ஒரு இந்தியக்கனவு! American Dream! சீனர்களுடைய கனவு!

ஒரு இந்தியக் கனவு!


.
முண்டாசுக்கவிஞன் பாரதி கொஞ்சம் அவசரப்பட்டு இப்படி ஆனந்தப்பள்ளு பாடிவிட்டானோ? விடுதலை வேட்கையில், அது நிகழ்வதற்கு முன்னாலேயே ஒரு இந்தியக்கனவாக என்னென்னவெல்லாம் பாரதிக்கு தோன்றியது என்பதை இந்தப் பாட்டிலேயே தெரிந்து கொள்ளமுடியும். பூ வனம் பக்கங்களில் எழுத்தாளர் ஜீவி பாரதி வாழ்க்கையைக் குறித்து நெடுந்தொடராக எழுதி வருவதை, மீண்டும் ஒரு பார்வை எட்டிப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சு விடத்தான் முடிகிறது. வெள்ளைத்துரைகளைக் கப்பலேற்றிவிட்டு, சுதந்திர இந்தியாவை ஆளக்கிளம்பிய  புண்ணியவான் நேரு இந்தியக் கனவுகளை என்ன செய்தார் என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிற ரகசியம்.

1948 இல் ஹைதராபாத் நிஜாம் மீது எடுக்கப்பட்ட Police Action இந்திய கம்யூனிஸ்டுகளை, இந்த இந்திய  அரசு யாருடையது என்று வெகுவாகக் குழப்பி, கட்சி வலதுCPI இடது CPIM என்று இரண்டாக உடைந்து, கொஞ்ச நாட்களிலேயே இடதுகளும்  உடைந்து இடது, அதிஇடது CPI ML  என்று பல குறுங்குழுக்களாக மாறினது தான் மிச்சம். இன்னமும் கூட இந்திய அரசின் வர்க்கத்தன்மை என்னவென்று தீர்மானிக்க முடியாத நிலையில் தான் ஒட்டுமொத்த இந்திய கமூனிஸ்டுகளும் இருக்கிறார்கள். திராவிடங்கள், பெரியார் அம்பேத்கர் ஈயங்கள் இந்த அளவுக்குக் குழம்புவதில்லை. எல்லாம் சாதிமயம் சனாதனம் பாசிசம் என்று முத்திரை குத்தி தத்துவ பிரச்சினைகளை முடித்துக் கொள்வார்கள்!

இப்படி இதுசாரிக் குழப்பத்தில் சிக்கிக் கொண்டவர் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான கோமல் சுவாமிநாதன்! அவருடைய நாடகம் ஒன்றிற்குப் பெயர் ஒரு இந்தியக் கனவு! இன்னொன்று அனல்காற்று! திருச்சி ஆர் ஆர் சபாவில் இரண்டையும் நாடகமாகப் பார்த்து, கோமல் சுவாமிநாதனுடைய நவீன நாடக உத்திகளை இப்போது கூட வியந்தாலும், நாடகம் சொல்ல வந்த விஷயம் வெறும்கனவுதான் என்பது, இடதுசாரி, தொழிற்சங்க மயக்கங்களில் இருந்து விடுபட்டு வெளியே வந்து பார்க்கும்போதுதான் தெளிவாகப் புரிகிறது. ஒரு இந்தியக்கனவு முழுப்படம் யூட்யூபிலேயே காணக் கிடைக்கிறது. இரண்டேகால் மணிநேரம் பொறுமையாக, ஒரு  பிரசார டாக்குமென்டரியை பார்க்க முடிந்தால் , பாருங்களேன்! இங்கே சாம்பிளுக்கு ஒரு பாட்டு மட்டும்!      

இவ்வளவுதானா நம்முடைய இந்தியக்கனவு என்று நாமே அலுத்துக்கொள்கிற அளவுக்குத்தான் நாடு   விடுதலையடைந்த 72 ஆண்டுகளில் நம்மூர் அரசியல் அவ்வளவு தரம் தாழ்ந்து கிடக்கிறது.  

அப்படியே சோர்ந்து கிடக்கவிடாமல் அக்கம் பக்கம்! என்ன சேதி!   என்று பார்த்துக் கொண்டிருப்பதில் நம்மைச் சுற்றி நிகழ்கிற சில விஷயங்கள் தூண்டுகோலாக இருக்கின்றன.

The American Dream!

எழுதியதில் பேராசையே அமெரிக்கர்களுடைய கனவாகவும் இருந்தது சொல்லப்பட்ட்டது!அதை American Tianxia என்ற வார்த்தைப் பிரயோகத்தில் 1950 முதலான நூறாண்டு அமெரிக்காவுடையதாகவும், அடுத்து இந்த நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும் என்பது வெறும் பிரசாரமாகவோ வார்த்தை ஜாலமாகவோ இல்லாமல் தொடர்ந்து உருவாகிவரும் சீனாவின் ஆதிக்கக் கனவு, நம்மையே சுற்றி சுற்றிப் பின்னப்படும் வலையாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை ஒரு சிறு காணொளியாக 

  
அக்கம் பக்கம்! என்ன சேதி!  பக்கங்களை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வீர்கள் தானே!!

       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!