2019 நாடாளுமன்றத் தேர்தல்கள்! களம் ரெடியாகிறது!


பொன்மாலைப்பொழுது பதிவர் மாணிக்கம் முகநூலில் இப்படிப்படம் போட்டுக் கேள்வி கேட்கிறார். நியாயமா இல்லையா என்று பார்க்க வேண்டாமா?   

நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி தன்னுடைய வலைப் பதிவில் 2019 தேர்தல்களம் தயாராகிக் கொண்டிருக்கும் விதத்தைப் பற்றி ஆரம்பிப்பது இப்படி.
Every General Election has its own script. The script is dictated by the prevailing political environment in the country. The nature of the political battle for 2019 is unfolding itself. India’s opposition has a two-fold strategy, firstly, negative anti-Modi agenda and secondly, to combine as many political groups together so as to take the best advantage of the electoral arithmetic.
ஒருபக்கம் நரேந்திர மோடி தலைமையிலானது.

எதிரணியில்

மோடி எதிர்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் எத்தனை உதிரிகளை ஒன்று சேர்க்கமுடியுமோ அத்தனை ஒன்று சேர்ப்பது என்பதைத்தாண்டி வேறு செயல்திட்டமோ, பொதுவான கொள்கைகளோ இல்லாத கட்சிகள்

என்று அணிபிரிந்து நிற்பதை அருண் ஜெயிட்லி சுட்டிக் காட்டுவதோடு எதிர்க்கட்சிகளின் அஜெண்டா, ஒற்றுமை எப்படிப்பட்டது என்பதையும் சொல்கிறார்.
The Kolkata rally organized by Trinamool Congress leader Mamata Banerjee was significant. On the surface, it was an anti-Modi rally. It indeed was. More significantly it was also a non-Rahul Gandhi rally. The opposition politics has thrown up four desirous Prime Ministers wishing to challenge Prime Minister Modi. Besides Mamata Banerjee, the other three – Rahul Gandhi, Mayawati and KCR were significantly absent in Kolkata. 2/3rd of those on stage were those who in the past have worked with the BJP. Some octogenarians reached Kolkata to satisfy their late-life ambitions. There was not a single speech reflecting the positive idea which the leaders proposed for the future. Negativism was writ large in their approach. The strategy of each of the four contenders is clear.
இப்படித் தங்களால் என்ன செய்ய முடியும், செய்யப் போகிறோம் என்கிற அஜெண்டாவோடு மோடியும் ,
மோடியை வீழ்த்துவது என்பதைத் தாண்டி வேறெந்த உருப்படியான அஜெண்டாவோ பொதுவான செயல் திட்டமோ இல்லாத அரசியல் கட்சிகள், அதிலும் ஒன்றுக்கு நான்கு அதற்கும் கூடுதலாக பிரதமர் பதவிமேல் கண் வைத்திருக்கிற கட்சிகள் என்றிருப்பது தெளிவாகி வருவது தான் 2019 தேர்தல் களம் தயாராகிற முதல் அடையாளம்.

அருண் ஜெயிட்லி சொன்னால்? அப்படியே ஏற்றுக் கொண்டு விட முடியுமா? எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் சௌபிக் சக்ரபர்த்தி ஜெயிட்லியுடன் மாறுபடுவது இப்படி:

The FM’s argument is that a sufficient number of voters in a sufficient number of states will see in Narendra Modi a Prime Minister who, first, doesn’t deserve angry rejection and, second, compares favourably to the jostling crowd of Opposition leaders when it comes to thinking of the India story.Jaitely, therefore, posits – undoubtedly through a party-political prism – that there’s a substantial national vote, across geographies and thanks to chemistry. But what does history tell us about national vote in national elections? Specifically, what does it tell us about a national vote to return the incumbent to power? 
சௌபிக் சொல்வது இது.நேருவுக்குப் பிறகு 1971, 1984, 1999 மற்றும் 2009 தேர்தல்களில் மட்டுமே பதவியில் இருந்தவர்கள் மறுபடி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல் மூன்று தேர்தல்களின் முடிவுகளுக்கு வங்கதேசப் பிரிவினை, இந்திரா மரணம் மீதான அனுதாபம், கார்கில் போர் என்று காரணமாக இருந்தது. 2009 ஒன்றில் தான் வித்தியாசமாக பதவியில் இருந்தவரே அமைதியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சொல்லிவிட்டு Sonia Gandhi and Singh, to their lasting political credit, upturned this principle in 2009. 2019 will be a test like 2009 – can an incumbent return in ‘peace time’ conditions with a national vote of sufficient quantum? But, in some ways, this election will be an even tougher test for the national vote proposition என்கிறார் பாருங்கள், அங்கே தான் கழுதைக்கு வெள்ளிமூக்கு முளைத்ததும், 2014 தேர்தலில் அடி வாங்கியதையும் மறந்துவிட்டுப் பேசுகிற முரண்பாடு வெளிப்படுகிறது. 

