நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என எல்லோருக்கும் வாக்குரிமை அளித்த அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு, எழுபதாவது ஆண்டும் பிறக்கிறது. சரி!
குடியரசு! அரசியல் சாசனம்! வாக்குரிமை! என்று நிறையவே பேசுகிற நமக்கு தேசம் Nationhood என்றால் என்ன, குடிமைப்பண்பு citizenship என்றால் என்ன என்று கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா? நம்மூர் அரசியலில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒருவிரல் புரட்சியாக வாக்களிக்க மட்டும் விடுகிறார்களே தவிர, அதற்குப் பின்னால் நம்முடைய பிரதிநிதியாக ஆன ஆசாமி நம்முடைய பிரச்சினைகளைத் தெரிந்து செயல் படுகிறாரா, அப்படி செயல்பட வைக்க ஏன் நம்மால் முடிவதே இல்லை என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா என்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.
ஏனென்றால் இன்னொரு பொதுத்தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நெருங்கிக் கொண்டிருக்கிறதே!வெறுமனே நரேந்திர மோடி வெர்சஸ் மற்றவர்கள் என்று மட்டும் குறுக்கிக் கொண்டு போய்விட முடியுமா? 2004 க்கும் 2014 க்கும் இடையில் என்னவோ நாளைக்கே உலகம் அழிந்துவிடப்போகிற மாதிரி பெரிய பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இன்றைக்கு உத்தமர் வேடம் போட்டு வருவதில் திரும்பவும் ஏமாறுவதுதான் தலைவிதியா ?
The Wire தளத்தில் வெளியாகியிருக்கிற இந்தச் செய்தி 2019 தேர்தல்களில் மோடிக்கு வேறு மாற்று இல்லையா என்னவென்ற கேள்வியோடு ஆரம்பிக்கிறது.
In this election year, we too are being repeatedly reminded by the ruling regime that Narendra Modi is the best ‘brand’ possible; and our smartness as consumers of politics in this market-driven age lies in choosing this much-hyped ‘brand’ and feeling ‘secure’.
Yet, given this inherent limitation of the party-centric parliamentary democracy, we would take part in the coming general elections. And we must strive for an alternative even if it is not perfect, because if we continue to accept the way things prevail now:
மோடி வெறுப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் கல்லாக் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்களில் The Wire தளமும் ஒன்று என்பதோடு இதை எழுதியவர் JNU வில் சமூகவியல் பேராசிரியர் என்பதே இடதுசாரித் திருகலாய் வந்திருக்கிற இந்தச் செய்தியின் தரம் என்ன நம்பகத்தன்மை என்னவென்பதைச் சேர்த்தே சொல்லிவிடுகிறது.
இப்போது முதலில் எழுப்பிய கேள்விக்கே திரும்பவும் வருவோம்!
2004 க்கும் 2014 க்கும் இடையில் என்னவோ நாளைக்கே உலகம் அழிந்துவிடப்போகிற மாதிரி பெரிய பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இன்றைக்கு உத்தமர் வேடம் போட்டு வருவதில் திரும்பவும் ஏமாறுவதுதான் தலைவிதியா ?
பென்ஷன் கோரிக்கை பற்றி முதல்வர் எடப்பாடி சொல்வதில் உள்ள நியாயம் என்னவென்று புரிகிறதா?
ஜாக்டோ ஜியோ போராட்டம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஒழுங்கீனத்தின் உச்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒழுங்கீனத்துக்குத் துணை போகிறவர்கள் யார் என்பதையும் விகடன் தளத்தில் வெளியான இந்தப்படமும் தெளிவாகவே சொல்கிறது. இவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்பதற்கும் தேர்ந்து எடுக்கப்படுவதற்கும் தகுதியானவர்கள் தானா?
கொஞ்சம் யோசித்துத் தான் சொல்லுங்களேன்!
