு திருப்பாவையின் கடைசிப் பாசுர விளக்கம் வெகு ஜோராக!     


இந்தப்பக்கங்களில் சண்டேன்னா மூணு என்றெழுதிக் கொண்டிருப்பதில் நேற்று எழுத்தாளரும் பூவனம் பதிவருமான ஜீவி இப்படி கேள்வி எழுப்பியிருந்தார்.

உங்கள் சண்டேக்கு இவர்கள் தாம் கிடைத்தார்களா?..
REPLYDELETE

  1. இந்த மூணு மட்டும் தான் என்றிருந்தால் அந்த நாள் இருண்ட நாளாகத்தான் இருக்கும் ஜீவி சார்! கொஞ்சம் திருப்பாவை, கொஞ்சம் புத்தகங்கள், இவற்றோடு அன்றன்றைய செய்திகளையும் பார்ப்பதில் வந்தது இந்த மூணு! ஒதுக்கிவிட்டுப் போய்விட முடிகிறதா என்ன?
இன்றைய செய்தியாக திரு R S வெங்கடேஸ்வரன் இதை அனுப்பியிருக்கிறார். #DivineLight 

  
தீது நன்மையெல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை என்று காளிப்பாட்டிலே பாரதி சொன்னதுதான்! அவள் அருட்பார்வையில் பயமின்றி எங்கும் சுற்றித் திரிகிற சிறுபிள்ளை நான் என்பதற்கு மேல் என்ன சொல்ல?


மகர சங்கராந்தி, லோஹ்ரி, தைப்பொங்கல் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன்!   

இது இந்தப்பக்கங்களில் எழுதப்படும் 701 வது இடுகை என்று ப்ளாக்கர் விவரம் சொல்கிறது. 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!