2014 தேர்தலில் பிஜேபி என்ற கட்சிமீது கூட அல்ல!நரேந்திர மோடி என்கிற ஆளுமை மீது ஜனங்கள் வைத்த நம்பிக்கை, ஆதரவு வாக்குகளாய் விழுந்தன. இப்போதும் கூட நரேந்திர மோடி மீதான நம்பிக்கை குறைந்துவிடவில்லை என்பதுதான் பாரதீய ஜனதா கட்சிக்கு இருக்கிற பெரிய பலம். 

மோடி ஒலிக என்று கூவுவதைத் தவிர வேறெந்த உருப்படியான செயல்திட்டமும் இல்லாத உதிரிகள், ஒன்று சேர்ந்திருப்பது, ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதைதான்! கொல்கத்தாவில் கூடிக் கலைந்த பின் ஆந்திராவில் கூட்டணி இல்லாமலேயே போட்டி போடுவோம் என்று காங்கிரஸ்கட்சி,தெலுகு தேசம் கட்சியைக் கழற்றிவிட்டது. அதற்கும் முன்னாடியே ஆம் ஆத்மி கட்சி டெல்லி,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காங்கிரசோடு கூட்டு இல்லையென அறிவித்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து அடுத்த பிரதமர் என்று மாயாவதியைக் குளிர்வித்த அகிலேஷ் யாதவ், யார் பிரதமர் என்பதை தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நழுவுகிறார்.

தன்கையே தனக்குதவியாம்!
உத்தர பிரதேசத்தைக் கோட்டை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி இந்த ஐந்தாண்டுகளில் பட்டபாடு!ராகுல் காந்தியாக இருந்துபார்த்தால் மட்டுமே புரியக்கூடிய அவஸ்தை அது! சோனியாவின் இடத்தில் பாட்டியின் முகசாடை ஒன்றேபோதும், சரிவைத் தடுத்துவிடலாம் என்று ப்ரியங்காவைக் களம் இறக்கிப் பார்த்திருக்கிறது காங்கிரஸ்! 

தேர்தலுக்கு ஒவ்வொருவரும் ரெடியாகி வருகிறார்கள்! நீங்கள் தயாராகிவிட்டீர்களா?

டிஸ்கி ! : நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்வதற்காக இந்தப்பதிவா? இல்லை! ஸ்ரீராம் பின்னூட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலாக இந்தச் செய்தி இருக்கக் கூடும்!    

             
.

4 comments:

  1. தயாராகவில்லை என்றால் மட்டும் நின்று விடவா போகிறது! மோடி (சிரமமில்லாமல்) ஜெயித்து விடுவார் என்று நம்புகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! இங்கே என்னுடைய கருத்தை மேலேற்றாமல், ,இரண்டுவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டதை வைத்து ஒரு விவாதமாக நடத்தலாமே என்று மட்டுமே முயற்சித்திருக்கிறேன். எகனாமிக் டைம்சில் சௌபிக் சக்ரபர்த்தி சொல்லியிருப்பது, யதார்த்தத்தில் என்ன ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை பதிவின் கடைசியில் கோடிட்டுக் காட்டி நிறுத்தியிருக்கிறேன்.

      உங்களுடைய கேள்விக்கு இப்போதே பதில் சொல்லிவிடலாம்தான்! ஆனால் ஒரு உரையாடல் நிகழ வேண்டுமென்கிற ஆசையும் அப்போதே முடிந்து விடும்! கொஞ்சம் பொறுத்திருந்து யாராவது வருகிறார்களா என்று பார்த்து விட்டு நிச்சயமாகப் பதில் சொல்கிறேன்.

      Delete
  2. ப்ரியங்கா வந்து என்ன சாதிக்கப்போகிறாராம்? ராகுல் அளவு உளறுவாரா? அல்லது ஒழுங்காய் பேசுவாரா? முதலில் அவர் நளினியைப் பார்த்து என்ன பேசினார் என்று சொல்வாரா?!!

    ReplyDelete
    Replies
    1. நளினி கூட என்ன பேசினாங்கன்னு திருச்சி வேலுசாமி கிட்டத்தான் கேக்கணும்! ஆனால் இந்த 4 நிமிட வீடியோவில் ப்ரியங்கா தான் காங்கிரஸ் கைவசமிருக்கும் கடைசி செக் என்கிறார்கள் https://youtu.be/6V6t9tY1ggw

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!