முந்தைய பதிவில் Winner takes all என்பதான Westminster தேர்தல் முறையில் தேவையான சீர்திருத்தங்கள் என்று எழுதிய சில பதிவுகளின் இணைப்பையும் கொடுத்திருந்தேன். 1970களில் தினமணி ஆசிரியர் திரு AN சிவராமன் கணக்கன் கட்டுரைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் சிந்தனைக்கு தொடர்கட்டுரைகளாகவும் எழுதியதை பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தப்பக்கங்களில் நினைவு படுத்தியதை, இப்போது மீண்டும் குடியரசு தினச் சிந்தனைகளாக!
வெளியுறவு விவகாரங்கள், வெளியுறவுக் கொள்கை ராஜீய உறவுகளில் எழும் சிக்கல்களைத் தமிழில் கொஞ்சம் எழுதிப்பார்க்கலாமே என்ற ஆசை! கூகிள் பிளஸ்சில் கொஞ்சம் செய்திகள், அவைமீதான சிறு அறிமுகம், விமரிசனம் என்று எழுதி வந்தது இப்போது ஒரு புதிய வலைப் பதிவாக தொடர்கிறது
இன்று ஒரு சோதனைப் பதிவுடன் தொடக்கம்
போராட்டத்தைப் பொழுது போக்காக்குகிறார்கள் போலும்.
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம்! இங்கே போராட்டங்கள் அனைத்தையும் தி மு கழகம் உண்ணும் விரதம் என்று ஆரம்பித்த நாட்களிலிருந்தே வெறும் கேலிக்கூத்தாகவே ஆக்கிவிட்டது!
Deleteஇவர்கள் நன்றாக வேலை பார்க்கும் பட்சத்தில், இவர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்திருக்கலாமே. அரசு அலுவலகங்கள் எப்படி நடக்கின்றன என்று நமக்கு எல்லோருக்கும் தெரிந்ததுதான். அரசை நாம் எல்லோரும் ஆதரிக்கணும்.
ReplyDeleteஆஹா! இப்படியாகப்பட்ட அரசுக்கும் பாராட்டா நெல்லைத்தமிழன்? :))
Deleteஅரசை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ இவர்களுக்கு இங்கே தேர்தல் நேரத்து ஸ்டன்ட் மாத்திரமே என்பதை ஜனங்களுக்குப் புரியவைப்பதே நல்ல வழி!
வெளியுறவு விவகாரங்கள், வெளியுறவுக் கொள்கை ராஜீய உறவுகளில் எழும் சிக்கல்களைத் தமிழில் கொஞ்சம் எழுதிப்பார்க்கலாமே என்ற ஆசை!
ReplyDeleteசோர்வில்லாமல் தொடர்ந்து எழுதுங்க. நீங்க எழுதுவது ராமு ஒரு தளம் உருவாக்கி இருக்காரு. அங்கு எழுதிவிட்டு அதையே இங்கு எழுதலாமே? பலருக்கும் உதவியாக இருக்கும். பிகேஆர் என்ற ராமச்சந்திரன். முகநூல் இணைப்பு கொடுத்துள்ளேன். அந்த தளத்தையும் அடையாளம் காட்டியுள்ளேன். அவரை உங்களை தொடர்பு கொள்ளச் சொல்கிறேன்.
https://www.facebook.com/ramachandran.krishnamoorthy.7
https://oreindianews.com/
தகவலுக்கு நன்றி ஜோதி ஜி! BKR கூகிள் buzz நாட்களில் இருந்து தொடர்பில் இருந்தவர்தான்! ப்ளஸ் பக்கம் வருவதில்லை. எனக்கு முகநூல் கணக்கு இருந்தாலும் அங்கே எதையும் எழுதுவதில்லை, ஒரே விஷயத்தை ஏகப்பட்ட தளங்களில் பேச வேண்டாமே என்பதுதான் காரணம்.
Deleteஅவரைத் தொடர்பு கொள்ள முடிந்தால், முகநூலில் என் friend request கிடப்பில் இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்!